நேற்று சன் டிவி கலக்கல் ஸாரி... அசத்தல் போவது யாரு? (சரிதானே!) நிகழ்ச்சியில் டைரக்டர் முருகதாஸ் கலந்து கொண்டு பேசினார். பேசும்போது கண்ணதாசன் சொன்னதாக ஒன்று சொன்னார். அதாவது நகைச்சுவை எப்படி இருக்க வேண்டும் என்றால் கேட்கும் போது சிரிக்க வைக்க வேண்டும். பின்பு, யோசித்து பார்த்தால் அழ வைக்க வேண்டுமாம். உதாரணத்திற்கு, சாப்ளின் காமெடியை சொல்லலாம்.
----------
சமீபத்தில் விஜய் இலங்கை தமிழர் பிரச்சினைக்காக அவரது ரசிகர்களுடன் உண்ணாவிரதம் இருந்தார். இந்த உண்ணாவிரதத்திற்கு காரணமே, நடிகர் சங்க மேடையில் நிதியாக நயந்தாராவைவிட குறைவாக 1 லட்சம் மட்டும் கொடுத்ததற்கு பிராயச்சித்தம் என்கிறார்கள். ஏதோ இருக்கட்டும்.
மேடையில் எஸ்.ஏ. சந்திரசேகர் பேசும்போது, சேலத்தில் நடந்து கொண்டிருக்கும் உண்ணாவிரதத்திற்கு நல்ல ஆதரவு என்றும், முன்பு ஏற்பாடு செய்திருந்த உணவு பொட்டலங்கள் போதவில்லை என்றும், மேலும் ஏற்பாடு செய்திருப்பதாக உளறிவிட்டார். விஜய் உள்பட, மேடையில் இருந்தவர்களும் சரி, கீழே இருந்தவர்களும் சரி, நன்றாக வாய் விட்டு சிரித்தார்களாம். பின்ன, உண்ணாவிரத மேடையில் உணவு பொட்டலம் என்றால் காமெடிதானே!
சார், நீங்க இன்னும் நல்லா பிராக்டிஸ் பண்ணனும்.
6 comments:
சிரிப்போ சிரிப்பு,,
நன்றி ஆட்காட்டி
//மேடையில் எஸ்.ஏ. சந்திரசேகர் பேசும்போது, சேலத்தில் நடந்து கொண்டிருக்கும் உண்ணாவிரதத்திற்கு நல்ல ஆதரவு என்றும், முன்பு ஏற்பாடு செய்திருந்த உணவு பொட்டலங்கள் போதவில்லை என்றும், மேலும் ஏற்பாடு செய்திருப்பதாக உளறிவிட்டார். விஜய் உள்பட, மேடையில் இருந்தவர்களும் சரி, கீழே இருந்தவர்களும் சரி, நன்றாக வாய் விட்டு சிரித்தார்களாம். பின்ன, உண்ணாவிரத மேடையில் உணவு பொட்டலம் என்றால் காமெடிதானே!//
:-) :-)
வருங்கால முதல்வர் எஸ் ஏ சந்திரசேகர் வாழ்க ! :-)
:-))))))
வருகைக்கு நன்றி அனானி
வாங்க கிரி...
Post a Comment