சில நாட்களுக்கு முன்பு, மதுரையின் நடுவே உள்ள திருமலை நாயக்கர் மஹாலுக்கு சென்றிருந்த போது எடுத்த புகைப்படங்கள். மஹாலுக்கும் சுற்றியுள்ள சுழலுக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லை.
மதுரையை (நேரடியாக) ஆண்ட திருமலை நாயக்கரால், கிட்டத்தட்ட நானூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது, இந்த பிரமாண்ட தூண் மாளிகை.
இப்போது இருக்கும் இந்த பிரமாண்டமே, ஒரு மிச்சம்தான். முன்பு ராஜா வாழும்போது இருந்தது, இப்போது இருப்பதை விட நான்கு மடங்கு பெரியது.
திராவிட, ஐரோப்பிய மற்றும் முகாலய பாணியில் அமைந்த கட்டிடக்கலை. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, மதுரையில் குளோபலைசேஷன்.
மணிரத்னத்துக்கு பிடித்த ஷுட்டிங் ஸ்பாட். பம்பாய், இருவர், குரு என்று பல படங்களில் நடித்துள்ளது. நேருக்கு நேர், பீமா போன்ற படங்களிலும் ராஜாவின் உண்மையான அரண்மனை, கனவு பாடல்களின் செட் பிராப்பர்டி ஆனது.
இது போல வேறெங்கும் 248 பெரிய தூண்களுடன் கூடிய அரண்மனை, இந்தியாவில் கிடையாது.
ஏகப்பட்ட வளைவு அலங்காரங்கள் இருந்தாலும், அந்த காலத்தில் மரமோ, இரும்போ உபயோகப்படுத்தாமல், செங்கலுடன் சுண்ணாம்பையும் கரும்பு சாறையும் மட்டுமே பயன்படுத்தி கட்டியுள்ளார்கள்.
கொஞ்சம் பெருசாத்தான் இருக்கும் போல!!!
11 comments:
படங்கள் அத்தனையும் அருமை.
ஹோம்சிக்கா இருக்கு எனக்கு.
வருகைக்கு நன்றி, துளசி கோபால்.
//ஹோம்சிக்கா இருக்கு எனக்கு.//
:-(
கடைசி படம் ரொம்ப சூப்பர்
படங்கள் அத்தனையும் சூப்பர்.
அசத்தலா வந்திருக்கு படங்கள்
படங்கள் நல்லா இருக்குங்க சரவணகுமரன்
நன்றி raj
நன்றி வெங்கட்ராமன்
நன்றி முரளிகண்ணன்
புதுசா வண்ணம் பூசினவங்கள். அது தான் அழகா இருக்குது.
நன்றி ஆட்காட்டி
Post a Comment