தர்மபுரி பக்கம் போயிட்டு, பொழுது போக்கணும்ன்னா தாராளமா ஒகேனக்கல் போகலாம். நான் அப்படித்தான் போனேன். நான் போன சமயம், அவ்வளவா தண்ணி இல்ல. ஏதோ விழுந்துட்டு இருந்திச்சு.
எப்போதும் இருக்குற சுற்றுலா இடம்ங்கறத சிறப்பம்சம் தவிர, இப்ப அரசியல் சர்ச்சையும் கூடி இடத்தோட முக்கியத்துவம் அதிகரிச்சிருக்கு.
சாப்பிட மீனு பிரஷ்ஷா கிடைக்குது. அங்கயே பிடிச்சு, பொறிச்சு, சாப்பிகிற சப்ளை செயின் மாடல். நான் அங்க இருக்குற ஹோட்டல் தமிழ்நாடுல சாப்பிட்டேன். இங்க வெளியில எப்படி இருக்குன்னு தெரியலை.
மீனுக்கு அடுத்தப்படியா இந்த உள்ளூர் மசாஜ் நிபுணர்கள பார்க்கலாம். கையில ஒரு பாட்டில் தென்னமரக்குடி எண்ணையோடு விரட்டுக்கிறார்கள். எங்கனாலும் உக்கார்ந்து மசாஜ் பண்ண ஆரம்பிச்சிடுறாங்க.
ஒகேனக்கல்ல பரிசல் ரொம்ப பிரபலம். நான் ரொம்ப நாளு முன்னாடி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். அதாவது, பரிசல்காரங்க தெரிஞ்சே கூட வருறவங்கள தண்ணிக்குள்ள தள்ளி விட்டுடுவாங்களாம். அப்புறம், பாடியை எடுக்க எக்கச்சக்கமா பணம் கேப்பாங்களாம். இது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியலை. கவர்மெண்ட் பல இடங்களில் போர்டு வச்சிருக்கு. பரிசல்காரங்க அடையாள அட்டை வச்சிருப்பாங்க. பார்த்து ஏறுங்கன்னு. கவர்மெண்ட்டே ஒரு கவுண்டர் வச்சு டிக்கெட் போட்டு பரிசல்ல ஏத்தி விடலாம். இப்ப என்னன்னா, பரிசல்காரங்க சுத்தி சுத்தி வந்து ஆள் பிடிச்சிட்டு இருக்காங்க.
இதுக்கே பயந்து நாங்க போயிட்டு இருக்கும் போது, ஒரு பரிசல்காரர் வந்தாரு.
“வாங்கண்ணா, அந்த பக்கம் கூட்டிட்டி போறேன்.”
“இல்ல...வேணாம்”
“அட வாங்கண்ணா, முதலை எல்லாம் காட்டுறேன்”
ஆஹா... இது எப்படி இருக்கு? யாருக்கிட்ட வந்து என்ன பேச்சு பேசுறாரு? விடு ஜூட்...
பரிசல்ல தலைக்கு மேலே தூக்கிட்டு பரிசல்காரங்க நம்மை கடந்து போயிட்டே இருக்காங்க. மேலே இருந்து பார்த்தா, வட்ட ஆமைகள் போல தெரியிறாங்க.
ரெண்டு பசங்க மேல நின்னுக்கிட்டு, கீழே பரிசல்ல போறவுங்கக்கிட்ட “அண்ணா அண்ணா... பத்து ரூபா குடுண்ணா... குதிக்குறோம்...”ன்னு பத்து ரூபாய்க்கு டைவ் அடிச்சிக்கிட்டு இருந்தாங்க. எந்தளவுக்கு ஆபத்துன்னு புரியலை. உதவுறோம்ன்னு ஊக்குவிக்க கூடாதுன்னு மட்டும் புரியுது. பசங்கள தெளிவா பார்க்க, படத்தை கிளிக்குங்க.
