Thursday, February 26, 2009

சுஜாதாவின் 'என் இனிய இயந்திரா'

எண்பதுகளில், சுஜாதா ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. புத்தகமாக முதல் பதிப்பு வெளிவந்தது நவம்பர் 1986 இல். பின்பு, தூர்தர்ஷனில் நாடகமாக மாற்றங்களுடன் வந்தது. பின்ன, சுஜாதாவின் கற்பனையை அப்படியே எடுப்பது என்றால் சுலபமா என்ன? அதுவும் தூர்தர்ஷனில்?

இப்ப, இதைத்தான் ஷங்கர் எந்திரனாக எடுத்து கொண்டிருக்கிறார் என்று செய்திகள் வருகிறது. கதையை படித்தால் அப்படி யாரும் சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் இந்த கதையில் ஹீரோ என்று யாரும் கிடையாது.

2020 களில் நடக்கும் கதையை 1980 களில் எழுதியிருக்கிறார். 2022 இல் எங்கும் இயந்திர மயம். கதை என்ன கதை? சுஜாதாவின் கற்பனையும் வார்த்தைகளும் தான் விசேஷம். சிபி-நிலா ஒரு இளம் தம்பதி. இவர்கள் வாழும் அப்போதைய இந்தியா, ஜீவா என்னும் ஒற்றை அதிகாரத்தின் கீழ் உள்ளது. ரவி, மனோ என்று மற்றொரு அணி. நாட்டின் அதிகாரத்துடன் விளையாடும் அணி. ரவியுடன் இருந்த ஜீனோ என்ற இயந்திர நாய், நிலாவுடன் இணைந்து போடும் ஆட்டம்தான், இக்கதையின் ஸ்பெஷல். இந்த கதையை, கதை எழுதிய காலக்கட்டத்தில் படித்திருக்க வேண்டும். ஆச்சரியத்துடன் கூடிய சுவாரஸ்யமாக, சரியாக இருந்திருக்கும். இப்போது படித்தால் கிடைப்பது, இன்னொரு வகையான அனுபவம்.

இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்திற்கும் சுஜாதா, இரு எழுத்தில் பெயர் வைத்துள்ளார். நாயை விட்டே ஷெல்லியின் கவிதையை பேச விடுகிறார். வருங்காலத்தில் என்ன மாதிரியான இயந்திரங்கள் இருக்கும், மனித மனம் எப்படி மாறுப்பட்டிருக்கும் என தனக்கே உரிய பாணியில் கதையெங்கும் தோரணம் கட்டி தொங்க விட்டிருக்கிறார்.

இக்கதையில் இருந்து சில வரிகள்.

------

நிலா சிபிக்கு போன் செய்ய போகிறாள்.

“பேசுபவரைப் பார்க்கவும் வேண்டுமெனில் ஒரு ரூபாய் அதிகமாகப் போடவும்” என்றது குரல், இயந்திர முட்டாளாக.

‘என் இனிய இயந்திரா... நிச்சயம் உனக்கு நான் பணிந்து ஒரு ரூபாய் போடத்தான் போகிறேன். இன்று என் கணவனிடம் அந்தச் செய்தியைச் சொல்லும்போது அவன் முகம் மாறுவதைப் பார்த்தே ஆகவேண்டும்.’ (இப்பத்தான் மூணு நாளு முன்னாடி கலைஞர் பி.எஸ்.என்.எல். போனில் 3 ஜி அறிமுகப்படுத்தினார்.)

“சிபி! நிலா பேசறேன்.”

“நிலா! எங்கருக்கே?”

“மால் பக்கத்தில் பூத்தில. சிபி, ஒரு சுபச் செய்தி!”.
(எனக்கு ஒரு நாலு அஞ்சு வருஷம் முன்னாடி தான் மால்ன்னா என்னன்னு தெரியும்.)

