தேர்தல் சமயங்களில் நல்லா பொழுது போகும். கூச்சப்படாம, நம்ம தலைவர்கள் பேசுற பேச்ச கேட்டா, சில சமயம் வயித்தெரிச்சலா இருந்தாலும், பெரும்பாலான சமயம் செம காமெடியா இருக்கும். இந்த தேர்தலில் அப்படி சில பிரச்சார பேச்சுகள்.
கருணாநிதி
சோனியா காந்தியை நான் ”தியாக திருவிளக்கு” என்று அடைமொழி கொடுத்து கூறுவதற்கு காரணம், உலகம் அறிந்த உண்மை, நாடறிந்த செய்தி, நல்லோர் புரிந்து கொண்ட விவகாரம். அவரைப் பிரதமராகப் பொறுப்பேற்க வருக, வருக என்று ராஷ்டிரபதி பவன் அழைத்த போது, ”நான் வர மறுக்கிறேன்” என்று அந்த பதவியை தியாகம் செய்தவர் சோனியா காந்தி.
அப்துல் கலாம் இதை கேட்டா, என்ன நினைப்பாரு?
இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்சியிலே நம்முடைய இளஞ்சிங்கம் ராகுல் காந்தியின் பேச்சை நான் தொலைக்காட்சியிலே கேட்டேன்.
ஆரம்பிச்சுடாருய்யா...
வெற்றியை தேடித்தா! வெற்றி! வெற்றி! வெற்றி! அதைத்தவிர வேறு ஒன்றையும் எண்ணாதே! அதற்காக உழைத்திடு, அயர்வில்லாமல் உழைத்திடு என்று வேண்டி கேட்டுக்கொண்டு யார் எந்த பிரசாரம் செய்தாலும் என்ன பொய்யுரைத்தாலும், எத்தகைய பித்தலாட்ட பேச்சுகளிலே இறங்கினாலும் அவைகளையெல்லாம் நம்பாதே!
உஸ்ஸ்ஸ்... கண்ண கட்டுதே!
ஜெயலலிதா
கூட்டத்தை பார்த்து, திமுக அமைச்சர்களின் லஞ்சங்களை பட்டியலிட்டு,
என் ஆட்சியில் இது போல் லஞ்சம், ஊழல் நடக்குமா? நடந்தால்தான் நான் சும்மா விட்டுவிடுவேனா?
மக்கள்- இல்லை இல்லை என்று ஆரவாரம் செய்கிறார்கள். :-)
சோனியா சென்னை பொதுக்கூட்டத்தில்,
இந்த மாலை நேரத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதி நம்முடன் இருப்பதை எண்ணி, நான் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறேன் என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
இப்ப, என்ன சொல்ல வாரீங்க?
மோடி
உங்களது விரலுக்கு அபாரமான சக்தி இருக்கிறது. அது உங்களுக்கு தெரியாது. பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் விரலுக்கு இருந்த சக்தியைவிட 2 மடங்கு அதிகமான சக்தி உங்கள் விரலுக்கு இருக்கிறது.
இதையே வேற யாராவது சொல்லி இருந்தா, தெய்வ குத்தம், புண்படுத்தப்பட்ட மத உணர்வு, வெட்டிங்கடா விரலைன்னு சொல்லியிருப்பாங்க.
ஸ்டாலின்
மூன்றாவது அணியில் பிரதமர் பதவிக்காக பலர் போட்டியில் உள்ளனர். ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டு குழப்பத்தை ஏற்படுத்துவார்கள். கடைசியில் ஆட்சியையும் கவிழ்த்துவிடுவார்கள். மீண்டும் மூன்று மாதத்திலேயே நாடாளுமன்ற தேர்தல் வரக்கூடிய சூழ்நிலை ஏற்படலாம். அடிக்கடி தேர்தல் நடத்தால் நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம் பாதிக்கப்படும்.
நாட்டுக்கா? கட்சிக்கா?
முன்னாள் முதல்வராக இருக்கும் ஜெயலலிதா அரசியல் நாகரிகமற்ற முறையில் பேசி வருவது வேதனையாக உள்ளது. கருணாநிதியை பற்றி பேச குட்டி யானை ஜெயலலிதா வுக்கு அருகதை இல்லை
ஆமாம். ஸ்டாலின் மாதிரி நாகரிகமா பேசுங்க.
வைகோ
தேர்தல் முடிவில் மத்தியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆதரவுடன் தான் ஆட்சி அமையும். ஏன் பிரதமராகும் தகுதி அவருக்கு தான் உள்ளது என்று என்னால் அடித்து கூற முடியும்.
அட்ரா சக்கை! அட்ரா சக்கை!
