Friday, December 5, 2008

2008 - ஹிட் திரைப்படங்களும் கவர்ந்த காட்சிகளும்

இந்த ஆறு படங்களும் 2008 இன் வெற்றி பெற்ற படங்கள். இதில் மூன்று ஜனரஞ்சகமான சராசரி தமிழ் படங்கள் என்றாலும், மற்ற மூன்றும் வித்தியாசமான கதையமைப்பில் வந்தவை. எந்த வகையென்றாலும் ரசிக்கத்தக்க வகையில் இருந்தால் ஆதரிக்கப்பட வேண்டியதுதான். தனிப்பட்ட முறையில் இப்படங்கள் அனைத்தும் எனக்கு பிடித்தவை.

யாரடி நீ மோகினி

தனுஷ் திருவிளையாடல் ஆரம்பம், பொல்லாதவன் வெற்றியை தொடர்ந்து கன்சிஸ்டன்சியை தொடர வைக்க உதவிய படம். தமிழ் திரைப்பட வரலாற்றில் மறக்க முடியாத நடிகரான ரகுவரனின் கடைசி படம். முதல் பாதி, சாப்ட்வேர் கம்பெனி பின்னணியிலும், இரண்டாம் பாதி, திருநெல்வேலி ஆச்சாரமான குடும்ப பின்னணியிலும் எடுக்க பட்டிருந்தது. மரண படுக்கையில் இருக்கும் பாட்டியுடன் தனுஷ் பேசும் காட்சியில் உள்ள அவரின் நடிப்பு, இந்த தலைமுறை நடிகர்களில் சிறப்பாக நடிப்பவர் என்பதை காட்டுவதாக இருந்தது.

சரோஜா

இளைய தலைமுறையின் நாடி துடிப்பு வெங்கட் பிரபு துல்லியமாக கேட்கிறது போலும். விஜயகாந்த் ஒரு பேட்டியில் தான் கடைசியாக பார்த்த படம் இதுவென்றும், தனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லையென்றும், ஆனால் தனது மகன்கள் விழுந்து விழுந்து சிரித்ததாகவும் கூறினார். நீங்கள் எந்த தலைமுறையை சார்ந்தவர் என்பதை இப்படத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இந்த திரில்லர் வகை கதையை படம் முழுக்க நகைச்சுவை தோரணம் கட்டி எடுத்திருக்கிறார்கள். அங்க போயா காமெடியை வைச்சாங்கன்னு கேட்கிற அளவுக்கு சில இடங்களில் ஆச்சர்யப்படுத்தும் காமெடி. அதிலும் கிளைமாக்சில் சரண், மனைவி புகைப்படத்தை பார்த்து சோகமாக பேசி கொண்டிருக்கும் போது, பிரேம்ஜி கேட்கும் "யாரு சார் அந்த பிகரு?" என்ற கேள்வி நான் சற்றும் எதிர்பாராதது.

தசாவதாரம்

ஒரு மெயின் கதையுடன் ஒவ்வொரு அவதாரத்துடனான கிளை கதையையும் இணைத்து கட்டிய படம். பத்து வேடத்தில் கமல் என்ற ஓபனிங்கில் ஆரம்பித்த படம், படத்தில் பணியாற்றிய கலைஞர்களின் உழைப்பில் பிரமிக்க வைத்தது. ஒவ்வொரு முறை பார்க்கும் போது, புதியதாக ஏதோவொன்றை படத்தில் பார்க்கலாம் என்று சொல்லும் அளவுக்கு நிறைய விஷயங்கள் இருந்தது. எந்த சீனை எப்படி எடுத்திருப்பார்கள் என்கிற கண்ணோட்டத்தில் பார்த்தோமானால், படத்தை விட்டுவிடுவோம். குறிப்பா மருத்துவமனை காட்சி.

அஞ்சாதே

மிஷ்கின் ஆர்ட் பிலிமில்ல எடுத்து இருப்பார்ன்னு நினைச்சின்னு போனா, அது ஒரு விறுவிறுப்பான கமர்ஷியல் படமா இருந்தது. இரு நண்பர்கள் கதையை பெண் பிள்ளைகளை கடத்தும் தளத்தில் க்ரைமாக எடுத்திருந்தார். பெரியதாக புகழப்பட்ட படம். கரும்பு தோட்டம், முகம் காட்டாத மொட்டை வில்லன், கட்டிபோடப்பட்ட இரு பெண் பள்ளி மாணவிகள் என்று ஆடியன்ஸ் அனைவரையும் கண் கொட்டாமல் திரையை பார்க்க வைத்த கிளைமாக்ஸ். அதுவும், அந்த மொட்டை நடுரோட்டுக்கும் வரவும், அவனை ஒரு லாரி இடிக்கும்வாறு முடித்த விதம் என்னை ரொம்பவே கவர்ந்தது.

சுப்பிரமணியபுரம்

இந்த படம் வருவதற்கு முன்பு ரொம்ப ஸ்டைல்'ஆக ஒரு பாடல் வெளியிட்டு இருந்தார்கள். அதை கேட்டு விட்டு சென்றிருந்தால் ஷாக்கிங்கா இருந்திருக்கும். காதலையும், நட்பையும் ரொம்ப புனிதமாக காட்டி கொண்டிருந்த சினிமாவில் அதில் உள்ள துரோகத்தை காட்டமாக காட்டிய படம். படம் பார்த்துக்கொண்டிருந்த போது, பக்கத்திலிருந்த ஒருவர் அடித்த கமெண்ட், “ஏய் என்னப்பா! ஒரு கொலைகார கும்பலுக்குள்ள உட்கார்ந்த மாதிரி இருக்கு!”. எதார்த்தமா எடுக்கப்பட்டிருந்த, எண்பதுகளில் வீட்டிற்குள்ளும் வெளியேயும் மதுரை மக்கள் வாழ்ந்த வாழ்க்கையை, குடும்ப ஆடியன்ஸ் பார்க்க வருவதை, படத்தில் வரும் வன்முறை காட்சிகள் தடுக்குமோ? என்று நினைத்தேன். என் எண்ணத்தை, அன்று இரவு டிவி மெகாசீரியலில் வந்த கொலைக்காட்சி மாற்றியமைத்தது. கவர்ந்த காட்சி - சவுண்ட் செட் பார்ட்டிக்காக பேசுவோம் என்று நண்பர்களை சமுத்திரகனியிடம் அழைத்து சென்று அங்கு ஜெய் சைட் அடிப்பதும், அதன் பின் காட்சியும்.

