தாண்டவன் தான் இந்த கம்பெனிக்கு சி.இ.ஓ. முதலாளி. டெய்லி பிராஜக்ட் மேனேஜர்களுடன் மீட்டிங் போடுவாரு.
தாண்டவன் : ஏலேய் கணேசு? உன் பிராஜக்ட் ரெவன்யூ எவ்ளோ?
கணேஷ் : ரெண்டு கோடி
தாண்டவன் : எத்தனை உருப்படிக?
கணேஷ் : பத்து
தாண்டவன் : ராஜேசு, உன் ரெவன்யூ எவ்ளோ?
ராஜேஷ் : மூன்றரை கோடி
தாண்டவன் : உருப்படிக?
ராஜேஷ் : பதினைஞ்சு.
தாண்டவன் : முருகா, உன்னுது?
முருகன் : அஞ்சு கோடி முதலாளி. உருப்படிக, பத்துதான்.
தாண்டவன் : பாத்துக்கோங்கடா. அவன் மூத்... அவன் பிராஜக்ட் எக்ஸிக்யூஷன் ஸ்டைல பார்த்தாவது திருந்துங்க.
கணேஷ் : முதலாளி, அவன் உருப்படிக எல்லாம் புது டெக்னாலஜிஸ் தெரிஞ்சவிங்க. எங்ககிட்ட உள்ளவிங்களுக்கு ஒரு மண்ணும் தெரிய மாட்டேங்குது. சீக்கிரம் வந்தாலும் மெயில் செக் பண்ணவும், பிளாக் படிக்கவுமே நேரம் சரியாயிருக்கு. நாங்க என்ன பண்ணுறது?
தாண்டவன் : ஏலேய்! அதிகம் பேசுனா தொண்டைய கடிச்சு துப்பிருவேன். உன் பிரச்சினைக்கு நான் ஏற்பாடு பண்ணுறேன்.
------
அம்சவல்லி கேண்டினில் அமர்ந்து ஐ-பாடில் பாட்டு கேட்டுக்கொண்டே பிரெட் சாண்ட்விட்ச் சாப்பிட்டு கொண்டிருந்தாள்.
“ஏ! அம்சவல்லி... இப்பத்தான் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடுறீயா?”
கேட்டது நாயர். கேரளாவில் இருந்து வந்திருந்தாலும், நன்றாக தமிழ் பேசுவான்.
“ஆமாம் நாயர். நீ?”
“நான் வீட்டுப்பக்கமே சாப்பிட்டுட்டேன். அப்புறம் வேல எப்படி போகுது?”
“வேல ரொம்ப. நிறைய பேர ரிலீஸ் பண்ணிட்டு, என்னை, ஒரு ஆளை வச்சி வேல வாங்குறாங்க. உனக்கு?”
“அதான், உனக்கு தெரியுமே? பழைய பிராஜக்ட் மேனேஜர் கூட ஒரு பிரச்சினை. பிராஜக்ட்ல இருந்து ரிலீஸ் பண்ணிட்டாங்க. இப்ப பெஞ்ச்ல தான் இருக்கேன். மூணு மாசமா ட்ரை பண்ணிட்டு இருக்கேன். இப்ப புது ப்ராஜக்ட்ஸ் ரொம்ப கம்மி. என்ன பண்றதுன்னே தெரியலை.”
“ம்ம்ம்... சீக்கிரம் ஏதாவது ஒரு ப்ராஜக்ட பிடி”
“என்ன பொழப்போ?”
”பொருளாதாரம் எகிறி துள்ளுனாலும், குப்புற அடிச்சு விழுந்தாலும், அத நம்ம வேலையை வச்சுதான் சொல்லுறாங்க. அவனவனுக்கு உள்ள கஷ்டங்கள் எல்லாத்தையும் வயித்தெரிச்சலா கொட்டிக்க நம்ம வேலை இருக்குங்கறது நாம பண்ணின புண்ணியம்தானே?”
