இங்கு இரு வகையான சுற்றுலா பயணிகளை மட்டுமே பார்க்க முடிந்தது. ஒன்று, வெளிநாட்டு பயணிகள். இன்னொரு பிரிவு, சின்னஞ்சிறு பள்ளிக்கூட மாணவர்கள். அவர்களை காணும்போது, எனக்கு புளியோதரை கட்டிக்கொண்டு தஞ்சை பெரிய கோவிலை காணச் சென்ற என் இளம் வயது இன்ப (!) சுற்றுலாத்தான் ஞாபகம் வந்தது.
நாம் பயன்படுத்திய 5, 10, 25 காசுகள், இன்னும் சில தினங்களில், இப்படிப்பட்ட அரிய பொக்கிஷமாக மாறிவிடும்.
"கல்லிலே கலை வண்ணம் கண்டாய்"ன்னு சொல்லுவது போல், ஹம்பியை சுற்றிலும் கோவில்கள், மண்டபங்கள், சிற்பங்கள். இதே வேலையா இருந்தாங்க போல? ஆனால், அனைத்தும் சேதப்படுத்தப்பட்டு இருப்பது வருத்தம் தான்.
இந்த சிற்பத்தில் உள்ளவர்களின் முக அமைப்பை பாருங்கள். சீன, மங்கோலிய சாயல் இல்லை? இதுல இருந்து, என்ன தெரியுது? அந்த காலத்திலேயே, அங்க இருந்தெல்லாம் இங்க வந்துருக்காங்க'ன்னு நான் சொல்லல. கைடு சொன்னாரு... :-)
கல்லில் வடிச்ச ஓவியத்த ஒருத்தர் தாளில் வரைஞ்சிட்டு இருக்காரு. இந்த கல் தேர், ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. இந்த மாதிரி, இந்தியாவுல, மூணு இடத்தில (மஹாபலிபுரம், ஹம்பி, புவனேஷ்வர்) தான் இருக்காம்.
இது ஒரு இயற்கையான ஏசி ரூமாம். என்ன பண்ணியிருக்காங்கன்னா, எல்லா தூண் இடையிலும் இடைவெளி வருரா போல் கட்டியிருக்காங்க. அப்புறம் பக்கத்திலேயே, ஒரு கிணறு இருக்கு. கிணத்தில இருந்து, ஒருத்தரு தண்ணிய இறைக்க, அத ஒருத்தரு மேல கொண்டு போக, இன்னொருத்தரு மேல இருந்து ஊத்துவாராம். இப்படி தொடர்ந்து ஊத்திக்கிட்டே இருக்க, உள்ள சிலு சிலுன்னு இருக்குமாம். ராஜாவும் ராணியும் வெயில் காலத்தில வந்து ஜில்லுன்னு ஜாலியா இருப்பாங்களாம்.
நல்லவேளை, ஏசிய கண்டுபிடிச்சாங்க... :-)
இது யானைகளைக் கட்டி போடுற இடம். இத எவ்ளோ ரசனையோட கட்டியிருக்காங்க பாருங்க. இத பார்த்தீங்கன்னா, ரெண்டு மூணு கட்டிட கலைகள் தெரியுமாம். இதுல இருந்து என்ன தெரியுதுன்னா, .... ஓகே, ஓகே. புரிஞ்சிகிட்டீங்க... :-)
அது யானைக்குனா, இது பக்கத்திலேயே யானை பாகர்களுக்கு.
இது பூமிக்கு அடியில போன ஒரு சிவன் கோவில். உள்ள, தண்ணி கெட்டி கெடக்குது...
இதுல்லாம், கலை நிகழ்ச்சி நடத்த கட்டின மண்டபங்கள். மேல்புறம் இருந்த மர வேலைப்பாடுகள் எல்லாம் எரிந்து, இப்ப கல் அஸ்திவாரங்கள் மட்டும் இருக்குது.
இத மௌனம் பேசியதே, ஸ்டார், என் சுவாச காற்றே'ன்னு பல தமிழ் படங்களில் பாத்து இருப்பீங்களே? இது ஒரு அழகான கிணறு. கிணத்துக்கு அழகா?'ன்னு கேக்கப்பிடாது.
இந்திய படங்கள் மட்டுமில்ல, ஜாக்கிசான், மல்லிகா ஷெராவத் நடிச்ச 'மித்' படமும் ஹம்பில படம் பிடிச்சிருக்காங்க.
20 comments:
அருமையான புகைப்படப்பதிவு...ஏன் இப்படியான புராதன வரலாற்று சின்னங்கள் காப்பாற்றப்படவேண்டியவை
நன்றி டொன் லீ.
டொன் லீ, புராதன வரலாற்று சின்னங்கள் காப்பாற்றப்பட வேண்டாம்'ன்னு சொல்றீங்களா? தவறாக புரிந்து கொண்டேன் என்றால் மன்னிக்கவும்....
அருமையான கோணங்களில் படங்களும், விளக்கங்களும் கொண்ட பதிவுக்கு நன்றி குமரன். பெல்லூர், ஹலிபேட் சென்றிருக்கிறேன். ஹம்பி போக நினைத்துத் தள்ளிப் போய்க் கொண்டேயிருக்கிறது. இப்பதிவு சீக்கிரம் போகும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளச் சொல்கிறது.
ஆகா! அந்தக்காலத்தில என்னே ஜகஜ்ஜோதியா இருந்திருக்கும்.
//மொகலிய மன்னர்களின் படையெடுப்பின் போது சேதப்படுத்தப்பட்டதாக கைடு கூறினார்.//
பாமினி சுல்தான்களின் படையொடுப்பால் சேதப்படுத்தப்பட்டது. (1565 தலைக்கோட்டை போர்)
நன்றி ராமலக்ஷ்மி...
என் பதிவு, உங்களை ஹம்பி சீக்கிரம் போக தூண்டியது என்று கூறியிருப்பது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது... :-)
ஆமாம் அனானி...
தகவலுக்கு மிக்க நன்றி... nedun...
Nice pics!
நன்றி CVR
நல்ல பதிவு.
படங்களுடன் விளக்கங்கள் அருமை
பகிர்ந்மைக்கு நன்றி
சுபாஷ்
மிக நல்ல பதிவு...
நன்றி....
நன்றி சுபாஷ்
நன்றி கூடுதுறை
மிக நல்ல பதிவு...
தகவலுக்கு நன்றி.
'HAMPI TEMPLE' is recently popularised by JACKIE CHAN"S FILM "THE MYTH"...."HAMPI TEMPLE IS RECOGNISED BY "UNESCO"...AS ONE OF THE ANCIENT INDIAN CULTURE...AND THEY ARE TAKING ALL THE PRECAUTIONS TO PRESERVE THE "TEMPLE"...AS IT IS. "UNESCO" IS GIVING THE SAME TYPE OF IMPORTANCE TO "HANMPI"....AS THEY ARE GIVING TO "THANJAI PERIA KOIL"...WE CAN REACH "HAMBI" FROM TAMIL NADU THRU VARIOUS ROUTES...AND THE SHORTEST ONE IS CHENNAI...GUNTAKKAL...HOSPET...HAMBI" OR CHENNAI...BANGALORE...HOSPET...'HAMPI"....VERY GOOD ARTICLE ABOUT AN IMPORTANT PILGRIM CENTRE....PHOTOGRAPHS ARE TOO GOOD...KEEP WRITING SIR...
பின் தடமறிதல் கருத்துக்களை...மின் அஞ்சல் செய்க...
நன்றி ஜீவா
நிறைய உபயோகமான தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி, RAMASUBRAMANIA SHARMA.
Post a Comment