குண்டு வெடிச்சி ரெண்டு நாள் கழிச்சி மும்பைல பாலசாகேப்ன்னு ஒருத்தர், பாதுகாப்பு எப்படி இருக்குதுன்னு பார்க்க நினைச்சிருக்காரு. அவரோட துப்பாக்கியை எடுத்துக்கிட்டு குண்டு வெடிச்ச ஸ்டேஷனுக்கு போயிருக்காரு. டிரேயின்ல போயிருக்காரு. பல இடங்களில் மெட்டல் டிடெக்டர் வச்சிருக்காங்க. இவரும் இங்கயும் அங்கயும் போயிட்டு வந்துட்டு இருந்திருக்காரு. யாரும் கண்டுக்கலை. எந்த மெட்டல் டிடெக்டரும் எதையும் டிடெக்ட் பண்ணலை. பார்த்திருக்காரு. நேரே போய் போலீஸ்கிட்ட கம்ப்ளேயின் பண்ணிருக்காரு!. (எதுக்கெல்லாம் கம்ப்ளேயின் பண்ண வேண்டியிருக்கு) அதுக்கு அவுங்க சொன்னத கேட்டு ஷாக்காயிட்டாரு. அப்படி என்ன சொன்னாங்க?
“அது சத்தம் கொடுத்திருக்கு. ஆனா அந்த பீப் சத்தம்தான் எங்களுக்கு கேட்கலை”
-----------
மஹாராஷ்ட்ரா துணை முதல்வர்க்கிட்ட போயி பத்திரிக்கையாளர்கள், மும்பை தீவிரவாதம் பற்றி கேட்டுருக்காங்க. அவர் சொன்னது, “இது எப்பவும் சாதாரணமா நடக்குறதுதானே?”. அதேப்போல், கேரளாவில் பிறந்த கமாண்டர் உன்னிகிருஷ்ணனின் உடல் அடக்கம் முடிந்து இரண்டு நாட்கள் கழித்து, பல பேர்கள் சொல்லிய பிறகு, கேரளா முதலமையச்சர் அச்சுதானந்தன் பெங்களூர்ல போயி, அவங்க அப்பா அம்மாவை பார்த்திருக்காரு. கோபத்தில் வீட்டிற்குள் விட உன்னிக்கிருஷ்ணனின் அப்பா மறுத்திருக்காரு. ஆசையாக வளர்த்த ஒரே மகனை இழந்த தந்தைக்கு அரசியல்வாதிகளின் பொய் ஆறுதல் கண்டிப்பாக கோபத்தை வரவழைக்கும். உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருந்த அவருக்கு ஆறுதல் கூற வேண்டிய பக்குவம் ஒரு மூத்த அரசியல்வாதிக்கு இருந்திருக்க வேண்டும். ஆனா, இவருக்கு இல்லையே. பதிலுக்கு இவர் கூறியது, “ஒரு கமாண்டர் இறந்ததால நான் வந்தேன். இல்லாட்டி இங்கே ஒரு நாய் கூட வராது”.
நம்ம அரசியல்வாதிகளின் பொறுப்புணர்ச்சி... கேவலமா இருக்கு...
------------
பிளாஸ்டிக் பொருட்களின் மக்காத தன்மையால் ஏற்படும் அபாயம் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். தயாரிக்க செலவு கம்மியாக இருந்தாலும், மக்குவதற்கும் ஆண்டுகள் பல ஆகும், செலவும் ரொம்ப பிடிக்கும். அதனால பிளாஸ்டிக் கவருக்கு பதிலாக துணி பை, காகித பை உபயோகப்படுத்த சொல்லுறாங்க.
இன்னொரு பக்கம், அலுவலகங்களில் காகிதங்களுக்கு பதிலாக முடிந்தவரை ஆன்லைனிலேயே எல்லாவற்றையும் பண்ண சொல்கிறார்கள். பிரிண்ட் அவுட் எடுப்பதை தவிர்க்கவும். பேங்க் அக்கவுண்ட், கிரேடிட் கார்ட் ஸ்டேட்மெண்டை ஈ-மெயிலில் பெறவும்’ன்னு ஏகப்பட்ட அறிவுரைகள். நல்லதுதான். ஏத்துக்க வேண்டியதுதான்.