சந்தோஷ் சுப்பிரமணியம்

இது ஒரு பீம்சிங் டைப் படமாக இருந்தாலும், ரீமேக் படமாக இருந்தாலும் மற்ற எல்லா படங்களையும் விட இளைஞர்களையும் பெரியவர்களையும் ஒரு சேர கவர்ந்த படம். மற்ற படங்களில் இருந்த வன்முறை இதில் இல்லை. குடும்ப செண்டிமெண்ட், காதல், காமெடி என்று ஜனரஞ்சகமான வெற்றி படத்தில் இருக்க வேண்டிய எல்லாமும் இருந்த படம். இறுதி காட்சியில் சித்தார்த்தை விட ரவி சிறப்பாக நடித்திருந்தார் என்று கூட சிலர் சொல்லி கேட்டிருக்கிறேன். அமைதியாக ஆர்ப்பாட்டமில்லாமல் ஒடிய ஒரு வெற்றி படம். ஹரிணி, ரவி வீட்டில் இருக்கும்போது இயல்பான நகைச்சுவையோடு நடக்கும் சம்பவங்களை, ஒரு வீட்டில் இருக்கும் அனைவரையும் ரசிக்க வைக்கும்படி எடுத்திருந்தது பாராட்டுக்குரியது.


இன்னமும் ஹிட் என்று சொல்லிக்கொண்ட சில படங்கள் இருக்கிறது. எனக்கு தெரிந்து இவைதான் இந்த ஆண்டின் உண்மையாக ஹிட் படங்கள், எடுத்தவர்களுக்கும், பார்த்தவர்களுக்கும். இதில் இரண்டு ரீமேக் படங்களாக இருந்தாலும், அதன் மூலமும் தமிழர்களால் உருவாக்கப்பட்டவைதான். தசாவதாரத்தை தவிர, மற்ற அனைத்தும் இளம் கலைஞர்களின் படைப்புகள். இது காட்டுவது, ரசிகர்கள் ஏதோவொரு விதத்தில் எதிர்பார்க்கும் புதுமை.

18 comments:

முரளிகண்ணன் said...

நல்ல தொகுப்பு

கிரி said...

அனைத்து படமும் பார்த்து விட்டேன். நீங்கள் கூறிய அனைத்துமே சூப்பர் படங்கள் தான்.

கிரி said...

//அதுவும், அந்த மொட்டை நடுரோட்டுக்கும் வரவும், அவனை ஒரு லாரி இடிக்கும்வாறு முடித்த விதம் என்னை ரொம்பவே கவர்ந்தது.//

இந்த லாரியில் தான் தப்பிக்க திட்டம் போட்டு இருப்பார்கள் என்று நினைக்கிறேன்

Anonymous said...

Where is Kuselan?

Unknown said...

Kuselan is also fnatastic movie.

unfortunately tamil is not clicked.

Anyway, Kuselan is best movie.

சரவணகுமரன் said...

நன்றி முரளிகண்ணன்

சரவணகுமரன் said...

நன்றி கிரி

சரவணகுமரன் said...

//இந்த லாரியில் தான் தப்பிக்க திட்டம் போட்டு இருப்பார்கள் என்று நினைக்கிறேன்//

இருக்கலாம்

சரவணகுமரன் said...

//Where is Kuselan?//

குசேலன் இந்த வரிசையில் இல்லாதது எனக்கும் வருத்தம்தான்

சரவணகுமரன் said...

நன்றி S

SUREஷ்(பழனியிலிருந்து) said...

சந்தோஷ் சுப்பிரமணியம்//


ரீமேக் இல்லையா........

SUREஷ்(பழனியிலிருந்து) said...

யாரடி நீ மோகினி


டீன் ஏஜ் காதல் கூடாது என்று கூறியிருப்பார்கள். அந்த தைரியம் இப்போது யாருக்கும் கிடையாது.

சரவணகுமரன் said...

SUREஷ், தவறுக்கு மன்னிக்கவும். திருத்திவிட்டேன்.

சரவணகுமரன் said...

நன்றி SUREஷ்

ஆளவந்தான் said...

//
இன்னமும் ஹிட் என்று சொல்லிக்கொண்ட சில படங்கள் இருக்கிறது.
//
நீங்க குருவியை பத்தி பேசலியே :)

சரவணகுமரன் said...

//நீங்க குருவியை பத்தி பேசலியே//

:-)

Anonymous said...

2008 ன்- தோல்வி படங்களைப் பற்றி ஒரு பதிவு போடுங்கள்.

குசேலன்
குருவி
ஏகன்
பீமா
தாம் தூம்
சேவல்
சத்யம்
காளை
சக்கரக்கட்டி
இந்திரலோகத்தில் நா. அழகப்பன்
அறை எண் 305-ல் கடவுள்
வெள்ளித்திரை

இவ்வளவு தான் என் நினைவில் உள்ளது.

சரவணகுமரன் said...

நன்றி கார்த்தி