Monday, January 5, 2009

பெங்களூர் - ஓசூர் ரோடு - பறக்கும் ஹைவே

பெங்களூரில் இருந்து ஓசூர் போகும் வழியில் பாதி தூரத்தில் உள்ளது, எலக்ட்ரானிக் சிட்டி. எஸ்.எம்.கிருஷ்ணா ஆட்சிக்காலத்தில் எலக்ட்ரானிக், ஐ.டி. கம்பெனிகளுக்கு சலுகை கொடுத்து ஆரம்பிக்கப்பட்ட இடம் இது. இதில் கம்பெனிகள் அதிகம் ஆக ஆக, இந்த சாலையில் பயணப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமானது. இந்த சாலைதான் தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் இருந்து பெங்களூர் வரும் வாகனங்களுக்கும் நுழைவு வாயில். இது போதாதா, வாகன நெரிசலுக்கு? அடிக்கடி இந்த ரோட்டுல போயிட்டு வந்தா காசநோய், தோல் வியாதி, பிரஷர் எல்லாம் வரும். அப்புறம் கொஞ்சம் நாள் கழிச்சி பொறுமை குணமும் கூடிடும்.




இதற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் ஓசூர் ரோடு எலிவேட்டட் ஹைவே பிராஜக்ட். ரோட்ட நல்லா விரிவாக்கி, ஒரு பாலத்தை கட்டுறதுதான் பிளான். பாலம் ஒரு கிலோமீட்டர், ரெண்டு கிலோமீட்டர் இல்ல, கிட்டத்தட்ட பத்து கிலோமீட்டருக்கு ஒரே பாலம். மத்திய அரசின் நெடுஞ்சாலை துறை, கர்நாடக அரசு மற்றும் எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள நிறுவனங்களின் கூட்டமைப்பு போன்றவற்றின் கூட்டணியில் உருவாக்கப்படும் திட்டம் இது. ஆரம்பிச்சு வைச்சது மன்மோகன் சிங். 450 கோடி ரூபாய் செலவு. கட்டுனதுக்கப்புறம் வண்டியில போறவன்கிட்ட புடுங்கிடுவாங்க.



இந்த பாலம் கட்டுற விதம், எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. மண்ணு, சல்லி, கம்பி, சிமெண்ட் எதுவும் ரோட்டுல கிடக்குறது இல்ல. எல்லாத்தையும் தனிதனியா வெவ்வேறு இடங்களில் செஞ்சு, இங்க வந்து பிக்ஸ் பண்ணிடுறாங்க. முதல்ல தூணை வைக்குறாங்க. அப்புறம் துண்டு துண்டா ஒட்டி பாலத்தை உருவாக்கிடுறாங்க.



ரெண்டு தூணுக்கிடையில் இவ்வளோ தூரத்தில எப்படி இத்தனை பாகங்களை சேர்த்து ஒண்ணா வைக்குறாங்க? அதுவும் எப்படி இப்படி நிக்குது?ன்னு எனக்கு ஆரம்பத்துல ஏகப்பட்ட சந்தேகம்.



மேட்டர் ஒண்ணுமில்லை. ஊசி நூலுல பாசி மணி கோர்க்குற மாதிரி, பாலம் கட்டுற டெக்னாலஜி இது.கண்ணுக்கே தெரியாத கம்பிதான் மெயினு.




இப்ப, ரோட்ட ஒரளவுக்கு பெரிசாக்குனதுக்கே கொஞ்சம் டிராபிக் குறைஞ்ச மாதிரி தான் இருக்கு. நாலு இடங்களில் சாலையை கடக்க, சப்வேயும் கட்டி இருக்காங்க. மத்தியான வெயில் நேரத்தில பாலத்துக்கு கீழேயே போனா, பத்து கிலோமீட்டருக்கு வெயில இருந்து தப்பிச்சிடலாம். மழை பெயும்போதும் அப்படியே. ஆனா, நான் மாட்டேன்ப்பா.



கீழே ரோட்டுல ஆறு லேன். மேலே பாலத்துல நாலு லேன். இது தவிர, ரெண்டு பக்கமும் சர்வீஸ் ரோடு. முக்கால் மணி நேர பயணத்தை, பத்து நிமிசமா இது குறைச்சிடுமாம். இந்த வகையில ரோடு பிளஸ் பாலம் கட்டுறது இதுதான் இந்தியாவில் முதல்முறைன்னு சொல்லிக்கிட்டாங்க.




ஆரம்பத்தில் ரெண்டு வருஷத்தில் முடிப்பதாக பிளான். நீண்டுக்கொண்டே செல்கிறது. இந்த வருடம் முடிந்துவிடும் என்றே தோன்றுகிறது.





இந்த பாதை முழுமையான செயல்பாட்டுக்கு வந்தபின், வாகன நெரிசல் இருக்காதுன்னு நினைச்சிட்டு இருக்காங்க. பார்ப்போம் என்ன நடக்குதுன்னு? பாலத்துக்கு மேல சிக்னல் வச்ச ஊருதானே இது?