நுழைவு கட்டணம்ங்கற பேர்ல 2, 3, 5 ரூபாய்ன்னு ஆங்காங்கே உக்கார்ந்து வசூல் பண்ணிட்டு இருக்காங்க. வாட் வரி மாதிரி. பல இடங்களில். ரேட் கம்மி தான். இருந்தாலும் ஒரு என்ட்ரியில் வசூல் செய்யலாம்.
இந்த இடம் முழுக்க அந்த ஊர் மக்கள் கட்டுப்பாட்டில் தான் இருப்பதாக தெரிகிறது. சுத்தமா, சுத்தம் இல்லை. சுற்றிலும் பிளாஸ்டிக் குப்பைகள். ஒகேனக்கலில் சுகாதாரம் கவிழ்ந்து கிடக்கிறது.
24 comments:
அருமையான புகைப்படங்கள். பரிசல் செல்லும் அந்த மலைகளுக்கு இடையேயான நீர் பரப்பு என்னை கர்ணன் படங்களுக்கு இழுத்துச் சென்றுவிட்டது
me first :-) sirantha pathivu!!
-thangal blogin puthu rasigai
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.
இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
நட்புடன்
nTamil குழுவிநர்
நேரில் பார்த்தது போலான அனுபவத்தைக் கொடுத்தது. நன்றி!
துண்டு போட்டுக்கவா?
கல்லூரியில் பெங்களூர் டூர் போகலாமுன்னு ஒகேனக்கல்லுக்கு முன்னாலேயே ஒரு மலைப்பகுதியில ஒரு குளம் மாதிரி அருவியில முங்கி எழுந்தோம்.முங்குறத விட சரக்க முழுங்குறதுக்கு தகுந்த இடம்ன்னு பஸ் நின்னுடுச்சு.
படப்பிடிப்பு,சுற்றுலா தவிர ஒதுங்கியிருந்த ஊர் பாறையும் வசனம் பேசும் நிலைக்கு வந்துவிட்டது.
கொஞ்சம் சுத்தமாக பராமரித்தால் நன்றாக இருக்கும். பொது மக்கள் பொறுப்பும் தேவை.
தமிழக சுற்றுலாதளங்கல்லுக்கு
ஏற்பட்ட சாபக்கேடு.
1988 யில் போனது திரும்ப படங்கள் மூலம் பார்க்கவைத்ததற்கு நன்றி.
ஒகேனக்கல் நான் நீண்ட நாட்களாக செல்ல விரும்பும் இடம்.. படங்கள் மிக அழகு.! ரசித்தேன். அதற்காக பரிசல்காரர்களைப் பற்றி இப்படி பீதி கிளப்பியிருக்கவேண்டாம்.
நன்றி முரளிகண்ணன்...
கர்ணன் உங்களை ரொம்ப பாதிச்சிருப்பாரு போல!
நன்றி kk...
நன்றி மோகன்
//துண்டு போட்டுக்கவா?//
எதுக்கு?
//முங்குறத விட சரக்க முழுங்குறதுக்கு தகுந்த இடம்ன்னு பஸ் நின்னுடுச்சு.//
ஆமாங்க... நிறைய பாட்டில் கிடந்தது...
//படப்பிடிப்பு,சுற்றுலா தவிர ஒதுங்கியிருந்த ஊர் பாறையும் வசனம் பேசும் நிலைக்கு வந்துவிட்டது.//
:-)
ஆமாம் Yaro,
சுகாதாரத்தை கொஞ்சம் கவனித்தால் இந்த மாதிரியான இடங்கள் எங்கோ போய்விடும்.
நன்றி வடுவூர் குமார்
நன்றி தாமிரா...
//அதற்காக பரிசல்காரர்களைப் பற்றி இப்படி பீதி கிளப்பியிருக்கவேண்டாம்.//
கேள்விப்பட்டதை சொன்னங்க... :-)
குளிர்ச்சியான பதிவு... :))
நன்றி விக்னேஷ்வரன்
நாங்கள் சென்று பார்த்து 20 வருடங்களாவது இருக்கும். நினைவுகளைக் கிளறிவிட்டதற்கு நன்றி.
நன்றி டாக்டர்
nalla sutrula thalam padhukappa alazha paramarikka santhoasama irukkun
Post a Comment