இந்த வார குமுதத்தில், அக்டோபர் ஒன்பதாம் தேதி ரஜினி அரசியலுக்கு வருவதை பற்றி முடிவை அறிவிக்க போகிறார் என்று ஜோசியம் சொல்லியிருக்கிறார்கள். ரஜினி எந்த விஷயத்தில் முடிவெடுக்கும் முன்பும், பேப்பரில் எழுதி வைத்து, நெருங்கிய நண்பர்களிடன் முடிவை சொல்லுவாராம். அவர்களிடன் இருந்து வரும் கருத்துகளுக்கு ஏற்ப, முடிவை எடுப்பாராம். இன்னும், எத்தனை காலத்துக்கு இந்த ஸ்டிரியோ டைப் நியூஸ் போடுவாங்களோ?
அது போல நானும்... (அப்பாடி, வச்ச தலைப்புக்கு ஒண்ணு சொல்லியாச்சி...)
ரொம்ப நாளா யோசிச்சிட்டு இருந்தது. பைக் வாங்க கூட நான் இவ்ளோ யோசிச்சது இல்ல. ரெண்டு நாள் முன்னாடி சட்டுன்னு போய் சைக்கிள் வாங்கிட்டேன். இப்பல்லாம் தீவிரவாதிகள் தான், அதிகம் சைக்கிள் வாங்குவதால் அந்த தயக்கம் வேறு.
சிவாஜி நகர்'ல ஒரு கடையில வாங்குனோம். வீடு, ரொம்ப தூரம்ங்கறதால பைக்ல நண்பன் கூட பின்னாடி வச்சி கோரமங்களா போலாம்னு பிளான். டிராபிக் ரொம்ப இருந்ததால நண்பன், டிராபிக் முடிஞ்சதுக்கு அப்புறம் பைக்ல ஏறிக்கிறேன்னு சொல்லிட்டு, சைக்கிள் ஓட்ட ஆரம்பிச்சான். ஓட்டுனான், ஓட்டுனான், கண் பார்வையில இருந்தே எஸ் ஆகிட்டான்.
நான் வரிசையா சிக்னல்ல நின்னு, நின்னு, ஒன் வே'ல போயி, யூ டர்ன் அடிச்சி சேருரதுக்கு, பத்து நிமிஷம் முன்னாடியே கோரமங்களாவில வெயிட் பண்ணிட்டு இருந்தான். ஆமை ஜெயிக்கும் பந்தயக்களம், பெங்களூர்.
புது சைக்கிள்'க்குன்னு ஒரு வாசம் இருக்கு. ரப்பர் டயர், செயின் கிரிஸ்ள்ள இருந்து கலந்து வரும். அது, அப்படியே சின்ன வயசு சைக்கிள் ஞாபகங்களை கிளறியது. ஒரு ரூபாய்க்கு வாடகை சைக்கிள் எடுத்து சைக்கிள் ஓட்ட கத்துகிட்டது, ரோட்டுல ஒருத்தர் மேல இடிச்சி அடி வாங்குனது, மார்கழி மாசம் ஆனா காலையில கோவிலுக்கு போயி பொங்கல் சாப்பிட்டுட்டு ஊருக்கு வெளியே ரொம்ப தூரம் சைக்கிள்'ல போறதுன்னு எக்கச்சக்க ஞாபக கிளறல்கள்.
சைக்கிளில் போகும்போது தான், பெங்களூர் சாலைகளின் ஏற்றத்தையும் இறக்கத்தையும் உணர முடிகிறது. சைக்கிள் ஓட்டுவது ஹார்ட் அட்டாக், ஸுகர், கேன்சர், பிளட் பிரஷர், தொப்பை, அதிக எடை போன்றவற்றை தவிர்க்கும் என்றாலும், கவனமாக இல்லாவிட்டால், "இத்தினுண்டு இருக்குற ரோட்டுல நீ வேறயா?"ன்னு தட்டிட்டு போக வாய்ப்புகள் உண்டு. இதனால், அடிபடும் இடத்திற்கு ஏற்ப பாதிப்புக்கள் இருக்கும்.
