தொடர்ந்து சிட்டி படங்களா பண்றதால ஒரு சேஞ்ச்'க்கு இந்த கிராமத்து படத்துல விஜய் நடிக்க போறாரு. இது கிராமத்து படங்கறதால, முழுக்க முழுக்க கிராமங்களிலே எடுக்க போறாங்களாம். இடங்கள தேர்வு செய்ய டைரக்டர் காரைக்குடிக்கும், மிகிவகாவுக்கும் போறாராம். மிகிவகா'ங்கறது நியூஸிலாந்து'ல ஒரு கிராமம்!!!.
இனி பேரரசு மீதி கதையை சொல்லுவாரு. கேளுங்க. (வாய ரெண்டு சென்டிமீட்டர் மட்டும் திறந்து, ஒவ்வொரு வார்த்தைக்கும் ரெண்டு செகன்ட் கேப் விட்டு படிங்க).
“இதுவரைக்கும் யாரும் நடிக்காத கேரக்டர்ல விஜய் இந்த படத்துல நடிக்குறாரு. படத்துல விஜய், கிருஷ்ணன்’ங்கற கதாபாத்திரத்துல தயிரு விக்குறாரு. சின்ன வயசுல இருந்து விஜயும் அவர் நண்பரும் மாட்டு தொழுவத்துல வளருறாங்க. வெளிநாட்டுக்கு போய் பால் வித்து பெரிய தொழிலதிபர் ஆக ஆசை படுற நண்பனை, விஜய் கஷ்டப்பட்டு வெளிநாட்டுக்கு அனுப்புறாரு. அதுக்கப்புறம் அவங்க வாழ்க்கையில நடக்குற திருப்பங்கள் தான் கதை.”
பல கஷ்டங்களுக்கு பிறகு கிடைத்த இந்த படத்தின் ஸ்கிரிப்ட் மூலம் மீதி கதையை தெரிஞ்சுக்கலாம். என்ன கஷ்டம்னா, இந்த ஸ்கிரிப்டை பேரரசு பல நடிகர்களுக்கு முன்பு கொடுத்திருக்கிறார். படித்த அதிர்ச்சியில் ஒவ்வொருவரும் பல விதங்களில் இதை அழிக்க முயன்று, துரதிஷ்டவசமாக நம்மிடம் ஒரு காப்பி வந்து சேர்ந்தது.
நண்பனை வெளிநாட்டுக்கு அனுப்பிட்டு விஜய் இங்கே முன்னாள் கதாநாயகியுடன் ஒரு குத்து பாட்டும், இன்னாள் கதாநாயகியுடன் ரெண்டு டூயட்டும் ஆடிட்டு இருக்காரு. இவரோட இந்த சிறந்த சேவையைப் பாராட்டி நியூசிலாந்து அரசாங்கம், இவர் படம் போட்டு ஒரு தபால் தலை வெளியிடுறாங்க. அப்ப வருகிற பாட்டுதான் “உன் தல தறுதல… என் தல இருக்குறது தபால்தலை…” அப்படிங்கற பாட்டு.
அப்படியே ஊர சுத்திட்டு இருக்குறவரு ஒரு நாள் ஒரு அதிர்ச்சியை பாக்குறாரு. அவரு கஷ்டப்பட்டு வெளிநாடு அனுப்பி வச்ச அவரு ஃப்ரண்டு, வெளிநாட்டுல பெரிய தொழிலதிபரா இருப்பாருன்னு நினைச்ச அவரு ஃப்ரண்டு, நியூசிலாந்துல உள்ள ஒரு மாட்டு தொழுவத்துல சாணி அள்ளிட்டு இருக்காரு. அப்ப, அந்த சாணிக்குள்ள இருந்து எட்டு எழுத்துக்கள் சுத்திட்டு வந்து ஆடியன்ஸ் முன்னாடி நிக்குது. அதுதான் INTERVAL.
ஆக்சுவலா, என்ன நடந்துருக்குனா, டிராவல் ஏஜெண்ட் அமெரிக்கா அனுப்புறேன்னு சொல்லி ஆஸ்திரேலியாவுக்கு போலி விசா எடுத்து அனுப்பியிருக்காரு. பைலட், ஆஸ்திரேலியா போறேன்னு சொல்லி நியூசிலாந்து போய் இருக்காரு. அங்க ஒருத்தரு, பால் வியாபாரம் பண்ணலாம்னு சொல்லி பணத்தைப் பிடுங்கிட்டு சாணி அள்ள வைச்சிருக்காரு. ஏமாத்துன இவங்க மூணு பேரையும் எப்படி ஹீரோ கட்டம் கட்டி, ஸ்கேட்ச் போட்டு சாணி அள்ள வைக்குறாருங்கறதுதான் மிச்ச கதை. அதை தனக்கே உரிய பாணியில் பாக்குறவுங்க மிரளுற மாதிரி திரைக்கதை அமைச்சியிருக்காரு.
