நாம் எந்த தலைமுறையை சார்ந்தவர்கள் என்பதை, நமக்கு எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல், விஜய்-அஜித், சிம்பு-தனுஷ் இவர்களில் எந்த நடிகரை பிடிக்கும்-பிடிக்காது என்பதில் இருந்து தெரிந்து கொள்ளலாம். நான் ரஜினி-கமல் தலைமுறை.
ரஜினியால் எண்பது-தொன்னூறுகளில் பெரிதும் கவரப்பட்டவர்கள், சிறுவர்கள். இப்ப கோமாளித்தனமா தெரிஞ்சாலும், அப்ப அவர் பண்ற காமெடி சேட்டைகள், மேஜிக் ஸ்டைல் சுவாரஸ்யமானவை. அதேப்போல், அப்ப இளைஞ-இளைஞிகளின் ஹார்ட் த்ரோப்பாக இருந்தவர், கமல். இவரின் அழகு, இளம் பெண்களின் கனவு நாயகனாக்கியது.
அதுக்கு அப்புறம், ரஜினி ரசிகர்கள் என்று சொல்லுபவர்களிடம், ரஜினியை ஏன் பிடிக்கும் என்று கேட்டால், ரொம்ப நல்ல மனுஷன் என்று சொல்லுவார்கள். கமல் ரசிகர்களிடம் கேட்டால், திரைத்துறையில் அவருக்குள்ள திறமையை காரணமாக சொல்லுவார்கள். அறிவு ஜீவியாக காட்டி கொள்ளவும், கமல் ரசிகன் என்று சொல்லி கொண்டவர்கள் உண்டு. எனக்கு தெரிந்த ஒரு கமல் ரசிகர், ஹே ராம் படம் பார்த்துட்டு "படம் சூப்பர். ஆனா அந்த தாத்தாவை தான் ஏன் அடிக்கடி காட்டுறாங்கன்னு தெரியல"ன்னு சொன்னார்.
ரஜினி, கமல் ரசிகரா இருந்து இப்ப சினிமா ரசிகர்களா ஆனவங்க, இருவரின் படங்களையும் இப்ப விரும்பிதான் பாக்குறாங்க. அப்ப, ரஜினியை பிடிச்சவங்களுக்கு இப்ப கமலின் புதுமைகளும், சாதனைகளும் மகிழ்ச்சியை கொடுப்பதுப்போல், அன்றைய கமல் ரசிகர்கள் இப்ப குடும்பத்தோட போயி குதூகலத்தொட ரஜினி படம் பார்க்கத்தான் செய்யுறாங்க. ஆனாலும், ரஜினியா கமலான்னு சண்டை போடுவது சிறுபுள்ளத்தனமா ஒரு ஜாலியை கொடுக்க தான் செய்யுது.:-)
இந்த பதிவ எழுத தூண்டுனது, லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பு. இந்த மாணவர்கள், யார்க்கிட்ட எந்த அடிப்படையில இந்த கருத்து கணிப்ப நடத்துனாங்கன்னு தெரியல. இவர்களின் கணிப்புப்படி, நடிகர்களின் புகழ்வரிசை இது.
1) எம்.ஜி.ஆர்.
2) சிவாஜி.
3) விஜய்
4) ரஜினி
5) விஜயகாந்த்
இந்த முடிவ பார்த்தா எனக்கென்னமோ, ரஜினி-கமல் தலைமுறை மக்கள், ஓட்டெடுப்பில் சரியான விகிதத்தில் இல்லை என்று தான் தோன்றுகிறது.
இப்ப உள்ள உள்ள, சிறுவர்-இளைஞர்களிடம், விஜய்க்கு பெரும் வரவேற்ப்பு இருந்தாலும், ஆரம்ப காலத்தில் ரஜினி ரசிகர்களை குறி வைத்தே, "பார்த்தா சின்ன ரஜினிடா" என்பது போல, இவர் படங்களில் சில காட்சிகள் இருக்கும். அஜித்தின் வான்மதி படத்திலும் இதுபோன்ற அரசியல் இருந்தது.
அஜித்துக்கு இவ்ளோ ரசிகர்கள் இருப்பதற்கான காரணங்களில் ஒன்று, தமிழ்நாட்டில் விஜயை பிடிக்காதவர்கள் அவ்ளோ பேரு இருக்குறாங்க. அப்புறம், நடிகர்களுக்கும் இந்த போட்டி ரொம்ப தேவையானதா இருக்கு. அப்பத்தான், நிறையா ரசிகர்கள் கிடைப்பாங்க. இல்லாட்டி, சூர்யா, விக்ரம் மாதிரி நல்லா நடிச்சும் மாஸ் இல்லாம போகுதே?
