இன்று ஒரு மீட்டிங்கில் பேசிய ஒபாமா கீழ்க்கண்டவாறு சொல்லியிருக்கிறார்.
“இந்தியா போன்ற நாடுகளுக்கு அவுட்சோர்சிங் செய்யப்பட்டிருந்த வேலைகள், குறைந்த ஊழியத்திற்கானவை. ஆனால், அதிக வேலை பளு உள்ளவை. இதை தடுத்து, அமெரிக்காவிற்கு கொண்டு வருவதால் எந்த பலனும் இல்லை. இதற்கு பதில், அமெரிக்கா வாழ்க்கை தரத்திற்கு ஏற்றாற்போலான உயர் நிலை வேலைகளை இங்கு உருவாக்க வேண்டும்.”
அப்பாடி, ஒரு வழியாக விஷயத்தை கண்டுபிடிச்சுட்டாரு! இந்த விஷயம் தெரியாமத்தான் தேர்தல்ல அப்படி பிரச்சாரம் பண்ணினாரா?
எது எப்படியோ, இந்த நெருக்கடி நேரத்தில், இந்திய ஐடி & பிபிஒ துறை நிறுவனங்கள் சந்தோஷப்பட்டு கொள்ள ஒரு செய்தி.
---
மருத்துவ சுற்றுலா என்றழைக்கப்படும் வெளிநாட்டினர்க்கு மருத்துவ சேவை அளிப்பதில், இந்தியா உலகத்திலேயே இரண்டாம் இடத்தில் இருக்கிறதாம். இங்கு மருத்துவ செலவு குறைவென்பதால், வெளிநாட்டில் இருந்து நிறைய பேர் இந்தியா வருகிறார்களாம்.
அதே சமயம், இன்னொரு விஷயம். இந்தியா, தன் மக்களின் மருத்துவத்திற்காக செலவளிப்பது, மொத்த ஜிடிபியில் 1.2 பர்சண்டேஜ் தான்.
‘ஊரார் வீட்டு பிள்ளையை ஊட்டி வளர்த்தா, தன் வீட்டு பிள்ளை தானா வளரும்’ன்னு சொல்ற மாதிரி, வெளிநாட்டுக்காரங்களை நல்லா கவனிச்சு அனுப்பினோம்ன்னா, இங்குள்ள மக்களின் உடல் நலம் தானா கவனிக்கப்படும்’ன்னு நினைச்சுக்கிச்சா அரசாங்கம்?
8 comments:
நீங்க வேற ! இந்த ராபின் குக் வோட Foregin body இப்போதான் படிச்சு கிட்டு இருக்கேன். மெடிக்கல் tourisam, டெல்லி base பண்ணின்ன fiction. அதை படிச்சுட்டு பீதி ஆஹி எத்தனி பேர் இனிமே வருவாங்கன்னு தெரியலை :(
//இந்திய ஐடி & பிபிஒ துறை நிறுவனங்கள் சந்தோஷப்பட்டு கொள்ள ஒரு செய்தி.//
உண்மை தான்
VS, முடிஞ்சா அதை பத்தி ஒரு பதிவு போடுங்க...
ஆமாம் கிரி...
அதே சமயம், இன்னொரு விஷயம். இந்தியா, தன் மக்களின் மருத்துவத்திற்காக செலவளிப்பது, மொத்த ஜிடிபியில் 1.2 பர்சண்டேஜ் தான்.
yes true saravana well writ ting
லஞ்சம் வாங்கியே பழக்கப்பட்டவங்களுக்கு நாம தல கவனிக்கனும்.
அவங்க எப்பவுமே இப்படித்தான்.. (@#$@#$@#$)
//கவனிக்கப்படும்’ன்னு நினைச்சுக்கிச்சா அரசாங்கம்?
நன்றி ஜாக்கி சேகர்... இது டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்த ஒரு செய்தியை அடிப்படையாக வைத்து எழுதியது...
ஆமாம் தமிழ்நெஞ்சம்
Post a Comment