கவுண்டமணி சொல்றாப்ல, நாட்டுல ஒரு படம் நடிச்சவன், ஒரு ஹிட் கொடுக்காதவன் எல்லாம் தளபதியாம். இவனுங்க தொல்லை தாங்க முடியலப்பா...
முன்னாடி எல்லாம் நடிகர்களுக்கு கணிசமான படங்களில் நடித்த பிறகு, ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பட்டங்கள் 'கொடுப்பார்கள்'. இப்ப அவங்களே போட்டுகிறாங்க. அதுவும், ஒரு படம், ரெண்டு படம் முடிச்சதுக்கு அப்புறம்.
இப்ப, எதுக்கு இதையெல்லாம் சொல்றேன்னு பாக்குறீங்களா? இருக்குற தளபதிங்க பத்தாதுன்னு, இன்னொரு தளபதி வர்ராரு. காதல் தளபதி. ஒரு ரீமேக் பட விளம்பரத்தில் சித்தார்த்துக்கு தான் இந்த பட்டத்தை கொடுத்துருக்காங்க.
எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில, அவர்களுக்கு கொடுக்கப்பட்ட மக்கள் திலகம், நடிகர் திலகம் போன்ற பட்டங்கள் அவர்களுக்கு பொருத்தமானது. அது திலகங்கள் காலம் போல. நடிகையர் திலகம், இயக்குனர் திலகம்'ன்னு ஏகப்பட்ட திலகங்கள்.
அப்புறம், ரஜினிக்கு தாணு (தாணுவா? பாலாஜியா?) கொடுத்த "சூப்பர் ஸ்டார்" பட்டம் ரொம்ப பேமஸ். அத எங்க பார்த்து அவரு கொடுத்தாரோ, அது ஒரு பதவி மாதிரி ஆயிடுச்சி. கமலுக்கு, காதல் இளவரசன்'ன்னு ஒரு பட்டம் இருந்தது. அதாவது, ஜெமினி கணேசன் காதல் மன்னராம். அப்புறம், கமலே மன்னராகி, சூப்பர் ஆக்டராகி, இப்ப ரவிக்குமார் புண்ணியத்துல உலக நாயகன் ஆகிட்டாரு.
அதுக்கப்புறம், புரட்சி'ங்கற வார்த்தைக்கு வந்தது கிரகம். ஒருத்தர், கலைகளில் பல புரட்சிகளை பண்ணி, புரட்சி கலைஞர் ஆனார். இன்னொருத்தர், தமிழில் பல புரட்சிகளை பண்ணி, புரட்சி தமிழன் ஆனார். பிரபு, நடிகர் திலகத்தின் மகன் என்பதால், இளைய திலகம் ஆனாரு. கார்த்திக் கொஞ்சம் நாள், காதல் இளவரசனாக இருந்து அப்புறம் நவரச நாயகனா பிரோமொட் ஆனாரு. உண்மையிலேயே, அவரு நவ ரசங்களையும் காட்டுவாரு. ஒரே மாதிரி.
அதுக்கு அப்புறம் வந்தவுங்க எல்லோருக்கும் அந்த சூப்பர் ஸ்டார் பட்டம் மேல ஒரு கண்ணு. நாமளும், அப்படி ஒரு பட்டம் வச்சிகிட்ட அப்படி ஆகிடலாம்னு. சுப்ரீம் ஸ்டார், அல்டிமேட் ஸ்டார், லிட்டில் சூப்பர் ஸ்டார் (!), லக்கி ஸ்டார்'ன்னு ஏகப்பட்ட ஸ்டார்கள்.
உண்மையிலேயே, எஸ்.ஏ. சந்திரசேகர் ஸார பாராட்டணும்ங்க. அதிகம் ஆசைப்படாம (அதிலையும் ஒரு உள் நோக்கம் இருந்தாலும்) , இளைய தளபதி'ன்னு பேர வைச்சாரு. டிரென்ட் செட்டர். இப்ப எல்லாரும், ஸ்டார் ஆசைய விட்டுட்டு தளபதியாக ஆசை படுறாங்க. விஜய் சாதிச்சிடாருங்க.
இப்ப நம்ம நாட்டுல இருக்குற மூணு ராணுவ தளபதிகளுக்கு அப்புறம் இருக்குற மத்த தளபதிகள்.
விஜய் - இளைய தளபதி
பரத் - சின்ன தளபதி
விஷால் - புரட்சி தளபதி
ரித்திஷ் - வீர தளபதி
சித்தார்த் - காதல் தளபதி
இதுல தளபதிங்கர பேருக்கு ஏற்ப வாட்டசாட்டமா, கம்பீரமான குரலோட இருக்குறது ரித்தீஷ் தான்.
வேற ஏதாச்சும் காமெடியான பட்டம் இருந்திச்சின்னா சொல்லுங்க!!!
23 comments:
பதிவுலக தளபதி என்ற பட்டத்தை உங்களுக்கு வழங்குகிறோம்
முரளிகண்ணன், பாத்தீங்களா?
திட்டுறதுன்னா, நேரடியாகவே திட்டிரலாமே? :-)
இந்த சின்னபசங்களோட எங்க தானைத்தலைவனையும் சேர்த்த உங்க நுண்ணரசியல எதிர்த்து ஒரு நாள் அடையாள பதியாவிரதம் இருக்க போறேன்..
அய்யய்யோ கார்க்கி, என்னை மன்னிச்சி விட்டுடுங்க...
