Friday, February 13, 2009

காமெடியாகி போன சீரியஸ் வசனங்கள்

வசனங்களுக்காகவே ஓடிய படங்கள் உண்டு. வசனங்களாலயே, தியேட்டரை விட்டு ஓடிய படங்களும் உண்டு. அதேப்போல், வழி மாறிய வசனங்களும் உண்டு. சீரியஸாக வெளிவந்து, பின்னால் நகைச்சுவையாக பேசப்படும்.

சில வசனங்கள் நன்றாக ரசிக்கப்பட்டு, பிரபலமடைந்து, பலரால் பல இடங்களில் பேசப்பட்டு, பின்பு சிரிப்பிற்குரியதாக ஆக்கப்படும். சில வசனங்கள் சரியாக கையாளப்படாததால், சுட சுட கிண்டலுக்குள்ளாக்கப்படும்.

அப்படி என் நினைவுக்கு வந்த சில வசனங்கள். இதெல்லாம் அந்தந்த படங்களில் சீரியஸ் வசனங்கள். இப்படி காமெடி செய்வார்கள் என்று வசனமெழுதும்போது நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள்.


பாச மலர் - என் கண்ணையே உங்கிட்ட ஒப்படைக்கிறேன். அதுல ஆனந்தக் கண்ணீரை மட்டும் தான் நான் பார்க்கணும்.

உணர்ச்சிமயமான வசனம். கால ஓட்டத்தில், இன்று இதை இயல்பாக சொன்னாலும் சிரிக்கத்தான் செய்வார்கள்.

முதல் மரியாதை - ஐயா! எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.

சொன்னவருக்கு நல்ல ஸ்டைல். சிலர், எனக்கு உண்மை தெரிஞ்சாகணும்ன்னு சாதாரணமாக ஆரம்பித்தாலும் முடிக்கும்போது அவர் ஸ்டைலில் முடித்து விடுவார்கள்.

நாயகன் - நீங்க நல்லவரா? கெட்டவரா?

மணிரத்னம் பட வசனங்களில் ஒரு தனித்தன்மை உண்டு. அதனாலயே, அதிகம் கிண்டலுக்கு உள்ளாக்கப்படும். சின்னி ஜெயந்த், விவேக் இதை படங்களில் காமெடி செய்தார்கள்.

அஞ்சலி - அஞ்சலி ஏந்துமா

இந்த வசனத்தால் அந்த சோக காட்சியை பல ஷோக்களில் காமெடி ஆக்கினார்கள்.

தேவர் மகன் - ஒரு பாட்டு பட்றி

யாரையாவது பாட்டு பாட சொல்லும்போது, கிண்டலாக இப்படித்தான் சொல்லுவார்கள். கவுண்டமணி ஏதோவொரு படத்தில் நக்கல் செய்திருப்பார்.

நாட்டமை - நாட்டாமை! தீர்ப்பை மாத்தி சொல்லு

கல்லூரி மாணவர்களால் பல இடங்களில் ரீ-மிக்ஸ் செய்யப்படும் வசனம். தியேட்டரில் படம் போடலையா? ஆபரேட்டர், படத்தை போடு. கரண்டு போச்சா? லைட்டை போடு. இப்படி.

ரெட் - அது...

ஹி... ஹி... இந்த ரெண்டு எழுத்து சாதாரணமான வார்த்தை, இவ்வளவு ஸ்பெஷல் ட்ரிட்மெண்ட் கொடுக்கும்ன்னு யாரும் நினைச்சு இருக்க மாட்டாங்க.

ரமணா - தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை, மன்னிப்பு

விவேக்கால் பல படங்களில் கிண்டல் செய்யப்பட்ட வசனம். மக்களும் அவரவர் வசதிக்கேற்ப வார்த்தைகளை போட்டு பிரபலமான வசனம்.

அந்நியன் - அஞ்சு கோடி பேரு அஞ்சு கோடி தடவை அஞ்சு பைசா திருடுனா தப்பா?

சுஜாதாவால் சுவையாக கருத்து சொல்லப்பட்ட வசனம். படம் வெளிவந்த பிறகு டரியல் செய்யப்பட்டது.

சந்திரமுகி - என்ன கொடுமை சரவணன்...

பஞ்ச் டயலாக்கும் இல்லை. உணர்ச்சிமயமா எழுதப்பட்டு பேசப்பட்ட வசனமும் இல்லை. பின்ன, எப்படி இவ்ளோ பிரபலம்? எல்லா புகழும் பிரபுக்கே! பிளஸ் வெங்கட் பிரபு.


இந்த வசனங்களை இப்ப படங்களில் கேட்கும்போது காட்சியை மீறி சிரிக்க வைத்து விடுகிறது.

உங்களுக்கு தோணுறதையும் சொல்லுங்க..

32 comments:

முரளிகண்ணன் said...

good collection

அவன்யன் said...

ஆக ஒரு சமயம் சீரியஸ் ஆக தோணறது சில சமயம் சிரிபாயிடும்

Anbu said...

மிகவும் அருமை அண்ணா..

தொடரட்டும் உங்கள் பணி...

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

சரவணகுமரன் said...

