சினிமா அறிமுகமான காலகட்டத்தில், பின்னணி பாடகர்கள் எனப்படும் கலைஞர்கள் உருவாவதற்கு முன்பு, நடிக்கும் நடிகர்களுக்கு பாடும் திறமை என்பது முக்கியம். பாடும் திறமை உள்ளவர்களே, நடிகர்கள் ஆகலாம் என்ற நிலை இருந்தது. இந்த காலத்தில் தான், படம் முழுக்க பாட்டு பாடி தங்கள் முழு திறமையை காட்டு காட்டு என்று காட்டி கொண்டு இருந்தார்கள். தியாகராஜ பாகவதர், சுந்தராம்பாள், சுப்புலக்ஷ்மி போன்றவர்கள் இதில் குறிப்பிடத்தக்கவர்கள்.
பின்னணி இசை, பின்னணி பாடகர்கள் என்று வந்த பின்பு, நடிகர்களுக்கு பாடுவது என்பது அவசியம் இல்லாமல் போனது. எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற உச்ச நட்சத்திரங்களுக்கு, அவர்களது குரலை விட பொருத்தமாக பாட டி.எம்.சௌந்தரராஜன் போன்ற பாடகர்கள் இருந்த போது, விருப்பம், திறமை, தேவை இருந்தாலொழிய நட்சத்திரங்கள் பாட காரணம் இல்லாமல் போனது. அப்போது நடிகைகளில் பத்மினியும், நடிகர்களில் சந்திரபாபுவும் சிறப்பாக பாடி கொண்டு இருந்தார்கள். ஒரு நடிகராகவும் இருந்து கொண்டு பாடல்களில், நகைச்சுவை, தத்துவம், மேற்கத்திய இசை வடிவம், துள்ளல் நடனம் சேர்த்து பாடல்களை மெருகேற்றினார்.
அது என்னமோ தெரியவில்லை, நகைச்சுவை நடிகர்களுக்கு நன்றாகவே பாட வருகிறது. கலைவாணரில் தொடங்கி, சந்திரபாபு, மனோரமா என்று தற்போது வடிவேலு வரை நன்கு பாடுகிறார்கள்.
பாகவதர் காலத்துக்கு பிறகு சொந்த குரலில் பாடும் கதாநாயகனாக வந்தவர், கமலஹாசன். இவர் "அரங்கேற்றம்" படத்தில் தொடங்கி தற்போது "தசாவதாரம்" வரை தமிழ் மட்டுமில்லாமல் இந்தியிலும் சேர்த்து சுமார் எழுபது பாடல்கள் வரை பாடி இருக்கிறார்.
ரஜினியை வைத்து பல எக்ஸ்பரிமேண்டுகளை செய்து வரும் பி.வாசு, அவரை மன்னன் படத்தில் பாடவும் வைத்தார். அந்த படம் வந்த போது, ரஜினி பாடி இருக்காருங்கதால ரொம்ப ஆர்வமா ஓடி போயி கேசட் வாங்கி பாட்டு கேட்டேன். அவரு எப்படி பாடி இருப்பாருன்னு கற்பனை பண்ணி வேகமா பாடி இருப்பாரு நெனைச்சேன். ஆனா, "அடிக்குது குளிரு" பாட்டை கேட்கும்போது, நான் அடைஞ்ச ஏமாற்றம் இருக்கே. முடியல. ரெண்டு டைம், டேப் ரிக்கார்டர் தான் சரியா பாட மாட்டேங்குதுன்னு தட்டி தட்டி பார்த்தேன். அதுக்கு அப்புறம், மன்னன் பாட்டே கேட்கல. கமல் ரசிகர்கள், ரஜினி ரசிகர்கள ஓட்டு ஓட்டுன்னு ஓட்டிட்டாங்க. இப்ப கூட, சிவாஜி படத்தில ரஜினி பாட போறார்ன்னு ஒரு புரளி வந்திச்சே. அத கேட்டு நான் ரொம்பவே பயந்திட்டேன். நல்லவேளை, அப்படி எதுவும் நடக்கல.
