தசாவதாரம் வந்தாலும் வந்தது... ஆளாளுக்கு chaos theory ங்கறாங்க, அவதார mappings சொல்றாங்க, விஞ்ஜானம், ஆன்மிகம் போட்டு புரோட்டா போடுறாங்க. படத்த எடுத்தவங்கள விட இவுங்க அதிகமா யோசிக்கிறாங்க.
அதான் நானும் யோசிக்கலாம்னு உக்கார்ந்து யோசிச்சதின் பயன் இந்த பதிவு...
கரகாட்டகாரன் படத்தை எடுத்துக்கிட்டிங்கன்னா இந்த படத்தின் ஆரம்ப காட்சிகளில் ஒன்றில், ராமராஜன் கனகா வீட்டிற்க்கு சென்று இருப்பார். கனகா அப்பா சண்முகசுந்தரம் இவங்களுக்கு மோர் கொடுக்க சொல்லுவார் ("எம்மா... இந்த தம்பிக்கு கொஞ்சம்..."). கனகாவும் கொடுப்பார். அப்ப ராமராஜன் கேட்பாரு "மோர் என்ன சூடா இருக்கு?"ன்னு. அதுக்கு கனகா "அஆன்... மாடு வெயிலுல நிக்குது... அதான்" ம்பாங்க (கிராமத்து குசும்பு!!!). அப்படியே, இவுங்க நக்கல் பேச்சு தொடர, மெல்ல லவ்ஸ் ஆகி, மேள தாளத்தில் டூயட் பாடி, வில்லன் சந்தானபாரதி (பாருங்க... இவரு இதுலயும் இருக்காரு!!!) இவங்களுக்கு இடைஞ்சலா வர, பின்னாடி போட்டி ஆட்டம் வரை போயி, கஷ்டப்பட்டு இறுதியில ஒன்னு சேருறாங்க.
இந்த மொத காட்சியில கனகா மட்டும் வேற மாதிரி ("அது மோர் இல்ல... கோமியம்"னு) சொல்லி இருந்தா, அதுக்கு அப்புறம் ராமராஜன் அன் கோ அங்க இருந்திருப்பாங்களா? அவரு பாட்டுக்கு ஊருக்கு தெறிச்சி ஓடி, அம்மா காந்திமதி பார்த்திருக்குற பொண்ண கல்யாணம் பண்ணி இருப்பாரு. கனகாவும், சந்திரசேகரு சொன்னபடி சந்தானபாரதியையே கல்யாணம் பண்ணி இருப்பாங்க.
ஆனா பாருங்க, இந்த மோர் டயலாக்னால, சூட்ட தணிக்கலாம்னு வந்தவங்க, கடைசில பூக்குழியில (!) இறங்கி காலு பொசுங்குற அளவுக்கு போய்ட்டாங்க. இதுதான் chaos theory யோட அடிப்படையின்னு டைரக்டர் கங்கை அமரன் சொல்லாம சொல்லுறாரு.
அப்புறம் இந்த வாழைப்பழ சீனை எடுத்துக்கிட்டீங்கனா...
என்னது நிறுத்தனுமா?
அவன நிறுத்த சொல்லு... நான் நிறுத்துறேன்...
50 comments:
//("அது மோர் இல்ல... கொமியம்னு//
:)))
என்னால சிரிப்பை அடக்க முடியலை.
ஹாஆஆஆஆஹாஆ
தல
பிச்சு உதறீட்டீங்க ;-)
ஹ ஹ ஹ! சூப்பருங்க. எப்டினாக இதெல்லாம்?//
என்னது நிறுத்தனுமா?
அவன நிறுத்த சொல்லு... நான் நிறுத்துறேன்//
சூப்பர் பன்ச்
நன்றி அம்பி
நன்றி கானா பிரபா
//எப்டினாக இதெல்லாம்?
எல்லாம் தமிழ்மண பாதிப்புதான். :-)
/
என்னது நிறுத்தனுமா?
அவன நிறுத்த சொல்லு... நான் நிறுத்துறேன்...
/
என்னது நான் நிறுத்தறதா???????
:))))))))))
/
ambi said...
//("அது மோர் இல்ல... கொமியம்னு//
:)))
என்னால சிரிப்பை அடக்க முடியலை.
