இந்த தமிழக பட்ஜெட்டில் நிறைய எழுத்தாளர்களின் எழுத்தை அரசுடமையாக்க போறதா சொல்லி இருக்காங்க. இவர்கள் எழுத்தை பரவலாக மக்கள் படிக்க வேண்டும் என்பது அரசின் விருப்பம். அதில் கண்ணதாசனும் ஒருவர். அதை எதிர்ப்பவர்கள் கேட்கும் கேள்வி. “ஏன் பெரியார் படைப்புகளை அரசுடமையாக்கவில்லை?”. எல்லாம் ஒரு நல்லெண்ணம் தான். அர்த்தமுள்ள இந்து மதத்தை எல்லோரும் படிக்கட்டும். பெரியாரின் பகுத்தறிவு கருத்தை திராவிடர் கழக நூலகத்தில் போய் படிக்கட்டும் என்றுதான்.
கொள்கைக்காக அரசியலா? அரசியலுக்காக கொள்கையா?
---
இந்திய கிரிக்கெட் அணிக்கு புது யூனிஃபார்ம் கொடுத்திருக்காங்க. டார்க் ப்ளூ கலர்ல. அதை பற்றி கேப்டன் தோனிக்கிட்ட கேட்டதற்கு அவர் சொல்லியிருக்காரு. “டார்க்கா இருக்குறதால அழுக்கு தெரியாது. துவைக்கிற செலவு கம்மியாகும்”ன்னு. இதை படித்த போது, ஒரு பழைய சர்வே நினைவுக்கு வருகிறது. இது டிபிக்கல் இந்திய எண்ணமாம். இந்தியர்கள் தான் சட்டை வாங்கினாலும் சரி, கார் வாங்கினாலும் சரி, அழுக்கு தெரியாது என்று டார்க் கலர்ல வாங்குவாங்களாம். மனசுல பட்டதை வெளிப்படையா ஜாலியா சொன்னது சரிதான். அதுக்காக அழுக்கு ஆகிட போகுதுன்னு கீழ விழாம விளையாடிட போறீங்க.
---
பெங்களூர்ல ஒரு திருவள்ளூவர் சிலை, ரொம்ப நாளா திறக்கப்படாம இருக்குது. தமிழ் புலவர் சிலையை திறக்க, கன்னடர்கள் எதிர்ப்பு. திருவள்ளூவர் சிலையை திறக்கணும்ன்னா, நீங்க கன்னட அறிஞர் சிலையை சென்னையில திறங்கன்னு அவுங்க சொல்ல, அதுக்கென்ன ‘எவ்ளோ பண்றோம், இத பண்ண மாட்டோமா’ன்னு நம்மாளுங்க ஒகே சொல்லிட்டாங்க.
இனி என்னாகும்? அடுத்த முறை பிரச்சினையாகும் போது ரெண்டு சிலை உடையும்.
---
இரண்டு அரசுகள். தமிழ்நாடு, புதுவை. ஐந்து போலீஸ் தனிப்படைகள். இரண்டு நாட்களில் பிடித்து விடுவோம் என்று சட்டசபையில் அமைச்சர் வாக்குறுதி.
யாரை? சீமானை.
தாராளமா போட்டுக்கலாம், புரட்சி இயக்குனர்ன்னு.
---
ஒரு விளம்பரம் பார்த்தேன். ’மார்னிங் வாக்கர்’ அப்படின்னு ஒரு உடற்பயிற்சி கருவி. அதாவது காலையில வெளியே நடக்க போறதுக்கு பதிலா, படுத்துக்கிட்டு இந்த கருவி மேல காலை வச்சிக்கிட்டா, அது காலை மேல தூக்கி இறக்கி, ஏதோ நடக்குற எபெக்ட கொடுக்குமாம். நீங்க ஒண்ணும் பண்ண வேண்டாம். படுத்து கிடந்தா போதும்.
