Tuesday, December 9, 2008

ஹார்லிக்ஸ் - காம்ப்ளான் : விளம்பர யுத்தம்

இதுவரை விளம்பரங்களில் போட்டி நிறுவனத்தின் பெயரை குறிப்பிடாமல், நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு இருந்தனர். ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தையோ அல்லது பொருளையோ காட்ட வேண்டும் என்றாலும் அந்த பொருளின் வண்ணம் அல்லது வடிவத்தை காட்டி மறைமுகமாக குறை சொல்லி வந்தார்கள். இவ்வகை விளம்பர யுத்தங்களில் நேரடி தாக்குதலை கொண்டு வந்திருக்கிறது ஹார்லிக்ஸ் - காம்ப்ளான் விளம்பரங்கள்.

முன்பு காம்ப்ளான் விளம்பரத்தில் ஹார்லிக்ஸ் குறிக்கும் வகையில் 'H' என்று எழுதப்பட்ட ஒரு கப்பை காட்டி, அதில் உள்ள பானத்தை விட காம்ப்ளான் சிறந்தது என்று காட்டிவந்தார்கள். இது சம்பந்தமாக ஹார்லிக்ஸ் காம்ப்ளானை கோர்ட்டுக்கு இழுத்தது.

தற்போது சில நாட்களுக்கு முன்பு, தனது விளம்பரத்தில் ஹார்லிக்ஸ் காம்ப்ளான் மீதான நேரடி தாக்குதலில் இறங்கியுள்ளது. இந்த விளம்பரத்தில், இரு தாய்மார்கள் தங்கள் மகன்களுடன் கடையை விட்டு வெளியே வருகிறார்கள். ஒருவர் ஹார்லிக்ஸ் வைத்திருக்கிறார். மற்றொருவர், காம்ப்ளான். காம்ப்ளான் பாய் (!), எனது பானத்தில் 23 வகையான சத்துகள் இருப்பதாக கூறவும், அதற்கு ஹார்லிக்ஸ் பையன் தனது பானத்தில் அதற்கு மேல் இருப்பதாக கூறுகிறான். காம்ப்ளான் பையன், இது தன்னை உயரமாக்க உதவும் என்று கூறுவதற்கு, இவன் ஹார்லிக்ஸ் தன்னை உயரமாக்க, வலிமையாக்க, கூர்மையாக்க உதவுவதாக பதிலடி கொடுக்கிறான். கடைசியாக காம்ப்ளான் பையன், காம்ப்ளான் 170 ரூபாய் என்பதற்கு, ஹார்லிக்ஸ் 131 ரூபாய் என்று கூற, காம்ப்ளான் பையன் "அப்ப என்னுதுதான் அதிகம்" என்று பெருமைப்பட, அவனின் அம்மா கேவலப்படுவதாக முடித்திருப்பார்கள். இதில் எந்த ஒளிவு மறைவும் இன்றி, காம்ப்ளானை "அப்படியே சாப்பிடுவேன்" என்று சொல்லுவது போல் அப்படியே காட்டியிருந்தார்கள்.

இந்த விளம்பரத்தை எதிர்த்து காம்ப்ளான் மும்பை கோர்ட்டுக்கு சென்று இருக்கிறார்கள். கோர்ட்டில் அவர்களுக்கு சாதகமான முடிவு வராததால், அவர்களும் போட்டி விளம்பரத்தில் இறங்கி விட்டார்கள்.

இப்போது வெளியிடப்பட்டுள்ள காம்ப்ளான் விளம்பரத்தில் ஹார்லிக்ஸை மலிவு விலை பானமாக குறிப்பிட்டு, காம்ப்ளானே விரைவாக வளர உதவும் என்கிறார்கள். ஒவ்வொரு சத்தும் எவ்வளவு இருப்பதாக ஹார்லிக்ஸுடன் ஒப்பிட்டு பேப்பரில் விளம்பரம் செய்துள்ளார்கள்.

குழந்தைகளுக்கான சத்துபான விளம்பர போட்டியில், இரு நிறுவனங்களும் குழந்தைத்தனமாக போட்டியிட்டு கொண்டிருக்கிறார்கள். வாடிக்கையாளர்களுக்கு நன்மைதான். தாங்கள் செய்ய வேண்டிய ஆராய்ச்சியை, போட்டி நிறுவனம் தங்களுக்காக இலவசமாக செய்து கொண்டிருக்கிறது. இந்த நேரடி தாக்குதல் மற்ற நிறுவனங்களாலும் மற்ற பொருட்களுக்கு செய்யப்பட்டால், விளம்பரங்களும் இதர தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போல் சுவாரஸ்யமாகிவிடும். பொருட்களின் குறைபாடு தெரிந்துவிடும். ஆனால், ஆரம்பிக்கும் நிறுவனத்திற்கு தங்கள் பொருள் மேல் ரொம்பவும் தன்னம்பிக்கை தேவை.

