Sunday, November 2, 2008

கலைஞர் குடும்ப வாரிசின் ரீமிக்ஸ் ரணகளம்

மெலடி பாடல்கள் கேட்பது நன்றாக இருந்தாலும், அவ்வப்போது குத்து பாடல்கள் கேட்பது ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும் என்பது உண்மை. இப்ப, நான் அடிக்கடி கேட்டு கொண்டு இருக்கும் ரெண்டு குத்து பாடலும், மலேசியா வாசுதேவன் முன்னாடி பாடிய இரு பாடல்களின் ரீமிக்ஸ். இப்ப, இந்த ரெண்டு பாடல்களை பாடியவர்களும், ரெகுலர் பாடகர்கள் இல்லை.

ஒண்ணு, பாக்யராஜின் முதல் இயக்கமான “சுவர் இல்லா சித்திரங்கள்” படத்தில் வரும் “காதல் வைபோகமே” பாடல். கங்கை அமரன் இசையில் மலேசியா வாசுதேவன் பாடிய இப்பாடலை, “பெருமாள்” படத்தில் இப்ப ரீமிக்ஸ் பண்ணியிருப்பது ஸ்ரீகாந்த் தேவா. குத்து ஸ்பெஷலிஷ்ட். பாடியிருப்பது கலைஞரின் பேரன், அறிவுநிதி. நிஜமாகவே, நன்றாக பாடியுள்ளார். பழைய பாடல், ஒரு மெலடி டூயட். இப்ப, டியுனை அப்படியே வைத்துக்கொண்டு, பின்னணி இசையில் மட்டும் குத்து குத்து என்று குத்தி இருக்கிறார், ஜுனியர் தேவா. பொருத்தமாகத்தான் வந்திருக்கிறது. பெண் குரலான ஜானகியின் குரலை அப்படியே வைத்திருப்பார்கள் போலிருக்கிறது. நன்றாக இருக்கிறது. ஆனால், இதை திரையில் பாட போவது சுந்தர்.சி. ஒன்றும் எதிர்பார்க்க முடியாது. பரவாயில்லை. நமிதா இருக்கிறார்.

இரண்டாவது பாடல், "என்னை தெரியுமா" என்ற புதுப் படத்தில் வரும் "தண்ணி கருத்திருச்சி" ரீமிக்ஸ். ஒரிஜினல் பாடல் இடம்பெற்ற படம், கமலின் "இளமை ஊஞ்சலாடுகிறது". மலேசியா வாசுதேவன் பாடிய அந்த பாடலுக்கு இசையைமைத்தவர் இசைஞானி. இப்ப, ரீமிக்ஸ் பண்ணியிருப்பவர், அச்சு என்கிற புது இசையமைப்பாளர். பாடியவர்கள், சிம்புவும், வினிதா அஜித்தும்."டான் டட்டான் டட்டாவும்" என்று டி.ஆர். பாணி வாய் இசையும், வேகமான பின்னணி டிரம்ஸ் இசையும் சேர்ந்து பட்டையை கிளப்பி இருக்கிறது.

சில நல்ல பழைய பாடல்களை அவ்வளவாக கேட்டு இருக்க மாட்டோம். ஒன்று, அதன் இசை வடிவம், நம்மிடன் இல்லாமல் இருக்கும். அல்லது, இருக்கும் பாடலும், புது பாடல்களில் உள்ள தரம் இல்லாமல் இருக்கும். புது பாடல்களை, துல்லியமான இசையில் கேட்டு விட்டு, பழைய பாடல்களை கேட்கும் போது, கேட்பதில் ஆர்வம் இல்லாமல் போகும். அது போன்ற நேரங்களில், இதுபோன்ற ரீமிக்ஸ் பாடல்களை கேட்க நன்றாக இருக்கும். ஆனால் அதேசமயத்தில், "ராஜா ராஜாதி ராஜா" போன்ற மோசமான ரீமிக்ஸ் பாடல்களை கேட்கும் போது, எரிச்சலாகத்தான் இருக்கும். சமையலில் ரெடி மிக்ஸ் பயன்படுத்துவது போல், இசையமைப்பாளர்கள் ரீமிக்ஸ் பண்ணி கொண்டிருந்தால் மோசமாகத்தான் வரும்.

மேற்கூறிய இரு பாடல்களிலும் டியுனை மாற்றாமல், டெம்போவை கூட்டி ரசிக்கும் வண்ணம் பண்ணியிருக்கிறார்கள். ஆனாலும், அளவுக்கு அதிகமாக கேட்டால் ரீமிக்ஸும், போர் அடிக்க வைத்து விடும்.

6 comments:

rapp said...

எனக்கு தண்ணி கருத்திடுச்சி அவ்ளோ பிடிக்கலை, ஆனா காதல் வைபோகமே சூப்பரா இருக்கு

FunScribbler said...

சிம்பு பாடிய அந்த பாடல் நல்லா இருக்கு கேட்க... நடன அமைப்பும் நல்லா இருந்தா..கண்டிப்பா படத்துக்கு plus தான்!:)

சரவணகுமரன் said...

வாங்க rapp

சரவணகுமரன் said...

Thamizhmaangani, அந்த படத்தில் உள்ள இன்னும் சில பாடல்கள் கூட நன்றாக தான் இருக்கிறது.

ச.பிரேம்குமார் said...

சரவணகுமரன்,

நானும் அந்த இரண்டு பாடல்களையும் கேட்டேன். இரண்டுமே நல்லா இருக்கு கேட்க

'தண்ணி கருத்துருச்சி' செம item songஆ இருக்கும்னு நினைக்கிறேன்

சரவணகுமரன் said...

நன்றி, பிரேம்குமார்.

பாட்டு மட்டும் இல்ல, படமே அப்படிதான் இருக்கும் போல! :-)