-------

எட்டாவது தெருவில் டிக்கெட் வாங்கிக் கொண்டு ‘மானோ’ பிடித்தாள். அதன் காந்தத் தண்டு காற்று மெத்தையில் வழுக்கிக் கொண்டு செல்ல, ‘சின்த்’ இயந்திரக் குரலில்-பல்லாவரம், மீனம்பாக்கம், பரங்கிமலை, கிண்டி என்று அறிவிக்க, பத்தாவதில் இறங்கி பூமியடி ரயில் பிடித்து எட்டாவது குறுக்குத் தெருவில் இறங்கிக் கொண்டாள். சூப்பர் மார்க்கெட் சென்று ஒரு வாரத்துக்கு உண்டான காய்கறி வகைகள் ஆர்டர் செய்தாள்.

இந்த பட்ஜெட்டில் தான் லாலு புல்லட் ரயில் பற்றி சொல்லியிருக்கிறார். மானோ எப்ப வருமோ?

-------

ஜீனோ மேசை விளக்கைத் தன்பால் பொருத்திக் கொண்டு கொட்டாவி விட்டது நிலாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள் மனத்தைப் படித்தது போல் ஜீனோ, “கொட்டாவி விடுவது என்னுடைய மேம்போக்கான செயல்களில் ஒன்று. நிஜ நாய் போல இருக்கவேண்டும் என்று என் கம்பேனிக்காரர்கள் கற்றுத் தந்த அசிங்கம்!”.

-------

“டில்லிக்கு எப்படிப் போவது?”

“அரை மணிக்கு ஒரு தரம் ஷட்டில் விமானம் இருக்கிறது. வார நாட்களில் போனால் பாதி விலைதான் டிக்கெட். காற்று சுவாச பிளேனில் அரை மணி பயணம்!” என்றது ஜீனோ.


-------


”ஜீனோ, இது என்ன வம்பு? வேண்டாம்! உன்னைச் சுட்டுப் பொசுக்கி விடுவார்கள்.”

“என் மெமரியைக் காப்பி பண்ணிக் கொண்டு விட்டால் சுட்டுப் பொசுக்கினாலும் இன்னொரு மாடல் வாங்கிக் கொள்ளலாமில்லையா? எனக்கு என்ன உயிரா இருக்கிறது?”


-------

“ஐயோ! இது சிபி இல்லை. இது யார்? இது யார்?” என்று நிலா புலம்ப,

“’யார்’ இல்லை, இது அஃறிணை” என்ற ஜீனோ, “எனக்கு இருக்கிற படிப்பறிவுகூடக் கிடையாது, மனித சாதியில்லை. என்ன சக யந்திரமே, உனக்கு சித்தர் பாடல் தெரியுமா?”


-------

நாய் தேநீரை சாஸரில் ஊற்றி ‘ப்ளக் ப்ளக்’ என்று நக்கிக் குடித்தது. “இதில் உள்ள க்ளுகோஸ் மட்டும்தான் என் ஸெல்லுக்கு உபயோகம்! மற்றவை யாவும் விரயம். ரவி, தித்திப்பு என்றால் என்ன?”

“உன் நாக்குக்கு அது தெரிவதில்லையா ஜீனோ?”

“என் நாக்கில் ஒரு தெர்மோகப்பிள் மட்டும்தான் இருக்கிறது. ருசி என்பதே எங்கள் மாடலுக்குக் கிடையாது. நானூறு கொடுத்தால் நாக்கு மாற்றித் தருகிறார்கள்.”

“நாக்கு போல வேறு அவயவங்கள்?”

“ஷட் அப்!” என்றது ஜீனோ.


--------

ஜீனோ போன்ற சிறிய இயந்திர நாயைக் கைது செய்ய மூன்று காவலர்கள் அதிகப்படிதான். மேலும், சக்தி வாய்ந்த லேசர் துப்பாக்கிகளை ‘பயம்’, ‘மரணம்’ போன்ற வார்த்தைகளுக்கெல்லாம் அர்த்தமில்லாத அந்த மெஷின் ஜென்மத்திடம் காட்டுவது அபத்தமாக இருந்தது.

