காதலில் விழுந்தேன் படம் எடுக்கப்பட்டு பல நாட்களாக வெளியாகாமல் இருந்தது. படத்தின் டிரம்ப் கார்டு “நாக்க முக்க” பாடல். பாடலை திரும்ப எடுக்கும் அளவுக்கு பாடல் ஹிட். குழந்தைகளுக்கு பிடித்துவிட்டால் பின்பு எப்படி ஹிட் ஆகாமல் இருக்கும்?
இப்போது இப்படத்தை சன் டிவி கலாநிதி மாறன் வாங்கியுள்ளார். சன் சேனல்களில் “கலாநிதி மாறன் வழங்கும்” என்று விளம்பரம் போட ஆரம்பித்துவிட்டார்கள். மெட்ராஸ் டாக்கிஸ் ஸ்டைல்'லில் "சன் பிக்சர்ஸ்" என்று டைட்டில். தொலைக்காட்சி உரிமை என்றில்லாமல், இப்போது படங்களை வாங்க துவங்கிவிட்டார்கள்.
சன் மியூசிக்கால் பாடல் ஹிட்டாகி, சில படமும் ஹிட்டாகிய வரலாறு உள்ளது (வாள மீனு). இம்முறை தாங்கள் வாங்கிய படத்தை தங்கள் சேனல்களால் ஹிட்டாக்குகிறார்களா? என்று பார்ப்போம். இனி, சன் மியூசிக்கில் கொஞ்சம் நாள் நாக்க முக்க தான். டாப் டென்னில் இப்படத்தை முதலிடத்தில் வைத்து விடுவார்கள். கலைஞர் டிவியில்? கொடுக்கவே மாட்டார்கள். இதற்கு போட்டியாக கலைஞர் டிவி'யும் இறங்கினால், சிறு பட தயாரிப்பாளர்களுக்கு நல்லதுதான்.
அப்புறம் சன் மியூசிக்கில் மசாலா மிக்ஸில் “குசேலன்: சினிமா சினிமா” பாடலைப் போடுகிறார்கள். பி. வாசு டைரக்ஷனில் வந்ததை விட, சன் மியூசிக் எடிட்டர் பண்ணியது நன்றாக உள்ளது. ஏகப்பட்ட படங்களில் இருந்து கட்டிங். பொருத்தமான ஒட்டிங்.
நாகேஷ் நடித்த ஒரு காமெடி காட்சியைப் பார்த்தேன். நாகேஷ் அவர்களது நகைச்சுவையைப் பற்றி சொல்ல தேவையில்லை. இக்காட்சியில் மூன்று கதாபாத்திரங்களுக்கு கொடுத்திருந்த வித்தியாசமும் அருமை, அக்கால டெக்னிக்கும் அருமை.
8 comments:
Thanks
when will you go online?
நல்ல தரமான தமிழ் படம் எடுத்தா சரிதான்
நாகேஷ், நாகேஷ் தான்
சரியா சொன்னிங்க துரை...
வருகைக்கு நன்றி முரளிகண்ணன்
இப்பிடியே போனா தியேட்டர் -ல படத்த ஒட்டாம, டிவி-ல ரிலீஸ் பண்ணிருவாங்க போலருக்கு!.
வாங்க ஜுர்கேன் க்ருகேர்,
உங்க பேரு ரொம்ப டிபரேன்டா இருக்கு... :-)
Post a Comment