இந்த பதிவு யாரையோ கிண்டல் செய்ய வேண்டும், நக்கல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நையாண்டி நோக்கில் எழுதப்படவில்லை. நடப்பதை கண்டு வலியிலும், கோபத்திலும் எழுதியது.
தீவிரவாதி 1: நாம பனிரெண்டு பேர அனுப்பி, இருநூறு மக்களை கொன்னுருக்கோம். ஆனா இந்திய அரசு, தீவிரவாதிகளுடனான போரில் வெற்றி, சதி முறியடிப்பு பேசிக்கிறாங்களே?
தீவிரவாதி 2: அதான் எனக்கும் புரியல. டிபன் பாக்ஸ்ல குண்டு வச்சோம். ஒரு மாசத்துல மறந்திட்டாங்க. சைக்கிள்ள குண்டு வச்சோம். ரெண்டு மாசத்துல மறந்திட்டாங்க. என்ன பண்ணினாலும் அதிகபட்சம் மூணு மாசத்துல மறந்திடுறாங்க.
தீவிரவாதி 1: அதனால தான் இந்த தடவை, ஏழை, நடுத்தர மக்களை விட்டுட்டு, இந்திய அரசு அக்கறை எடுத்துக்கிற மேல்தட்டு மக்களை தாக்குனோம்.
தீவிரவாதி 2: அதுக்கும் எந்த விதமான பிரயோஜனம் இருக்குற மாதிரி இல்ல. நாம நடத்தின தாக்குதல வச்சி அரசியல்வாதிங்க இப்பவே அவனுங்களுக்காக ஒட்டு பொறுக்க ஆரம்பிச்சிட்டாங்க.
தீவிரவாதி 1: எனக்கென்னமோ, ஒரு நல்ல விஷயம் நடக்குற மாதிரி இருக்குது.
தீவிரவாதி 2: என்ன?
தீவிரவாதி 1: ஏதோ, தகவல் பரிமாறிக்கணும்'ன்னு நம்ம பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. தலைவர கூப்பிட்டு இருக்காங்க. போயிட்டு வந்ததும், அவர்கிட்ட என்ன ஏதுன்னு கேட்டுட்டு அடுத்த முறை அதுக்கு ஏத்த மாதிரி பிளான் பண்ணனும். மாட்டிக்க கூடாது.
தீவிரவாதி 2: மாட்டினாலும் பிரச்சனை இல்லை. ஏன்னு சொல்லு?
தீவிரவாதி 1 (யோசித்துவிட்டு): கருணை மனு போட்டுட்டு வெளிய வந்திடலாம். அதானே? சரியா?
தீவிரவாதி 2: ஆமாம். ஆமாம். அதே மாதிரி, அடுத்த முறை இந்தியாவுல கொஞ்சம் ஆளுங்கள நமக்காக ஏற்பாடு பண்ணினா போதும்.
தீவிரவாதி 1: ஏன்?
தீவிரவாதி 2: நமக்காக வேல பார்க்க, நிறைய டிவி சானல்கள் இருக்காங்க. நம்மளோட சாட்டிலைட் போன் மூலமா, பேச மட்டும்தான் முடியுது. ஆனா, அவுங்க நமக்காக லைவ் டெலிகாஸ்ட்'யே பண்றாங்க. அது மட்டும் இல்லாம, கமாண்டர்ஸ் கிட்ட பேசி என்ன பிளான்னு கேட்டும் சொல்றாங்க. ரொம்ப யூஸ்புல்லா இருக்கு.
தீவிரவாதி 1: கரெக்ட். அடுத்து எங்க டார்கெட் பண்ணலாம்? சவுத் இந்தியாவுல பண்ணிரலாமா? சென்னை எப்படி?
தீவிரவாதி 2: அங்க வேண்டாம்.
தீவிரவாதி 1: ஏன்?
தீவிரவாதி 2: நாம கஷ்டப்பட்டு குண்டு வைப்போம். ஆனா அங்க இருக்குற அரசியல்வாதிகள் குண்டு வச்சது யாருன்னு அவுங்களுக்குள்ள அடிச்சிக்குவாங்க. ஆளுங்கட்சி, எதிர்கட்சியை சொல்லுவாங்க. எதிர்க்கட்சி, ஆளுங்கட்சியை சொல்லுவாங்க. கடைசில நம்மள மறந்திடுவாங்க.
தீவிரவாதி 1: ஒ!
