Sunday, November 2, 2008

ரஜினிதான் டாப்

லயோலா கல்லூரி கருத்து கணிப்பு வந்திருந்த போது, விஜய் ரஜினிக்கு முன்பு இருக்கும் ரிசல்ட்டை கண்டு ஆச்சர்யப்பட்டு, ஒரு ஓட்டெடுப்பு வைத்திருந்தேன். அது முடிந்து ரொம்ப நாள் ஆச்சு. சரி. அந்த ஓட்டெடுப்பை பக்கத்தில் இருந்து நீக்கும் முன்பு, ரிசல்ட் சொல்லிடலாம்னு இந்த பதிவு.

இது தான் ரிசல்ட்.



ஒட்டு போட்டது 167 பேர்தான். இருந்தாலும், விஜய்தான் கடைசி. ரஜினி, கமல் முன்னணியில் இருப்பது விசேஷமில்லை. இதில், அஜித் மூன்றாவது இருப்பது ஹைலைட்.


இதனால், நான் சொல்லவருவது என்னவென்றால்,

தமிழ்மக்களுக்கு ரொம்ப பிடித்த நடிகர், ரஜினி.

இத வச்சி, அத எப்படி சொல்ல முடியும்னு கேப்பாங்க. அப்படி சொல்ல முடியாதென்றால்,

அட்லிஸ்ட், இணைய தளங்களில் உலாவுபவர்களுக்கு ரொம்ப பிடித்த நடிகர், ரஜினி.

அதுவும், இல்லையென்றால்,

குறைந்தபட்சம், தமிழ் பதிவு படிப்பவர்களுக்கு ரொம்ப பிடித்த நடிகர், ரஜினி.

சரி,போகட்டும்.

என் வலைப்பதிவிற்கு வந்தவர்களில், அதிகமானோர்க்கு ரொம்ப பிடித்த நடிகர், ரஜினி.

12 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இல்லாட்டாலும், ரஜினிதாங்க டாப்!

சரவணகுமரன் said...

வருகைக்கு நன்றி, ஜ்யோவ்ராம் சுந்தர்

கிரி said...

//ஒட்டு போட்டது 167 பேர்தான். இருந்தாலும், விஜய்தான் கடைசி. ரஜினி, கமல் முன்னணியில் இருப்பது விசேஷமில்லை. இதில், அஜித் மூன்றாவது இருப்பது ஹைலைட்.//

சரவணகுமரன் இதுல எதோ சதி என்று நினைக்கிறேன் ..தலைவர் எப்படி தமிழ்மணத்துல முதல்ல வந்தாரு.. :-)))

//தமிழ்மக்களுக்கு ரொம்ப பிடித்த நடிகர், ரஜினி.//

என்ன தைரியம் இருந்தா இதை பதிவுலகத்துல சொல்வீங்க..:-)

//தமிழ் பதிவு படிப்பவர்களுக்கு ரொம்ப பிடித்த நடிகர், ரஜினி//

பார்ரா இவரு அடங்க மாட்டாரு போல! அதெப்படி..ரஜினி தான் கன்னட வெறியராச்சே! தமிழ் மக்களை ஏமாற்றி கொண்டு இருப்பவர் ஆச்சே! அப்புறம் முக்கியமா என்ன ஒரு தெனாவெட்டு இருந்தா! தமிழ் பதிவு படிக்கிறவங்களுக்கு பிடித்த நடிகர்னு சொல்வீங்க....போங்கய்யா நீங்களும் உங்க ஓட்டெடுப்பும்!

அப்படின்னு நான் கேட்கலைங்க :-) மற்றவங்க கேட்பாங்கன்னு சொல்ல வந்தேன் ஹி ஹி ஹி

//என் வலைப்பதிவிற்கு வந்தவர்களில், அதிகமானோர்க்கு ரொம்ப பிடித்த நடிகர், ரஜினி//

இது வேணா கொஞ்சம் நம்புற மாதிரி இருக்கு..

போச்சு போங்க.. உங்களுக்கு இனி எத்தனை எதிர் பதிவு வர போகுதோ..பாபாஜி சரவணகுமரன் அவர்களை காப்பாற்று :-)))))))))

அனைத்து தமிழ்மண பதிவர்களுக்கும் சரவணகுமரன் எதோ தெரியாம உண்மைய போட்டுட்டாரு ..அதனால எல்லோரும் கொந்தளிச்சு அவரை தாளிச்சு விடாதீங்க..ஹி ஹி ஹி

சரவணகுமரன் said...

//சரவணகுமரன் இதுல எதோ சதி என்று நினைக்கிறேன் ..தலைவர் எப்படி தமிழ்மணத்துல முதல்ல வந்தாரு.. :-)))//

நீங்க தான் அந்த 64 ஓட்டைப் போட்டதா சொல்றாங்களே, அது உண்மையா?

சரவணகுமரன் said...

பின்னுட்டத்துல பட்டைய கிளப்பி இருக்கீங்க, கிரி.... :-)

சரவணகுமரன் said...

கிரி, நீங்க எதிர்பார்த்த மாதிரி பின்னுட்டம் தமிழ்மணத்துல இருந்து இல்ல, தமிழிஷ்'ல இருந்து வந்துருக்கு.

http://www.tamilish.com/story/11253

மே. இசக்கிமுத்து said...

அய்யோ தலை தனே முதல்ல வரனும்!! ஏதோ வெளிநாட்டு சதியோன்னு நினைக்கிறேன்!!!

சரவணகுமரன் said...

வாங்க, இசக்கிமுத்து

Anonymous said...

இதுவரைக்கும் உங்களை யாரும் திட்டாத்து ஆச்சர்யம் தான்...

சரவணகுமரன் said...

யாரும் கவனிக்கலையோ? :-)

கிரி said...

//சரவணகுமரன் சொன்னது…
கிரி, நீங்க எதிர்பார்த்த மாதிரி பின்னுட்டம் தமிழ்மணத்துல இருந்து இல்ல, தமிழிஷ்'ல இருந்து வந்துருக்கு.

http://www.tamilish.com/story/11253//

ஹா ஹா ஹா அதானே பார்த்தேன்..அதுக்கு உங்க பதிலும் சூப்பர் :-)))

//சரவணகுமரன் சொன்னது…
யாரும் கவனிக்கலையோ? :-)//

ஒரு வேளை அதுக்கு நந்தி மாதிரி என் கமெண்ட் இருக்குன்னு நினைக்கிறேன்....ஒரு வேளை தாமதமா வருமோ! எதுக்கும் தயாரா இருங்க :-)))

கைபுள்ளை கிளம்ப போறாங்க இனி எத்தனை தலை உருள போகுதோ :-)

சரவணகுமரன் said...

//கைபுள்ளை கிளம்ப போறாங்க இனி எத்தனை தலை உருள போகுதோ //

:-))