இது மின்னஞ்சலில் வந்தது. ஏற்கனவே இதேப்போல் முரளிகண்ணன் ஒரு பதிவு போட்டிருந்தார்.
--------------------
தற்செயலாக நடப்பவை. நம்பினால் நம்புங்கள்.
1) 1978 இல் கமல் சைக்கோ கொலைக்காரன் வேடத்தில் நடித்த “சிகப்பு ரோஜாக்கள்” வெளிவந்தது. ஒரு வருடத்திற்கு பிறகு, சைக்கோ ராமன் என்பவன் கொடுரமாக கொலை செய்ததற்க்காக கைது செய்யப்பட்டான்.
2) 1988 இல் வேலை இல்லா இளைஞனாக “சத்யா” படத்தில் நடித்தார். 89-90 காலக்கட்டத்தில், இந்தியா வேலை இல்லா திண்டாட்டத்தால் பெரும் அவதியை சந்தித்தது.
3) 1992 இல், அவரின் வெற்றிப்படமான “தேவர் மகன்” வெளிவந்தது. சரியாக ஒரு வருடம் கழித்து, 1993 இல், தென்மாவட்டங்களில், சாதி கலவரம் ஏற்பட்டது.
4) 1994 இல் வெளிவந்த “மகாநதி” படத்தில் ஏமாற்றிக்கொண்டு ஒடும் சீட்டு கம்பெனியை காட்டியிருந்தார். 1996 இல், பல கம்பெனிகள் ஒடியது.
5) ஹேராமில் (2000) இந்து-முஸ்லிம் சண்டை பிண்ணனி. இரண்டு வருடம் கழித்து, கோத்ரா.
6) 2003 இல் வெளிவந்த “அன்பே சிவ”த்தில், ஒரு இடத்தில் சுனாமி என்று சொல்லியிருந்தார். அதுவரை, அறிந்திராத சுனாமி, 2004 இல், ஒரு காட்டு காட்டியது.
7) வேட்டையாடு-விளையாடுவில் (2006) இரு சீரியல் சைக்கோ கொலைகாரக் கதாபாத்திரங்கள் (இளா-அமுதன்) இருந்தன. மூன்று மாதத்திற்கு பிறகு, நொய்டா கொலைகள் (மொநிந்தர்-சதீஷ்) வெளிச்சத்திற்கு வந்தது.
இப்ப 2008 – தசாவதாரம். அப்புறம்?
16 comments:
அடுத்த படம் மர்மயோகி ஆறாம் நூற்றாண்டு. அதனால் இன்னும் சில வருடங்களில் அணு ஆயுதப்போர் வந்து எல்லோரும் அழிஞ்சு கற்காலத்துக்கு போயி பின்னர் சரித்திர காலத்துக்கு வந்து.
அய்யோ கண்ணைக் கட்டுதே.
தசாவதாரத்திலேயே Bio-weapons பத்தி சொல்லியிருக்காரே... அப்ப அதையும் எதிர்ப்பார்க்கலாம்.
ஆஹா நல்லாத்தான் கெளப்புறீங்க பீதிய! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............
rapp, கிளப்புனது நான் இல்லை...
:-)
அனேகமா 12 ஆம் நூற்றாண்டு சிலை எதாச்சும் திரும்ப கிடைக்கும்..
கூடவே என்னக்கு அசின் கிடைக்கும்னு நினைக்கிறேன்...
...எங்கிருந்து இதெல்லாம் கிடைக்குது.. ரூம் போட்டு யோசிப்பாங்க போல !!!!!!!!!!
வருகைக்கு நன்றி தமிழ் பொறுக்கி...
உங்க பேரும் பீதிய கெளப்புற மாதிரி டேரராத்தான் இருக்கு... :-)
நல்லாத்தான்யா கெளப்புறீங்க பீதிய!
வாங்க சிவா...
Superubbbbuuuuu!!!!!!!!
2005ல மும்பை எக்ஸ்பிரஸ் வந்துச்சு..
நல்ல வேலை எதுவும் ஏடாகூடமா எதுவும் அந்த ரயிலுக்கு இது வரைக்கும் ஆகல..
இல்லன நாட்டுல நடக்குற மோசமான நிகழ்வு எல்லாத்துக்கும் கமல் தான் காரணம்னு புடிச்சு உள்ள உக்கார வச்சுருவாங்க..
எப்பிடி இப்பிடியெல்லாம்... அவ்வ்வ்வ்வ்வ்வ். நல்லாவே கிளப்புறாய்ங்க பீதிய
வருகைக்கு நன்றி ஸ்வாமி
ஹி ஹி.. ஆமாம்... வினோத் கௌதம்...
வாங்க எட்வின்
காதலா காதலா படத்தில ஒரு போலி சாமிய காட்டியிருந்தாரே... அதுக்குபிறகுதானா கள்ளச்சாமி பிரேமானந்தா மாட்டினான்? ஆம் என்றால் இதையும் லிஸ்டுல சேர்த்து கொள்ளுங்க...
2008 - Dasavatharam - he talked about some virus (bio weapon)
2009 - Swine flu
Post a Comment