//முரளிகண்ணன் said...
பதிவுலக தளபதி என்ற பட்டத்தை உங்களுக்கு வழங்குகிறோம்//
க.பி.வ.மொ!
பரிசல்,
நீங்க கன்னா பின்னாவென்று வழிமொழிவது ஏதோ கெட்டவார்த்தை போல் உள்ளது :-)
எங்க தல என்னமோ ஒரு பட்டத்துக்குத் தான் சொந்தக்காரர் மாதிரி எழுதியிருக்கீங்க,இதை நான் கன்னாபின்னாவெனக் கண்டிக்கறேன். அகிலாண்ட நாயகன் அண்ணன் ஜே.கே.ரித்தீஷ் னு அவரோட இன்னொருப் பட்டத்தை மறைக்க நீங்கள் மேற்கொண்டிருக்கும் முயற்சிக்கு ஊக்கமளிப்பவர் சாம் ஆண்டர்சனோ என எங்கள் மன்றம் சந்தேகிக்கிறது.
ஆஹா...
நல்ல பதிவு சார். இதைப் பற்றி முன்பொருமுறை நான் பதிவு போட்டு வாங்கிக் கட்டிக் கொண்ட ஞாபகம் இருக்கிறது.
எவருக்கும் அம்மா அப்பா வச்ச பேரு பிடிக்கிறதில்லை. இப்படிப் பட்டப் பேர் வச்சிட்டுத் திரியறதில் தமிழ்நாட்டில் இருக்கும் 'பித்து' வேறு எங்கும் இந்த அளவுக்கு இல்லை.
ஜெயலலிதாவை அம்மா என்றோ கருணாநிதியை கலைஞர் என்றோ எழுதவில்லை என்றால் கூட நமக்கும் பட்டம் தந்து விடுகிறார்கள்.
"தளபதி"ங்க தொல்லைன்னா, என்ன? ரொம்ப "படை" எடுக்கறாங்களா? ஜாலிம் லோஷன் செலவு அதிகமாகுதோ?
//இதைப் பற்றி முன்பொருமுறை நான் பதிவு போட்டு வாங்கிக் கட்டிக் கொண்ட ஞாபகம் இருக்கிறது.//
லிங்க் முடிந்தால் கொடுங்க. அப்படி என்ன வாங்கி கட்டிக்கிட்டிங்கன்னு பார்ப்போம். :-)
//"தளபதி"ங்க தொல்லைன்னா, என்ன? ரொம்ப "படை" எடுக்கறாங்களா? //
அப்படியெல்லாம் கேக்கப்படாது. :-)
//பரிசல்காரன் said...
//முரளிகண்ணன் said...
பதிவுலக தளபதி என்ற பட்டத்தை உங்களுக்கு வழங்குகிறோம்//
க.பி.வ.மொ! //
க.பி.வ.மொ! :)
வாங்க அனானி...
நீங்களும் வழிமொழிந்ததற்கு நன்றி...
ஹா ஹா ஹா அடுத்து சேனாதிபதி
//சரவணகுமரன் said...
//இதைப் பற்றி முன்பொருமுறை நான் பதிவு போட்டு வாங்கிக் கட்டிக் கொண்ட ஞாபகம் இருக்கிறது.//
லிங்க் முடிந்தால் கொடுங்க. அப்படி என்ன வாங்கி கட்டிக்கிட்டிங்கன்னு பார்ப்போம். :-)//
எதுக்கு உங்களுக்கு ஏதாவது திட்டு வந்தா ஒப்பிட்டு பார்க்கவா ஹி ஹி ஹி உங்களுக்கு வராது கவலைபடாதீங்க நீங்க எல்லோரையும் போட்டதால சரி நம்மள குறிப்பிட்டு சொல்லலனு எல்லோரும் விட்டுடுவாங்க :-))))
வாங்க கிரி...
ஒப்பிட்டு பார்க்க எல்லாம் இல்ல. இதுக்கும்மா திட்டுறாங்கன்னு பார்க்கலாம்னுதான். :-)
அப்ப நம்ம சேரனையும்
”யதார்த்த நாயகன்” னு சொல்றத்துக்கு பதிலா. . .
”யதார்த்த தளபதி” ன்னு சொல்லலாமா. . .
ஒ சொல்லலாமே, வெங்கட்ராமன். அவரும், மத்த நடிகர்களின் பட்டங்களை திட்டிக்கொண்டே, இப்படி போட்டுக்குவாரு...
அடுத்து வேறென்ன "டாக்டர்" பட்டம் தான்,
இவன்களே "கலையுல டாக்டர்"
"ஆக்டிங் டாக்டர்"
"அதிரடி டாக்டர்"
"காமெடி டாக்டர்" என பேரை போட்டாலும் போடுவான்க....இப்பதான் அதையும் கொடுக்க ஆள் இருக்கே..இதெல்லாம் பார்க்கணும்ன்னு நம்ம தலையெழுத்து
வாங்க ஆதவன்...
//இவன்களே "கலையுல டாக்டர்"
"ஆக்டிங் டாக்டர்"
"அதிரடி டாக்டர்"
"காமெடி டாக்டர்" என பேரை போட்டாலும் போடுவான்க//
:-)
ha ha ha ha, konjam late a reply pannalum ok, nalla vai vittu sirichen...
vaazhga nakkal thalapathi.
நன்றி அரவிந்தன்
No comments :-)
Post a Comment