Wednesday, November 19, 2008

போடுங்கம்மா ஓட்டு!

ரெண்டு நாட்கள் முன்பு, பெங்களூரில் புதியதாக ஜனதா கட்சியின் தலைவரானா குமாரசாமி தன்னுடைய வெயிட்டை காட்ட ஒரு பேரணி நடத்தினார். சும்மாவே டிராபிக் ஜாம் ஆகும் பெங்களூர், இந்த முறை ஸ்டப்ட் பிரட் போல் எட்டு மணி நேரம் வரை அசையாமல் நின்றது.



ஏர்போர்ட் சென்றவர்கள் விமானத்தை விட்டார்கள். மூன்று-நான்கு மணிக்கு பள்ளியில் இருந்து சென்ற மாணவர்கள், களைப்புடனும் பசியுடனும் வீட்டுக்கு பத்து பதினோரு மணிக்கு வந்து சேர்ந்தார்கள். ஆபீஸில் இருந்து பஸ்சிலும் கேப்களிலும் சென்றவர்கள், நடந்தாவது செல்வோம் என்று நடந்தார்கள். டிராபிக்'இல் மாட்டிய ஒரு முன்னாள் ஜனதா கட்சி அமைச்சர், கட்சி தொண்டர்களிடமும் மாட்டி அடி வாங்கினார்.



இதனால் இந்த பேரணிக்கும் ஜனதா கட்சிக்கும் பல தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்தது. அரசியல்ல இதெல்லாம் சகஜம் என்று சொல்லி இருந்த குமாரசாமி, என்ன நினைத்தாரோ இப்ப எதிர்ப்புக்கு பதிலடி கொடுக்க ஆரம்பித்துவிட்டார். மக்களின் மறதி மேல் நம்பிக்கை வைத்தாரோ, அல்லது எப்படியும் பெங்களூர் மக்கள் நமக்கு ஓட்டு போட மாட்டார்கள் என்று நினைத்தாரோ, எதிர்ப்பு சொல்லும் பெங்களூர் நகர மக்களை ஒரு பிடி பிடிக்க தொடங்கி விட்டார்.

"அவனவன் கிராமத்துல ஸ்கூல்'லுக்கு போக ஆறு கிலோமீட்டர் ஏழு கிலோமீட்டர் நடந்து போறான். இங்க ஒரு நாள் லேட்'ஆ வீட்டுக்கு போனத்துக்கு இந்த கூப்பாடு போடுறீங்களே, எப்பவும் சுகவாசியா இருக்குற நீங்க அந்த கிராமத்து மக்கள் நிலைமையை நினைச்சி பார்த்தீங்களா?"

"இவ்ளோ பேசுற நீங்க, ஜனநாயக கடமையான ஓட்ட ஒழுங்கா போடுறீங்களா? அதே சமயம், இதே போல் இசை நிகழ்ச்சிகள் நடக்குறப்போ ஆகுற டிராபிக் ஜாம் பத்தி ஒண்ணும் சொல்லுறது இல்லை"

இவர் அவர் தப்ப மறைக்க இப்படி எதிர் வாதம் வைத்தாலும், அதிலையும் ஒரு உண்மை இருக்கு. சேவல் படத்துல 'வழக்கம் போல்', வடிவேலுவ அடிக்க ஒரு கூட்டம் கூடும். அப்ப, வடிவேலு சொல்லுறது, "ஏன்யா, ஓட்டு போடுறப்போ கூட ஐம்பது சதவிகிதம் மக்கள் தான் வரீங்க. ஆனா, என்னைய அடிக்கும்போது மட்டும் இப்படி மொத்தமா வாரீங்களே?" தமாஷா தெரிஞ்சாலும் இதுதான் உண்மை.

இன்னைக்கு கம்ப்யூட்டர் முன்னாடி உக்கார்ந்து இருக்கும் பல பேருகிட்ட வாக்காளர் அடையாள அட்டை இருக்காது. இருந்தாலும், இவுங்க வேற ஊருல இருப்பாங்க. தேர்தல் சமயம் மட்டும் இதோட ஞாபகம் வரும். மத்த சமயமும், அரசு அலுவலகத்துக்கோ, அடையாள அட்டை வழங்கும் பள்ளிகளுக்கோ போக நேரமும் இருக்காது, மனசும் இருக்காது.

இதில் ஒரு மாற்றத்தை கொண்டு வர ஆரம்பிக்கபட்டது தான் "ஜாகோ ரே" (Jaago re) என்னும் அமைப்பு. இதற்கு அர்த்தம் "விழித்தெழுவோம்'ன்னு நினைக்கிறேன். (இந்த பேரை எல்லோருக்கும் புரியுறாப்புல பொதுவா ஆங்கிலேத்துலே வச்சிருக்கலாம். பரவாயில்லை, விடுங்க!). இதன் நோக்கம் இணையம், செல்பேசி தொழில்நுட்பம் மூலம் மக்களிடையே ஓட்டுரிமை பற்றிய விழிப்புணர்வை கொண்டுவருவதும், ஓட்டு போடுவதற்கான உதவிகளை செய்வதும் ஆகும்.