தீவிரவாதி 2: அதுமட்டும் இல்ல. டிவிக்காரங்களும், இந்த அளவுக்கு உதவுவாங்கன்னு சொல்ல முடியாது. அவுங்கவுங்க கட்சிகாரங்களையும், சினிமாகாரங்களையும் பேட்டி கண்டுட்டு இருப்பாங்க.
தீவிரவாதி 1: இப்பதான் ஒரு தாக்குதல் பண்ணிருக்கோம். அதுக்குள்ளே இன்னொன்னு பண்ண முடியுமா? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பல எடுத்திருப்பாங்களே?
தீவிரவாதி 2: கடல் வழியா வந்தோம்னு எல்லா துறைமுகத்திலையும் பாதுகாப்பு அதிகரிச்சிருக்காங்களாம். ஹோட்டல்'ல தாக்குதல் பண்ணிருக்கோம்னு எல்லா ஹோட்டல்'லையும் பாதுகாப்ப அதிகரிக்க சொல்லி இருக்காங்களாம். இவனுங்க எப்பவும் இப்படித்தான். கோவில அடிச்சா கோவிலுக்கு பாதுகாப்பு. மார்க்கெட்ட அடிச்சா மார்க்கெட்டுக்கு பாதுகாப்பு. தியேட்டர அடிச்சா தியேட்டர்களுக்கு பாதுகாப்பு. நாம என்ன அடிச்ச எடத்தையா இருப்பி அடிப்போம்?
தீவிரவாதி 1: அதானே? ஆனாலும் எனக்கு வர வர வன்முறை மேல நம்பிக்கையே போயிடுச்சி.
தீவிரவாதி 2: ஏன்?
தீவிரவாதி 1: எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாங்க. இந்தியா ரொம்ம்ம்பபபப நல்ல நாடுப்பா...
அவனுங்களே வெறுத்து சோர்ந்து தீவிரவாதத்தை விட்டாதான் உண்டு.
27 comments:
நிதர்சனம்
இந்தியா தன் அயலுறவுக் கொள்கைகளில் தீவிர மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். தற்போதுள்ள கொள்கைகள் ஒரு நயா பைசா பிரயோசனம் இல்லாதது.
பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் ஏற்கனவே எதிரிகள். அந்த நாடுகளுடனான உறவுகளைச் சீர் செய்வது கடினம். ஆனால் இலங்கை விவகாரத்தில் இந்தியக் கொள்கைகள் மிகக் கேவலம். இலங்கை அரசின் நண்பர்கள் சீனா மற்றும் பாகிஸ்தான். இந்த உண்மையை வைத்துக்கொண்டே இந்தியாவை மிரட்டுகிறது சுண்டைக்காய் இலங்கை. அதன் மிரட்டலுக்குப் பயந்து இந்தியாவும் ஓடோடி ராடார், ஆயுதங்கள், பண உதவி மற்றும் ஆயுதப்பயிற்சி முதலானவற்றை வழங்குகிறது.
ஆனால் இலங்கை அரசோ பாகிஸ்தானின் பொருளாரதாரத்தை நிமிர்த்தும் வகையில் அவர்களிடமிருந்தே ஆயுதங்களை வாங்குகிறது. கிட்டத்தட்ட 10 பில்லியன் இந்திய ரூபாய்கள் மதிப்பிலான ஆயுதங்கள் பாகிஸ்தானிடமிருந்து இலங்கையால் இந்த வருடம் வாங்கப்பட்டுள்ளன. இந்தப்பணத்தின் ஒரு பகுதி இலங்கையால் இந்தியாவிடம் இருந்து பெறப்பட்டது. இவ்வாறு இலங்கை பாகிஸ்தானின் பொருளாதாரத்துக்கு இந்தியப் பணத்தின்மூலம் உதவி செய்ய, பாகிஸ்தானோ பயங்கர வாதிகளைப் பயிற்றுவித்து இந்தியாவுக்கு அனுப்புகிறது. இது எவ்வளவு மடத்தனம்.?
இந்தியாவின் தெற்கு எல்லை பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் தனித்தமிழீழம் தோற்றுவிக்கப்பட வேண்டும். ஈழத்தமிழர் தமது தொப்புள்கொடி உறவுகளாம் தமிழகத் தமிழர்கள் வாழும் இந்தியாவுக்குப் பாதகமாகச் செயல்பட மாட்டார்கள். அவர்களின் போராட்டம் இதுவரை பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளிடம் சோரம் போனதில்லை. இதுவே அவர்களின் இந்திய சார்பு நிலைக்குச் சிறந்த எடுத்திக்காட்டு.