-------

“பாட்டரி இணைப்பை எடுத்து விட்டால் போதுமே... நான் செத்துப் போய் விடுவேனே? புறப்படு. தப்பித்து விடலாம்” என்றது ஜீனோ, தீர்மானத்துடன்.

”ஏன் ஜீனோ?”

“பயம்! அவர்கள் என்னைக் கொன்று விடுவார்கள் என்ற பயம் வந்துவிட்டது. என் ஞாபகம், என் செயல்பாடுகள் எல்லாவற்றையும் இழந்துவிட்டால் நான் என்கிற நான் என்ன ஆவேன்?”

”ஜீனோ, நீ மனிதர்கள் போல் சிந்திக்கத் துவங்கி விட்டாய்.”


------

“ஜீனோ, வர வர நீ பேசுவது எதுவுமே புரியவில்லை எனக்கு.”

“மனுஷத்தன்மையின் அடையாளம்!”


------

கொசுறு : கூகிளில் en iniya iyanthiraa என்று டைப் செய்து தேடினால், அது என்ன பரிந்துரைக்கிறது என்று பாருங்கள்? என் இனிய நயன்தாராவாம்.

கூகிளே, நீயுமா இப்படி?

37 comments:

Boston Bala said...

கலக்கல்! :)

Govind said...

hi....very nice post....10 years back, i have read this book (lending from small local library in madurai)....It was my first book and i was so excited when i read it....

Unknown said...

கத்தி பார் குத்திப்பார் கவிதையை மறந்து விட்டீர்களே நண்பரே.

சுஜாதாவின் மாஸ்டர்பீஸ்களில் இதுவும் ஒன்று. மறக்க முடியுமா.

அருண்மொழிவர்மன் said...

இதுவ்ய்ம் இதை தொடர்ந்து அவர் எழுதிய மீண்டும் ஜீனோவும் எமது அந்நாளைய விஞ்ஞான கதை படிக்கும் தாகத்தை கூட்டியவை

சரவணகுமரன் said...

நன்றி Boston Bala....

ராமய்யா... said...

Very interesting Post..
I saw this serial in DD when i was in 5 or 6 th STD...
but i dint get a chance to read that book..

Anyway I will get it and read it i believe..

Raam

சரவணகுமரன் said...

நன்றி All in All அழகு ராஜா...

மலரும் நினைவுகளை கிளப்பி விட்டுட்டேனா?

சரவணகுமரன் said...

நன்றி shankarvisvalingam...

ஹா ஹா ஹா... பதிவு நீளமாகி கொண்டே போகிறதே...

சரவணகுமரன் said...

ஆமாம் அருண்மொழிவர்மன்

கிஷோர் said...

நல்ல நாஸ்டால்ஜிக் தொகுப்பு. நன்றி

சரவணகுமரன் said...

நன்றி ராம்

சரவணகுமரன் said...

நன்றி கிஷோர்

நாமக்கல் சிபி said...

நான் சிபி நீ நிலா
நான் சிபி நீ நிலா
நான் சிபி நீ நிலா

என் புனைப்பெயரின் இன்ஸ்பிரேஷன் இந்த காதாபாத்திரம்தான்!

:))

SurveySan said...

//பேசுபவரைப் பார்க்கவும் வேண்டுமெனில் ஒரு ரூபாய் அதிகமாகப் போடவும்//

எல்லாம் சரிதான், ஆனா ஒரு ரூவாய்க்கு இதெல்லாம் முடியுமா 2020ல?
இப்பவே ஒரு ரூவா வழக்குலேருந்து அம்பேலாயிடும் போலருக்கே?

ஆனா, ஒரு விஷயம் கவனிச்சாவணும்.
பத்து வருஷத்துக்கு முன்னாடியும் ஒரு ரூபாதான், பப்ளிக் பூத்துல, இப்பவும் அதே!

