நான் ஏற்கனவே எங்க போனா என்ன சாப்பிடலாம்னு ஒரு பதிவு போட்டிருந்தேன். அதனால எங்க போனா என்ன சாப்பிடக்கூடாதுன்னு சொல்றதும் என் கடமையாகிடிச்சி... :-)
சீனா போனீங்கனா, இந்த மாதிரி போர்ட பார்த்தா உஷாராகிடுங்க...
அப்படியே கடைக்கு பக்கவாட்டுலேயோ, பின்னாடியோ பார்த்தீங்கன்னா, இந்த மாதிரி ஒரு வண்டி நிக்கலாம்.
இப்பவே, நீங்க திரும்பி போயிடலாம். இதுக்கு மேலயும் உங்களுக்கு எதையும் தாங்கும் இதயம் இருந்திச்சின்னா, கடை பின்னாடி வழியா உள்ளே போனீங்கன்னா, இதை பார்க்கலாம்.
எல்லாம் நாயீங்க... நாயி பிரியாணி பண்றானுங்க...
எனக்கு நம்ம ஊருல தனியா ரோட்டுல போகும் போது, நாய பார்த்தா பயம் வரும். எங்கேயாவது, குழந்தைகள நாய் கடிச்சிடுச்சின்னு நியூஸ் கேட்டா, நாய் மேல கோபம் வரும். இங்கே, நாய்கள பார்க்கும் போது பரிதாபம் தான் வருது.
பிரியாணி ரெடியாகுதுங்கோ...
இதுக்கு டிஸ்ப்ளே வேற...!!!
உங்க தெருவுல ஏதாச்சும் நாய் உங்ககிட்ட வம்பு பண்ணிச்சினா, இந்த படங்களை அதுக்கு காட்டுங்க...
மின்னஞ்சலில் வந்தது. அனுப்பிய நண்பருக்கு நன்றி.
32 comments:
சாமி. இது எந்த ஊரிலே சாமியோவ்
தமிழ்நெஞ்சம், சீனாவுல பீஜிங்...
நாய்க்கறி சாப்பிட்டா தங்கம் கிடைக்கும்
//நாய்க்கறி சாப்பிட்டா தங்கம் கிடைக்கும்//
அப்படியா? யாருக்கு?
சாப்பிட்டவங்களுக்கு
இந்தியாவில் நாகாலாந்திலும்
நாய் கறி சாப்பிடுகிறார்கள்.
தமிழ்நாட்டில் பூனை மற்றும் எலி கறி சாப்பிடுகிறவர்களும் உண்டு
நாய் கறி நல்ல ருசி.ஒரு முறை சாப்பிட்டுப்பாருங்களேன்.
உவ்வ்வ்வ்வ்வெவவ...
பிரியாணின்னு தலைப்பே வச்சு ஏமத்திட்டீங்களே... :(
போச்சே... இனி பிரியாணி நினைச்சா.. நாய்தான் நியாபகம் வரும் :((
நாய்க் கறி சாப்பிட்டவர்கள் குரைப்பார்களா? அட நன்றியாவது இருக்குமா?
எதையும் விட்டு வைக்க மாட்டானுவ இந்த மனுச பயலுவ..
தலைப்புல இருக்குற "இளகிய மனம் கொண்டவர்கள் தவிர்க்கவும்"-ங்கிற எச்சரிக்கையப் பாத்து ஒரு தயக்கத்தோடத் தான் கிளிக்கினேன்.
