Monday, September 15, 2008

சக்கரக்கட்டி – தித்திக்கிறதுதான்

மருதாணி

நல்ல பீட்டுடன் உள்ள மெலடி பாடல். சாதனா போன்ற குரல். பாடியது மதுஸ்ரீ. மயக்கும் குரலில் கிறங்க வைக்கிறார். நடுவே, ரஹ்மான் வேறு ஹம் செய்கிறார். காதலி, காதலனை நினைத்து பாடும் பாடல் போலிருக்கு. மருதாணி மருதாணி என்று பாட்டை முடிக்கவே மனசில்லாமல் ஆறரை நிமிடங்கள் கழித்து முடித்து வைக்கிறார் ரஹ்மான். (எப்பவும் பண்றதுதான்!).

"வாழும் பயிர்க்கு தண்ணீர் வேண்டும்...
காதல் கதைக்கும் கண்ணீர் வேண்டும்..."
- வாலி

டாக்சி டாக்சி

தாளம் போட்டு ஆட்டம் போட வைக்கிற பாடல். நட்பை பற்றிய ஜாலியான சாங். கேட்டவுடன் பிடித்து போகும் பாடல்.

"ராசி ராசி…நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி
டாக்ஸி டாக்ஸி..நண்பா நீ ஒரு இலவச டாக்ஸி…" :-)
-நா. முத்துக்குமார்.


சின்னம்மா சிலகம்மா

சுமாரான பாடல். காதலன் "கோபாலா கோபாலா", முதல்வன் "உப்பு கருவாடு" சாயல் பாடல். ஒண்ணும் சொல்லுறதுக்கில்ல.

ஏலேய்… நேரம் வந்திடுச்சி….

கீட்டர் இசையை பிரதானமாக கொண்ட இந்த பாடல், பொறுமையை சோதிக்கிறது. அதை பண்ணுவோம, இதை பண்ணுவோம் என்கிற கனவு வகை பாடல். ஏலேய், பாட்டை மாத்துடா… ஏலேய்!!!

ஐ மிஸ் யூ… மிஸ் யூ டா

இந்த பாட்டு முதல்ல ஏதும் சுவாரஸ்யம் இல்லாத மாதிரி இருந்தது. பாடல் வரியும், பாடும் குரலும் கொடுக்கும் போதை, ஃபிலிங்கோடு கேட்டால், திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது (என்னடா பீலிங்கு!!!). இசையை விட, பாடலை தூக்கி பிடிப்பது, பாடலின் உணர்வை அப்படியே கொடுக்கும் சின்மயீயோட ஜீவனுள்ள குரல்.

“என் தேகமோ அழகு ஒவியம்
நீயில்லையேல் வெறும் காகிதம்”
-நா. முத்துக்குமார்.

நான் எப்போது பெண்ணானேன்?

இது “சொட்ட சொட்ட நனையுது தாஜ்மகாலை” ஞாபகப்படுத்தும் பாட்டு. நடுவே, கொட்டாவி வர வைத்தாலும், ரசிக்கத்தக்க பாடல் வரிகளைக் கொண்ட பாடல். முதல் வரியே, எப்படிப்பட்ட பாடல் என்று சொல்லி விடும்.

"என் உறக்கத்தில் நடுவே சின்ன பயம்
வந்து முழு உடல் வேர்த்ததே அப்போதா
நீ எங்கோ நின்று பார்ப்பது போல்
நான் மனசுக்குள் உணர்தேன் அப்போதா"
-நா. முத்துக்குமார்.

பாடல்களை கேட்கும்போது, காதல் சம்பந்தப்பட்ட படம் என்று தெரிகிறது (இது பாட்டு கேட்டுதான் உனக்கு தெரியுதா?ன்னு கேக்குறீங்களா? விடுங்க விடுங்க…). ஏற்கனவே வெளியான விளம்பரங்களில், விஷுவல்ஸ் ரொம்ப அழகாக இருந்தது. ரஹ்மானும் ரொம்ப நம்பிக்கையாக போட்டு கொடுத்திருப்பதால், படம் எப்படி இருக்கிறதோ, ஆல்பமாக கண்டிப்பாக வெற்றி பெறும் என்றே தோன்றுகிறது.

10 comments:

Anonymous said...

நான் ரொம்ப ரசிச்ச பாடலை சுமாரான பாடல்னு சொல்லிட்டீங்க , வருத்தமா இருக்கு :(

சரவணகுமரன் said...

//நான் ரொம்ப ரசிச்ச பாடலை சுமாரான பாடல்னு சொல்லிட்டீங்க , வருத்தமா இருக்கு //

வருத்தப்படாதீங்க... எனக்கு தோனுனதத்தான் சொன்னேன். மத்தபடி எல்லாப்பாட்டையும் நான் கேட்டுட்டுத்தான் இருக்கேன்.

அப்புறம், உங்களுக்கு பிடிச்சது எது?

Subash said...

மருதாணி பாடலுக்கு அடிமையானமாதிரி ஆயிட்டேன்.
திரும்ப திரும்ப கேட்க காரணம் இரண்டே செக்கண்டுகள் வரும் றஃமானின் ஹம்மிங். !!!!

சரவணகுமரன் said...

ஆமாங்க சுபாஷ். அருமையான மெலடி.

rapp said...

எனக்கு இன்னும் பலமுறை கேட்டாத்தான் பிடிக்கும் போலருக்கு.

சரவணகுமரன் said...

ஒ! அப்படியா? கேளுங்க கேளுங்க. ரஹ்மான் பாட்ட முன்னாடி ஸ்லொ பாய்சன்னு சொல்லுவாங்க...

முரளிகண்ணன் said...

தாணுக்கு பயந்து போட்டிருப்பார் போல

சரவணகுமரன் said...

//தாணுக்கு பயந்து போட்டிருப்பார் போல//

:-)

தாணு, ரஹ்மானை "இசையே" என்று தான் அழைப்பாராம். அதுக்கு மயங்கி போட்டுருப்பாரோ? எல்லா புகழும் இறைவனுக்கே!!!

கிரி said...

டாக்சி பாட்டு தான் எனக்கு ரொம்ப பிடித்தது :-)

சரவணகுமரன் said...

கிரி, எனக்கு ரொம்ப பிடித்ததும் அதுதான்