ரஜினி அவரது பூஜையறையில் இருந்து பத்மாசனம் செய்து கொண்டிருக்கிறார். கண்களை மூடியபடி தியானம். போன் அடிக்க ஆரம்பிக்கிறது. விடாமல் அடித்து கொண்டே இருக்கிறது. தியானத்தை விட்டு விட்டு போனை எடுக்கிறார்.
“ஹலோ”
“வணக்கம். நான் நரசிம்மராவ் பேசுகிறேன்”
தமிழ்லயா கேட்டாருன்னு தயவுசெய்து கேட்காதிங்க. காங்கிரஸ் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கிறார். காங்கிரஸில் இணைந்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடும்மாறு சொல்லுகிறார். போட்டியிடும்பட்சத்தில் தமிழக முதலமைச்சராக்க உறுதிமொழி கொடுக்கிறார்.
தியானம் பண்ணிட்டு இருக்கும் ஒருவரை கூப்பிட்டு முதல்வர் பதவி கொடுத்தா என்ன தோணும்?
அமைதியாக “யோசித்து சொல்கிறேன்” என்கிறார்.
“விரைவில் சந்திப்போம்” என்று கூறி போனை வைக்கிறார் அன்றைய பாரத பிரதமர்.
திரும்பிய ரஜினியின் முன்பு, பிரமாண்ட ராகவேந்திரர் படம். ரஜினியை பார்த்து சிரிப்பது போல் தோன்றுகிறது.
--------
சில நாட்களுக்கு பிறகு நரசிம்மராவை சத்யமுர்த்தி பவனில் சந்திக்கிறார் ரஜினி.
“உங்களை சந்திச்சதில ரொம்ப சந்தோஷம். ஒரு சின்ன வேண்டுகோள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திச்சின்னா, மூப்பனார் முதல்வரா வருறதுலதான் எனக்கு சந்தோஷம்.என்னை பொறுத்தவரை அவரு தான் அந்த பதவிக்கு பொறுத்தமான ஆளு. எளிமையான மனுசன். ஒருவேளை கூட்டணி அமைக்குற பட்சத்தில் மக்களுக்கு நல்லது பண்றவங்க கூட சேரணும். காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி சேரணும்ன்னு நினைக்கிறேன். இது திமுகவுக்கு வாய்ப்பு கொடுக்கிற நேரம்ன்னு தோணுது”
இது மக்களை நினைத்து சிந்தித்து எடுத்த முடிவாக இருக்கலாம். ஆனால் இதை சிலர் பயம் என்று சொல்லுவார்கள். ஆர்வமின்மை என்று சொல்லுவார்கள்.
எதுவானாலும் இருந்துவிட்டு போகட்டும்.
வேறு யாராவதாக இருந்தால் எப்படி செயல்பட்டு இருப்பார்கள்? ரஜினி கண்டிப்பாக அரசியலை தனது ஆதாயத்துக்காக பயன்படுத்த விரும்பவில்லை என்பதை புரிந்துகொள்ளலாம்.
அரசியலில் கவுன்சிலர் ஆக கூட வாய்ப்பில்லாத சிலர், ரஜினியின் அரசியல் நிலையை குறித்து எள்ளி நகையாடுவது உண்மையிலேயே வேடிக்கைதான்.
சூப்பர்ஸ்டாருக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
-காயத்ரியின் “தி நேம் இஸ் ரஜினிகாந்த்” புத்தகத்திலிருந்து
4 comments:
ரஜினி நல்லவர், நாணயமானவர்!
அவருக்கு உள்ளூர அரசியல் ஆசை இருக்கிறது. அதுவும் தவறல்ல.
ஆனால் அவருக்குப் பின்னால் தங்கள் வாழ்க்கையையே அவருக்கு அர்ப்பணிக்கத் தயாரக இருக்கின்ற தொண்டர்கள்(ரசிகர்கள்)க்காகவாவது
ஏதாவது ஒரு திடமான முடிவை எடுத்தால் நல்லது.
ரஜினி மிக நல்லவர். அவரை புரிந்து கொள்ளாதவர்களும், அவரின் வளர்ச்சி பிடிக்காதவர்களும் அவ்வப்போது இகழ்ந்து பேசிக்கொண்டு தான் இருப்பார்கள்.
உண்மையிலே தமிழகத்தில் அவருக்கு ஒரு உயர்ந்த இடம் காத்திருக்கிறது. இது அவரின் உண்மையான ரசிகர்களுக்கு தெரியும்.
பிறகு மற்றவர்களை பற்றி நமக்கு என்ன கவலை.
நன்றி ஆதித்தன்
வருகைக்கு நன்றி கடையம் ஆனந்த்
Post a Comment