நண்பன் கேரக்டேருல நடிக்க பசுபதிய கேட்டாங்களாம். ஏற்கனவே பெரிய விஜய் படத்துல நடிச்சி நொந்து போயி இருந்தவரு, இந்த கதைய படிச்ச பீதியில, சினிமாவை விட்டுட்டு கூத்து பட்டறைக்கே போய்டலாம்னு முடிவு பண்ணிட்டாராம். அதனால, அதுல ஸ்ரீமன் அல்லது நிதின் சத்யா நடிக்கலாம்னு பேச்சு அடிபடுது. நிதின் சத்யா, தற்போது விஜய் அப்பா சந்திரசேகர் இயக்கத்துல ஹிரோவா நடிச்சிட்டு இருக்காரு என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்-பேரரசு காம்பினேசன்னு சொல்லியாச்சு. அவங்களோட சிறப்பம்சமான கமர்ஷியல் ஐட்டங்கள், பஞ்ச் டயலாக்குகள் இல்லாமலா? ஹீரோ அறிமுகக்காட்சியில, பேரரசு கூலிங்கிளாஸ்ல போஸ்ட்மேன் வேஷத்துல வந்து “நான் கொடுக்குறது தபாலு… தயிருக்கு தேவை வெறும் பாலு!!! மாடு போடுறது சாணி… தமிழ் நாட்டுக்கு இவருதான் டோனி!!!”ன்னு டயலாக் விடுறாரு. இதுக்கே தியேட்டர் அலற ஆரம்பிக்கும் போது, விஜய் வைக்கோல் போருக்குள்ள இருந்து எண்ட்ரி கொடுக்குறாரு “கிரி கிரி கிரி, இது கிருஷ்ணகிரி… வரி வரி வரி நான் வரிபுலி…”ங்கற பாட்டோட.
இனி பஞ்ச் டயலாக்குகள பார்க்கலாம்.
"மின்னல பார்த்தா கண்ணு போய்டும்ண்ணா...
பாக்கலேன்னா மின்னலே போய்டும்ண்ணா...
நாமளும் அப்படிதாண்ணா"
அப்புறம் படத்துல ஒரு போட்டி டான்ஸ் இருக்கு... அதுல ஜெயிச்சத்தப்புறம், என்ன சொல்றாருன்னா,
"நீ எவ்ளோ பெரிய டான்சரா இருந்தாலும், உன் சாவுக்கு உன்னால ஆட முடியுமாடா?"
இன்னொரு சீன்ல ஒரு சிற்பிய பார்த்து சொல்றாரு,
"நீ உளிய எடுத்து கல்லுல அடிச்சா அது கலை
நான் எடுத்து உன்மேல அடிச்ச அது கொலை"
கடைசில வெளிநாட்டுக்கு போக ஆசை படுற இளைஞர்களுக்கு ஒரு தத்துவம் சொல்லுறாரு,
"அடையார் ஆனந்த பவனோட பிராஞ்ச் நெறைய எடத்துல இருக்கும்; ஆனா அடையார் ஆல மரத்தோட பிராஞ்ச் அடையார்ல மட்டும் தான் இருக்கும்"
படம் உலகத்தரத்தொட இருக்கனும்ங்கறத்துக்காக பாட்டு சீன்ல மட்டும் இல்லாம, படம் முழுக்க வெளிநாட்டுக்காரங்கள பின்னாடி நடமாட விட போறாங்க. படத்தை கேன்ஸ்'ல திரையிட விஜய் அப்பா சந்திரசேகர் எல்லா ஏற்பாடும் பண்ணிட்டாராம். பிளைட் டிக்கெட்டும் ரெடியாம்! கோட் டையும் ரெடியாம்!
படத்துல விஜய் விதவிதமான கட்டம் போட்ட சட்டைய போட்டுட்டு வராரு. ஏன்னா, இது தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு அழைச்சிட்டு போற படமாச்சே?
