ஒரு எஸ்.எம்.எஸ். வந்திருந்தது. பேங்க் அக்கவுண்ட் பேலன்ஸோ ஏர்டெல் ஸ்பெஷல் ஆஃபரோ வந்திருக்கும் என்று நினைத்து பார்த்தால், அத்வானிக்கு ஓட்டு போடணுமாம். பிஜேபிகாரங்க அனுப்பிருக்காங்க.
என்ன சொல்றாங்கன்னா,
---------------
BJP's Promise:
Terror-free India,
Hunger-free society,
Debt-free kisan,
Worry-free middle class.
3.5 crore families to benefit from income tax exemption for incomes upto Rs. 3 lakh p.a.
Student loans at 4%.
Advani for PM.
www.lkadvani.in
---------------
இனி விளக்கம் நான் சொல்றேன்.
ஃப்ரி சொன்னா நம்ம ஆளுங்க என்ன வேணா பண்ணுவாங்கன்னு நினைப்பு. பாருங்க, வரிக்கு வரி ஃப்ரி.
டெரர் ஃப்ரி இந்தியா - அப்படின்னா பிஜேபி ஆட்சிக்கு வந்திச்சுன்னா, இனி இந்தியாவுல இலவசமா டெரர் இருக்கும். அதாவது டெரரிஸம் தலைவிரிச்சு ஆடுமாம்.
ஹங்கர் ஃப்ரி சொசைட்டி - ஜீரணிக்க முடியாத படி பல விஷயங்கள் நடக்கும். ஜீரணிக்காத போது எப்படி பசி எடுக்கும்? அப்புறம், சொசைட்டி ஒரு பிளேட் எங்க கிடைக்கும்ன்னு கேட்க கூடாது.
டெப்த் ஃப்ரி கிஷான் - நல்லா வாசிங்க. இருக்குற கடன் விவசாயிகள போட்டு தள்ளிருமாம். பிறகு, விவசாயிகளும் இருக்க மாட்டாங்க. கடனும் இருக்காது.
வொர்ரி ஃப்ரி மிடில் கிளாஸ் - இது ரஜினியே ஸாரி, ஆண்டவனே ஆட்சிக்கு வந்தாலும் தீர்க்க முடியாது. வொர்ரி இருந்தாதானே மிடில் கிளாஸ்?
3.5 கோடி மக்களுக்கு வரி சலுகை கிடைக்கும். கண்டிப்பா. சம்பளம் குறைஞ்சா, தானா வரியும் குறையும். இருக்குற பொருளாதார பிரச்சனையில பல பேருக்கு சம்பளம் குறைஞ்சிருக்கு. குறைய போகுது. அதனால வரியும் குறையும்.
தேர்தல்ங்கறதால தான் ஆட்குறைப்பு செய்தியும், சம்பள குறைப்பு செய்தியும் வராம இருக்காம். கம்பெனிகளுக்கு மேல இருந்து உத்தரவு வந்திருக்காம். தேர்தலுக்கு பிறகு அதிர்ச்சிகள் இருக்குமாம்.
சரி, பிஜேபி பிரச்சாரத்துக்கு வருவோம்.
மாணவர்களுக்கு கல்வி கடன் நாலு பர்சண்ட் தானாம். அதாவது கடன் வாங்காம படிக்க முடியாதுங்கறாங்க.
சரி, பிஜேபிக்கு ஓட்டு போட்டுடுங்க, என்ன?
9 comments:
//மாணவர்களுக்கு கல்வி கடன் நாலு பர்சண்ட் தானாம். அதாவது கடன் வாங்காம படிக்க முடியாதுங்கறாங்க//
நல்ல கேள்விதான்
உங்க வீட்டுக்கு ஆட்டோ ரெடி (நான் வர அல்ல):-))))))))
//தேர்தல்ங்கறதால தான் ஆட்குறைப்பு செய்தியும், சம்பள குறைப்பு செய்தியும் வராம இருக்காம். கம்பெனிகளுக்கு மேல இருந்து உத்தரவு வந்திருக்காம். தேர்தலுக்கு பிறகு அதிர்ச்சிகள் இருக்குமாம்.////
*Gulp*
ஓட்டு கூட ப்ரீயா வே போடணுமாம் ல... அப்பிடியா?
(எத்தனை தொகுதிகள் திருமங்கலம் ஆகப்போகுதோ தெரியல)
நன்றி ஞானசேகரன்
ஐயோ கிரி... ஏன் பயமுறுத்துறீங்க? :-)
CVR,
காதுல விழுந்த செய்தி அது...
ஆமாம் எட்வின்
நண்பரே, உங்க பதிவு மிகவும் அருமை வோட்டும் போட்டாச்சு நானும் ஒரு பதிவு போட்டு இருகிறேன் கண்டிப்பாக பிடிக்கும், படித்து பிடித்தால் வோட்ட போடுங்க :-) http://sureshstories.blogspot.com/2009/04/18.html
Post a Comment