இன்றைக்கு வெளியான செய்தி..
மும்பை பல்கலைக்கழகம், கொல்கத்தா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகத்தின் 150 வது ஆண்டு விழாவை முன்னிட்டு நிறைவு விழா கொண்டாடப்படப்போகிறது.
இந்த ஆண்டு விழாவிற்காகவும், பல்வேறு கட்டமைப்பு வேலைகளுக்காகவும், ஏற்கனவே மத்திய அரசு அதிக நிதியை (லஞ்சம்!) வழங்கியுள்ளது. நிறைவு விழாவில், நம் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமரின் பிரதமர் சோனியா காந்தி, தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படப்போகிறது.

டாக்டர் பட்டம் விஜய்க்கு கொடுக்கப்பட்ட பின் அதன் மதிப்பு அனைவருக்கும் தெரியும். பல்கலைக்கழகத்தால், அதன் சிறப்பு விருந்தினருக்கு என்ன கொடுக்க முடியுமோ, அதை கொடுக்க போகிறார்கள். அதனால், அந்த அரசியல் பேசுவது வீண். நமது கடமையான மொக்கையை மட்டுமே போடுவோம். :-)

இன்றைய செய்தி, நாளைய வரலாறு.

நாளைய வரலாறு, இன்றைய கும்மி... :-)

2012 - ஆண்டிபட்டி மருத்துவ கல்லூரியின் ஏதோவொரு (!) ஆண்டு விழாவை முன்னிட்டு முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் அத்வானி, துணை பிரதமர் மோடி ஆகியோருக்கு டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிக்கப்படுகிறார்கள்.
2017 - ஆண்டாள் அழகர் பல்கலைகழகத்தின் சார்பில் பிரேமலதா மருத்துவ கல்லூரியின் துவக்க விழாவில் முதல்வர் விஜயகாந்த், பிரதமர் மாயாவதி, தே.மு.தி.க கட்சியின் பொது செயலாளர் சுதீஷ் ஆகியோருக்கு டாக்டர் பட்டம் வழங்கி பட்டம் சிறப்பிக்கப்படுகிறது.
2022 - முரசொலி மாறன் அறக்கட்டளையின் இருபதாவது ஆண்டு விழாவை முன்னிட்டு பிரதமர் ராகுல் காந்தி, முதல்வர் தயாநிதி மாறன், தி.இ.பொ.மு.க. (திராவிட இளைஞர் பொருளாதார முன்னேற்ற கழகம்) கட்சியின் நிறுவனர், சமூக புரட்சி தந்தை கலாநிதி மாறன் ஆகியோருக்கு சன் மருத்துவக்கல்லூரி சார்பில் டாக்டர் பட்டம் வாங்க... ஸாரி... வழங்கப்படுகிறது.

இந்த செய்திகளை எல்லாம் இப்ப கேட்க கஷ்டமாத்தான் இருக்கும். போக போக சரியாகிடும். இப்ப ஆகலையா நமக்கு? அந்த மாதிரி.
2 comments:
அப்டியே இவிங்க யாருகிட்டயாவது சொல்லி எனக்கு ஒரு டாக்டர் பட்டம் குடுக்க சொல்லுங்க. எனக்கு இருதய அறுவை சிகிச்சை டாக்டர் பட்டம்தான் வேணும். அப்பதான் 4 காசு பார்க்க முடியும். சொல்றீங்களா?
ஜோசப் பால்ராஜ்,
ஷில்பா ஷெட்டி, விஜய் வாங்குனதுக்கு அப்புறமும் உங்களுக்கு டாக்டர் பட்டம் மேல ஆசையா? இந்த பட்டத்த வச்சி வானத்தில கூட பறக்க விட முடியாது... அப்புறம் எங்க நாலு காசு பார்க்க? :-)
Post a Comment