-----
ஈவ்னிங் மெயில் செக் பண்ணிட்டு இருக்கும்போது, மொபைல் அடித்தது.
“ஹலோ”
“ஹலோ. நாயரா? நான் ருத்ரன் பேசுறேன். HR பில்டிங்ல இருந்து.”
“சொல்லுங்க”
“கொஞ்சம் இங்க வர முடியுமா?”
அடுத்த பத்தாவது நிமிடத்தில் ருத்ரன் முன்பு அமர்ந்திருந்தான் நாயர்.
“நீங்க மூணு மாசமா பெஞ்ச்ல இருக்கீங்க?”
“ஆமாம். ப்ராஜக்ட் தேடிட்டு இருக்கேன்.”
”உங்க மேனேஜர்க்கிட்ட இருந்து வந்திருக்குற ஃபீட்பேக் சரியா இல்ல”
“...”
“எங்களுக்கு வேற வழி இல்லை. ஸாரி. நீங்க வெளிய வேலை தேடிக்கோங்க.”
“ஸார்”
-----
“அம்சவல்லி, எப்படி இருக்கீங்க?”
திடீரென்று கூப்பிட்டு கேட்பதால் குழப்பமாக பார்த்தாள், அம்சவல்லி. ருத்ரன் தொடர்ந்தார்.
“உங்களுக்கே தெரியும்? உலக பொருளாதார நெருக்கடி பத்தி”
???
“அதுல உங்க கிளையண்டும் பாதிக்கப்பட்டு இருக்காங்க. பிஸினஸை முடிச்சிக்க சொல்லி கம்யூனிக்கேஷன் அனுப்பி இருக்காங்க.”
“சார். ப்ராஜக்ட் நல்லாதானே சார் போச்சு. நான் நல்லாதானே சார் ஒர்க் பண்ணினேன்”
அம்சவல்லி கண் கலங்கி இருந்தாள்.
”அதுக்கும் இதற்கும் தொடர்பில்லை. எமோஷனலாகாதீங்க. இன்னும் ரெண்டு வாரத்துல வேற வேலை பார்த்துக்கோங்க.”
-----
வேலை பாக்காதவனை தூக்கினா, அது பெர்ஃபாமன்ஸ் டஸ் நாட் மீட் த எக்ஸ்படேஷன்.
வேலை நல்லா பார்க்குறவனையும் தூக்கினா, அது க்ளோபல் ரிசஷ்சன்.
AHAM BRAHMASMI
17 comments:
:-))))
வாங்க முரளிகண்ணன்
சூப்பர்...சரியான நேரத்துல இரண்டு ஹாட் விஷயங்களை ஒரே புள்ளியில இணைச்சிருக்கீங்க!!
நன்றி பிரேம்.
:))
வருகைக்கு நன்றி கப்பி
நன்றி ச்சின்னப்பையன்
படக்கதையே இதுதானா ?
Rajeswari,
ஹி.. ஹி... ஆமாங்க. ஆனா, கொஞ்சம் ரீ-மிக்ஸ்.
வருகைக்கு நன்றி.
முதல் பகுதி தாண்டவன் மேட்டரு சூப்பர். ;)
நன்றி சர்வேசன்
சூப்பருங்கோ :))))))
:)))))))
நன்றி பட்டாம்பூச்சி...
நன்றி மங்களூர் சிவா
//இப்ப பெஞ்ச்ல தான் இருக்கேன். மூணு மாசமா ட்ரை பண்ணிட்டு இருக்கேன். இப்ப புது ப்ராஜக்ட்ஸ் ரொம்ப கம்மி. என்ன பண்றதுன்னே தெரியலை.”///
நான் இந்த நிலையிலேதான் இருக்கேன் இப்போ!! :-|
CVR, நிறைய பேரு நிலைமை அப்படித்தான் இருக்கு... கூடிய சீக்கிரம் எல்லாம் சரியாகும்ன்னு நம்புவோம்...
Post a Comment