சிம்பு, அவர் நடிக்குற எல்லா படத்துலயும் ஏதாச்சும் வித்தியாசமா பண்ணனும்ன்னு நினைப்பாரு. அதாவது, கதையிலையோ, நடிக்குற நடிப்புலயோ இல்லை. அவர் தலைமுடியில. மீசையில. கிருதாவுல. இப்படிப்பட்ட விஷயங்கள்ல.
இப்ப, சிலம்பாட்டத்துக்காக ஒரு கெட்டப்புல தலையில கொண்டையும், இன்னொரு கெட்டப்புக்காக முறுக்கு மீசையுமா நடிச்சு இருக்காரு. முறுக்கு மீசைன்னா சும்மா இல்லை. ஒவ்வொரு பக்கமும் இரண்டு கிளை மீசைகள் இருக்கு. அது ரெண்டையும் விரலால நீவி விடுறது இந்த படத்தின் 'விரல்' ஸ்டைல்.
நீங்களே பாருங்க.
நல்லா இருக்குல்ல?
இன்னும் நாலு நாளுல நாலு பேர இப்படி பார்க்கலாம். அட, நம்ம பசங்க கூட பரவாயில்லை. கஜினி மொட்டைன்னு லூசுத்தனமா மண்டையில கோடு போட்டுக்கிட்டு இந்த ஹிந்தி பசங்க சுத்துறத பார்த்தா ரொம்ப பாவமா இருக்கு. சூர்யா, கஜினி படத்துல நடிக்கும்போது, யாரும் பார்த்துட கூடாதுன்னு கூச்சப்பட்டுக்கிட்டு தொப்பி போட்டுக்கிட்டு சுத்திட்டு இருந்தாரு. அமீர்கான் பப்ளிக்’ல வந்தாலும் வந்தாரு. அத ஸ்டைல் ஆக்கிடாங்க.
சரி. சிம்பு மேட்டருக்கு வருவோம். இது சிம்பு ஸ்டைல்ன்னு அந்த மாதிரி வர நினைக்குறவங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்லிக்கிறேன். இது சிம்பு ஸ்டைல் இல்லை. அவரும் ஒருத்தர பார்த்து காப்பி அடிச்சதுதான்.
யாருன்னு தெரியுமா? ஒவ்வொரு தமிழனுக்கும் தெரிஞ்சவுருதான்.
-
-
-
-
-
-
-
-
-
சூப்பர் ஸ்டாரே இவர பார்த்து காப்பி அடிக்கும்போது, லிட்டில் சூப்பர் ஸ்டார் அடிச்சா, அது என்ன பெரிய விஷயமா?
நன்றி : IndiaGlitz, TamilWire
25 comments:
சிம்புவை "பம்பு" செட்டர்ன்னு வேணா சொல்லலாம்.
:-))
வாங்க வண்ணத்துபூச்சியார்...
சிம்பு மீசைய பார்த்த உடனே நினைத்தேன் என்னடா இது நம்ம வடிவேல் மீசை மாதிரி இருக்குன்னு ஹி ஹி ஹி கடைசில நீங்களே சொல்லிட்டீங்க
ஓ! நீங்களும் அதான் நினைச்சிங்களா... அவ்ளோ பேமஸ்... வடிவேலு மீசை...
:-))
வாங்க அமுதா...
அதானே பார்த்தேன்.. சிம்புவுக்கு ஒரு ரசிகரான்னு பயந்துட்டேன்
ஹி... ஹி... அவருக்கு என்ன குறைச்சல், கார்க்கி?
அனாலும் சிம்புவின் இந்த ஸ்டைல்கள் பரவலாக இளைஞர்களிடத்தில் பிரபலமடைகின்றன..இந்த மீசையுடன் சிலர் வீதியில் திரியத்தொடங்கியிருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது..
எதிர்பார்த்ததுதான், rajeepan
என்னோட தம்பி சிம்பு ஃபேன். வல்லவன் படத்தின் 3 மணி நேர மொக்கையை பார்த்துவிட்டு வரும்போதும் சிம்பு லைட்டா சொதப்பிட்டான்ல என்று மட்டும் சொன்னான்.
சிலம்பாட்டம் பார்த்து தலைவலி வந்து வீட்டில் படுத்தால் அவன் செகண்ட் டைம் பார்க்க கெளம்பிக் கொண்டு இருந்தான். சிம்புவையும் அவர்கள் ரசிகர்களையும் திருத்தவே முடியாது.
//வல்லவன் படத்தின் 3 மணி நேர மொக்கையை பார்த்துவிட்டு வரும்போதும் சிம்பு லைட்டா சொதப்பிட்டான்ல என்று மட்டும் சொன்னான்.//
லைட்டாவா? இதெல்லாம் கொஞ்சம் ஓவருங்க... :-)
//சிலம்பாட்டம் பார்த்து தலைவலி வந்து வீட்டில் படுத்தால் அவன் செகண்ட் டைம் பார்க்க கெளம்பிக் கொண்டு இருந்தான். //
:-))
ஏ டண்டண்டணக்கா ஏ டணக்குடக்கா
என் மவன் பேர் சிம்பு
அவன் வச்சா அது ட்ரெண்டு
வாங்க கானா பிரபா
பொதுவாக இதுபோன்ற அற்புதங்களை பயமில்லாம் நகைச்சுவையாலர்கள் முதலிலேயே செய்து விடுவார்கள்:
ஆமாம்மாம்மா... :-)
நன்றி sureஷ்
ராம் சுரேஷ் சொன்ன மாதிரி
//சிலம்பாட்டம் பார்த்து தலைவலி வந்து வீட்டில் படுத்தால் அவன் செகண்ட் டைம் பார்க்க கெளம்பிக் கொண்டு இருந்தான். சிம்புவையும் அவர்கள் ரசிகர்களையும் திருத்தவே முடியாது//
என் வீட்டுல தங்கச்சி சிம்புவின் வெறித்தனமான ரசிகை. முடியாம படத்த பாத்து முடிஞ்சோம்! முடியல..வேற என்னத்த சொல்றது..
ஒருவேளை சிம்புவோட திறமையை புரிஞ்சிக்க முடியாத அளவுக்கு நமக்கு வயசாயிடுச்சோ?
மீசை அழகா இருக்கு :D
வடிவேல் மீசையை சொன்னேன்
குசும்புங்க...unknown blogger... :-)
இப்படி போட்டு தாக்குறீங்களேப்பு
நன்றி குடுகுடுப்பை...
வடிவேல் மீச காமெடி மீச...
ஆனா சிம்பு மீச சிரியசான காமெடி மீச...
ஹி ஹி ஹி ஹி....
வருகைக்கு நன்றி, பழையபேட்டை சிவா
சூப்பர் மேரீயோ விளையாட்டில் ஒரு பொம்மைக்கு இந்த மாதிரி மீசை வைத்து இருப்பார்கள்... குழந்தைகளுக்கு பிடிக்கும் என்பதால் நம்ம வடிவேலு அண்ணன் அதை நகைச்சுவைக்கு பண்ண... சிலம்பரசன் அதை சீரியஸ் ஆக எடுத்து கொண்டுள்ளார் போலும்... ஹி ஹி...
அப்புறம் எந்த வித சரக்கும் இல்லாதவர்களே இங்கு குப்பை கொட்டும் போது, சிலம்பரசனும் நல்ல இடம் வருவார்... சின்ன பையன் தானே.... எல்லாம் நாளடைவில் சரியா போய்டும்...
Post a Comment