”சார். இன்னைக்கு கடைசி நாள். என்ன பண்ணலாம்?”
சந்தானம் ஸ்டைலில் மட்டன் பிரியாணி பண்ணலாமான்னு கேட்க நினைத்து, அப்புறம்,
“நீயே சொல்லு”ன்னுட்டேன்.
“கடைசி ஆசை. நீங்க சொல்லுங்க”
இதென்ன, தூக்கு தண்டனையா?
“சரி. டிராபிக்ல போயி ஓட்டுவோம். அப்புறம் மெயின் ரோட்டுலயே ரிவர்ஸ் எடுப்போம். ஒ.கேவா?”
ஒ.கே. ரைட்.
அப்படியே ஒரு பெரிய ரோட்டுல போயி செய்தோம்.
முடிக்கறதுக்கு முன்னாடி சில முக்கியமான விஷயங்கள்.
1) எப்பவும் காரை எடுக்கறதுக்கு முன்னாடி எல்லா லைட், இண்டிகேட்டரையும் போட்டு பார்த்திடுங்க. காரை சுத்தி ஒரு ரவுண்ட் போயிட்டு பெட்ரோல் லீக் ஆகுதா, டயருல காத்து இருக்கான்னு பார்த்திடுங்க.
2) ஏறுனவுடன் கண்ணாடியை சரி பண்ணிடுங்க. மறக்காம, சீட் பெல்ட் போடுங்க.
3) போகும்போது 10 நொடிக்கு ஒருமுறை எல்லா கண்ணாடியையும் பாருங்க. அதே மாதிரி, ஸ்டாப் பண்ணிட்டு கிளம்பும்போதும் எல்லா கண்ணாடியும் பாருங்க.
4) முன்னாடி நிக்குற வண்டி கிளம்புனதுக்கு அஞ்சு செகண்ட் கழிச்சு கிளம்புங்க.
5) தொலைதூர பயணத்தின் போது, நாலு மணி நேரத்திற்கு ஒருமுறை ஓய்வு எடுப்பது அவசியம்.
6) திரும்பும்போது, ஒரு முப்பது மீட்டருக்கு முன்னாடியே இண்டிகேட்டரை போட்டுடுங்க. இடது பக்கம் திரும்பறதோட, வலது பக்கம் திரும்பும் போது ரொம்ப கவனமா இருக்கணும். ரோட்டுக்கு நடுவே இருக்குற கோட்ட தாண்டுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
7) முடிஞ்சளவு சீக்கிரம் கிளம்புங்க. அதன் மூலம் மிதமிஞ்சிய வேகத்தை தவிர்க்கலாம். கட்டுபாடற்ற வேகத்தை தவிர்த்தாலே, எல்லோருக்கும் நல்லதுதான்.
8) எந்த அளவு வேகமா போறோமோ, அதுக்கு ஏத்தமாதிரி பிரேக் பிடிக்க வேண்டிய தூரம் மாறுபடும். அது கவனத்துல இருக்கணும்.
9) எப்பவும் ரோட்டுல போற மத்தவங்க, எந்நேரமும் எந்த தப்பும் செய்வாங்கங்கற நினைப்பு இருந்திச்சுன்னா, நாமா கொஞ்சம் சேஃபா இருக்கலாம்.
10) கார் ஓட்டும்போது தயவுசெய்து போன் பேசாதீங்க.
கார் டிரைவிங் டிரெயினிங் ஒவர். இன்னும் இருபது நாள் கழிச்சு போயி லைசன்ஸ் எடுத்திடலாம்.
“ஏதும் ஹெல்ப் வேணும்னா கால் பண்ணு. எனக்கு ஏதும் வேணும்ன்னாலும் நான் கால் பண்றேன். பார்க்கலாம், பை.”.
-------------
கார்கள் உடனான மனிதனின் மனநிலையை பார்ப்போம். படிக்காதவன் படத்தில் ரஜினி காருடன் ”லக்ஷ்மி, லக்ஷ்மி”ன்னு பேசுவார். நிஜமாவே அந்த மாதிரி பேசுறவங்க இருக்காங்க.
காருக்கு ஏதேனும் ஒண்ணுனா துடிதுடிச்சு போயிடுவாங்க. அப்படி இருக்கறது சரியா?
கண்டிப்பா இல்லை. சிவாஜி போன்ற முன்னணி நடிகர்கள் அந்த காலத்தில் அந்தஸ்த்தின் அடையாளமாக இம்பாலா கார் வைத்திருந்த போது, எம்.ஆர். ராதா அதில் வைக்கோல் ஏற்றி “கார் ஈஸ் ஜஸ்ட் எ கார்”ன்னு காட்டிட்டு இருந்தார்.
அது மாதிரி எல்லோராலையும் இருக்க முடியாதுங்கறதுதான் உண்மை. பல கார்கள் வாங்குற நிலையில இருக்கறவுங்க அப்படி பண்ணலாம். வாழ்நாள் கனவா ஒரு கார் வாங்குறவன்? ஒரு கோடு கூட விழாம பாத்துக்கத் தான் ஆசைப்படுவான். எல்லாம் ஒரு அளவோட இருந்தா நல்லதுதான். அவ்ளோ தீவிரமா இருக்குறவுங்க, சக மனுசன் மேலயும் அதே அளவு அன்போட இருந்தா எந்த பிரச்சினையும் இல்ல.
--------------
இந்த பதிவில் கார் ஓட்டுவதற்கான எல்லா பயிற்சியை பற்றியும் சொல்லியிருப்பேன் என்று கிடையாது. நான் கார் ஓட்டிய அனுபவமே இது. விட்டு போனவற்றை நண்பர்கள் சொன்னால், தெரிந்து கொள்ள நல்லா இருக்கும்.
