பெங்களூர் பேலஸ் மைதானத்தில் கடந்த வெள்ளி (14-11-08) முதல் புத்தக கண்காட்சி நடந்து வருகிறது. காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இந்த கண்காட்சி அடுத்த ஞாயிறு (23-11-08) வரை இருக்கும்.
தமிழ், கன்னடம், ஆங்கிலம் என்று அனைத்து மொழி புத்தகங்களும் கிடைக்கிறது. தமிழ் புத்தக பதிப்பகங்களான விகடன், வானதி, திருமகள், காலச்சுவடு போன்றவை அரங்குகள் அமைத்துள்ளன. இதை தவிர இன்னும் சில கடைகளிலும் தமிழ் புத்தகங்கள் கிடைக்கிறது.
விலை உயர்ந்த சில ஆங்கில புத்தகங்கள் ஐம்பது, நூறு ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆன்மிக போதனையாளர்களின் புத்தக அரங்குகளிலும் தமிழ் புத்தககங்கள் கிடைக்கிறது.
இந்த வாரம் தவறவிட்டவர்கள், அடுத்த வாரத்தில் ஒரு விசிட் அடித்து கொள்ளுங்கள்.
6 comments:
அப்பாடா.. நல்லதொரு தகவல் சொல்லியிருக்கீங்க.. :) தமிழ்ப்புத்தகங்கள் கிடைக்குதான்னு தெரியாமதான் காத்துகிட்டிருந்தேன்.. அப்போ இந்த வாரம் கௌம்பிடவேண்டியதுததான்..
தகவலுக்கு நன்றி!
Bee'morgan, கண்டிப்பா போங்க. கல்கத்தாவுக்கு அப்புறம் இதுதான் பெரிய புத்தக கண்காட்சின்னு சொல்றாங்க. உண்மையான்னு தெரியல!
வாங்க sundar
போயிட்டு வந்தேன்.. :-) ரொம்ப நல்லா இருந்துச்சு.. தகவலுக்கு நன்றி..
நானும் இந்த வாரம் திரும்ப போயிருந்தேன்... நீங்கள் போனதை பற்றி கூறியது மகிழ்ச்சியை கொடுத்தது... நன்றி...
Post a Comment