Wednesday, July 9, 2008

ஜுலை PIT போட்டி - உதவி தேவை

நண்பர்களே,

முதல்முறையா இந்த புகைப்பட போட்டியில கலந்துக்க போறேன். இதுக்காக காமிரா தூக்கிட்டு போய் எங்கேயும் எதையும் புதுசா எடுக்கல. ஏற்கனவே எடுத்ததுல எது பொருத்தமா இருக்குனு எனக்கு தோணுனத இந்த பதிவுல கொடுத்துருக்கேன். பார்த்திட்டு எது இதுல கொஞ்சமாச்சும் நல்லா இருக்குறதா தோணுனத சொல்லுங்க. அதையே போட்டிக்கு அனுப்பிடுவோம். எதுவும் நல்லா இல்லனாலும் பரவாயில்லை. அடுத்த போட்டில கலந்துக்கிறேன். :-)

1. இது ஒரு மாலை வேளை பெங்களூர் விதான் சவுதா முன்பு எடுத்தது....




2. சுதந்திரமும் ஜனநாயகமும்


3. ஹம்பி பக்கமுள்ள துங்கபத்ரா அணை பூங்காவில் எடுத்தது.


4. இதுவும் ஹம்பி அருகே எடுத்தது.


5. இது ஒரு இரவு உணவகத்தில் எடுத்தது.



6. மதுரை நாயக்கர் மஹால் உள்ளே.


7. இதுவும் நாயக்கர் மகாலில் எடுத்தது.



8. நாயக்கர் மஹால் வெளிப்புறம்.


9. கேம்ப் போர்ட் சிவன் கோவில் - பிரம்மாண்ட சிவனும் சின்ன நிலவும்


மறக்காம பிடித்த புகைப்படத்தைப் பின்னுட்டத்தில் தெரிவிங்கோ!!!!

24 comments:

rapp said...

எனக்கு புகைப்படக் கலையை பத்தி ஜாஸ்தி தெரியாதுங்க. ஆனா எனக்கு பார்க்கும்போது ரொம்ப பிடிச்ச படங்கள்னு தோனுமில்ல, அப்படி எனக்கு ரொம்பப் பிடிச்சது இரண்டாவதா உள்ள விதான் சௌதா படமும், ஏழாவதா இருக்கிற நாயக்கர் மகாலும்

ராஜ நடராஜன் said...

அனைத்தும் நல்லாவே இருக்குது.

சகாதேவன் said...

6-மஹால் உள்ளே, 9-சிவன்

இரண்டும் வித்தியாசமாக இருக்கிறது.
மஹாலில் தெரியும் தூண்களை
போட்டோ ஷாப்பில் வெர்டிகல்
கரெக்ட் செய்து
போர்ட்ரெய்ட் வடிவில்
அமைத்து போட்டிக்கு
அனுப்புங்கள். வாழ்த்துக்கள்.

சகாதேவன்

Sumathi. said...

ஹாய்,

துங்கபத்ரா அணை பூங்காவும் சிவனும் மிக நன்றாக இருக்கிறது. இதுல ஏதாவது ஒன்னு நீங்க செலக்ட் பண்ணி அனுப்புஅலாம். அதற்காக மத்தது எல்லாம் நன்றாக் இல்லை என அர்த்தமில்லை. எல்லாமெ நன்றாகத்தன் இருக்கிறது.

Sumathi. said...

வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே.

சரவணகுமரன் said...

//எனக்கு புகைப்படக் கலையை பத்தி ஜாஸ்தி தெரியாதுங்க.

rapp, இருந்தாலும் உங்களுக்கு பிடிச்சத சொன்னதுக்கு ரொம்ப நன்றி :-)

சரவணகுமரன் said...

//அனைத்தும் நல்லாவே இருக்குது.

ராஜ நடராஜன், இப்படி சொன்னதுக்கு ரொம்ப நன்றி.

ஏதோ உங்களுக்கு பிடிச்சத சொல்லியிருந்தா நல்லா இருந்திருக்கும்.

சரவணகுமரன் said...

சகாதேவன், விரிவா கொடுத்த ஆலோசனைக்கு ரொம்ப நன்றி.

நீங்க சொன்னபடி முயற்சி பண்றேன்.

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

கைப்புள்ள said...

கடைசியாக உள்ள சிவன் படம் ரொம்ப நல்லாருக்குதுங்க. அந்த இடத்துல பல விளக்குகள் இருக்கும் புகைப்படம் எடுப்பதற்கு துணை புரிய. ஆனால் நீங்கள் காட்சியமைத்திருக்கும் விதம், நிலவொளி கொண்டு எடுத்திருப்பது போல உள்ளது. அது சிறப்பானது.

SurveySan said...

6 with some correction or 9.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

படங்கள் நன்றாக இருக்கிறது. சிவன் வித்தியாசமான படமாக இருக்கிறது.

சரவணகுமரன் said...

சுமதி, ஆலோசனைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி...

சரவணகுமரன் said...

கைப்புள்ள, என்ன நீங்க ரொம்ப பாராட்டுறீங்க... :-) ரொம்ப டாங்க்ஸ்....

சரவணகுமரன் said...

ஆலோசனைக்கு மிக்க நன்றி, surveysan

சரவணகுமரன் said...

நன்றி, கயல்விழி...

ராமலக்ஷ்மி said...

ஏழும் சிவனும் எனக்குப் பிடித்தவை. புகைப்பட வல்லுநர்கள் பார்வையில் ஆறு முந்தும் என்றே தோன்றுகிறது. ஒன்றும் இரண்டும் நன்றாக இருந்தாலும் முழு இருட்டு வரவில்லை. மற்றவையும் நைஸ். முதல் முயற்சியே திருவினையாகட்டும். வாழ்த்துக்கள் குமரன்.

Sathiya said...

முதலும், கடைசியும் ரொம்ப நல்ல இருக்கு! போட்டி தலைப்புக்கும் நல்லா பொருந்தும்னு நினைக்கிறேன்!

Mani said...

9.Camp port Siva is very nice. Especially, antha moon in background adds a good effect.
6.Madurai naayakkar mahal inside snap nalla irukku. That lighting is nice. Maybe, the snap shd be slightly tilted to make it parallel to the side.

சரவணகுமரன் said...

ராமலக்ஷ்மி, புகைப்படங்களை பற்றிய உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி...

சரவணகுமரன் said...

நன்றி sathiya

சரவணகுமரன் said...

mani, உங்கள் கருத்துக்கும், ஆலோசனைக்கும் மிக்க நன்றி...

சரவணகுமரன் said...

நண்பர்களே,

என் வேண்டுகோளை ஏற்று ஆலோசனை கூறிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றி. பெரும்பாலோர் கருத்துப்படி நான் இந்த போட்டிக்கு சிவன் புகைப்படத்தை அனுப்ப உள்ளேன்.

பின்னுட்டம் அளித்த அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் நன்றி.

நிலாக்காலம் said...

6,7,9 படங்கள் சூப்பர். வெற்றி பெற வாழ்த்துகள்!

சரவணகுமரன் said...

நன்றி நிலாக்காலம்...