இந்த தலைமுறையில ஓரளவுக்கு நல்லா பாடிட்டு இருக்குறவுங்க, விஜயும், சிம்புவும். இருவருக்குமே, பாடும் திறமை தங்கள் பெற்றோருடன் இருந்த வந்ததுதான். கமல், அஜித்துக்கு பின்னணியாக உல்லாசம் படத்தில் பாடியது போல், விஜய் சூர்யாவுக்கு பின்னணியாகவும், சிம்பு அஜித்துக்கு பின்னணியாகவும் பாடியுள்ளார்கள்.
சில படங்களில் இயக்குனர்களும், இசையமைப்பாளர்களும் படத்திற்கு மவுசு கூட்டும்வண்ணம், நடிகர்களை பாட அழைக்கிறார்கள். சரத்குமார், அர்ஜுன், பிரசாந்த், விக்ரம், விவேக், ஷாலினி என்று இவர்களெல்லாம் பாடி இருப்பது இதற்காகத்தான் இருக்கும்.
ரசிக்கும்படி யார் பாடினாலும் வரவேற்க்கலாம். என்னதான் நட்சத்திரங்கள் பாடினாலும், தகுந்த பயிற்சியுடனும், திறமையுடன், அனுபவத்துடனும் பாடும் பாடகர்களின் பாடல்களுக்கு முன்னால் அவர்கள் ஒரு படி கீழேதான் . சில படங்களில், கமல், விஜய் போன்ற நட்சத்திரங்கள் பாடிய பாடல்களை, எஸ்.பி.பி, ஹரிஹரன் போன்ற பாடகர்களும் பாடி இருப்பார்கள். அதை ஒப்பிட்டு பார்த்தாலே, பாடகர்களின் சிறப்பு தெரியும்.
18 comments:
நல்ல பதிவு..
மனோஜ், மீனா கூட பாடுகிறார்கள். :-)
//விஜய் சூர்யாவுக்கு பின்னணியாகவும், சிம்பு அஜித்துக்கு பின்னணியாகவும் பாடியுள்ளார்கள்.
//
எந்தெந்தப் படம்னு சொல்லுங்களேன்.
எனக்கென்னமோ வாசுவுக்கு ரஜினியப் பார்த்தா எலி மாதிரி தெரியுது போலருக்கு, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........................................
அருமையான பதிவு.
விஜயுடன் ஒப்பிடும் போது சிம்பு மிக நன்றாகவே பாடுவார் என்பது என் கருத்து
// rapp said...
//விஜய் சூர்யாவுக்கு பின்னணியாகவும், சிம்பு அஜித்துக்கு பின்னணியாகவும் பாடியுள்ளார்கள்.
//
எந்தெந்தப் படம்னு சொல்லுங்களேன்.//
விஜய் சூர்யாவுக்கு பாடியது:
1- நான் தம் அடிக்கிற ஸ்டைல்ல பார்த்து (பெரியண்ணா)
2- ரோட்டுல ஒரு சின்ன பொண்ணு (பெரியண்ணா)
வருகைக்கும் தகவலுக்கும் நன்றி, .:: மை ஃபிரண்ட் ::.
வாங்க rapp
விஜய் சூர்யாவுக்கு பாடியது பெரியண்ணா. சிம்பு, அஜித்துக்கு பாடியது ரெட். ரெண்டும் சூப்பர் டூப்பர் பிளாப்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, தூயா.