ராமதாஸ்
தி.மு.க.வுக்கு கொள்கை, கோட்பாடு கிடையாது. எந்த கட்சியுடனும் கூட்டு வைப்பார்கள். எந்த கூட்டணி அரசிலும் இடம் பெறுவார்கள். ஆனால், மற்றவர்களை பார்த்து மட்டும் சந்தர்ப்பவாதிகள் என பேசுவார்கள்.
நாங்க எல்லாம் ஒண்ணுதான்ன்னு சொல்றாரு
அன்புமணி ராமதாஸ் கொல்லைப்புறமாக பதவிக்கு வந்து விட்டார் என ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். ஸ்டாலினுக்கு ஒன்றும் தெரியாது. தெரிந்திருந்தால் அவர் என்றைக்கோ முதல்-அமைச்சர் ஆகியிருக்க முடியும்.
சே! ஸ்டாலின் மேலேதான் என்ன கரிசனம்
சீதாராம் யெச்சூரி
பிரதமர் யார் என்று கேட்கின்றனர். பிரதமருக்கு எங்களிடம் பஞ்சம் இல்லை. ஜெயலலிதா உள்ளிட்ட பல முன்னாள் முதல்வர்கள், முன்னாள் பிரதமர்கள் உள்ளனர். அவர்களில் யாராவது ஒருவர் இந்தப் பதவியை ஏற்பார். பிரதமர் என்று ஒருவரை அறிவித்தால் அவரை மக்கள் தோற்கடித்துவிடக்கூடும்.
என்னா வில்லத்தனம்
தேர்தலுக்கு முன்னால் பிரதம வேட்பாளரை அறிவித்தால், அது மக்களை இழிவுப்படுத்துவது போலாகும்.
இதென்ன புதுக்கதை
ஆற்காடு வீராசாமி
வேலூரில் பேசிய ஜெயலலிதா முதல்-அமைச்சர் கருணாநிதியை ஓய்வெடுக்க சொல்லியிருக்கிறார். அவருடைய கட்சிக்காரர்களை பார்த்து முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு நிரந்தர ஓய்வு கொடுக்க வேண்டும் என்று பகிரங்கமாக பொதுமேடையில் பேசி இருக்கிறார். அதற்கு என்ன அர்த்தம் என்பதை காவல்துறையினர்தான் கண்காணிக்க வேண்டும். முதல்-அமைச்சர் கருணாநிதி உயிரோடு இருப்பது ஜெயலலிதாவிற்கு அவ்வளவு இடைஞ்சலாக இருக்கிறது போலும். எம்.ஜி.ஆர் மருத்துவமனையிலே இருந்த போது, முதல்-அமைச்சர் கருணாநிதி ”நானும் பிரார்த்திக்கிறேன்” என்று தொடர் கட்டுரை எழுதினார். எம்.ஜி.ஆர் மறைந்த போது ரெயில் நிலையத்தில் இருந்து காலை 6 மணி அளவிலேயே முதல் ஆளாக நேரில் சென்று அஞ்சலி செலுத்தியவர் முதல்-அமைச்சர் கருணாநிதி. அது போலவே நாவலர் மறைந்த போதும் டெல்லி விமானத்தில் இருந்து கீழே இறங்கியதும், நேராக நாவலர் இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியவர் கருணாநிதி.
கலைஞர் - ஏன்யா, அந்தம்மாவே ஒரு வார்த்தைதான் சொல்லுச்சு. இப்ப, நீ என்னய்யா சொல்ல வார?
பொதுவாக கருணாநிதியின் வீட்டாரும், உறவினர்களும், மருத்துவர்களும் அடிக்கடி கருணாநிதியிடம் ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைப்பார்கள். ஆனால் அவர்கள் சொல்லியே கேட்காத கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியா ஓய்வெடுக்க போகிறார்? கருணாநிதி உழைக்க பிறந்தவர். அவரால் ஓய்வெடுக்க முடியாது.
கலைஞர் - போதுமா? மனசுல இருக்குறத எல்லாம் சொல்லியாச்சா?
விஜயகாந்த்
ஜெயலலிதா எல்லா கூட்டங்களிலும் ஆட்களை கூட்டி வருகிறார். நான் கூட திருவண்ணாமலையில் நடந்த கூட்டத்தை கண்ணால் பார்த்தேன். ஏதோ பணம் கொடுப்பதாக கூறுகிறார்கள், ஆனால் எவ்வளவு பணம் என்று தெரியவில்லை? சாப்பாடு பொட்டலம் கொடுக்கிறார்கள். அதற்குள் பிரியாணி இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் உள்ளே என்ன இருக்கிறது என்பது தெரியவில்லை.