நன்றி முரளிகண்ணன்

சரவணகுமரன் said...

ஆமாம் அவன்யன். வருகைக்கு நன்றி.

சரவணகுமரன் said...

நன்றி தம்பி

கைப்புள்ள said...

சிவாஜி கணேசன் அவர்கள் பேசுன "யாரு பெத்தப் புள்ளையோ..." எனக்கு ஞாபகத்துக்கு வருது. நல்ல தொகுப்பு.
:)

கிரி said...

//சந்திரமுகி - என்ன கொடுமை சரவணன்//

இதை நான் எதிர்பார்த்தேன் :-)))

நாஞ்சில் பிரதாப் said...

பாட்ஷா - நான் ஒரு தடவை சொன்னா..., நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான் ஆனா...

படையப்பா - அதிகமா ஆசைப்படற ஆம்பளையும்,

பாபா - பாபா கெளண்டிங் ஸ்டார்ட்..

படம் நினைவில்லை - என் வழி... தனி வழி.

நாயகன் - அவனை நிறுத்தச் சொல்லு..நான் நிறுத்தறேன்...


இதெல்லாம் வுட்டுப்புட்டீங்களே...தல

RAMASUBRAMANIA SHARMA said...

நல்ல பதிவு....இந்த சீரியசான வசனங்களை நையாண்டி செய்து காமெடி வசனமாக மாற்றூவது...இப்பொ தமிழ் சினிமாவில் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது....காமெடி வசன பற்றாகுறையாக இருக்கலாம்....!!!

RAMASUBRAMANIA SHARMA said...

பின் தடமறிதல் கருத்துக்களை...மின் அஞ்சல் செய்யவும்...

சரவணகுமரன் said...

நன்றி கைப்புள்ள

சரவணகுமரன் said...

கிரி, அது இல்லாமலா? :-)

சரவணகுமரன் said...

நாஞ்சில் பிரதாப், ரஜினி தான் எத சொன்னாலும் ஹிட் ஆகிடுதே!

சரவணகுமரன் said...

நன்றி RAMASUBRAMANIA SHARMA.

ஆனால் வடிவேலு அதுபோல் செய்வதாக தெரியவில்லையே.

RAMASUBRAMANIA SHARMA said...

நடிகர் திரு வடிவேலு அவர்கள்.....ரொம்ம்ம்ம்ப நல்லவர்ர்ர்ர்ங்ங்ங்கோ....அவர் பெரும்பாலும் கிராமத்து நடையுடன் கூடிய, வெகுஜன மக்களூக்காக, மிகவும் இயல்பாக...காமெடி செய்கிறார்...Mr VADIVELU's COMEDY seems to be a spontaneous one, according to me which is purely for laughing, & messages may not be there...However, it is his style... பதிவாளரின் கருத்து சரியானது....நன்றீ...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரொம்ப நல்ல கலெக்ஷன் :)

Anonymous said...

Please sign this petition and FWD it

Appeal to Security Council to End the Humanitarian Crisis in Sri Lanka

http://www.petitiononline.com/sgsl159/petition.html

புருனோ Bruno said...

அசத்தல் தொகுப்பு. :) :)

வாழ்த்துக்கள்

//பஞ்ச் டயலாக்கும் இல்லை. உணர்ச்சிமயமா எழுதப்பட்டு பேசப்பட்ட வசனமும் இல்லை. பின்ன, எப்படி இவ்ளோ பிரபலம்? எல்லா புகழும் பிரபுக்கே! பிளஸ் வெங்கட் பிரபு.//

அது என்ன சார் வெங்கட் பிரபு. கொஞ்சம் விளக்காமாக சொன்னால் எங்களுக்கு புரியுமே

சரவணகுமரன் said...

நன்றி முத்துலெட்சுமி-கயல்விழி

சரவணகுமரன் said...

நான் ஏற்கனவே செய்து விட்டேன், ரவி.

சரவணகுமரன் said...

நன்றி புருனோ சார்.

என்னதான் அந்த வசனம் பிரபுவின் நடிப்பால் ’ரசிக்கப்பட்டு’ சிரிக்கப்பட்டதோ, அதே சமயம், மிக பெரிய அளவு பிரபலத்திற்கு காரணம், வெங்கட் பிரபுதான். ஏனென்றால் அவர்தான் சென்னை-28 படத்தில் பிரேம்ஜி கேரக்டர் அந்த வசனத்தை சொல்லும்வாறு நகைச்சுவையாக படமெங்கும் காட்சிகளை அமைத்தார்.

மங்களூர் சிவா said...

நல்லா இருந்தது!

சரவணகுமரன் said...

நன்றி மங்களூர் சிவா

பாலா said...

mattrum ondru gunna padathil varm:
"abirami,abirami" endra vasanem.....

சரவணகுமரன் said...

ஆமாம் negamam. வருகைக்கு நன்றி.

Bala said...

இதெல்லாம் சகஜமப்பா

Anonymous said...

Priya
yenna narayana,antha kosu tholla thangala da.
very good colletion ma.

சரவணகுமரன் said...

நன்றி பாலா

சரவணகுமரன் said...

நன்றி ப்ரியா

Kiruthigan said...

good collection