Monday, January 19, 2009

பொங்கல் படங்கள் - படையல்

தமிழ் சினிமா நிலைமை ரொம்ப மோசமா இருக்கு, போல!. தீபாவளிக்கு வந்தது ரெண்டு-மூணு படங்கள். இப்ப பொங்கலுக்கு வந்தது மூணு படங்கள். கடைசி நேரத்தில சதி பண்ணி கேப்டன் படத்தை வர விடாம பண்ணிட்டாங்க.

வில்லு

இந்த படத்துக்கு ஏகப்பட்ட நெகடிவ் ரிவ்யுஸ். அதனால்தான் என்னமோ, என்னைய ரொம்ப பாதிக்கவில்லை. இதுக்கு மேல விஜய் படத்தில என்ன எதிர்பார்க்க முடியும்? விஜய்க்கு முப்பத்தி அஞ்சு வயசு நடந்திட்டு இருக்குன்னு சொன்னா நம்ப முடியுமா? மனுஷன் என்னா ஆட்டம் போடுறாரு. விஜய் கஷ்டப்படாம நடிக்குறாருன்னு சொல்ல கூடாது. ஆனா, பில்லா மாதிரி கோட்-கூலிங் கிளாஸ் போட்டுட்டு பாரின்ல நடக்குறதுதான், நமக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு.

பிரபுதேவா இது இந்திய ஜேம்ஸ்பாண்ட் படம்ன்னு சொல்லியே எல்லோர்கிட்டயும் வேலை வாங்கி இருப்பாரு போல. டி.எஸ்.பி. பாடல்களுக்கு துள்ளலான இசையையும், பின்னணிக்கு அதிரடி இசையும் கொடுத்துள்ளார். ரவிவர்மன் கேமரா வழக்கம் போல் பறக்கிறது.

முதல் பாதி படம் நல்லா இருந்தது. ஏன்னா, அப்ப கதையே ஆரம்பிக்கல. வடிவேலு காமெடிக்கு அரங்கம் அதிர்ந்தது. இரண்டாம் பாதியில் வரும் மாடு பைட் ஏற்கனவே இன்டர்நெட்டில் வந்தது. வெட்டி செலவு. அப்புறம், முடிக்கும்போது படத்துல கதை இல்லைன்னு யாரும் சொல்லிட கூடாதுன்னு ஏதோ சொல்ல வாராங்க. வாரிட்டாங்க.

பிரகாஷ் ராஜ்தான் அப்பா விஜயை கொல்கிறார். ஆனால் அவரை போலவே இருக்கும் மகன் விஜயை அவருக்கு அடையாளம் தெரியவில்லையாம். விஜய், மேக்கப்புல அவ்ளோ வித்தியாசம் காட்டி இருக்காரு. :-)

ராஜ்கபூர் ரெண்டு சீன்ல வராரு. அதுல ஒண்ணு, இருபது வருஷங்களுக்கு முன்ன உள்ள பிளாஸ்பேக். அப்ப எப்படி இருந்தாரோ, அதேபோல் இருபது வருஷம் கழிச்சும், இளமையா இருக்காரு.

படிக்காதவன்

ஒரு ஆபத்தான கருத்தை தாங்கி வருது. எனக்கு தெரிஞ்சவுங்க வீட்டுக்கு போயிருந்தேன். அந்த வீட்டுல உள்ள பையன், இந்த வருஷம் +2 பரீட்சை எழுத போறானாம். அவுங்க அம்மா அவன ஒழுங்கா படிக்க சொல்ல, அவன் "வராத படிப்ப வா வான்னு சொன்னா, எப்படி வரும்?"ன்னு டயலாக் அடிக்குறான். இதுக்கும் அவன் நல்லா படிக்குற பையன். ஒழுங்கா படிக்காததையும் ஒரு ஹீரோயிஸ செயலா மாத்திட்டு வருறது கண்டனத்திற்குரியது. ("படிக்காதவன்தான் மத்தவங்களுக்காக யோசிப்பான். படிச்சவன் அவனுக்காக மட்டும்தான் யோசிப்பான்"... டேய்...)

தனுஷுக்கு ஏன் அவர் மேல இப்படி ஒரு தாழ்வு மனப்பான்மை? உருப்படாத தறுதலை கேரக்டரா தொடர்ந்து நடிச்சிட்டு வராரு.

சர்க்கரை பொங்கலா? வெண் பொங்கலா?ன்னு தெரியாத மாதிரி ஆக்சனையும் காமடியையும் கலந்து கட்டி அடிச்சி இருக்காங்க. விவேக் நடிச்சது வடிவேலு நடிக்க இருந்த ரோலாம். அப்படியே நாய் சேகர், என்கவுண்டர் ஏகாம்பரம் பாடி லேங்குவேஜ் எல்லாம் வந்துட்டு போகுது. இது வடிவேலு ஸ்டைலா? சுராஜ் ஸ்டைலா? இத்தினி வில்லன்கள வச்சிக்கிட்டு, டப்பிங் இல்லாமலே தெலுங்குல ரிலிஸ் பண்ணலாம்.

கிளைமாக்ஸ் ஒரு சொதப்பல். ரன், சண்டைகோழியில் பார்த்தது. அதுவும் சண்டை முடிஞ்சதுக்கப்புறம், அடியாட்கள் கைதட்டுவது படத்தின் இறுதியில் உள்ள காமெடி காட்சி.

