கட்ட கட்டமான கேபின்களில், விரல்களை கீபோர்டில் புதைத்துக்கொண்டு, மானிட்டரில் தகவல்களை தேடிகொண்டிருக்கும், உணர்வுகள் பாதியை இழந்த கூட்டத்தின் நடுவே நான்.
தலை வலித்தது.
"டீ போலாமா?" கேட்டேன் பக்கத்திலிருந்த ஆரியனிடம்.
ஏதோ டெலிவரி செய்யவேண்டுமென்று வர மறுத்தான். அவன் மனைவி டெலிவரிக்கு கூட இவ்வளவு டென்சனாக இருந்திருப்பானா என்பது சந்தேகம்.
சலிப்புடன் மேஜையில் இருந்த மின்னணு எலியை உருட்ட தொடங்கியபோது,, என் மொபைல் போன் ரிங்கியது.
"ஹலோ"
"ஐ யம் கால்லிங் ப்ரம் ......... பேங்க். கேன் யு ஸ்பர் சம் டைம் வித் அஸ்?" என்றது ஒரு பெண் குரல்.
"ரெகார்டிங்?"
"திஸ் இஸ் ரெகார்டிங் ....... இன்சூரன்ஸ் பிளான் சார்?"
"நோ ஸாரி, ஐ அம் நாட் இண்டரஸ்டட்."
"சார், யு டோன்ட் ஹவ் டு பய் சார். லேட் மீ எக்ஸ்ப்ளைன் அபௌட் த பிளான் சார்."
சிறிது யோசித்து, சரி என்று சொல்லி விட்டு என் அலுவலக வேலையை தொடர்ந்தேன்.
அம்மணி கொஞ்சம் நேரம், இன்சூரன்ஸ், போனஸ், டேக்ஸ் ரெலிப் என்றல்லாம் சொல்லியது.
பின்பு நான், "ஆக்சுவலி ஐ அல்ரெடி ஹவ் இன்சூரன்ஸ். ஸோ ஐ டோன்ட் வான்ட் இட் நவ்" என்றேன்.
"பட் சார், ஹீயர் யு கெட் குட் ரிடன்ஸ் சார்"
"ஐ ஹவ் அல்சோ இன்வேஸ்டட் இன் மியுச்சுவல் பண்ட். ஸோ ஐ வில் கெட் குட் ரிடன்ஸ் தேர்"
அம்மணி யோசித்து விட்டு, "சார், நீங்க தமிழ்நாடா?"
"ஆமாம்"
"எந்த ஊரு?"
"மதுரை பக்கம்"
"சார், நீங்க இதுல இன்வெஸ்ட் பண்ணலாமில?"
பார்த்து கொண்டிருந்த வேலையை விட்டு, "பண்ணலாம், ஆனா இப்ப காசு இல்லையே!"
சிரித்து விட்டு, "சார், மதுரையில இருந்து இங்க வந்து வேலை பாக்குறீங்க. பணம் இல்லன்னு சொல்றீங்க?"
"நான் பணத்தை ஏற்கனவே இன்வெஸ்ட் பண்ணிட்டேன்."
"!!!... ம்ம்ம்..."
"நீங்க முன்னாடியே சொல்லி இருக்கலாம் இல்ல? இப்போதைக்கி என்கிட்டே ஏதும் இன்வெஸ்ட்மென்ட் பிளான் இல்ல."
"ஓகே, சார், நான் அப்புறம் எப்ப கால் பண்றது?"
"ஒரு ரெண்டு-மூணு மாசம் கழிச்சு கால் பண்ணுங்க"
"ரெண்டு மூணு மாசமா? அப்ப நான் இருக்கேனோ, இல்லையோ?"
"ஏன் கம்பெனி மாறிடுவீங்களா?"
"அப்படி சொல்லல... இந்த உலகத்துல இருக்கேனோ இல்லையோ சொன்னேன்"
ஒரு நொடி நிதானித்துவிட்டு தொடர்ந்தேன்....
"அப்ப நீங்க ஒரு இன்சூரன்ஸ் வாங்கிகோங்க. உங்க வீட்டுக்கு யூஸ் புல்லா இருக்கும்"
"எங்க மம்மி ஏற்கனவே எனக்கு வாங்கி இருக்காங்க"
"அப்ப என்னைய மட்டும் எதுக்கு இன்னொன்னு வாங்க கட்டாயப்படுத்துறீங்க?"
"நீங்க பசங்க சார். உங்களுக்கு ரொம்ப யூஸா இருக்கும்."
"ஏன்?"
"நீங்க நாலு இடத்துக்கு பைக்குல போவீங்க. ஏதாச்சும் ஆச்சின்னா..."
"ஹலோ... ஏங்க இப்படி போன் பண்ணி செத்து போவிடுவேன்னு சொல்லுறீங்க?"
சிரித்து கொண்டே, "அப்படி இல்ல சார்..."
"பின்ன?"
"சரிங்க... உங்க பிரண்ட் நம்பர் எதாச்சும் கொடுங்க?"
"அப்படி, ஏதும் இல்ல.."
"ஓகே...பை..."
முகம் தெரியா பெண்ணுடனான பயனில்லா உரையாடல் கொடுத்த புத்துணர்ச்சியுடன் வேலையை தொடர்ந்தேன்.