நான் சைக்கிள் ஓட்டுன காலத்தில ஆயிரம் ரூபா அதிகப்பட்ச விலையா இருந்தது. இப்ப, கிட்டத்தட்ட மூவாயிரம். கியர் சைக்கிள் ஆரம்பக்கட்ட விலையே, அஞ்சாயிரம். சைக்கிள் வடிவமைப்பிலும் கொஞ்சம் மாற்றங்கள் இருக்கு. ஆன்லைன்'ல செலக்ட் பண்ணி வாங்கவும் வசதிகள் கூடிருக்கு.
நேத்து சைக்கிள் ஒட்டுனவன், இன்னைக்கு பைக் ஓட்டலாம். இன்னைக்கு பைக் ஓட்டுறவன், நாளைக்கே சைக்கிள் ஓட்டலாம். அதுக்காக, வாழ்க்கை ஒரு பைக்ன்னு சொல்ல முடியுமா? வாழ்க்கை ஒரு சைக்கிள்'ன்னு சொன்னாதான் பொருத்தமா இருக்கும். :-)
11 comments:
ஓ சூப்பர். சைக்கிள் வாங்கினதுக்கு வாழ்த்துக்கள்!!!
அப்படியே இந்த பதிவையும் பார்க்கவும்...
அவ்வ்வ்..
http://vavaasangam.blogspot.com/2008/09/blog-post_25.html
வாழ்த்துக்களுக்கு நன்றி ச்சின்னப்பையன்... :-)
உலக நடப்பை தமாஷா சொல்லிட்டீங்க... :-)
வாங்க முரளிகண்ணன்...
அப்ப பைக்'க்கு பதிலா சைக்கிளா use பண்ண போறீங்க?
இல்ல பாலாஜி. சைக்கிள் ஜஸ்ட் காலையில சைக்கிளிங் போகவும், பக்கத்தில எதாச்சும் கடைக்கு போறதுக்கும் மட்டும்...
சிங்கப்பூரின் ஒரே எதிர்க்கட்சித் தலைவரான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜே.பி.ஜெயரட்ணம் தனது 82வது வயதில் மாரடைப்பினால் காலமானார்
விரைவில் நானும் ஒரு cycle வாங்கி விடுவேன்,அருகில் உள்ள கடைகளுக்கு போவதற்கு இனிமேல் சைக்கிள் தான்.
விலைதான் எக்கச்சக்கமா இருக்கு.
ஆமாம் பாபு, விலை கொஞ்சம் ஓவர்தான்.
எனக்கென்னமோ இந்த கியர் வெச்ச சைக்கிள் சுத்தமா பிடிக்கரதில்லை. நான் சின்னப்பொண்ணா இருக்கறச்சே, எங்கக்கா, பிஎஸ்ஏ எஸ்எல்ஆர் வெச்சிருந்தாங்க, ஆனா எனக்கு என்னவோ ஹீரோ சைக்கிள்தான் பிடிச்சது. கொஞ்சம் பெரிய பொண்ணானப்போ, என் பிரெண்ட்ஸ் எல்லாரும் லேடி பேர்ட் மாத்தினப்போக் கூட நான் மாத்தலை.
சைக்கிள் பத்தி இன்னொரு நியாபகம், ஊட்டி ஏரியை சுத்தி (டூரின்போது) சைக்கிளில் ஐம்பது நிமிஷங்கள் தொடர்ச்சியா வலம்வந்தது....................அது ஒரு அழகிய நிலாக்காலம்:):):)
//எனக்கென்னமோ இந்த கியர் வெச்ச சைக்கிள் சுத்தமா பிடிக்கரதில்லை. //
ஆமாங்க, சைக்கிள சரிக்க கூடாது அது இதுன்னு ஏகப்பட்ட கண்டிசன்ஸ்.
//ஊட்டி ஏரியை சுத்தி (டூரின்போது) சைக்கிளில் ஐம்பது நிமிஷங்கள் தொடர்ச்சியா வலம்வந்தது....................அது ஒரு அழகிய நிலாக்காலம்:):):)
//
நான் அதுபோல கொடைக்கானல்'ல சுத்தினேன். சூப்பரா இருந்தது... :-)
வருகைக்கும், உங்க கொசுவர்த்தி சுற்றலுக்கும் ரொம்ப நன்றி, rapp :-))
Post a Comment