அதுக்குள்ள என்ன சார் இருக்க போவுது? அப்படி என்ன ஆர்வம் உங்களுக்கு?
ஒவ்வொரு சீசனிலும் புதிய டிசைன் துணிகள் வரும்போது பழைய துணியை மாற்றிவிட்டு புது துணியை அணிவதுபோல் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளையும் மாற்றிப் பாருங்கள். அவர்கள் காப்பி குடிக்க சர்க்கரை கேட்கிறார்கள். நான் கூழ் குடிக்க உப்புதான் கேட்கிறேன்.
ரொம்ப கெஞ்சிருங்களே?
தே.மு.தி.க. வெற்றி பெற்றால் 40 இடங்களில் வர்த்தகமையம் அமைத்துக்கொடுப்பேன். வர்த்தக மையம் அமைத்துக்கொடுத்தால் குண்டூசியில் இருந்து ஹெலிகாப்டர் வரைக்கும் அங்கே கிடைக்கும். அப்படி 40 இடங்களிலும் வர்த்தக மையம் அமைக்கும் போது நீங்கள் சீனாவைப்பாரு என்று சொல்ல வேண்டாம், தமிழ்நாட்டை பார் என்று சொல்லலாம்!
என்னங்கடா இது? விக்ரமன் படத்துல தானே நடிச்சாரு? ஷங்கர் படத்துல நடிச்ச மாதிரி பேசுறாரு...
திருமாவளவன்
சோனியாகாந்தி அம்மையாரிடம் நான் கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன். இலங்கையில் வாழும் எங்கள் தமிழ் சொந்தங்களை காப்பாற்றுங்கள். அங்குள்ள போராளிகளையும், பொதுமக்களையும் காப்பாற்றுங்கள். அது உங்களால்தான் முடியும்.
என்ன தேடுறீங்க? இல்ல, இங்க ஒரு மானஸ்தன் இருந்தான். - இல்ல, அவன் கிடைக்க மாட்டான்.
சரத்குமார்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்று பெயர் வைத்துக்கொண்டு ஏன் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கிறீர்கள் என்று சிலர் கேட்டார்கள். பா.ஜ.க.வுடன் தி.மு.க., அ.தி.மு.க. எல்லாம் முன்பு கூட்டணி வைத்தது. ஆனால், நாங்கள் கூட்டணி வைத்தால் மதவாத கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளதாக கூறுகிறார்கள்.
அதானே!
மத்தியில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி செய்த போது அன்னிய செலாவணியின் இருப்பு அதிகமாக இருந்தது. மக்களுக்கு நல்ல பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதனால்தான் சமத்துவ மக்கள் கட்சி பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.
அடேங்கப்பா, நாங்க கூட வேற என்னமோன்னு நினைச்சேன்.
டி.ராஜேந்தர்
விஜயகாந்த் நேற்று முளைத்த கொக்கு, நான் வனத்தில் வளர்ந்த வேங்கை.
பார்த்தாவே தெரியுது
கார்த்திக்
ஒரு கூட்டத்தில் இவர் மேல் செங்கல் எறிந்தவுடன் இவர் சொன்னது,
எனது வெற்றி உறுதியாகி விட்டது. எனவே தோல்வி பயத்தால் கல்வீசி தாக்குகிறார்கள். இது ஜனநாயக படுகொலை. எனக்கு கூடுதல் பாதுகாப்பு தேவை.
:-)
24 comments:
நல்லா சொன்னீங்க போங்க
//தேர்தல் முடிவில் மத்தியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆதரவுடன் தான் ஆட்சி அமையும். ஏன் பிரதமராகும் தகுதி அவருக்கு தான் உள்ளது என்று என்னால் அடித்து கூற முடியும்.
//
எல்லாமே சூப்பர் ஜோக்குங்க...
நல்லா கவனிச்சு இருக்கீங்க தல..,
//மக்கள்- இல்லை இல்லை என்று ஆரவாரம் செய்கிறார்கள். :-)//
அதைத் தொலைக்காட்சியில் பார்த்து நானும் சிரித்தேன் !
:)
மக்களோட ஞாபக சக்தியை ஜெ ரொம்பவும் புரிந்து வைத்திருக்கிறார்.
:)
அடேங்கப்பா, நாங்க கூட வேற என்னமோன்னு நினைச்சேன்!
ஸ்பெஷல் கவரேஜ்ன்னு சொல்லி கூட்டங்களில் நடந்த காமெடி நிகழ்வுகளை சொல்லுவீங்கன்னு நினைச்சேன், பட் நீங்க நார்மலா நடந்த காமெடி கூட்டங்களை மட்டும் சொல்லிட்டு எஸ்ஸாகிட்டீங்களே...!
