நேற்று ரயிலில் வந்து கொண்டிருந்தேன். அப்ப, யாருக்கு ஓட்டு போடலாம்ன்னு ஒரு ஆழ்ந்த சிந்தனை. கிட்டத்தட்ட அரை தூக்கம்! இதுவரைக்கும் ரெண்டு தடவை ஓட்டு போட்டு இருக்கேன். ரெண்டு தடவையும் நான் ஓட்டு போட்ட ஆட்கள் தோத்து போயிட்டாங்க. ஜெயிச்சவங்களும் எதுவும் செய்ததில்லை. ஓட்டு போடாம விடலாம்ன்னு பார்த்தா, அதுவும் தப்புங்கறாங்க. என்ன செய்ய?
இந்த தேர்தலில் கட்சிகள் வேட்பாளர்களிடம் வெளிப்படையாக எதிர்ப்பார்த்த அம்சம், ‘எவ்ளோ செலவு பண்ணுவீங்க?’. ‘என் தொகுதி மட்டுமில்லாம பக்கத்து தொகுதிகளையும் பார்த்துக்கிறேன்’ன்னு சொன்னா, கண்டிப்பா சீட்டாம். எல்லாம் கோடிஸ்வர வேட்பாளர்கள். அதனால களத்துல, பணம் நல்லா புரளும்.
எத அடிப்படையா வச்சு ஓட்டு போடுறது?
கட்சி கொள்கையா? அப்படி ஒண்ணு எந்த கட்சிக்கும் கிடையாது.
நல்ல வேட்பாளர்களை பார்த்து ஓட்டு போடுறதுன்னா, எந்த கட்சியிலயும் நல்ல வேட்பாளர்களுக்கு சீட் கொடுக்கறது இல்லை. நல்ல கட்சிகாரர், நல்ல அரசியல்வாதி என்பதே முரண்பட்ட சொற்கள். சுயேட்சையா நிற்குற நல்லவர் யாருக்காவது (அப்படி யாராவது நின்றால்) ஓட்டு போடலாம் என்றால், அவர் ஜெயித்து என்ன பண்ணுவார்? எந்த கட்சிக்கும் சார்பில்லாமல், அவரால் எப்படி, என்ன செய்ய முடியும்? அந்த நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்வாரியான ஆதரவு இல்லாவிட்டால், ஸ்திரதன்மை இல்லாமல், நாட்டின் முன்னேற்றம் தான் பாதிக்கப்படும்.
யாருமே மெஜாரிட்டி இல்லாமல், நாடு தள்ளாடுவதற்கு பதில், எந்த திருடனாவது, பொறுக்கியாவது இருந்து நிலையா கொள்ளையடித்தால் என்ன? என்று தோன்றுகிறது. கமிஷன் வாங்கினாலும், கம்னாட்டி கன்ட்ரிக்கு எதாச்சும் பண்ணினா சரின்னு தோணுது.
நல்ல கட்சிகளும் கிடையாது, நல்ல தலைவர்களும் கிடையாது, நல்ல வேட்பாளர்களும் கிடையாது. ஆனா, ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்கணும். வாக்காளனுக்கு ஜனநாயகம் வைக்கும் செக். தோற்பது என்னவோ, இரண்டுமே தான்.
---
ரயிலில் சைடில் மூன்று பெர்த் வைத்துள்ளார்கள். எந்த கிறுக்கன் ஐடியா கொடுத்தானோ? இப்போது, அந்த திட்டம் வாபஸ் என்றார்கள். ஆனால், இன்னமும் இருக்க தான் செய்கிறது.
மேலே உள்ள இரண்டு பெர்த்களிலும், ஏறி உட்கார்ந்து படுக்க முடியாது. படுத்தவாறே ஏற வேண்டும். படுத்தவாறே இறங்க வேண்டும். இதற்கென்றே தனியாக பிராக்டிஸ் செய்து விட்டு பயணம் செய்ய வேண்டும்.
சின்ன குழந்தைகள், இளைத்த வாலிபர்கள் - இவர்களை தவிர வேறு யாராலும் சுலபமாக இதில் ஏறி படுக்க முடியாது. நான் பார்த்த வயதானவர்கள், பெண்கள் ரொம்ப சிரமப்பட்டு கொண்டிருந்தார்கள். ரயிலில் அதிகம் பயணம் செய்பவர்கள், இவர்கள் தான்.
இதிலும் மேல் பெர்த்தில் படுக்கிறவர்கள், பேனுக்கு இணையாக படுக்க வேண்டும். கொஞ்சம் கூட காத்து வராது. அடிக்குற வெக்கையில் தூங்கவும் முடியாது. இறங்கவும் முடியாது. சாவுங்கடா! என்பது போல் ஒரு சித்திரவதை வடிவமைப்பு.
---
இந்த கொடுமைக்காகவே, பீகார் போயி லாலுவுக்கு எதிரா ஓட்டு போட தோணிச்சு. இப்படி ஒவ்வொரு விஷயத்துக்காகவும், ஒவ்வொரு கட்சிக்கு எதிரான மனநிலை இருக்குது. எந்த கட்சிக்கு ஆதரவாவும், எதிராவும் ஓட்டு போட்டு ஒண்ணும் ஆகிட போறதில்லை.