கடசில பாத்தா, ப்பூ! இவ்ளோ தான் மேட்டரா! இதுக்குத் தானா இவ்ளோ பில்டப்பு! :D
கோழி, ஆடு, மாட வெச்சி நம்மூருல செய்யிறதத் தானே அவுங்க நாய வெச்சி செஞ்சிருக்குறாங்க! இதுக்கு எதுக்கு இவ்ளோ எமோஷன்! அடுத்த முறை, ஆட்டுக்கறிய செம்ம கட்டு கட்டுறப்போ இது நெஞ்சுல நெழலாடுமா? ;)
ஆங்! அப்புடியே இன்னொரு விஷயம். இப்போ உங்களுக்கு இதப் பாத்து முகத்த சுழிக்க வெக்கிற ஃபீலிங், அருவெறுப்போ ஏதோ ஒண்ணு, வருதில்லையா, அந்த ஃபீலிங் தான் சைவ சாப்பாடு சாப்பிடுறவங்களுக்கும், உங்க சிக்கன், மட்டன், வகையறாக்களைப் பாக்கும் போது வருது! அதனால, யாரும் சிக்கன் மட்டனப் பாத்து, "உவ்வே"ன்னு சொன்னாக்க, உங்கள அவமானப் படுத்துற நோக்கத்துல தான் அப்புடி செய்யிறாங்கன்னு இனிமேலாவது நெனைக்காதீங்க. ப்ளீஸ்! :)
-சாகபட்சிணி சாந்தகுமார்
தகவலுக்கு நன்றி, வால்பையன்.
//தமிழ்நாட்டில் பூனை மற்றும் எலி கறி சாப்பிடுகிறவர்களும் உண்டு//
ஆமாங்க... பூனை கறி, எலி கறி சாப்பிட்டவுங்க எல்லாம் ஒருமுறை விஜய் டிவி நீயா நானாவில் வந்து பேசினாங்க...
பீகார் மந்திரியே மக்களை எலி கறி சாப்பிட சொன்னாராமே?
இறக்குவானை நிர்ஷன், நீங்களும் சாப்பிட்டு இருக்கீங்களா? சபாஷ்... :-) அப்ப, உங்களுக்கு இது மேட்டர்'ரே இல்லையே?
//கடசில பாத்தா, ப்பூ! இவ்ளோ தான் மேட்டரா! இதுக்குத் தானா இவ்ளோ பில்டப்பு//
:-)
//இதுக்கு எதுக்கு இவ்ளோ எமோஷன்//
எமொஷனேல்லாம் இல்லங்க... சீனாவுல பாம்பு கறி, தவளை கறி'ன்னு கேள்விப்பட்டு இருக்கேன். இப்படி, நாய்க்கறியை செயல் முறை விளக்கத்தோட பார்த்ததில்லை.
//அதனால, யாரும் சிக்கன் மட்டனப் பாத்து, "உவ்வே"ன்னு சொன்னாக்க, உங்கள அவமானப் படுத்துற நோக்கத்துல தான் அப்புடி செய்யிறாங்கன்னு இனிமேலாவது நெனைக்காதீங்க//
சாகபட்சிணி சாந்தகுமார்,
இதென்ன வம்பா போச்சி... :-)
நான் எப்பங்க இப்படி அவமானப்பட்டேன்? :-)
//போச்சே... இனி பிரியாணி நினைச்சா.. நாய்தான் நியாபகம் வரும் :(//
:-)))
//எதையும் விட்டு வைக்க மாட்டானுவ இந்த மனுச பயலுவ..//
Chef, நீங்க இத ட்ரை பண்ணியது இல்லையா?
நான் சிங்கப்பூரில் முதலைக் கறி சாப்பிட்டுள்ளேன்.... அவ்வுளவுதான் :)
நாய் கடி வாங்கிய அனுபவம் உண்டு... அதனாலே.. no touching keep distance
தலைவரே, முதலை கறி சாப்பிட்டுட்டு நீங்க இப்படி சொல்லலாமா?
//எதையும் விட்டு வைக்க மாட்டானுவ இந்த மனுச பயலுவ..//
:-))
நீங்கள் இதைக் கேள்விப்பட்டதில்லையா??? A CHEF NEVER EATS ONLY TATSES :)))
// A CHEF NEVER EATS ONLY TATSES //
சூப்பர்'ருங்க :-))
அரிசி ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விக்குது.