:))))))
//என்ன தேடுறீங்க? இல்ல, இங்க ஒரு மானஸ்தன் இருந்தான். - இல்ல, அவன் கிடைக்க மாட்டான்//
ஹா ஹா ஹா ஹா டாப் க்ளாஸ்
நன்றி எட்வின்
சரியா சொன்னீங்க கோவி.கண்ணன்... எவ்ளோ கான்பிடேன்டா கேக்குறாங்க?
ஒ! ஆயில்யன், உங்கள ஏமாத்திட்டேனா?
வாங்க கிரி
Naan paathutu irukarathu kumaran kudil dhana doubt vandhuruchu...Yenna konjam indha padhivu konjam mokkai dhan...Krish
Krish,
அப்படியா சொல்றீங்க... திருத்திக்கிறேன்...
saravanakumaran, neenga mariyadhai padam paakalaiyaa? unga vimarsanathuku aavaloada kaathirukaen
ஹலோ, இதெல்லாம் ஓவரு...
உங்க போதைக்கு நான் ஊறுகாய் ஆகமுடியாது... :-)
எல்லாமே சூப்பர்
''பிரதமருக்கு எங்களிடம் பஞ்சம் இல்லை. ஜெயலலிதா உள்ளிட்ட பல முன்னாள் முதல்வர்கள், முன்னாள் பிரதமர்கள் உள்ளனர். அவர்களில் யாராவது ஒருவர் இந்தப் பதவியை ஏற்பார். பிரதமர் என்று ஒருவரை அறிவித்தால் அவரை மக்கள் தோற்கடித்துவிடக்கூடும்''.
என்னா வில்லத்தனம்
''தேர்தலுக்கு முன்னால் பிரதம வேட்பாளரை அறிவித்தால், அது மக்களை இழிவுப்படுத்துவது போலாகும்''.
இதென்ன புதுக்கதை
நன்றி அருண்
பாரபட்சமில்லாமா கலந்து கட்டி அடிச்சுட்டீங்க, சூப்பரு!!!
நன்றி பாசகி
இந்த பதிவை எப்படி மிஸ் பண்ணேன் தெரியலே...
சான்ஸே இல்ல தல உங்க கிரியேட்டிவிட்டி......
சுகுமார்,
ஒரு கிரியேட்டிவ்வான ஆள்கிட்ட இருந்து, இந்த பாராட்டு கிடைக்குறது பெரிய விஷயம். சந்தோஷமான விஷயம்.
அப்புறம், இந்த டயலாக்ஸ் எல்லாம் உண்மையாவே நம்ம அரசியல்வாதிகள் தேர்தலப்ப சொன்னது. கமெண்ட்ஸ் மட்டும்தான் நான்.
கார்த்திக்
ஒரு கூட்டத்தில் இவர் மேல் செங்கல் எறிந்தவுடன் இவர் சொன்னது,
எனது வெற்றி உறுதியாகி விட்டது. எனவே தோல்வி பயத்தால் கல்வீசி தாக்குகிறார்கள். இது ஜனநாயக படுகொலை. எனக்கு கூடுதல் பாதுகாப்பு தேவை. ippave kanna kattuthu
கார்த்திக்
ஒரு கூட்டத்தில் இவர் மேல் செங்கல் எறிந்தவுடன் இவர் சொன்னது,
எனது வெற்றி உறுதியாகி விட்டது. எனவே தோல்வி பயத்தால் கல்வீசி தாக்குகிறார்கள். இது ஜனநாயக படுகொலை. எனக்கு கூடுதல் பாதுகாப்பு தேவை.
கார்த்திக்
ஒரு கூட்டத்தில் இவர் மேல் செங்கல் எறிந்தவுடன் இவர் சொன்னது,
எனது வெற்றி உறுதியாகி விட்டது. எனவே தோல்வி பயத்தால் கல்வீசி தாக்குகிறார்கள். இது ஜனநாயக படுகொலை. எனக்கு கூடுதல் பாதுகாப்பு தேவை.
ரொம்ப லேட்டா இப்பதான் படிச்சேன். விழுந்து விழுந்து கண்ணில் தண்ணி வர சிரிச்சுகிட்டே படிச்சேன். அதுவும் ரொம்ப சின்ன கமென்ட் - 'அதானே' - சரத்குமார்-க்கு யாரோ எதிரே ஒரு அல்லக்கை இருந்து சொல்ற மாதிரி நெனைச்சுப் பாத்தேன். அட்டகாசம் போங்க.
Post a Comment