50 comments:
பட்டாசா இருக்கு. மிகவும் ரசித்தேன்
நன்றி முரளிகண்ணன்.
:::)))))))))))))))))))))))))))))))))))))))
நன்றி sen22
ஹா ஹா ஹா இதுல என் பேர் வேற பாதி இருக்கு ஐயோ அவ்வ்வ்வ்
என்ன இன்னும் யாரும் கிழிஞ்சது கிருஷ்ணகிரி ன்னு பின்னூட்டமிடலையேன்னு பார்த்தேன்.
Please give rest to 'Ilaya Thalapathi' this is great time of 'Sappa Star'. Enjoy 'Kuselan'
ஹாஹா. அருமை. அருமை... வாய்விட்டு சிரித்தேன்... (அப்ப மத்த பேர்லாம் எதவிட்டு சிரிப்பாங்கன்னு கேக்கப்படாது!!!).
வாங்க கிரி..
ஆமாம். உங்க பேரும் இருக்குது... நீங்களே நடிக்கிறீங்களா?
ராஜ நடராஜன், பேரரசு பார்வையில பட்டா நிஜமாவே கிழிஞ்சது கிருஷ்ணகிரி தான்... :-)
அனானி, இதுக்குமா சீசன் பார்க்குறது? பாவம், அவருக்குத்தான் இப்ப கொஞ்சம் ரெஸ்ட் தேவைப்படுது...
//சரவணகுமரன் said...
வாங்க கிரி..
ஆமாம். உங்க பேரும் இருக்குது... நீங்களே நடிக்கிறீங்களா?//
அப்ப நீங்க கிருஷ்ணன் நான் கிரியா ஹி ஹி ஹி நமக்கு இந்த பதிவே போதும் படம் எல்லாம் வேண்டாம் :-))
வாங்க ச்சின்னப் பையன், நன்றி.
//அப்ப மத்த பேர்லாம் எதவிட்டு சிரிப்பாங்கன்னு கேக்கப்படாது!!!
எவ்ளோ ஜாக்கிரதையா பேச வேண்டி இருக்கு பாருங்க.. :-)
//அப்ப நீங்க கிருஷ்ணன் நான் கிரியா ஹி ஹி ஹி //
அப்புறம் ரித்தீஷ் மன்றத்தை கலைச்சிட்டு நமக்கு ஆரம்பிச்சுடுவாங்க :-)
//நமக்கு இந்த பதிவே போதும் படம் எல்லாம் வேண்டாம் :-))//
கரெக்ட்.. அப்பத்தான் நாம மன்றத்த நடத்த முடியும்... :-)
//அப்புறம் ரித்தீஷ் மன்றத்தை கலைச்சிட்டு நமக்கு ஆரம்பிச்சுடுவாங்க :-)//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய் :-))))))))
சூப்பர். செமசிரிப்பு:)
//"நீ எவ்ளோ பெரிய டான்சரா இருந்தாலும், உன் சாவுக்கு உன்னால ஆட முடியுமாடா?"//
இது டாப்பு.
சூப்பரப்பு. . . .
நன்றி கைப்புள்ள
நன்றி வெங்கட்ராமன்
:)))))))))
வயிறு வலிக்கிது... சிரித்ததில்....
பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய
விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார
விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.
தகுந்த மாசுக்கட்டுப்பாடு நடைமுறைகளும்,தனிமனித ஒத்துழைப்புமே எதிர்வரும் பயங்கரமான ஆபத்திலிருந்து நம்மை நாமே காத்துக் கொள்ள வழி வகுக்கும்.
ரொம்ப நன்றி ஜெகதீசன்
கற்பனை நல்லா இருக்கு!
ஆனா விஜய ரொம்ம்ம்பப கிண்டல் பண்றீங்க...பாத்துப்பா!
இத பத்திரிக்கை அல்ல
எச்சரிக்கை!!:)
-அகில உலக விஜய் ரசிகர் மன்றத்தின் மகளிர் சங்க தலைவி!
பஞ்ச் டயலாக்ஸ் எல்லாம் சூப்பர்...
நிஜமாலுமே இதை யூஸ் பண்ணாலும் பண்ணுவானுங்க :-)
//இத பத்திரிக்கை அல்ல
எச்சரிக்கை!!:)//
நான் மட்டுமா கிண்டல் பண்றேன்... நீங்களும்தான்... :-)
நன்றி வெட்டிப்பயல்...
ROTFL :-)))
Perarasuve avar padathula ezuthara songs pathiyum konjam solliyirukkalamilla???
