எந்திரன் படத்தின் தயாரிப்பை ஐங்கரன் நிறுவனத்திடம் இருந்து கலாநிதி மாறன் வாங்கிவுள்ளதாக செய்திகள் வெளியாகிவுள்ளது. இதுவரை, சிறு பட்ஜெட் படங்களை மட்டும் வாங்கி விநியோகம் செய்து கொண்டிருந்த கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் முதல் முறையாக ரஜினியின் பிரமாண்டமான படத்தை தயாரிக்க உள்ளார்கள்.
எல்லா பிரமாண்டங்களும் ஒன்று சேர்ந்துள்ளது.
படத்தை ஐங்கரன் நிறுவனம் கைவிடுவதற்கு காரணம், சமீப காலமாக துறையில் அவர்கள் சந்தித்து வரும் நட்டங்களாக இருக்கலாம். இது சம்பந்தமாக ஏற்கனவே, சில செய்திகள் வெளிவந்திருந்தன.
சாதா படங்களையே ஸ்பெஷல் ஆக மாற்றிய சன் நிறுவனத்திடம், எந்திரன் சிக்கி இருப்பதால், படத்தின் வெளியிடு உச்சக்கட்ட கொண்டாட்டமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
சந்திரமுகியை சன் டிவியில் தீபாவளிக்கு போடும் போது, ரஜினியின் கடைசி சூப்பர் ஹிட் படம் என்று சன் டிவி குறிப்பிட்டதாக ஒரு பேச்சு இருந்தது. சிவாஜி, குசேலன் கிடைக்காத கடுப்பில், ரஜினியை வாரி கொண்டிருந்த சன் டிவி, இனி வரும் நாட்களில் தூக்கி பிடிப்பார்கள் என்பது நிச்சயம்.
முன்பு, சாட்டிலைட் சானல்கள் அறிமுகமான போது, திரைத்துறையினர் அதை எதிர்த்து பேரணி எல்லாம் சென்றார்கள். இன்று, அந்த திரைத்துறையினரின் படங்களே தள்ளாடும்போது, அதை தூக்கி விடும் நிலையில் உள்ளது, அன்று எதிர்க்கப்பட்ட டிவி நிறுவனம்.
காலம். எல்லாம் இதற்குள் அடங்கும்.
4 comments:
உங்கள் பதிவு இங்கே மீள்பதிவாகியிருக்கிறது- வேறொருவர் பெயரில்
சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி, வடகரை வேலன்.
தவறுக்கு வருந்துகிறேன்!
பதிவை அப்புறபடுத்திவிடவா! அல்லது இருக்கலட்டுமா!
//தவறுக்கு வருந்துகிறேன்! //
பிரச்சனை இல்லை, ஷங்கர்.
//பதிவை அப்புறபடுத்திவிடவா! அல்லது இருக்கலட்டுமா!//
இருக்கட்டும்.
Post a Comment