ஓவரா தெரியுதா? மேட்டர் அது இல்லை. இன்னைக்கு விளம்பரப்படி, அதுல இன்னொரு விஷயமும் இருக்காம். அது கூட ரிமேட் கொடுக்குறாங்களாம். நீங்க எந்திரிச்சு தான் அதுல உள்ள பட்டன்கள அமுக்கணும்ன்னு இல்லை. படுத்துக்கிட்டே பண்ணலாமாம்.
இது தான் வாழைப்பழ சோம்பேறித்தனம்.
---
முன்ன சாப்ட்வேர் மாப்பிள்ளைகளுக்கு இருந்த மதிப்பு இப்ப இல்லை. சாப்ட்வேர்ன்னா தெறிச்சு ஓடுறாங்களாம். ஏற்கனவே, கல்யாணம் ஆனவுங்களும் அவசரப்பட்டுட்டோமேன்னு யோசிச்சுட்டு இருக்காங்களாம். விவரம் புரியறதுக்குள்ள கவுத்துறலாம்ன்னு சிலர் போர்க்கால அடிப்படையில ட்ரை பண்ணிட்டு இருக்காங்க. இந்த நிலைமைல, எனக்கு தெரிஞ்ச சில சாப்ட்வேர் நண்பர்கள் ஒரு பொடிப்பையன் மேல பொறாமைப்பட்டு புலம்பிட்டு இருந்தாங்க. இவன் தான் அவன். ஸாரி. இவர்தான் அவர்.
பையனுக்கு 13 வயசு. பக்கத்துல இருக்குறது அவனோட 15 வயசு கேர்ள் பிரண்ட். நடுவுல அவங்களோட தவப்புதல்வன். பண்றதையும் பண்ணிட்டு எவ்ளோ அப்பாவியா பாக்குறான், பாருங்க.
படம் நன்றி - டைம்ஸ் ஆஃப் இந்தியா
17 comments:
:-)
"அவசரப்பட்டுட்டோமேன்னு யோசிச்சுட்டு இருக்காங்களாம். "
ஹிஹி... அந்த உடற்பயிற்சி எந்திரம் எங்கே விக்குதுன்னு கேட்டு சொல்லுங்க...
:-))
நன்றி ஆர்த்தி...
ச்சின்ன பையன், இங்க போயி பாருங்க... :-)
http://www.morningwalker.com/
கொள்கைக்காக அரசியலா? அரசியலுக்காக கொள்கையா?
..........
அதுக்காக அழுக்கு ஆகிட போகுதுன்னு கீழ விழாம விளையாடிட போறீங்கஇனி என்னாகும்?
............
அடுத்த முறை பிரச்சினையாகும் போது ரெண்டு சிலை உடையும்
.....................
தாராளமா போட்டுக்கலாம், புரட்சி இயக்குனர்ன்னு.
.........................
அதுல உள்ள பட்டன்கள அமுக்கணும்ன்னு இல்லை. படுத்துக்கிட்டே பண்ணலாமாம்.
.............
பண்றதையும் பண்ணிட்டு எவ்ளோ அப்பாவியா பாக்குறான், பாருங்க.
.............
>>>>>>>>>>சரக்கு டாப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பு<<<<<<<<<<<<
நன்றி ஷாஜி
நல்ல பதிவு...Last matter about a 13 year old boy, becomes a father....has been published in yahoo groups also(funonthenet)...Just for your info....அருமை...
நன்றி RAMASUBRAMANIA SHARMA
சூப்பர்!
நன்றி மங்களூர் சிவா
முதல் கருத்து அருமை.
ரசித்தேன்.
நன்றி இளைய பல்லவன்
:))
ரொம்ப நாளா காணோம் சரா?
சிபி, என்ன சொல்றீங்க? இங்கே தானே இருக்கேன்...
"விவரம் புரியறதுக்குள்ள கவுத்துறலாம்ன்னு சிலர் போர்க்கால அடிப்படையில ட்ரை பண்ணிட்டு இருக்காங்க."
நல்ல காமெடி தான் போங்க.
நன்றி mano
"இனி என்னாகும்? அடுத்த முறை பிரச்சினையாகும் போது ரெண்டு சிலை உடையும்." ha ha ha..........
Post a Comment