இப்ப, ஈ-வேஸ்ட்’ன்னு இன்னொரு சிக்கல் இருக்கு. பழைய கம்ப்யூட்டர், மானிட்டர், பிரிண்டர், சிடி, டிவிடி இதையெல்லாம் சுத்திகரிக்க, ஒரு சில வழிமுறைகள் உள்ளது. சும்மா குப்பையிலே போட்டுட முடியாது. இந்த கழிவுகளை நிர்வகிப்பது மற்ற எல்லா கழிவுகளையும் நிர்வகிப்பதை விட கடினம்.
பிளாஸ்டிக் பதிலாக, காகிதம் உபயோகப்படுத்த வேண்டுமாம். காகிதத்துக்கு பதிலா, கம்ப்யூட்டர் யூஸ் பண்ணனுமாம். கணினி கழிவுயையும் சுத்திகரிப்பதோ, மக்க செய்வதோ கடினத்திலும் கடினம். சரியா மாட்டிக்கிட்டோம்னு மட்டும் நல்லா தெரியுது.
நாசமா போறது நிச்சயம்!
15 comments:
:-))
சூப்பர்
சூப்பர்
நன்றி கடைசி பக்கம்
நன்றி முதல்இரவு
வணக்கம்
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.
http://www.thamizhstudio.com/
Add a Gadget - ல் இதை பயன்படுத்துக
வழி –> Add a Gadget –> select HTML/JavaScript
Title : தமிழ் ஸ்டுடியோ.காம்
Content : img alt=”தமிழ் ஸ்டுடியோ.காம்” src=”http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg”/>
URL முழுமையாக இல்லை, Chuttiarun.
))))))
வருகைக்கு நன்றி ஆட்காட்டி
பிளாஸ்டிக் பொருள்கள் மக்காது எனத் தெரியாமல் மும்பை ஒரு தரம் வெள்ளத்தில் மூழ்கியது. ஆனால் அது மக்காது எனத் தெரிந்தும் சென்னை இப்பொழுது மூழ்கியது.
நாங்கள் எங்கள் வீட்டில் பிளாஸ்டிக் ஒழிப்பை முழுமையாக கடைபிடிக்கிறோம். காரில் எப்பொழுதும் ஒன்றோ இரண்டோ பிக் ஷாப்பர் பைகளை வைத்திருக்கிறோம். வாங்கும் பொருள்கள் எல்லாத்தையும் அதில் தான் போட்டு எடுத்து வருகிறோம். கறி, மீன் வாங்கச் சென்றால் அதற்கென தனி பிளாஸ்டிக் பாத்திரங்கள் வைத்துள்ளோம், அதை எடுத்துச் சென்றுதான் வாங்குகிறோம், முடிந்த வரை நாங்கள் வாங்கும் கடைகளில் கூட நிற்கும் பலரிடம் இதே போல் முயற்ச்சிக்க அறிவுறுத்துகிறோம். ஒரு சிலர் காது கொடுத்து கேட்கிறார்கள். ஒரு சிலர் ஏளனச்சிரிப்பு சிரிக்கிறார்கள்.
தராசு, உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது.
ரொம்ப நல்ல பதிவு. ஆனா, படிக்கும் போது நம்ம நாட்டையும், நம்ம நிலைமையையும் நினச்சு கவலையா இருக்கு. :(
நன்றி விக்னேஷ்வரி
athu epidi ivlo nalla comment panreenga?
tamilla elutharathu epidi?
நன்றி பிரசன்னா,
தமிழில் ஆன்லைனில் டைப் செய்ய google transliterate இருக்கிறது.
NHM Writer, E-Kalappai போன்ற மென்பொருட்களை இன்ஸ்டால் செய்தும் தமிழில் டைப் செய்யலாம்.
Post a Comment