சரவணகுமரன் said...

ஒ! அப்படியா சிபி? ஒரு ரகசியம் தெரிஞ்சிகிட்டாச்சு...

சரவணகுமரன் said...

SurverSan,

முன்ன எஸ்.டி.டி. காயின் பூத்ல பேச முடியாது. இப்ப, முடியுது. அப்புறம், எஸ்.டி.டி. மூணு ரூபா இருந்தது, இப்ப, ஐம்பது பைசாவுக்கு வந்திருச்சி... அதே போல, 3 ஜி வந்திருச்சி... பார்த்துக்கிட்டே பேச... பல ஒற்றுமைகள் இருக்குங்க...

பட்டாம்பூச்சி said...

//கூகிளில் en iniya iyanthiraa என்று டைப் செய்து தேடினால், அது என்ன பரிந்துரைக்கிறது என்று பாருங்கள்? என் இனிய நயன்தாராவாம்//

ஆஹா...யு டூ கூகுல்?

என்னுடைய பள்ளி நாட்களில் எந்த தேர்வாக இருந்தாலும் முதலில் என் இனிய இயந்திரா நாடகத்தை பார்த்துவிட்டுதான் வீட்டுப்பாடமே எழுத ஆரம்பிப்பேன்.
மிகவும் பிடித்த தொடர் அது.எங்கள் நாய்க்குட்டிக்கு ஜீனோ என்று பெயர் வைத்தேன் என்றால் பாருங்களேன்:)))

சரவணகுமரன் said...

வருகைக்கும் அனுபவ பகிர்வுக்கும் நன்றி பட்டாம்பூச்சி...

ஒருத்தர் சிபின்னு பேர் வச்சிருக்கார். ஒருத்தர் ஜீனோன்னு பேர் வச்சிருக்கார். யாராவது இத பார்த்து நிலான்னு பேர் வச்சிருக்கீங்களா?

Govind said...

Yes saravanan, I was very happy while reading your post on "en iniya iyanthira". It ignited my nostalgia and took me to my teen age...will buy the book when i come to chennai...உங்கள் சீரிய பணி தொடரட்டும்....

//Govindaraj

சரவணகுமரன் said...

நன்றி கோவிந்தராஜ்

Anonymous said...

//ஒருத்தர் சிபின்னு பேர் வச்சிருக்கார். ஒருத்தர் ஜீனோன்னு பேர் வச்சிருக்கார். யாராவது இத பார்த்து நிலான்னு பேர் வச்சிருக்கீங்களா?//

நான் வெச்சிருக்கனே. அ ஆ பாக்கலையா?

சரவணகுமரன் said...

நல்லா வச்சிங்க, பேரை...

நாமக்கல் சிபி said...

//ஒருத்தர் சிபின்னு பேர் வச்சிருக்கார். ஒருத்தர் ஜீனோன்னு பேர் வச்சிருக்கார். யாராவது இத பார்த்து நிலான்னு பேர் வச்சிருக்கீங்களா?//


www.angelnila.blogspot.com பாருங்க!

நிலான்னு ஒரு பிளாகர் இருக்காங்க!

சரவணகுமரன் said...

சிபி,

பாப்பா போட்டோஸ் எல்லாம் சூப்பரா இருந்தது...

செம கிளாஸ்...

பாண்டியன் புதல்வி said...

what a coincidence..நேற்று தான் என் இனிய இயந்திரா படித்து முடித்தேன். தமிழ் மண முகப்பில் இன்று உங்கள் பதிவு (Feb மாதமே எழுதியிருந்தாலும்.
பதின்ம வயதில் படித்திருந்தாலும் இப்போது படிக்கும் போது நிறைய சந்தேகங்கள். நிறைய விஷயங்கள் தெளிவுப்படுத்தப்படாமல் தொக்கி நிற்பதாய் தோன்றியது.