ஓ போடுங்கன்னு சிலர் சொல்லுறாங்க. அதனால என்ன நன்மை? அத போடுறது அவ்ளோ சுலபம் இல்லை. அதனால அதற்கு பெரும்பான்மை கிடைக்க போறது இல்லை. அப்படியே, சுலபமா ஆக்கிட்டாங்கனாலும், பெரும்பான்மை கிடைச்சாலும் என்ன நடக்கும்? திரும்ப தேர்தல் நடக்கும். உடனே, கட்சிகள் நல்லவங்கள கூட்டிட்டு வந்து நிறுத்திட போறாங்களா? எனக்கென்னமோ, இதனால எந்த பயனும் இருக்குறது போல் இல்ல.
ஒருமுறை எலக்ஷன் நடக்கணும். அதுல, ஒரு கட்சியோ, ஒரு கூட்டணியோ பெரும்பான்மை பெற வேண்டும். பின்பு, அது ஐந்து ஆண்டுகளுக்கு நிலையான ஆட்சியை கொடுக்க வேண்டும். எல்லாவகையிலும், அதுதான் நல்லது.
---
இன்னும் குழப்பத்துல தான் இருக்கேன்.
சறுக்கு வழுக்கி விளையாடும்போது, குழந்தைகள் நிறைய இருந்துதுனா, எல்லாம் மொத்தமா ஏறும். அதில் ஒன்றிரண்டு குழந்தைகளுக்கு வழுக்கவா, வேண்டாமான்னு ஒரு தயக்கம் இருக்கும். பின்னாடி இருக்குற குழந்தைகள் கொடுக்குற பிரஷர்ல, ஒரு கட்டத்துல, வலுகட்டாயமா, சல்லுன்னு வழுக்கிட்டு வந்திடும்.
அப்படிதான் நடக்கும்ன்னு நினைக்குறேன். அதுவரைக்கும் யோசிச்சிட்டே இருக்கேன். :-)
16 comments:
சரவணகுமரன் ரொம்ப விரக்தியா இருக்கீங்க போல!
அதுக்காக வோட் போடாம விட்டுடாதீங்க :-)
நீங்க கூறிய சைடு பெர்த் ரொம்ப கொடுமை தான்...எனக்கு இன்னும் அந்த அனுபவம் கிடக்கல..ஆனால் நீங்கள் சொல்வதை பார்த்தாலே கலக்குது
எனக்கும் இதே நிலைமை தான், நான் மூன்று முறை ஓட்டு போட்டுளேன் ஒவ்வொரு முறையும் நான் ஓட்டு பூட்ட யாரும் டெபாசிட் வாங்கவில்லை.
இந்த முறையும் யார் தோற்க வேண்டும் என்று நினைக்கிறேனோ அவருக்கு ஓட்டு போட போகிறேன்.
எவனும் யோக்கியன் கிடையாது இதுல எவனுக்கு போட்டு என்ன பண்ண....
நல்ல கட்சிகளும் கிடையாது, நல்ல தலைவர்களும் கிடையாது, நல்ல வேட்பாளர்களும் கிடையாது. ஆனா, ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்கணும். வாக்காளனுக்கு ஜனநாயகம் வைக்கும் செக். தோற்பது என்னவோ, இரண்டுமே தான்
IDHE NILAMAYIL THAN NATTULA NIRAYAPERU IRUKKANAGA IDHUKKU ELLAM THERVU KAANA MUDIYUMNU NAMBIKKAYE ILLA
உண்மையிலேயே இவ்வளவு அழகாக மனசுக்குள் நினைக்கிறதை வெளியே சொல்ல முடியுமா ?
உங்கள் பதிவு மிக அழகு. மிக மிக அழகு சரவணகுமரன்.
அந்த ரயிலில் சைடு பர்த் மேட்டரு நெம்ப கஷ்டம்தான். ஆனா என்ன , ரூல்ஸ் போடற எந்த ரயில்வே அமைச்சரும் ரயிலுக்குள்ள புகுந்து பாத்திருப்பாங்களான்றது கூட சந்தேகம்தான்.
சரவணகுமரன் எல்லாருடைய மனப் போராட்டங்கள்/குழப்பங்களும் இதுதான்.
கிரி, விரக்தி எல்லாம் இல்ல... யோசிச்சா வருற வெறுப்புதான்... :-)
நீங்களும் ஓட்டு போட சொல்றீங்க... யாருக்குன்னு சொல்ல மாட்டேங்றீங்களே? :-)
DHANS, உங்க கதையும் நம்ம கதைதானா?
ஆமாம், UNGALODU NAAN.
வருகைக்கு நன்றி...
ரொம்ப நன்றி மதிபாலா
வருகைக்கு நன்றி மோகன்குமார்
boycott this election for eelam issue
இவ்வளவு குழப்பத்தில் இருப்பதுதான் ஒரு இந்திய குடிமகனுக்கு அழகு.
அனானி, பிரச்சினை தீருமா, என்ன?
கதிர், நக்கலுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல :-)
நானும் இதே நிலைமையில்தான் இருக்கேன் :(
வருகைக்கு நன்றி ஆனந்த்
Post a Comment