.:: மை ஃபிரண்ட் ::. , தகவல் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி... :-)
அட. ஆமா.. சிம்பு ரெட்ல பாடியிருக்கிறார் என்றூ ஞாபகத்துலேயே இல்லை. இப்போத்தான் கேட்கிறேன் “தில் தில் தில் இத்தாலி கட்டில்” ;-)
மனோஜ், மீனா சேர்ந்து 16 வயதினிலே ஆல்பம் வெளியிட்டாங்க. அப்போ விக்ரம் பட வாய்ப்பு இல்லாமல் இருந்தாரு. விக்ரம் மனைவி மீனாவுடைய தோழி. அவர் மூலமாக மீனாவிடம் பாட வாய்ப்பு கேட்டிருக்கிறார். மீனாவும் உதவி செஞ்சிருக்காங்க. அதுக்கப்ப்புறம்தான் சேது என்ற வெற்றிப்படம் அமைந்து விக்ரம் பிஸிமேன் ஆனார். அதுக்கப்புறம் மீனா விக்ரம் கிட்ட வந்து நின்னுருக்காங்க. விக்ரம் படத்துல நடிக்க (ஹீரோயினா) வாய்ப்பு கேட்டு.. விக்ரம் “என்னால ஒன்னும் பண்ண முடியாது. அது டைரக்டர்தான் சொல்லணும்”ன்னு கை கழுவிட்டாராம். எங்கேயோ படித்த ஞாபகம்.
ம்ம்.. flat voice உள்ள சுந்தர் சி-யையே பாட வச்ச கொடுமை இருக்கே.இதுல ரஜினி பாடல் கொஞ்சம் பரவால்லையோன்னு தோணுது. ;-)
சிம்பு, இதைப்போல் வெளிப்படங்கள் (ஏப்ரல் மாதத்தில், காதல் வைரஸ், விசில், சண்ட) நிறையவற்றில் பாடி உள்ளார்.
//சரவணகுமரன் said...
சிம்பு, இதைப்போல் வெளிப்படங்கள் (ஏப்ரல் மாதத்தில், காதல் வைரஸ், விசில், சண்ட) நிறையவற்றில் பாடி உள்ளார்.//
புதுப்படம் “என்னைத் தெரியுமா”ல தண்ணி கருத்துறுச்சுன்னு ஒரு ரீமிக்ஸ் பாடல் பாடியிருக்கார்.
நடிகர்கள் பாடகராக இருக்கும் இன்னொருத்தர் சித்தார்த்.
பாய்ஸ் படத்தில் ஜெயிலே ஜெயிலே மற்றும் Nexatile துண்டு பாடல்களை கார்த்திக்குடன் பாடியிருப்பார்.
chukkalo candrudu படத்தில் ஒரு பாடலும், aata படத்தில் ஒரு பாடலும், பொம்மரில்லுவில் அப்புடோ இப்புடோன்னு பாடியிருப்பார். இத்தனைக்கும் NVNV படம் நடிக்க ஆரம்பித்தபோதுதான் தெலுங்கு கத்துக்கவே ஆரம்பித்தார் இவர்..
அந்த அப்புடோ இப்புடோ தமிழில் அடடா அடடா (சந்தோஷ் சுப்ரமணியம்)-ஆக வெளிவந்தது. அதிலும் சித்தார்த்தான் பாடியிருப்பார்.
மை ஃபிரண்ட், பதிவுல உள்ளதை விட அதிகமான விஷயங்களை பின்னூட்டத்தில் கொடுத்து கலக்கிட்டீங்க... :-), நன்றி...
//சரவணகுமரன் said...
மை ஃபிரண்ட், பதிவுல உள்ளதை விட அதிகமான விஷயங்களை பின்னூட்டத்தில் கொடுத்து கலக்கிட்டீங்க... :-), நன்றி...//
you are welcome. :-)
சிறந்த பதிவு. என் கருத்து கமலை பற்றி சொன்னீர்கள் உண்மையில் அவர் பன்முக கலைஞர் என்பதை நிச்சயமாக ஏற்று கொள்ள வேண்டிய ஒன்று. கமல் தனது 50ஆண்டு கால திரை வாழ்க்கையில் சுமார் 75 திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். அவரை போலவே வளர்ந்து வரும் சிம்புவும் திறமை குறைந்தவர் அல்ல கமலை போலவே பன்முகதிறமைக் கொண்டவர் தான் அவரும் தனது 25 வருட திரை வாழ்க்கையில் சுமார் 50திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். மொத்தத்தில் கமல் உலக நாயகன் என்றால் சிம்பு இளைய நாயகன்.
Post a Comment