சரவணகுமரன் said...

ஆமாங்க பாண்டியன் புதல்வி...

வருகைக்கு நன்றி...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

டி.வி. லா தொடர் நாடகமா போட்டிருந்தாங்க பாஸ். அந்த டிவிடி எங்காயாவது கிடைக்குமா?

சரவணகுமரன் said...

SUREஷ்,

ஆமாங்க, டிவில தொடரா போட்டாங்க... ஆனா, டிவிடியா கிடைக்குமான்னு தெரியலை... அப்படியே, கிடைச்சாலும் இப்ப பார்க்குற மாதிரி இருக்குமா? தெரியலை.

Rajan said...

Yes. I also seen that serial. It was something different to feel.We don't know
what they were saying, but I'm still hear their dialogues and voices.

"Nee nila naan sibi". Sujatha and Doordarshan is really great.
I can't believe that the was sujatha's.

And you know the other speciality in the serial, A.R.Rahamn scored music for that serial.
Those who couldn't remember or wan't to hear again the music, Just listen to starting music of 'Nenjil dhil dhill kaadhal
dhil dhill Kannathil muthamittal' from the movie 'Kannathil muthamittal'.

I 'll be happy if you have that link for the story 'en eniya iyanthira' of sujatha's.

Thanks
Thiyagu

சரவணகுமரன் said...

வருகைக்கும் உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி

Rajan said...

Sorry Saravanan. I couldn't find tamil font. Ennal Tamizh eluthil thattachu seyya iyalavillai. Mannikkavum Thamizhe!

சரவணகுமரன் said...

ஒன்றும் பிரச்சினையில்லை, ராஜன்

Anonymous said...

அன்பு நண்பரே, உங்க தளத்தின் இந்த பக்கத்தை என் நண்பர்களுடன் அறுசுவை.காம் என்ற தளத்தில் பகிர்ந்துகொண்டுள்ளேன்..என் பெயர் காரணம் கேட்டவர்கள் "என் இனிய இயந்திரா"-வைத் தெரிந்து கொள்ளட்டும் என்ற நோக்கத்தில் கொடுத்துள்ளேன்...கூகிள் செய்து பார்த்தபோது உங்கள் வலைத் தளம் கிடைத்தது.நன்றிகள்!
ஜீனோ.

Anonymous said...

அன்பு நண்பரே, உங்க தளத்தின் இந்த பக்கத்தை என் நண்பர்களுடன் அறுசுவை.காம் என்ற தளத்தில் பகிர்ந்துகொண்டுள்ளேன்..என் பெயர் காரணம் கேட்டவர்கள் "என் இனிய இயந்திரா"-வைத் தெரிந்து கொள்ளட்டும் என்ற நோக்கத்தில் கொடுத்துள்ளேன்...கூகிள் செய்து பார்த்தபோது உங்கள் வலைத் தளம் கிடைத்தது.நன்றிகள்!
ஜீனோ.

சரவணகுமரன் said...

நன்றி ஜீனோ

Unknown said...

கூகிளில் en iniya iyanthiraa என்று டைப் செய்து தேடினால், அது என்ன பரிந்துரைக்கிறது என்று பாருங்கள்? என் இனிய நயன்தாராவாம்//
the above statement is wrong

cheena (சீனா) said...

அன்பின் சரவண குமர

சுஜாதா - இனிய இயந்திரா - மறக்க இயலுமா - ஜீனோ - சிபி - நிலா - ம்ம்ம்ம்ம்

எத்த்னை முறை படித்தலௌம் திரும்பத் திரும்பப் படிக்கத் தூண்டும் புத்த்கம்.

வார இதழில் வந்த் போதே படித்துப் படித்து மகிழ்ந்த தருணங்கள்.

கொசுவத்தி சுத்த வச்சீட்டிங்க

நல்வாழ்த்துகல் சரவண குமர
நட்புடன் சீனா