இனிமேல் நாமும் நாய்க்கறிதான் சாப்பிட வேணுமோ.
ஆட்சியாளர்கள் கவனத்திற்கு ஒரு ரூபாய் அரிசியை யாரோ ப்ளாக்குல விக்குறாராம்.
ஒரு ரூபாய் அரிசி 15 ரூபாய்னாலும் வாங்குவதற்கு ஆளு இருக்காங்களாம்.
ஒரு ரூபாய் அரிசியை, அவங்க வாங்கிய்பிறகு பின்னாலே போகி, சமைச்சு சாப்பிடும் வரை இன்ஸ்பெக்சன் செய்யவேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.
//ஆட்சியாளர்கள் கவனத்திற்கு ஒரு ரூபாய் அரிசியை யாரோ ப்ளாக்குல விக்குறாராம்.//
Blog'ல இதுலாம் விக்குறாங்களா? :-)))
//ஒரு ரூபாய் அரிசியை, அவங்க வாங்கிய்பிறகு பின்னாலே போகி, சமைச்சு சாப்பிடும் வரை இன்ஸ்பெக்சன் செய்யவேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்//
:-))
உவ்வே......
//உவ்வே......//
:-))
ஸ்ஸ்ஸ்ஸ்
உவ்வ்வே! :)
உயிர்களை அடித்து தின்பதில் எனக்கு உடன்பாடே இல்லை.
சிறிய கொழி குஞ்சாக இருந்தாலும் சரி மாடாக இருந்தாலும் சரி, நம்மைப் போலவே உயிர்வாழும் உரிமை அதற்கும் உண்டு !
திண்பது என்று ஆகிவிட்ட பிறகு,
ஆட்டை அடிச்சு சாப்பிடுவதும் ஆடு அளவு உயரம் இருக்கும் நாயைச் சாப்பிடுவதற்கும் பெரிய வேறுபாடு இல்லை. அவர்களுக்கு டேஸ்ட் புடிச்சிருக்கு. ஒன்றை மட்டும் பாவம் என்கிறோம், ஆடு பாவம் இல்லையா ?
கேரளாவில் வெட்டப்படும் மாடுகள் ?
நாம சாப்பிடுவது மட்டும் உயர்வகையா ? உயிர்வதை இல்லையா ?
எல்லாமே கொடுமை தான் !
உண்மைதான் கோவி.கண்ணன்.
ஒரு வேளை, சீன மக்கள் இங்கே வந்தால் "நாங்களாவது பாம்பு, பூரான் சாப்பிடுறோம். நீங்க ஒரு பாவமும் அறியாத ஆடு, கோழியை சாப்பிடிறீங்களே , பாவிகளா!!!"ன்னு நம்மளை திட்டுவாங்களோ?
வாங்க சர்வேசன்...
naan sinaavil iruntha 14 naalum saapidavee illa intha tholaiyaal
arumai padam
rahini
வாங்க rahini,
//naan sinaavil iruntha 14 naalum saapidavee illa intha tholaiyaal//
:-)... பதினாலு நாளு எப்படி சாப்பிடாம இருந்தீங்க? :-)
//சாகபட்சிணி சாந்தகுமார்,
இதென்ன வம்பா போச்சி... :-)
நான் எப்பங்க இப்படி அவமானப்பட்டேன்? :-)//
அடடா! உங்களைச் சொல்லலீங்க, பொதுவாச் சொன்னேன்! :)
நான் மொதவே இன்னும் கொஞ்சம் தெளிவாச் சொல்லீருக்கலாம் தான்! கோவிச்சிக்காதீங்க! :)
-சாகபட்சிணி சாந்தகுமார்
சாகபட்சிணி சாந்தகுமார்,
நானும் சும்மா தமாசுக்குதான் சொன்னேன்.. :-)
Post a Comment