பின்னூட்டங்களில் பல நல்ல தகவல்களை அளித்த DHANS மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
(முற்றும்)
பி.கு.: என் பதிவை பார்த்திட்டு நண்பன் ஒருவன், சுஜாதா கார் ஓட்டிய அனுபவத்தை “தமிழ்நாடு இரண்டாயிரம் மைல்” என்ற கட்டுரையில் எழுதியிருப்பதாக சொன்னான். நான் படித்ததில்லை.
பதிவர்கள் யாராவது வைத்திருந்தால், பகிர்ந்து கொள்ளவும். கிடைக்கும் இடம் தெரிந்தாலும் சொல்லவும்.
5 comments:
மிக அருமை!.வாழ்த்துக்கள்!.
என்னால் முடிந்தது எனக்கு தெரிந்ததை மற்றவர்க்கு கூறினேன் இதில் நன்றி எல்லாம் தேவை இல்லாதது.
நீங்கள் மறந்தவை
குழந்தைகளை மடியில் உட்காரவைக்க கூடாது, அவர்களுக்குரிய சீட்டில் உட்கார வைக்க வேண்டும், அந்த சீட் இல்லை என்றால் கண்டிப்பாக வாங்கவும்.
(எனது உறவினர் மடியில் உட்காரவைத்து ஒரு சிறிய விபத்தில் குழந்தைக்கு ஆபத்தான அடி பட்டது)
அளவிற்கு அதிகமாக ஆட்களை ஏற்ற கூடாது.
வண்டியில் டூல்ஸ் எல்லாம் சரியாக உள்ளதா என்று சரி பார்த்துக்கொள்ள வேண்டும் நெடுந்தூரம் போகும் முன்.
நெடுஞ்சாலையில் பெருந்துகளுட்பட கனரக வாகனங்கள் தங்களை முந்த வழிகேட்டால் வலி விடவும் ஏனென்றால் அவர்கள் அந்த வேகத்தை மறுபடியும் அடைய நீண்ட நேரம் பிடிக்கும்.
நகரத்தில் இரவில் ஹை பீமில் போக வேண்டாம்,
பாத சாரிகளுக்கு உரிய வழி விடவும்.
இரு சக்கர வாகன ஊடிகள் உங்களை கொபப்படுதுவர், கோபப்பட வேண்டாம் அவர்களும் கூடிய விரைவில் கார் வாங்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள், சரி ஆகிவிடும்.
நன்றாக இருந்தது தங்கள் பதிவு
நானும் எனது அனுபவத்தை எழுதலாம் என்று இருந்தேன் நீங்கள் முந்திக்கொண்டீர்கள்
நன்றி ராம்
சித்திரமும் கை பழக்கம், செந்தமிழும் நா பழக்கம் என்று சொல்வது போல், காரும் ஓட்ட ஓட்டத்தான் பழகும்.
1. கார் ஓட்டும்போது, அடுத்த வரும் வண்டி ஓட்டுனர் எதாவது தவறு செய்தால், தயவு செய்து டென்ஷன் ஆகிவிடாதீர்கள்.. அது வண்டியை நம் கண்ட்ரோலில் இல்லாமல் செய்துவிடும்.
2. நம் நாட்டை விட்டு வெளிநாடுகளில் ஓட்டும் போது, அங்குள்ள நிலைமையை அனுசரியுங்கள் - உதரணமாக நம் நாட்டில் Keep Left - ஆனால் நிறைய நாடுகளில் Keep Right - இது மனதில் எப்போதும் இருக்க வேண்டும். இது பற்றி என்னுடைய அனுபவத்தை இந்த பதிவில் பாருங்களேன்..
http://raghavannigeria.blogspot.com/2008/12/blog-post_24.html
3. பார்க்கிங் செய்யும் போது மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் பார்க் செய்ய பழகுங்கள்.
4. வண்டி வாங்குவது பெரிதல்ல.. அதை ஒழுங்காக சர்வீஸ் செய்து கொள்ளுங்கள்.
5. நீண்ட தூரம் பிரயாணம் என்றால், ஒருதடவை சர்வீஸ் செண்டரில் வண்டியை கொடுத்து, பிரேக், கிள்ட்ச், கிரீஸிங் எல்லாம் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
6. 15 நாட்களுக்கு மேல் வண்டியை எடுக்க வேண்டாம் என்ற நிலை வந்தால், பேட்டரி இணைப்பை துண்டித்துவிட்டு செல்லுங்கள்.
7. 15 நாட்களுக்கு ஒரு முறை டயரில் காற்றழுத்தம் சரி பாருங்கள். சரியான காற்றழுத்தம் இருந்தால், வண்டி நல்ல மைலேஜ் கொடுக்கும், சஸ்பென்சன் நீண்ட காலம் நன்றாக இருக்கும்.
8. கிளட்சை மிதித்து கொண்டே வண்டி ஓட்டாதீர்கள். இது மைலேஜை குறைப்பது மட்டுமல்ல, கிளட்ச் ப்ளேட் விரைவில் மாற்றவேண்டி வரும்.
9. ஒவ்வொரு 10,000 கிமி. முன் டயரை பின் பக்கமும், பின் டயரை முன் பக்கமும் மாற்றுங்கள். டயரை மாற்றிய பின் வீல் பேலன்சிங், அலைன்மெண்ட் செய்யுங்கள்.
நன்றி இராகவன்... விரிவான நல்ல தகவல்கள்...
Post a Comment