காதல்னா சும்மா இல்ல

வில்லு பார்க்க எழுபது ரூபா. படிக்காதவனுக்கு ஐம்பது. இதுக்கு முப்பது தான். டிக்கெட்டுலயே படத்தோட பட்ஜெட் தெரிஞ்சு போச்சு.

இந்த படம் ஒரு மினி அன்பே சிவம். அன்பே சிவம் பார்த்து தெலுங்குல எடுத்து இருப்பாங்க. திரும்ப, அத பார்த்து இங்க எடுத்துட்டாங்களோ?

ரவி கிருஷ்ணாவை முதல்ல பார்க்கும்போது வேற யாரையாவது போட்டு இருக்கலாமோ?ன்னு தோணிச்சின்னு. அப்புறம் போக போக, அவரு பேசுற வசனங்கள் சிரிக்க வைத்தது.

அந்த புது ஹீரோ, கமலினி முகர்ஜி இருவருமே எந்த குறையும் இல்லாம நல்லாவே நடிச்சி இருந்தாங்க. வேட்டையாடு விளையாடுவில் சரியா கவனிக்காதவுங்க இதில் கவனிச்சிக்கோங்க.

ரெண்டு பாட்டு நல்லா இருக்கு. ராஜ் டிவில கேட்டதாலவோ என்னவோ? ராஜ் டிவி எல்லாம் பார்க்குறீங்களான்னு கேட்காதிங்க. வித்யாசாகர், மணிஷர்மா, மூர்த்தி இப்படி மூணு இசையமைப்பாளர்கள். எதுக்கு யார் இசைன்னே தெரியல.

எம்.எஸ்.பாஸ்கர் வருற அந்த பத்து நிமிட காட்சியை பார்த்து தியேட்டர்ல இருந்த எல்லோரும் குலுங்கி குலுங்கி சிரிச்சோம். தியேட்டர்ல என்னை சேர்த்து மொத்தம் இருபது பேர்.

17 comments:

லிங்காபுரம் சிவா said...

கலக்கல் ரிவ்யூ...
:))

நன்றி!!

சரவணகுமரன் said...

நன்றி பழையபேட்டை சிவா

முரளிகண்ணன் said...

nice reviews.

It is like speaking with our friends (after seeing the film)

சரவணகுமரன் said...

நன்றி முரளிகண்ணன்

ஷங்கர் Shankar said...

// படிக்காதவன்தான் மத்தவங்களுக்காக யோசிப்பான். படிச்சவன் அவனுக்காக மட்டும்தான் யோசிப்பான்//

வர்ற முக்கால்வாசி படங்கள்ல ஹீரோக்களை தருதலைங்கலாகவும், வெட்டிபயல்களாகவும் , ரவுடிகளாக்கவும்தான் காண்பிக்கிறார்கள்

Cable சங்கர் said...

நல்ல போன்சாய் விமர்சனங்கள்..

சரவணகுமரன் said...

வாங்க ஷங்கர்...

சரவணகுமரன் said...

நன்றி கேபிள் ஷங்கர்...

போன்சாய் விமர்சனம்'ன்னா என்ன?

அத்திரி said...

//ஆனால் அவரை போலவே இருக்கும் மகன் விஜயை அவருக்கு அடையாளம் தெரியவில்லையாம். விஜய், மேக்கப்புல அவ்ளோ வித்தியாசம் காட்டி இருக்காரு. :-)//


ஆங்............. அப்டியா................அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கார்க்கிபவா said...

சொல்லுங்கண்ணா எல்லோருக்கும்.. ஒரேயடியா எல்லோரும் வில்லுவா தாக்கி எழுதறாங்க.. வந்ததில் அதுதான் சுமார்...

நித்யன் said...

//அந்த வீட்டுல உள்ள பையன், இந்த வருஷம் +12 பரீட்சை எழுத போறானாம்.//

+12 or +2...?

ரத்தினச்சுருக்க விமர்சனங்கள் சிறப்பு. வில்லு மகாமோசம் என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்தில்லை. மற்ற படங்களை பார்க்கும் தைரியமுமில்லை.

அன்பு நித்யன்

சரவணகுமரன் said...

வாங்க அத்திரி

சரவணகுமரன் said...

கார்க்கி, இதுக்குன்னே காத்து கிடந்திருப்பாங்க போல! :-)

சரவணகுமரன் said...

நித்யகுமாரன், சரியா கவனிச்சிட்டீங்க. திருத்தி விட்டேன். நன்றி.

Gajen said...

//விஜய், மேக்கப்புல அவ்ளோ வித்தியாசம் காட்டி இருக்காரு. :-)//


நம்ம தலைவர் மாறுபட்ட காரக்டேர் மாறுபட்ட ரோல் பண்றதுல கில்லடிங்கோ..ஹிஹி.

Gajen said...

//விஜய், மேக்கப்புல அவ்ளோ வித்தியாசம் காட்டி இருக்காரு. :-)//

நம்ம தலைவர் மாறுபட்ட காரக்டேர்/ மாறுபட்ட ரோல் பண்றதுல கில்லடிங்கோ..ஹிஹி.

சரவணகுமரன் said...

வருகைக்கு நன்றி தியாகி.