செம காமெடி தல. கலக்குங்க...
நீங்க இதை காமெடின்னு நினைச்சிட்டு இருக்கீங்க.. அவனுங்க கண்ணுல பட்டா எழுத்து மாறாம படம் எடுத்து பிரமிட் சாய்மீராக்கு வித்துடுவானுங்க :)
ம். பேரரசு டைரக்டர்னா இதவிட பட்டாசா (கொடுமையா) இருக்கும் உங்களால கற்பனைகூட பண்ண முடியாது.
:))))
இம்சை அரசி,
ROTFL'ன்னா என்ன?
அவர் எழுதிற பாட்டை ஆய்வு பண்ணா, டாக்டரெட் கூட கிடைக்கும். :-)
வெண்பூ,
ரொம்ப நன்றி...
//அவனுங்க கண்ணுல பட்டா எழுத்து மாறாம படம் எடுத்து பிரமிட் சாய்மீராக்கு வித்துடுவானுங்க //
:-). கேப்ல பிரமிட் சாய்மீராவை வாரிட்டீங்க...
மங்களூர் சிவா, அவரு ரேஞ்சுக்கு திங்க் பண்ண இங்கே யாரு இருக்கா?
"குளம் குட்டையில இருக்கலாம் நிறைய கொசு...
உலக உருண்டையில இருக்குறது ஒரே பேரரசு..."
:-)
//ROTFL'ன்னா //
Rolling On The Floor and Laughing-பா. இம்புட்டு வெகுளியா இருக்காதீங்கண்ணே. அப்புறம் ஏமாத்திபுடுவாய்ங்க.
// படித்த அதிர்ச்சியில் ஒவ்வொருவரும் பல விதங்களில் இதை அழிக்க முயன்று, துரதிஷ்டவசமாக நம்மிடம் ஒரு காப்பி வந்து சேர்ந்தது.//
//உன் தல தறுதல… என் தல இருக்குறது தபால்தலை//
//டிராவல் ஏஜெண்ட் அமெரிக்கா அனுப்புறேன்னு சொல்லி ஆஸ்திரேலியாவுக்கு போலி விசா எடுத்து அனுப்பியிருக்காரு. பைலட், ஆஸ்திரேலியா போறேன்னு சொல்லி நியூசிலாந்து போய் இருக்காரு. அங்க ஒருத்தரு, பால் வியாபாரம் பண்ணலாம்னு சொல்லி பணத்தைப் பிடுங்கிட்டு சாணி அள்ள வைச்சிருக்காரு//
//இத பத்திரிக்கை அல்ல
எச்சரிக்கை!!:)//
//பிரமிட் சாய்மீராக்கு வித்துடுவானுங்க //
சூப்பரப்பு :-))
rolling on the floor laughing = ROTFL
super punch dialogues
very nice
keep it up
உஸ்ஸ்ஸ்..... இப்போவே கன்னகட்டுதே.......
இதையும் பாருங்க
அடுத்த காமெடிக்கு தயாராகும் குருவி குரூப்பு!.... - http://ganessh.blogspot.com
நன்றி ஸ்ரீதர் நாராயணன்
நன்றி அனானிகளே... விளக்கத்திற்கும் & வாழ்த்துக்களுகும்...
வாங்க ganesh
கணேஷ், கொடுமையிலும் கொடுமை அந்த படம்...
http://ganessh.blogspot.com/2008/07/ii.html
எக்ஸலண்ட் !!!!!!!
நன்றி செந்தழல் ரவி
பேரரசு கிட்ட உதவி இயக்குனரா வேலை பாத்தீங்களோ? இப்படி பின்றீங்க!!!
இந்த பதிவை பேரரசுக்கு அனுப்புங்க.அடுத்த படத்துக்கு use பண்ணிக்குவார்.:)))))
நன்றி ஆனந்த் குமார்
நல்லா இருக்கு செம சிரிப்பா :))))
//மின்னல பார்த்தா கண்ணு போய்டும்ண்ணா...
பாக்கலேன்னா மின்னலே போய்டும்ண்ணா...//
அடடே!
ஆட்டோ பின்னாடியே எழுதலாம் போல :))))
முடியல...எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கறாய்ங்களோ....!
நன்றி ஆயில்யன்
நன்றி Raj
Enna Kodumai Saravan Sir idhu....Room pottu yosichingala???
வாங்க மதுரைக்காரன்.
Post a Comment