35 comments:

ரவி said...

போட்டோ கலக்ஷன் அருமை.....

சரவணகுமரன் said...

நன்றி ரவி

மீன்துள்ளியான் said...

naan kuda authukula velai mudinchuruchu polanu vanthaen..palaya photos pottu emathettingalae..

ஷாஜி said...

//பாலத்துக்கு மேல சிக்னல் வச்ச ஊருதானே இது?//

--நீங்க MARTHAHALLI பாலத்தை தானே சொல்றிங்க...

--உங்களுக்கு photography கூட நல்லா வருது.. பாராட்டுக்கள்.

சரவணகுமரன் said...

Meenthulliyaan,

அய்யய்யோ... பழைய போட்டோ இல்லங்க... ரெண்டு நாலு முன்னாடி எடுத்ததுதான்....

ஷாஜி said...

ஒரு சந்தேகம் : இந்த பாலத்து மேல நம்ம தமிழ்நாடு பேருந்துகள் போகுமா? ஏன்னா வழி டிக்கட்டுகளை ஏத்த முடியாதே?

சரவணகுமரன் said...

//--நீங்க MARTHAHALLI பாலத்தை தானே சொல்றிங்க...//

இல்லங்க... டபுள் ரோடு பக்கம் இருக்குற பாலத்துல...

சரவணகுமரன் said...

//--உங்களுக்கு photography கூட நல்லா வருது.. பாராட்டுக்கள்.//

ரொம்ப நன்றி ஷாஜி

சரவணகுமரன் said...

//ஒரு சந்தேகம் : இந்த பாலத்து மேல நம்ம தமிழ்நாடு பேருந்துகள் போகுமா? ஏன்னா வழி டிக்கட்டுகளை ஏத்த முடியாதே?//

போகாதுன்னுதான் நினைக்கிறேன்... அப்புறம் வழியில இருக்குற பல நிறுத்தங்களில் நிறுத்த முடியாதே?... இது மெயினா எலக்ரானிக் சிட்டி போறவங்களுக்கும் விரைவா நிறுத்தாம ஓசூருக்கு போறவங்களுக்கும்... எல்லா வண்டியையும் மேல விட்டா, அப்புறம் பாலத்துல திண்டாட்டம் தான்.

ஷங்கர் Shankar said...

Your photo collection is very good!. When U taken these photos. No traffic at that time.

ஷங்கர் Shankar said...

// போகாதுன்னுதான் நினைக்கிறேன்... அப்புறம் வழியில இருக்குற பல நிறுத்தங்களில் நிறுத்த முடியாதே?... இது மெயினா எலக்ரானிக் சிட்டி போறவங்களுக்கும் விரைவா நிறுத்தாம ஓசூருக்கு போறவங்களுக்கும்... எல்லா வண்டியையும் மேல விட்டா, அப்புறம் பாலத்துல திண்டாட்டம் தான்.//

எப்படியிருந்தாலும் பொம்மநஹல்லியை தாண்டி சில்க் போர்டு சிக்னலில் எல்லா வாகனங்களும் ஒன்று சேர்ந்து மீண்டும் அங்கே பெரிய டிராபிக் ஆகத்தான் செய்யும். இதற்கு முக்கிய காரணம் ஓசூரிலிருந்து வரும் வண்டிகள் ஹெப்பால் செல்ல வேண்டுமானால் சில்க் போர்டு வழியாக செல்கின்றன. அதற்கு பதிலாக பொம்மநஹல்லியில் இருந்து H.S.R.லேஒவுட் வழியாக ரிங் ரோடு சந்தித்தால் நெரிசல் குறையும்.

சரவணகுமரன் said...

நன்றி ஷங்கர். நான் ஒரு விடுமுறை நாளில் எடுத்தேன்...

நீங்கள் சொல்வது போல், முடிவில் எங்கேயாவது சிக்கித்தான் போக வேண்டும்...

பட்டாம்பூச்சி said...

பதிவும் படங்களும் நல்லா இருக்குங்க :-).

சரவணகுமரன் said...

நன்றி பட்டாம்பூச்சி....

தமிழ் said...

அருமையான புகைப்படங்கள்

சரவணகுமரன் said...

நன்றி திகழ்மிளிர்...

வடுவூர் குமார் said...

இதே முறை தான் இங்கும் (துபாய் மெட்ரோ) உபயோகப்படுத்துகிறார்கள்.
Post-tensioned கேபிள் தான் இது நிற்பதற்கான ஆதார சுருதி.இதுக்கு மேலும் சொன்னால் புரியுமோ புரியோதோ என்று நிறுத்திக்கொள்கிறேன்.

வடுவூர் குமார் said...

படங்களை கொஞ்சம் "சுட்டுக்கவா?"
நன்றாக இருக்கு.

வடுவூர் குமார் said...

