Sunday, December 28, 2008

பத்து நாட்களில் கார் ஓட்டுவது எப்படி? - 8

இன்னைக்கு ஃபுல்லா ரிவர்ஸ் பண்ணி பிராக்டிஸ் பண்ணனும்ன்னு நினைச்சிருந்தேன். அவன் மெயின் ரோடு போகலாமான்னு கேட்டான். நான் ரிவர்ஸ் போறத பத்தி சொன்னேன். ஒகேன்னு கூட்டிட்டு போனான்.

பல விதமா ரிவர்ஸ் எடுத்தேன். லெப்ட் சைடு ரிவர்ஸ். ரைட் சைடு ரிவர்ஸ். எந்த பக்கம் ரிவர்ஸ் எடுத்து திருப்புறோமோ, அந்த பக்கம் ரோட்டுல வண்டி இருக்குற மாதிரி இருந்திச்சுனா நல்லதாம்.

பின்னாடி வண்டிய எடுக்கும்போது, நல்லா திரும்பி பின் கண்ணாடி வழியா வெளியே பார்க்கணும். நல்லா திரும்ப முடியாட்டி, ஸ்டியரிங்ல இருந்து ஒரு கைய எடுத்து கியர் மேலே வச்சா நல்லா திரும்ப முடியும். ஸ்ட்யரிங்க்கு ஒரு கை போதும்.

நான் வண்டி ஓட்டுற இடத்துல ஒரு ஜெயில் இருக்கு. வெள்ளை டிரெஸ் போட்டுட்டு சில பேரு குறுக்க வந்திட்டு இருந்தாங்க.

“யாரு இதெல்லாம்? வார்டனா?’

“கைதிங்க”

“என்னது? வெளியே சுத்திட்டு இருக்காங்க.”

“நல்ல கைதிங்க சார். உள்ள இருக்கும்போது பார்ப்பாங்க. நல்லபடியா இருந்தாங்கன்னா, வீட்டு வேலைக்கு கூட்டுட்டு போவாங்க. தப்பிச்சி எல்லாம் போயிட மாட்டாங்க”

உண்மைய சொல்றாரா? இல்ல?...

”சில சமயம், ஊரு சுத்தி பார்க்க கூட கூட்டிட்டு போவாங்களாம்”

சூப்பரு.

அப்பப்ப, மேட்டுல நிறுத்தி பிரேக் பிடிக்காம கிளட்ச்ச விட்டு ஸ்டார்ட் பண்றதையும் பிராக்டிஸ் பண்ணினேன்.

அப்புறம், பார்க்கிங் பத்தி சொன்னான். நம்ம நாட்டுல காரை பக்கவாட்டுல நிறுத்துற மாதிரியான பார்க்கிங்தான் பொதுவா இருக்கும். அதாவது ரோட்டோரத்தில் ஒரு கார் பின்னாடி இன்னொரு கார் இருக்குற மாதிரி. சில வெளிநாடுகளில் நாமெல்லாம் பைக் நிறுத்துவது மாதிரியான கார் பார்க்கிங் இருக்குமாம். அது சுலபமா தெரிஞ்சாலும், இட வசதி இல்லாவிட்டால் திருப்புவதற்கு கஷ்டமாம்.

நம் நாட்டில் உள்ள பார்க்கிங்கிற்கு முன்னால் சென்று, பின்பு பின்னால் வந்து ஏற்கனவே நின்று கொண்டிருக்கும் கார்களுக்கு இடையே நிறுத்தி விட வேண்டும். அப்படி நிறுத்தி பழகுவதற்கு, நமக்கென்று சில கால்குலேஷன் வைத்திருக்க வேண்டும். அதாவது, எவ்வளவு தூரம் முன்னால் செல்ல வேண்டும். எங்கிருந்து பின்னால் வர வேண்டும். எந்த இடத்தில திரும்ப வேண்டும். எப்போது நிறுத்த வேண்டும், போன்றவற்றை நமது காருக்கு ஏற்றவாறு தெரிந்து வைத்திருந்தால் சுலபமாக பார்க் பண்ணிவிட்டு வந்த வேலையை பார்க்கலாம். நேரே சென்று இரு கார்களுக்கு இடையே விடுவது சான்ஸே இல்லை.

பார்க் பண்ணியவுடன் ஹண்ட் பிரேக்கை போட்டு விட்டு செல்லவும். சிலர் ஃபர்ஸ்ட் கியரையும் போட்டு விட்டு செல்வார்கள். (திரும்பி வந்து எடுக்கும்போது கவனம் தேவை. இல்லாவிட்டால், கார் பார்க்கிங் மறக்க முடியாத நிகழ்வாகிவிடும்)

ரொம்ப முக்கியம், காரை லாக் செய்து கீயை எடுத்துட்டு போகவும். அதை போட்டுட்டு போயிடுடாதீங்க.

(தொடரும்)

4 comments:

ஆயில்யன் said...

ரொம்ப ரசிச்சு பழகிக்கிட்டிருக்கீங்க போலிருக்கு சூப்பர்!

இங்க எங்களுக்கு டிரைவிங்க்ன்னா 40 நாள் :)))

சரவணகுமரன் said...

ஆமாம் ஆயில்யன்... :-)

40 நாளா? கார் இன்ஜினியரிங்கே படிச்சிடலாமே? நான் 10 நாளே ஒவர்ன்னு சொல்லிட்டு இருக்கேன்...

DHANS said...

பார்கிங் பண்ண சிரமம் இருந்தால் காரின் ரிவர்ஸ் சென்சார் வைத்துக்கொள்ளலாம், செலவு 3500 ரூபாய் ஆகும் ஆனால் மிக மிக உதவியுள்ளது அது.

புது காரில் பொருத்த நீங்கள் வாங்கின டீலரிடமே சென்று கேட்டு பொருத்தவும் ஏனென்றால் சில கற்கள் வறண்டி காலாவதி ஆகிவிடும் அப்படி பொருத்தினால் அதனால் டீலரிடமே பொருத்திக்கொண்டால் அவர்கள் எல்லாவற்றையும் பர்த்துகொள்வார்கள்

சரவணகுமரன் said...

உபயோகமான தகவல். நன்றி DHANS.