unmai! unmai!! 100% unmai!!!
subbu
\\அதான் எனக்கும் புரியல. டிபன் பாக்ஸ்ல குண்டு வச்சோம். ஒரு மாசத்துல மறந்திட்டாங்க. சைக்கிள்ள குண்டு வச்சோம். ரெண்டு மாசத்துல மறந்திட்டாங்க.\\
motor bikele kundu vachom, athai kandu pudichavarayum potu thallitome
migavum etharthamaga solli vitterkal neengal evalavu sonnalum nam makkal thiruntha povathillai
நன்றி முரளிகண்ணன்
கருத்து பகிர்வுக்கு நன்றி புலோலியான்
நன்றி சுப்பு
நன்றி அனானி
உண்மை நிலவரத்தையும் இந்தியாவின் கையாலாகத்தனத்தையும் அருமையாக எழுதியுள்ளீர்கள்.
ஒரு சின்ன உதாரணம் வேண்டுமெனில் கமெண்டோ படை டெல்லியிலிருந்து வந்துசேர 8 மணி நேரம் பிடித்துள்ளது.
தொடர்ந்து மும்பையில் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் இருந்தும் ஒரு கமெண்டோ படை கூட மும்பையில் இல்லை என்பது மிகவும் வருத்தத்திற்குரியது.
மிகத் தெளிவாச் சொல்லிட்டீங்க. யார் கண்டா. தொலைக் காட்சியிலியே தீவிர வாதிகளுக்கு அடுத்த எங்க வைக்கலாம்னு ஐடியா கொடுத்தாலும் ஆச்சரியப்பட ஒண்ணும்ம் இல்லை:(
மனக் குமுறலை ஆத்திக்க முடிஞ்சது உங்க பதிவில்.நன்றி
நல்லா இருக்குது அண்ணா.. :)
வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் நன்றி மஞ்சூர் ராசா.
//ஒரு சின்ன உதாரணம் வேண்டுமெனில் கமெண்டோ படை டெல்லியிலிருந்து வந்துசேர 8 மணி நேரம் பிடித்துள்ளது.//
எதுவும் தயார் நிலையில் இல்லை. ஹெலிகாப்டர் ரெடி இல்லை. பைலட் ரெடி இல்லை. ஹெலிகாப்டர்'இல் எரிபொருள் இல்லை. காவல்துறையினருக்கு புல்லட் ப்ரூப் ஜாக்கெட் ரெடி இல்லை. நாமதான் சாகுறதுக்கு ரெடி'ஆ இருக்கோம்.
நன்றி வல்லிசிம்ஹன்.
நன்றி சுபானு.
//தீவிரவாதி 1: எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாங்க. இந்தியா ரொம்ம்ம்பபபப நல்ல நாடுப்பா...//
யெஸ்!
//அவனுங்களே வெறுத்து சோர்ந்து தீவிரவாதத்தை விட்டாதான் உண்டு.
//
:) இதுதான் ஒரே வழி. நிரந்திர வழியும் கூட. தானா மனசு மாறணும், இல்ல மாற வெப்போம்.
இருக்கிற ராடர்களையும் அதற்கான நிபுணத்துவம் வாய்ந்த நிபுனர்களையும் இலங்கைக்கு அனுப்பி விட்டால் மத்திய அரசு பாவம் என்ன செய்யும், புலிகளின் விமானங்களையும், கப்பல்களையும் வேவு பார்க்கும் ஆர்வம் தமது மும்மை கடற்பரப்பையும் பாது காப்பதில் இருந்திருந்தால் இவ்வளவு இழப்பு வந்திருக்காது.
வருகைக்கு நன்றி surveysan
வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி அனானி
படிக்கப் படிக்க அழுகையும் சிரிப்பும் சேர்ந்து வந்தது.. ஏதாவது செய்ய முடிபவர்களும், செய்ய வேண்டியவர்களும் கைகட்டி நிற்க, நம்மால் அலுத்துக்கொள்ளத்தான் முடியும்!
வருகைக்கு நன்றி தோகை
அருமையா கூறி இருக்கீங்க சரவணகுமரன்
//தீவிரவாதி 1: எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாங்க. இந்தியா ரொம்ம்ம்பபபப நல்ல நாடுப்பா...//
நல்ல நாடு?
வருகைக்கு நன்றி Sathiyanarayanan
இந்தியன் என்று சொல்லடா. என்ன அடி கொடுத்தாலும் தாங்குடானு இருக்கு நிலைமை.
:(
நன்றி விக்னேஷ்வரி
Post a Comment