5வது படத்தில் உள்ள VLS நிறுவனம் தான் அந்த கேபிள் வேலை செய்யும் என்று நினைக்கிறேன்.
நாகார்சுனா நிறுவனம் மற்ற வேலைகளை செய்கிறது என்று நினைக்கிறேன்.
கான்கிரீட் வண்டி நிற்கும் படத்தில் உள்ள (பாலத்தின் மேல்)ஆள் பாதுக்காப்பா இருக்காரா??

சரவணகுமரன் said...

//இதுக்கு மேலும் சொன்னால் புரியுமோ புரியோதோ என்று நிறுத்திக்கொள்கிறேன்.//

தெரிஞ்சா சொல்லுங்க... தெரிஞ்சுக்க ரொம்ப ஆர்வமா இருக்கேன்...

சரவணகுமரன் said...

//படங்களை கொஞ்சம் "சுட்டுக்கவா?"
நன்றாக இருக்கு.//

கண்டிப்பா... நீங்க இப்படி கேட்கறது ரொம்ப சந்தோசமா இருக்கு.... ஹையா.... :-)

இராம்/Raam said...

ஹிம்... இதே எப்போதான் முடிக்க போறாங்களோ... :)


//இல்லங்க... டபுள் ரோடு பக்கம் இருக்குற பாலத்துல...//

ரிச்மண்ட் ஃப்ளே ஓவர்... இதை கடந்துதான் டெய்லி ஆபிஸ் போயிட்டு வந்துட்டு இருந்தேன்...... :)

சரவணகுமரன் said...

//நாகார்சுனா நிறுவனம் மற்ற வேலைகளை செய்கிறது என்று நினைக்கிறேன்.
//

நாகர்ஜுனா மட்டுமல்ல... சோமா - மேடாஸ் (சத்யம்!) நிறுவனங்களும் இந்த கட்டுமானத்தில் ஈடுப்பட்டுள்ளன.

இராம்/Raam said...

முன்னாடி படம் பார்க்க ஓசூரு போவோம், மார்கெட் பஸ்ஸ்டாண்ட்'லே இருந்து ஒரு மணி நேரந்தான் ஆகும், இது ஆரம்பிச்சதிலே இருந்து 2-3 மணிநேரம் ஆகிறதே நினைச்சு படத்துக்கு போற ஆசையே விட்டுப்போச்சு... அப்பிடியும் விடாமே போன படம் பருத்திவீரனும், சுப்பிரமணியபுரமும்...

நாங்க போனப்போ சுப்ரமணியபுரம் ஓசூரு'லே ரிலிஸ் ஆகவே இல்லை... :( என்ன பண்ண நொந்துக்கிட்டே 2 மணி நேரம் டிராவல் பண்ணி வந்து சேர்ந்தோம்...


நம்ம பெங்களூரூ நினைப்பே கிளறிவிட்டிங்க... :(

சரவணகுமரன் said...

//ஹிம்... இதே எப்போதான் முடிக்க போறாங்களோ... :)//

பரவாயில்லிங்க இராம்... ஓரளவுக்கு பாஸ்ட்டாத்தான் பண்றாங்க... நம்ம நாட்டுல இதெல்லாம் ஓகே தான். எனக்கு தெரிஞ்சு ஒரு இடத்துல ஐந்நூறு அடி தூர பாலத்த பல வருஷங்களா கட்டிட்டு இருக்காங்க.

//ரிச்மண்ட் ஃப்ளே ஓவர்... இதை கடந்துதான் டெய்லி ஆபிஸ் போயிட்டு வந்துட்டு இருந்தேன்...... :)//

ஓ! அந்த உலக பிரசித்தி பெற்ற சிக்னல்'ல நின்னு தான் டெய்லி போயிட்டு இருந்தீங்களா?

சரவணகுமரன் said...

//நம்ம பெங்களூரூ நினைப்பே கிளறிவிட்டிங்க... :(//

:-))

cheena (சீனா) said...

தேவையான ஒன்று - பயனுள்ள செயல் - புகைப்படங்கள் அருமை

சரவணகுமரன் said...

நன்றி சீனா

Anonymous said...

The same technolgy is being used for constructing elevated highway at Hyderabad from Mehdipatnam to Airport.
I think it was used in Delhi Metro also ,in the elevated portions.

K.G.Subbramanian

சரவணகுமரன் said...

தகவலுக்கு நன்றி, K.G.Subbramanian

ச.பிரேம்குமார் said...

இரண்டு வருடத்திற்கு முன்பு நான் பெங்களூரில் இருந்த போது ஆரம்பிக்கப்பட்டது. இன்னும் முடியவில்லையா?

சரவணகுமரன் said...

இன்னும் இல்லீங்க, பிரேம்குமார்...

குடுகுடுப்பை said...

நல்லா இருக்கு, இது மாதிரி சென்னைலயும் செஞ்சா நல்லா இருக்கும்

சரவணகுமரன் said...

வருகைக்கு நன்றி குடுகுடுப்பை...

blogpaandi said...

பாலம் இவ்ளோ சின்னதா இருக்கே ? இது பஸ் போற பலமா ? இல்லை பெங்களூர் மெட்ரோ ரயில் போற பாலமா?