முடிவா எனக்கு ஒரு சந்தேகம். இதெல்லாம் குடிச்சா தான் வளர முடியுமா?

11 comments:

ஷங்கர் Shankar said...

//***முடிவா எனக்கு ஒரு சந்தேகம். இதெல்லாம் குடிச்சா தான் வளர முடியுமா? **//

தெரியலையேப்பா!
ஆனா ஒன்னு காம்ப்ளான், ஹார்லிக்ஸ் குடிச்சா நாம வளருறோமோ இல்லையோ அந்த கம்பெனி நல்லா வளரும்.

சரிதானே!!!!!!!!!

சரவணகுமரன் said...

//நாம வளருறோமோ இல்லையோ அந்த கம்பெனி நல்லா வளரும்.//

:-))

நன்றி ஷங்கர்

வேலன். said...

ஷார்லிக்ஸ்ஸோ - காம்ப்ளானோ ஆளுக்கு ஒரு பாக்கெட் கொடுங்கப்பா சாப்பிட்டு பார்த்து சொல்கின்றேன்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

Anonymous said...

எங்கேயோ படித்தது...

ஹார்லிக்ஸின் மூலப்பொருள்.. மால்ட் (Malt)...

விஸ்கியின் மூலப்பொருளும்.. மால்ட்தான்..

மேலும், ஐரோப்பாவில், ஹார்லிக்ஸ் விளம்பரத்தில், இரவு நல்ல உறக்கத்திற்கு ஹார்லிக்ஸ் குடியுங்கள் என் விளம்பரபடுத்துவதாகக் கேள்விப்பட்டேன்.. அது எவ்வளவு உண்மை என்பதும் தெரியாது... ஆனால் இந்தியாவில் ஹார்லிக்ஸ் விளம்பரம் எவ்வாறு செய்யப்படுகின்றது என நமக்கு எல்லோருக்கும் தெரியும்.

சரவணகுமரன் said...

நன்றி வேலன்

Thiyagarajan said...

Previously we have seen this type of marketing campaigns in Automobile sectors (especially in Cars). Now FMCG sector too started to use it. The final advantage will be for the End users.

தராசு said...

அட இன்னா பேஜாராக்குதுப்பா,

அத்த குடிக்குறதா, இல்ல இத்த குடிக்குறதானு குழப்பியே ரெண்டு பேரும் அவுங்க மேட்டர வித்துனு பூடுவானுங்கோ, எத்த வாங்கி குடிக்கறதுன்னு தெரியாம, நம்ப தல கடைசில டாஸ்மாக்குல போய் சரண்டர் ஆயிடுவாரு,

இதெல்லாம் குடிச்சுதான் நாங்க வளர்ந்தமா என்ன?????

KarthigaVasudevan said...

ஹார்லிக்ஸ் -காம்ப்ளான் போட்டி பத்தி நான் ஏற்க்கனவே ஒரு பதிவு போட்டிருந்தேன் .உங்கள் பதிவு அதை விட விளக்கமாகவே இருக்கு .வியாபாரிகளுக்குள் போட்டியோ...சண்டையோ ...எதுவோ இருந்து விட்டுப் ஒகட்டும் அவங்க மக்களைக் குழப்பாமல் இருக்க கோர்ட் உத்தரவு போடாதானு இருக்கு?!என்னத்த சொல்ல?

சரவணகுமரன் said...

நன்றி தியாகராஜன், தராசு, மிஸஸ் டவுட்

கிரி said...

//குழந்தைகளுக்கான சத்துபான விளம்பர போட்டியில், இரு நிறுவனங்களும் குழந்தைத்தனமாக போட்டியிட்டு கொண்டிருக்கிறார்கள்//

:-)))

இங்கே சிங்கையில் இந்த விளம்பரங்களை பார்த்தது போல நினைவில்லை.

இவங்க சண்டையில மத்தவங்க பூஸ்ட் போன்விட்டா ன்னு போய்டுவாங்க போல இருக்கு :-)))

சரவணகுமரன் said...

//இவங்க சண்டையில மத்தவங்க பூஸ்ட் போன்விட்டா ன்னு போய்டுவாங்க போல இருக்கு//

அவுங்க எப்ப அடிச்சிக்குவாங்களோ?