ஜனாகிரகா மற்றும் டாடா டீ நிறுவனங்களின் கூட்டு முயற்சியான இதன் திட்டம், நூறு கோடி மக்களை ஓட்டு போட வைப்பதாகும். முதல் கட்டமாக, அடையாள அட்டையை ஆன்லைன் மூலம் பெற உதவி செய்கிறார்கள். நமது விண்ணப்பத்தின் பல்வேறு நிலையை செல்பேசி மூலம் தெரிந்தும் கொள்ளலாம். பின்பு, தேர்தலின் போது, தேர்தல் பற்றிய தகவல்களை தருகிறார்கள். மேலும் விவரங்கள், இங்கே.

மாற்றத்தை எதிர்பார்த்தோமானால், அதை நம்மிடம் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்.

புகைப்படங்கள் நன்றி - டைம்ஸ் ஆப் இந்தியா

8 comments:

Anonymous said...

மிக அருமையான பதிவு. நீங்கள் இந்த பதிவுக்கு ஓட்டு போடுகின்றீர்களோ / இல்லையோ .. தயவு செய்து பதிவை முழுமையாக படிக்கவும். ஓட்டுரிமை நமக்கு எவ்வளவு பெரிய சொத்து என்பதை மிக தெளிவாக சொல்லியுள்ளார். இராகவன், நைஜிரியா

சரவணகுமரன் said...

நன்றி இராகவன்

கிரி said...

//இன்னைக்கு கம்ப்யூட்டர் முன்னாடி உக்கார்ந்து இருக்கும் பல பேருகிட்ட வாக்காளர் அடையாள அட்டை இருக்காது. //


ஹி ஹி ஹி

அட வாக்காளர் அடையாள அட்டை வேண்டாமப்பா! இருக்கிற ஏதாவது ஒரு அடையாள அட்டையை காட்டி ஒட்டு போடுங்கய்யானா..யு நோ ஐ அம் வெரி பிசி னு சொல்றாங்கோ! ஆனா அவன் சரி இல்ல இவன் சரி இல்ல னு வசனம் பேசுறாங்க!

என்ன கொடுமை சரவணகுமரன் இது!

ambi said...

ஆமாங்க, அன்னிக்கு வீட்டுக்கு நான் போக பட்ட பாடு. கடவுளே!

இதே குமாரசாமி ஏன் தனது பேரணிய ஒரு கிராமத்துல வைக்க வேண்டியது தானே? :D

ஓட்டு போட ஆர்வமா ஒரு தரம் இல்ல, இரண்டு தரம் இல்ல, மூனு தரம் என் பெயரை வாக்காளர் பட்டியலுல சேக்கனும்னு நேரே போய் மனு பூர்த்தி சென்சேன்.

இன்னும் என் பெயரை சேத்துகிட்டே இருக்காங்க. :(


அட சே!ன்னு இங்க கர்னாடகாவுலயாவது ஓட்டு போடுவோம்னு மனு குடுத்து இருக்கேன்.

அது ஆச்சு மூனு வருஷம். :(

முன் கை நீண்டா தான் முழங்கை நீளுமாம்! கிராமத்து பழமொழி கேள்விபட்ருக்கீங்களா சரவணன்?.

//அட வாக்காளர் அடையாள அட்டை வேண்டாமப்பா! இருக்கிற ஏதாவது ஒரு அடையாள அட்டையை காட்டி ஒட்டு போடுங்கய்யானா//

எந்த அட்டையை காடி ஒட்டு போடனும்னாலும் வா-பட்டியலுல உங்க பெயர்(அதாவது என் பெயர்) இருக்கனும்னு சொல்றாங்களே, நெசமா கிரி? :))

சரவணகுமரன் said...

வாங்க கிரி... நல்லா கேட்டீங்க...

சரவணகுமரன் said...

ambi, ரொம்ப பாவங்க நீங்க..

இப்ப jaago re மூலம் ட்ரை பண்ணி பார்க்கலாமே?

ச.பிரேம்குமார் said...

ஐ.டி காரர்கள் என்ன 17 வயசுலயா வேலைக்கு போறாங்க?? நானும் பல முறை முயற்சி செய்து தோற்றிருக்கிறேன்.

ஜாகோரே வாவது கைகொடுக்குதான்னு பார்ப்போம். நன்றி சரவணகுமரன்

சரவணகுமரன் said...

இதுல முயற்சி பண்ணி என்ன ஆகுதுன்னு சொல்லுங்க...