ஸ்டிபன் சொம்மர்ஸ் இயக்கத்தில் வெளிவந்துள்ள "மம்மி 4 - சுடலைமாட சாமியும் உடுக்கையும்" படம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரையுலக வாழ்வில் ஒரு மைல்கல் என்றால் அது மிகையில்லை. ஹாலிவுட் தரத்தில் நம்மவர்கள் படத்தை உருவாக்கி கொண்டிருக்க, ஹாலிவுட்டையே தமிழ் நாட்டுக்கு கொண்டு வந்து உலக சூப்பர் ஸ்டார் ஆகி இருக்கிறார், நமது சூப்பர் ஸ்டார்.
பிரண்டன் ஃபிரெசர் மதுரை அமெரிக்கன் காலேஜில் நுழைவதில் ஆரம்பிக்கிறது படம். 1971 ஆம் ஆண்டு தமிழக கோவில்களில் உள்ள தங்க சிலைகளை லவட்டி கொண்டு போக வரும் ஃபிரெசர், அவர் காதலி ரச்சேல் மற்றும் அவரது அண்ணன் ஜோனாதன், கோவில்களை பற்றி தெரிந்து கொள்ள அமெரிக்கன் கல்லூரி நூலகத்திற்கு செல்கிறார்கள். அங்கு உள்ள நூல்களில் இருந்தும், பேராசிரியர் சாலமன் பாப்பையாவிடம் பேசியதிலிருந்தும், மதுரையை சுற்றியுள்ள கோவில்களை பற்றி தெரிந்து கொள்கிறார்கள்.
அதன் பின்பு, கிராம கோவில்கள், அம்மன் சிலை, சுடலை மாடன், வெட்டருவா மீசை பூசாரி, உடுக்கை, குதிரை, தங்க கோபுரம் என்று பயணிக்கிறது கதை. தங்க பொக்கிஷத்தை திருட நெருங்கும் இவர்களை, சுடலை மாடன் வேடத்தில் வரும் ரஜினி எப்படி விரட்டி அடிக்கிறார் என்பதை கிராபிக்ஸ் கலக்கலுடன் செல்லுலாயிடில் செதுக்கியுள்ளார்கள். சுடலை மாடன் வேடத்தில் ரஜினிகாந்த் நடிக்கவில்லை. வாழ்ந்திருக்கிறார்.
ஜோனாதன் விளையாட்டுத்தனமாக கோவிலில் உள்ள உடுக்கையை அடிக்க ஆரம்பிக்க, சிலையாக உள்ள சுடலைமாட சாமி அசைய ஆரம்பிக்கும் போது எழும் ரசிகர்களின் விசில் சத்தம், படம் முடியும் வரை தொடர்கிறது. பிளாஸ்பேக்கில் சுடலைமாடனின் வரலாறைக் கற்பனை கலந்து சொல்லியவிதம், திரையுலக வரலாற்றில் பலவருடங்கள் பேசப்படும்.
ஒரு காட்சியில் அம்மன் சிலையை ரச்சேல் தொட முயலும் போது, சிலை உயிர் பெற்று ரம்யா கிருஷ்ணன் அம்மனாக வருவது, தியேட்டரை அலற வைக்கிறது. இயக்குனர் ஸ்டிபன் சொம்மர்ஸ், ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்ததிலையே பாதி வெற்றியை பெற்று விடுகிறார்.
படத்தின் மிகப்பெரிய பலம் இளையராஜா-ரஹ்மான் கூட்டணியில் அமைந்திருக்கும் இசை. இளையராஜாவின் இசை கதைக்குள் நம்மை ஒன்ற வைக்கிறதென்றல், ரஹ்மானின் இசை படத்தை நுட்பமாக அணுக வைக்கிறது.
முந்தைய மம்மி படங்களின் சாயல் இருந்தாலும், கிளைமாக்சில் பல்லாயிரக்கணக்கான குதிரைகளில் வேட்டையர்கள் வருவது கிராபிக்ஸ் அதிரடியின் உச்சம். ஆங்கிலேய படை தளபதியாக வரும் நாசர், கோயில் பூசாரியாக வரும் வினுசக்ரவர்த்தி, லைப்ரரியன் வேடத்தில் வரும் வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகியோர் சில காட்சியில் வந்தாலும் தங்கள் குணச்சித்திர நடிப்பால் ஜொலிக்கிறார்கள்.
மொத்தத்தில் மம்மி 4 - இவ்வகை படங்களின் மம்மி.
10 comments:
உங்க கற்பனை அபாரம். கொஞ்சம் வேட்டையன் வேடத்தில் வரும் சூப்பர்ஸ்டார் பத்தி கொஞ்சம் அதிக தகவல் கொடுத்திருந்தால் ரசிகர்களாகிய நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்போம்.
:)
மொத்தத்தில் "தனியொரு மனிதராக தமிழ்த்திரையுலகை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் சென்றுவிட்டார் சூப்பர்ஸ்டார்" ன்னு சொல்லுங்க... :P
நன்றி குட்டிபிசாசு...
உங்க ஆர்வம் எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது... :-)
ஆமாம் ஜெகதீசன் :-)
வருகைக்கு மிக்க நன்றி....
சூப்பரு...
நன்றி saravanan...
/
ஜெகதீசன் said...
:)
மொத்தத்தில் "தனியொரு மனிதராக தமிழ்த்திரையுலகை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் சென்றுவிட்டார் சூப்பர்ஸ்டார்" ன்னு சொல்லுங்க... :P
/
ரிப்பீட்டு
வாங்க சிவா...
மிக அருமை. உடனடியாக காபி ரைட் வாங்கி விடவும் (சீரியசாக)
நன்றி இளைய பல்லவன். நாம்ம காப்பிரைட் வாங்கி என்னங்க பண்றது... இத எடுத்தாலும் சந்தோஷமா பாத்துக்க வேண்டியது தான்.
Post a Comment