தமிழ் நடிகர்களின் கால்ஷீட் கிடைப்பது கஷ்டமா? கதை சொல்லி அவர்களை கவிழ்ப்பது எப்படி? சில டிப்ஸ்.
விஜய்
கதையை நீங்க தான் சொந்தமா எழுதி இருந்தாலும், அப்படி சொல்ல கூடாது. தெலுங்கு ரீமேக், ஹிந்தி ரீமேக், மலையாளம் ரீமேக் இப்படி அடிச்சி விட்டுடனும். மறக்காம சந்திரசேகரை பார்த்து டைட்டில் எப்படி போடணும்ன்னு டிஸ்கஸ் பண்ணிடனும். ஏன் சார், இன்னும் சாருக்கு பாரத ரத்னா கொடுக்காம இருக்காங்கன்னு கேட்டுட்டு அத கபிலன் கிட்ட சொல்லி முத பாட்டுல சேர்க்க சொல்லுங்க.
தனுஷ்
"நீங்க ஒரு தண்டசோறு, உதவாக்கரை, தறுதலை" இப்படியெல்லாம் யார்கிட்ட சொன்னாலும் கோபப்படுவாங்க. ஆனா, இவர்கிட்ட சொன்னாக்க, "ஓகே, நான் ரெடி"ன்னு சொல்லிடுவாரு. இவரை கவிழ்க்க இன்னொரு வழியும் இருக்கு. டைட்டில் மனிதன், பணக்காரன் இப்படி ஏதாச்சும் வச்சிக்கலாம்ன்னு சொல்லுங்க.
விஜயகாந்த்
"சார், ஒரு ஊர்ல ஒரு வயசான பண்ணையார். அவரும் அவுங்க குடும்பமும் ஊரையே வளைச்சி போடுது. நீங்க அத தட்டி கேக்குறீங்க. இதனால உங்களுக்கு பல இடைஞ்சல்கள். முடிவுல நீங்க தான் அந்த ஊரை ஆளுறீங்க." இது போதாது?
சிம்பு
ஏதாவது ஒரு பழைய ரஜினி படம் இல்ல கமல் படம் பார்த்துட்டு போங்க. பார்த்த கதையை சொல்லுங்க. நடுவில, அவரு பேசிட்டே இருப்பாரு. அதையெல்லாம் கவனிக்க வேண்டாம். எல்லாத்துக்கும் சரி சொல்லிடுங்க. மத்ததெல்லாம் அவரு பாத்துக்குவாரு. டைட்டில உங்க பேரு வந்தாலும் வரும்.
விக்ரம்
இப்ப அவரு இருக்குற நிலைமைல, படத்த சீக்கிரம் ரிலீஸ் பண்ணிடலாம்ன்னு வாக்குறுதி கொடுத்தாலே ஒத்துக்குவாரு.
விஷால்
இவருக்கிட்ட போயி லவ் ஸ்டோரி சொல்லிடாதீங்க. ஒன்லி ஆக்ஷன்தான். "விஜய்க்கு ரெடி பண்ணின கதை. நீங்கதான் கரெக்டா இருப்பீங்க"ன்னு ஒரு பிட்டு அவசியம். கேட்க ஆரம்பிச்சிடுவாரு. அப்புறம் ஒண்ணோ, ஒண்ணுக்கு மேற்பட்ட ரவுடிகளை பின்னி பெடலெடுக்கிற மாதிரி ஒரு கதைய சொல்லுங்க. பினிஷ்.
சூர்யா
இப்ப இருக்குற நடிகர்ல வேஷம் கட்ட ஆர்வமா இருப்பவரு. அதனால, கதைய விட என்ன வேஷம் கட்டலாம், எத்தன வேஷம் கட்டலாம்னு யோசிச்சாலே போதும்.
அஜித்
இது ரொம்ப கஷ்டம். அவரு எப்படி கதையை செலக்ட் பண்ணுறாருன்னு அவருக்கே தெரியாத போது, நமக்கு எப்படி தெரியும்?
இது ஒரு லுல்லாயி பதிவு. இத படிச்சிட்டு நம்ம நடிகர்கள முட்டாளா நினைக்க வேண்டாம். அவுங்க எத நடிச்சாலும், போயி பார்க்குற நாமதான் ....
13 comments:
லுல்லாயி பதிவு.//
:)
:-)))
நல்லாருக்குங்க..!
:)
நன்றி புதுகைத் தென்றல்
நன்றி ’டொன்’ லீ
நன்றி கார்த்திக்
காமெடி தானா....நல்லா இருக்கு....ஆனா ஏன் வரிசையா எல்லாரும் இளம் நடிகர்களா இருக்காக....நம்ம பெர்ர்ர்ர்ர்ர்ர்ர்ய ஹீரோக்கள் எல்லாம்...!!!
அனுப்புங்க சார்....!!!
வாங்க RAMASUBRAMANIA SHARMA...
இதில் ஒரு பெரிய நடிகர் இருக்கார் இல்லையா?
ரஜினி படங்களின் கதைகள் பற்றி ஏற்கனவே ஒரு பதிவு போட்டுள்ளேன்.
கமல் அவரின் பெரும்பாலான படங்களின் கதையை அவரே உருவாக்கிவிடுவார்.
மற்ற பெரிய நடிகர்களின் படங்களை பார்த்தால் ஏதோ கதை கேட்டு நடிப்பது போல் தெரிவதில்லை. வரும் வாய்ப்புகளில் எல்லாம் நடிப்பது போல்தான் தெரிகிறது.
ஹா ஹா ஹா
அப்ப முண்ணனி நடிகைகள் கால்ஷீட் எப்படி? :)
நன்றி முரளிகண்ணன்...
நன்றி ரிஷான் ஷெரிப்.
நடிகைகளின் கால்ஷீட்டா? பொட்டிதான்.
Hi
We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.
Please check your blog post link here
If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.
Sincerely Yours
Valaipookkal Team
Post a Comment