எனக்கு தெரிந்த ஒரு ரஜினி வழி விஜய் ரசிகர், சச்சின் படத்திற்கு பிறகு விஜயை வெறுக்க ஆரம்பித்தார். காரணம், விஜய் சச்சினை சந்திரமுகியுடன் வெளியிட்டு தன் பலத்தை காண ஆசைப்பட்டார் என்பதாம். ஆனா, ரஜினி ஒரு மேடையில், விஜயை தன் ரசிகன் என்று சொல்லி அவர் பாணியில் கீழே இறக்கி வைத்தார். இப்ப, நடக்குறத பார்த்தா, விஜய் தன் டீலிங்கை டரைக்ட்டா எம்.ஜி.ஆரோடு காட்ட ஆரம்பித்து விட்டார் என்று தோன்றுகிறது.
0.2 புள்ளி கணக்கில் ரஜினி பின்னடைந்துள்ள, இந்த கருத்து கணிப்பு, ரஜினி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும் வருத்தத்தையும் கொடுத்து இருந்தாலும், கமல் ஆட்டத்துக்கே இல்லாதது சிறிது மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.
அப்புறம், நானும் சைடுல ஒட்டுபெட்டி வச்சிருக்கேன். பார்த்துருவோம், ரெண்டுல ஒண்ணு?
11 comments:
good one
நன்றி முரளிகண்ணன்
// அஜித்துக்கு இவ்ளோ ரசிகர்கள் இருப்பதற்கான காரணங்களில் ஒன்று, தமிழ்நாட்டில் விஜயை பிடிக்காதவர்கள் அவ்ளோ பேரு இருக்குறாங்க. அப்புறம், நடிகர்களுக்கும் இந்த போட்டி ரொம்ப தேவையானதா இருக்கு. அப்பத்தான், நிறையா ரசிகர்கள் கிடைப்பாங்க. இல்லாட்டி, சூர்யா, விக்ரம் மாதிரி நல்லா நடிச்சும் மாஸ் இல்லாம போகுதே? //
ஆழமாக ஆராயாமல் சொல்லுகிறீர்கள் ? நடிகர்களுக்கு தலைமுறை முக்கியம். சரியான நேரம் தேவை. பிரசாந்த் போன்றவர்கள் முன்பே வந்துவிட்டார்கள். சூர்யா இப்போதுதான் வந்தார்.
அஜீத், விஜய் சரியான நேரத்தில் இளைஞர் - இளைஞிகளை காதல் படங்கள் மூலம் கவர்ந்தார்கள். அத்னால்தான், அஜீத்திற்கு மாஸ்.
விஜய் புடிக்காதவன் நாட்டுல் ஆயிரம் பேர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம், விக்ரம் சூர்யா வை ஆதரித்து இருக்க வேண்டும். இருப்பினும் அஜீத்திடம் கட்டுப்பட்டு இருப்பது அவருடைய தனித்தன்மைதான். வாலிக்கு அப்புறம்தான் இதேல்லாம் நடந்தது. வரலாறு தெரியாமல் பேசுகிறீர்களோ என்று தோன்றுகிறது.
காரணங்களில் ஒன்று என்றுதானே கூறியிருக்கிறேன். விஜயை பிடிக்காதவர்கள் எல்லாம் அஜித் ரசிகர்கள் என்று சொல்லவில்லையே.
அப்புறம், நீங்க அஜித் ரசிகரா? என் கருத்து உங்களை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும். எனக்கும் அஜித் ரொம்ப பிடிக்கும்.
Saravana,
Add one more option - 'None of the Above'
-Arthi
loyala survey is waste. vijay doesnt have such mass like rajini.
//அஜித்துக்கு இவ்ளோ ரசிகர்கள் இருப்பதற்கான காரணங்களில் ஒன்று, தமிழ்நாட்டில் விஜயை பிடிக்காதவர்கள் அவ்ளோ பேரு இருக்குறாங்க//
:):):)
அந்த சர்வே என்னை பொருத்தவரைக்கும் ஒரு ஜாலி காமடி சர்வே:):):)
ஆர்த்தி, அப்புறம் வோட்டு அதுக்குதான் அதிகம் விழும். ஒரு முடிவு தெரியணும்'ங்கறதால அது வேண்டாம். :-)
//loyala survey is waste. vijay doesnt have such mass like rajini.//
எம்.ஜி.ஆருக்கும் அதிக ஒட்டு. விஜய்க்கும் அதிக ஒட்டுங்கறது தான் நம்ப முடியல...
வாங்க rapp
//ஒரு ஜாலி காமடி சர்வே:):):)//
அது அப்படிதான் போல...
Post a Comment