இப்ப டிவியில் மூணு விளம்பரங்களை மாத்தாம பார்க்குறதுண்டு. ஏற்கனவே இரண்டு விளம்பரங்களை பற்றி கார்க்கியும், பரிசலும் சொல்லிட்டாங்க.
இன்னொன்னு பஜாஜ் விளம்பரம். இரண்டு பொண்ணுங்க, அக்கா - தங்கச்சிக, பயங்கரமா சண்டை போட்டுக்குவாங்க. எதுக்கு? இங்க பாருங்க...
இது அந்த ஏர்டெல் விளம்பரம். ரஹ்மான் இசையாமே? அப்படியா? கலக்கல்தான் போங்க...
அசினொட ‘யம்மாடி ஆத்தாடி’ விளம்பரம் இங்கே. இதன் மூலம் சர்வதேச பார்வை பேரரசு மேல விழுந்து, பாடல் வரிகளுக்காக அடுத்த ஆஸ்கார் கிடைச்சா நல்லாருக்கும்.
------
ஆபிஸில் வட இந்திய நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தேன். தமிழ் வார்த்தைகளுக்கு அர்த்தம் என்று பேச்சு போய் கொண்டு இருந்தது.
“டைம்ம தமிழ்ல எப்படி சொல்றது?”
”மணி”
“யூ மீன் money?"
"ஆமாம்”
!
“Time is money, right? தமிழொட பெருமையை பாருங்க..."
-----
ஸ்லம்டாக் மில்லினியர், “நானும் கோடீஸ்வரன்” என்ற பெயரில் தமிழ் பேசி கொண்டிருக்கிறது. ஹீரோவுக்கு சிம்பு குரல் கொடுக்கபோவதாக செய்தி வந்தவுடன், ’கிழிஞ்சது’ன்னுதான் நினைச்சேன். படத்தில் கேட்கும் போது, எஸ்.பி.பி., ராதாரவி போலில்லாமல் சிம்பு நினைவுக்கே வரவில்லை.
சிம்பு, நீங்க டப்பிங்ல கலக்குறீங்க. அதனால,...
-----
ரஹ்மான், தமிழ் இசையுலகம் தந்த பாராட்டு விழாவில்,
”இந்த சந்தோஷத்திலும் எனக்கு ஒரு வேதனை உண்டு. ஒவ்வொரு இசை கலைஞர்களுக்கும் குறிப்பிட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். இணையத் தளங்களில் என்னை வாழ்த்துவதற்காக இன்னொருவரை தூற்ற வேண்டாம். என்னையும் இளையராஜா சாரையும் ஒப்பிட்டு மோசமாக சிலர் எழுதுவதைப் பார்க்கும்போது வேதனையாக உள்ளது.”
------
நான் கடவுள் படத்தை விட பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட சாருவின் நான் கடவுள் விமர்சனத்தில் சாரு,
“ஸ்லம்டாக் மில்லினியரில் ஒரு ஹிந்தி பாடலை சிறுவன் பாடும் இரண்டு தருணங்களிலும் பின்னணியில் அல்லா ரக்கா ரஹ்மானின் பிரம்மாண்டமான ஆர்க்கெஸ்ட்ரா ஒலிக்கவில்லை. ஒரு கண்பார்வையற்ற பிச்சைக்காரன் தெருவோரத்தில் பாடும்போது எப்படி இருக்குமோ அதே மாதிரிதான் இருக்கிறது இசையும். அப்படியில்லாமல் நான் கடவுளில் அம்சவல்லி பாடும் தருணங்களில் எல்லாம் ராமராஜனின் கரகாட்டக்காரனுக்கு அமைப்பது போல் பின்னணி இசை தந்திருக்கிறார் இளையராஜா.”
------
ஒரு நாள் பெங்களூர் ரயில்வே ஸ்டேசன் வெளியே உள்ள ப்ரிபெய்டு ஆட்டோ க்யூவில் நின்று கொண்டு இருந்தேன். ஒரு ஆட்டோ டிரைவர், கவுண்டரில் நின்று கொண்டு ஒவ்வொரு பயணியிடமும் இருந்து டிக்கெட்டை வாங்கி பார்த்து, வரிசையில் இருந்த ஆட்டோக்களில் ஏற்றி விட்டு கொண்டிருந்தார். எனக்கு ஆச்சரியம். தான் தன் வேலைன்னு இல்லாம, மத்தவங்களுக்கு உதவிக்கிட்டு இருக்காரேன்னு. என் முறை வந்தது. நான் இறங்க வேண்டிய இடத்திற்கு கிட்டத்தட்ட இருநூறு ரூபாய். நம்ம பொது நல ஆட்டோ டிரைவர், வழக்கம் போல் டிக்கெட்டை பார்த்தார். எந்த ஆட்டோவில் ஏற்றி விட போகிறாரோன்னு பார்த்து கொண்டிருந்தேன்.
அவர் போயி அவர் ஆட்டோவை எடுத்து வந்தார்.
-----
அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலை, 9/11 என்றே மீடியாக்கள் குறிப்பிட்டு வரும். அதன் பின் நடந்த லண்டன் தாக்குதலுக்கு பெயர், 7/21. மும்பை தாக்குதல் - 11/26. 9/11 போல் 11/26, 7/21 குற்றவாளிகள் இப்படிதான் செய்திகள் வரும். இப்ப லேட்டஸ்ட்டா, 3/3 - லாகூர் ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியினர் மேல் தாக்குதல்.
முன்ன பரவாயில்லை. நினைவில்ல வைக்க முடிஞ்சது. இப்ப, கஷ்டமா இருக்குது. வருஷம் முழுவதும் இப்படி அடிக்கடி நடந்துக்கிட்டே இருந்தா, பின்ன எப்படி?
-----
9 comments:
//மும்பை தாக்குதல் - 11/26//
--மும்பை தாக்குதல் - 26/11 என்பதே சரி..
ஏன்? இந்திய முறைப்படி சொல்லணுமா?
Pathivu super :)
veetuku poayi thaan Ad videos paakanum :)
நன்றி வெட்டிப்பயல்
சாரு ஒரு லூசு என்பதை மீண்டும் நிரூபித்து விட்டார்..
கார்க்கி, என்ன இப்படி சொல்லிட்டீங்க?
உங்களின் பல பதிவுகளை இப்பொழுது தான் படித்து கொண்டிருக்கிறேன் .
வாழ்த்துக்கள் பல.
>>>.... ... இப்ப லேட்டஸ்ட்டா, 3/3 - லாகூர் ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியினர் மேல் தாக்குதல்.
>>>முன்ன பரவாயில்லை. நினைவில்ல வைக்க முடிஞ்சது. இப்ப, கஷ்டமா இருக்குது. வருஷம் முழுவதும் இப்படி அடிக்கடி நடந்துக்கிட்டே இருந்தா, பின்ன எப்படி? :-) வேதனையிலும் நகைத்தேன்
நன்றி முருகானந்தம்...
"நான் இறங்க வேண்டிய இடத்திற்கு கிட்டத்தட்ட இருநூறு ரூபாய். நம்ம பொது நல ஆட்டோ டிரைவர், வழக்கம் போல் டிக்கெட்டை பார்த்தார். எந்த ஆட்டோவில் ஏற்றி விட போகிறாரோன்னு பார்த்து கொண்டிருந்தேன்.
""அவர் போயி அவர் ஆட்டோவை எடுத்து வந்தார்.""
Wow...Classic writing..!!! :) I enjoyed lot....Keep it up...:)
Smiles,
Chandra, Singapore
Post a Comment