Friday, September 26, 2008

பாவம் பாகிஸ்தான் மக்கள்

ஐ.நா. கூட்டத்திற்காக நம்ம தல மன்மோகன் சிங், பாகிஸ்தான் ஜனாதிபதி அஸிப் அலி சர்தாரி உள்பட பல உலக தலைவர்கள் நியூயார்க்'இல் முகாமிட்டு இருக்கிறார்கள். இவர்களை ஜான் மெக்கைன் சந்திப்பதாக ஒரு பிளான்.

ஜான் மெக்கைன், அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் ஒபாமாவுக்கு எதிராக நிறுத்தப்பட்டிருப்பவர். இவரால் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட தேர்ந்தெடுக்கபட்டிருப்பவர், சாரா பாலின். பாலின், ஒரு முன்னாள் அழகி (தினத்தந்தி அர்த்தத்தில எடுத்துக்காதிங்க!). இப்ப, அலாஸ்கா மாகாணத்தின் கவர்னராக இருப்பவர்.

ஜான் மெக்கைன், அமெரிக்கா பொருளாதார சரிவை சரி பண்ணுவதில் கொஞ்சம் பிசியாக இருந்ததால், பாலினை சந்திப்புக்கு அனுப்பி இருக்கிறார். தொழில் கத்துக்கிட்ட மாதிரி இருக்குமேன்னு. வெளியுறவு கொள்கை தொழில்.

பாலின் முதல்ல மன்மோகன் சிங்கை சந்திச்சி இருக்காங்க. நம்மாளும் எரிசக்தி, பாதுகாப்புன்னு பல டாப்பிக்குகள பத்தி பேசி இருக்காரு. அம்மணியும், ரொம்ப ஆர்வமா கேட்டு இருக்காங்க.



அதுக்கு அப்புறம், பாலின் சர்தாரியை மீட் பண்ண போயிருக்காங்க. முதல்ல, அவுங்க நாட்டு தகவல் தொடர்பு துறை அமைச்சர் ரெஹ்மான் கூட போட்டோ எடுத்துருக்காங்க. அப்ப ரெஹ்மான் கேட்டது,

"எப்படி உங்களால இவ்ளோ பிசியா இருக்கும் போதும், இவ்ளோ அழகா இருக்க முடியுது?"

அதுக்கு, பாலின் நன்றின்னு சொல்லிட்டு புன்னகைச்சிட்டாங்கலாம்.

அடுத்தது, சர்தாரி முறை.

சர்தாரி : நான் நினைச்சவிட நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.
பாலின் : தேங்க்ஸ் (டாபிக் மாத்த நினைக்கிறாங்க)
(விடாம) சர்தாரி : இப்பதான் எனக்கு தெரியுது, அமெரிக்காவே உங்க பின்னாலே ஏன் அலையுதுன்னு.

அதுக்கு அப்புறம், போட்டோகிராபர் படம் எடுக்க கை குலுக்க சொன்னபோது, சர்தாரி சொன்னது,
"ரொம்ப கட்டாயாப்படுத்தீங்கன்னா, கட்டிப்பிடிக்கவும் தயார்"

பிறகு பாலின், பெனாசிர் இறந்ததுக்கு துக்கம் விசாரிச்சி சர்தாரியை ஆப் பண்ணி இருக்காங்க. சர்தாரியும், தேர்தல்ல நீங்க ஜெயிச்சா, மெக்கைனும் நீங்களும் பாகிஸ்தான் வாங்கன்னு சொல்லியிருக்காரு. (கிழிஞ்சிது!!!)

நல்ல ஆளுங்கள பிடிச்சி, ஆட்சி பொறுப்ப கொடுத்திருக்காங்க. இதுக்கு, முஷாரப்பே பரவாயில்லைன்னு, இப்ப அவுங்களுக்கு தோணும்.

இனிமேல், பாகிஸ்தான் ராணுவத்துகிட்ட மட்டும் இல்ல, பாகிஸ்தான் தலைவர்களின் இந்திய வருகையின் போதும், நாம் ஜாக்கிரதையா இருக்கணும்.

8 comments:

rapp said...

me the first?

rapp said...

//ஜான் மெக்கைன், அமெரிக்கா பொருளாதார சரிவை சரி பண்ணுவதில் கொஞ்சம் பிசியாக இருந்ததால், பாலினை சந்திப்புக்கு அனுப்பி இருக்கிறார். தொழில் கத்துக்கிட்ட மாதிரி இருக்குமேன்னு. வெளியுறவு கொள்கை தொழில்//

நீங்க இப்படி புரியறாப்போல டபுள் மீனிங்க்ல எழுதியிருக்கக் கூடாது, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......................

rapp said...

//(தினத்தந்தி அர்த்தத்தில எடுத்துக்காதிங்க!)//

:):):)

rapp said...

அந்தாளு மூளைக் கொழம்பிக் கெடக்காருன்னு டாக்டருங்க சொல்லி, நியூஸ்ல எல்லாம் பார்த்தேன், அவரைப் போய் அதிபர் ஆக்கினா வேறென்ன எதிர்பார்க்க முடியும்

சரவணகுமரன் said...

வாங்க rapp

சரவணகுமரன் said...

//அந்தாளு மூளைக் கொழம்பிக் கெடக்காருன்னு டாக்டருங்க சொல்லி, நியூஸ்ல எல்லாம் பார்த்தேன்//

ஓ! அது வேறயா?

Robin said...

//முஷாரப்பே பரவாயில்லைன்னு, இப்ப அவுங்களுக்கு தோணும்.// உண்மைதான்.

சரவணகுமரன் said...

வருகைக்கு நன்றி robin