ஒவ்வொரு ஊருக்கு ஒரு பெருமை. தூத்துக்குடிக்கு உப்பு. உணவில் தவிர்க்கமுடியாத தூத்துக்குடி உப்பை பற்றி சில தகவல்களும் உப்பள புகைப்படங்களும் இந்த பதிவில்.
கடலோரத்தில் அமைந்துள்ள நகரமானதால் உப்பு உற்பத்திக்கு தூத்துக்குடி பல வருடங்களாக பேமஸ். ஆனால், சமீபகாலமாக உப்பு உற்பத்தியில் திண்டாடுவது, அத்தொழில் செய்பவர்களிடம் பேசும்போது தெரிகிறது.
உப்பளம் பார்த்திருக்கீங்களா? அதான், ஐயா படத்துல ”ஒரு வார்த்தை பேச” பாட்டுலயும், திருவிளையாடல் படத்துல “விழிகளில்” பாட்டுலயும் வருமே? அதான். அங்க இருந்துதான் உப்பு விவசாயம் பண்ணுகிறார்கள். சில இடங்களில் கடல் நீர்ல இருந்தும் சில இடங்களில் போர் போட்டு எடுத்த தண்ணியிலயும் உப்பு எடுக்குறாங்க.
தூத்துக்குடி உப்புக்கு போட்டி குஜராத்துல இருந்து உற்பத்தி ஆகுற உப்பு. அங்க உள்ள உப்பளத்துல உருவாகுற உப்பின் ஆழம் அதிகம். இங்கு மனிதர்கள் செய்யும் வேலையை அங்கு இயந்திரங்கள் செய்கிறதாம். உப்பின் அளவு அதிகமென்பதால் குஜராத் உப்பின் விலையும் குறைவாம். போட்டியை சமாளிக்க முடியாம இருக்காங்க. டாடா, அன்னபூர்ணா உப்பு கவரில் பாத்தீங்கன்னா, ஏதோவொரு குஜராத் உப்பு கம்பெனியின் பேரும், தூத்துக்குடி உப்பு கம்பெனி பேரும் இருக்கும்.
நம்ம உடம்புக்கு தேவையானது அயோடின். சில தைராய்டு தொடர்பான நோய்கள் வராம தடுப்பது அயோடின். இது மக்களை சேர்ந்தடைய உப்பில் இதை கலக்க வேண்டும் என்பது அரசு கட்டளை. இதற்காக கனடா அரசு, கவனிக்கவும், இந்திய அரசு இல்லை, கனடா அரசு இங்குள்ள உப்பு நிறுவனங்களுக்கு இலவசமா அயோடின் கொடுக்குறாங்க. ஓசியில கொடுக்குறதையும் உப்புல போடாம, வெளி மார்க்கட்டுல வித்து பைசா தேத்துதாம் ஒரு குரூப். அதனால அங்கயே ஒரு லேப் வச்சி செக் பண்ணுறாங்க.
இந்த சோதனை கூடத்துல ஒரு ரசாயன கலவையில சாம்பிள் உப்பை போடுறாங்க. உப்புல அயோடின் இருந்துச்சுனா, அது நீலமா மாறுது. அந்த சாம்பிள் உப்பை இவுங்களே நேரடியா உப்பளத்திற்கு சென்று எடுத்துட்டு வாராங்க. இல்லாட்டி அவுங்க கண்ணுலயே உப்ப தேய்ச்சுடுவாங்களே?
தமிழ்நாட்டில் வாழை ஏற்றுமதியிலும் முன்னணியில் இருப்பது தூத்துக்குடி. இங்கு சில இடங்களில் உப்பளத்திற்கு நெருங்கிய தூரத்தில் வாழை தோட்டங்கள் அமைந்துள்ளது ஒரு ஆச்சரியமான விஷயம்.
உப்பு போடுறவுங்கள மறக்க கூடாதுன்னு சொல்லுவாங்க.அதனால, உப்பு போடுற தூத்துக்குடியையும் மறக்காம நினைவில் வச்சிக்கோங்க.
10 comments:
:)
உப்பிட்ட உங்களை உள்ளளவும் மறக்க மாட்டோம்!
படங்கள் நல்லா இருக்கு.
நன்றி கவின்...
நன்றி துளசி கோபால்...
தூத்துக்குடியின் புகழ் பரப்பும் தங்கள் சேவையை மெச்சுகிறேன். ;)
நன்றி முகில்...
சரவணகுமரன் படங்கள் நல்லா இருக்கு உடன் தகவல்களும்
நீங்களே எடுத்த படங்களா!
நன்றி கிரி.
ஆமாம், நான் எடுத்த படங்கள் தான்.
இன்னும் விளக்கமாக சொல்லியிருக்கலாமே!!
எவ்வளவு நாள் தண்ணீரை தேக்க வேண்டும்?
எப்படி உப்பை எடுக்கிறார்கள்?
உப்பை சேமிக்க/பத்திரமாக கொண்டு செல்ல என்னென்ன வசதிகள் இருக்கு?
இலாபம் உள்ள வேலையா?
இயந்திரங்கள் உபயோகப்படுத்த என்ன வசதிகள் இருக்கு?
இன்னொரு பதிவுக்கு வேண்டிய கேள்விகளை கேட்டிருக்கேன்,முடிந்தால் போடுங்கள்.
வடுவூர் குமார், கண்டிப்பாக இன்னொரு பதிவாக போடுகிறேன்.
Post a Comment