குசேலன் படம் ஆரம்பிக்கும்போது ரஜினி இப்படி சொன்னார் "இந்த படத்தில் நான் 25%, வடிவேலு 25%, பசுபதி தான் 50%". ஆனா படம் ஆரம்பித்ததிலிருந்து இப்ப பாடல் வெளியீட்டு விழா வரை எங்கேயேயும் பசுபதி தலையே தெரியவில்லை.
கதையில் புதியதாக சேர்க்கப்பட்ட நடிகை கதாபாத்திரத்தில் நடிக்கும் நயன்தாராவுக்கு மீடியாவில் கொடுக்கும் முக்கியத்துவம் பசுபதிக்கு இல்லை.
ஒரு வேளை, ரஜினியை காட்டினால் தான் எதிர்பார்ப்பு அதிகமாகும். வியாபாரத்துக்கு நல்லது என்று நினைத்து இருப்பார்களோ? இந்த எதிர்ப்பார்ப்பில் போய் படம் பார்க்கும் பெரும்பாலான ரசிகர்கள் ஏமாறுவதற்குத்தான் வாய்ப்புண்டு.
தசாவதாரம் இசை வெளியீட்டு விழா மேடையில் இசையமைப்பாளர் ஹிமேஷ் இல்லை. அப்போது கூட, ஏன் ரஜினி வரவில்லை, ரஜினி வரவில்லை என்று தான் கேட்டார்களே ஒழிய, யாரும் படத்தின் இசையமைப்பாளர் வரவில்லையே? என்று கேட்கவில்லை. உண்மையில் அந்த விழாவின் நாயகனாக இருக்கவேண்டியது இசையமைப்பாளர்தான். இப்போது, குசேலன் பாடல் வெளியீட்டு விழாவிலும், படத்தின் ஸ்டில்ஸ்'களிலும், கதையின் நாயகன் பசுபதியே இல்லை.
தமிழ் சினிமாவில், இது போன்ற முன்னணி நட்சத்திரங்களின் கண் கூசும் வெளிச்சத்தில் தெரியப்படாமல் போகும் திறமையான மற்ற நட்சத்திரங்களின், தொழில்நுட்ப கலைஞர்களின் நிலை என்று தான் மாறுமோ?
6 comments:
அவர்கள் வராமல் இருந்ததற்கு வேறு காரணங்கள் கூட இருக்கலாம் இல்லையா?
படத்தில் சிறப்பாக இருக்கும் என்று நம்புவோம்..
கிரி,
வேறு என்ன காரணமாக இருக்கக்கூடும்? அவர்கள் சொல்லுவது போல், வேறு படப்பிடிப்புகள் இருந்திருக்குமா? பாலச்சந்தர், ரஜினி, ரஹ்மான் போன்றோரால் கலந்துகொள்ளக்கூடிய விழாவில், கலந்துகொள்ளாமல் இருக்கும் அளவுக்கு அப்படி என்ன வேலையோ, காரணமோ?
உங்களை போலவே படம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசையும் ஆகும்...
பசுபதி சூட்டிங் போயிட்டாராம்...விட்டுட்டு வந்தா பல லட்சம் லாஸ் ஆகிருமாம் Behindwoods.com ல அறிக்கை விட்டிருந்தாரு..
ஹிமேஷ் பிளைட் மிஸ் பண்ணிட்டேனு சொன்னாரு..
வழிப்போக்கன், இதெல்லாம் சமாளிப்பிகேஷன்ஸ். நம்பாதிங்க... :-)
//அவர்கள் வராமல் இருந்ததற்கு வேறு காரணங்கள் கூட இருக்கலாம் இல்லையா?
//
அதிகமா போண்டா சாப்டதுனால அவருக்கு அன்னிக்கு வயித்து போக்காம். :p
//அதிகமா போண்டா சாப்டதுனால அவருக்கு அன்னிக்கு வயித்து போக்காம்.
:-)
Post a Comment