/
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்
//என்னது நிறுத்தனுமா?//
நாலு பேர சிரிக்கனும்னா எதுவும் தப்பில்ல. நீங்க நிறுத்த வேண்டாம். continue!! hehehe
ஹிஹி! அருமை! அருமை !
ஆனால் நான் நினைக்கிறேன் இதில் சின்னதொரு எழுத்து பிழை உள்ளதென்று!
//("அது மோர் இல்ல... கொமியம்னு//
"கோமியம்" என்று எழுத வேண்டும் என்று நினைக்கிறேன்! கோ என்றால் பசு என்று பொருள் படும்!பிழை இருந்தாலும் நானும் திருத்தி கொள்கிறேன்!
கோமியத்தில சர்க்கரை நோயை குணப்படுத்தக் கூடிய வேதிப்பொருட்கள் இருக்குன்னு ஒரு கர்நாடக கால்நடை ஆராய்ச்சி மையம் கண்டு பிடிச்சிருக்கிறாங்க..
இன்னம் கொஞ்சம் நாளில நம்மில் பாதி பேர் அதை குடிக்காட்டியும் கோமியத்திலிருந்து செய்ற மருந்துகளை சாப்பிடுவோம்..
நன்றி மங்களூர் சிவா
//நாலு பேர சிரிக்கனும்னா எதுவும் தப்பில்ல.
ஆஆஆஆஆஆ........ ஆஆஆ....
//அளவுக்கு போய்ட்டாங்க. இதுதான் chaos theory யோட அடிப்படையின்னு டைரக்டர் கங்கை அமரன் சொல்லாம சொல்லுறாரு.//
சந்திரமுகி வந்தபோது ஸ்பிலிட் பர்சனாலிட்டி தியரி கற்றுக் கொண்டோம். இப்போ chaos தியரியா ?
இந்த சினிமா காரவங்கதான் எம்புட்டு நல்லவங்களாக இருக்காங்க.
:)
((-
//நாலு பேர சிரிக்கனும்னா எதுவும் தப்பில்ல.//
அது இல்லே....
நாலுபேரு நக்கலாக சிரிச்கனும்னா ஜேகே ரித்தீசாக மாறினாலும் தப்பு இல்லை.
:)
:) :)
கஜந்தினி,
//சின்னதொரு எழுத்து பிழை //
எழுத்து பிழையை சுட்டி காட்டியதற்கு நன்றி. பிழை திருத்தப்பட்டது.
//கோ என்றால் பசு என்று பொருள் படும்//
விளக்கத்திற்கு மிக்க நன்றி. :-)
புபட்டியன்,
மருத்துவ செய்திக்கு நன்றி.
இப்படி ஒரு தெரபியே இருப்பதாக இதிலிருந்து தெரிந்து கொண்டேன்.
http://en.wikipedia.org/wiki/Urine_therapy
அது மட்டுமா கோவி.கண்ணன், நம்ம ஆளுங்க விஸ்கி ஊத்தி ஆபரேசன் பண்றது, தோட்டாவால புற்றுநோயை குணப்படுத்துரனு பல மருத்துவ புரட்சிகளையும் பண்ணி இருக்காங்களே.
// ((-
சுகுணாதிவாகர், நீங்கள் வருந்தும்படி நான் ஏதாவது சொல்லி விட்டேனா?
//நாலுபேரு நக்கலாக சிரிச்கனும்னா ஜேகே ரித்தீசாக மாறினாலும் தப்பு இல்லை
ஆனாலும் பாவங்க அவரு. தன்னை ஆக்சன் ஹீரோவா நெனச்சிக்கிட்டு சுத்தி இருக்குரவுங்கெல்லாம் நூறு நூறு ரூபா கொடுத்திட்டு நடிச்சிட்டு இருக்காரு. நம்ம கண்ணுக்கு காமெடியா தெரியுது.
மதுர சிங்கம் வாழ்க.... :-)
நன்றி டாக்டர்.
அய்யோ சிரிச்சி சிரிச்சு கண்ணுல தண்ணி வரவச்சிட்டீங்க.. நல்லா இருங்க..
சிரிப்பு நல்ல மருந்தாம்..அதையும் ஒரு படத்துல என்ன படம்.. ஆங் வசூல்ராஜா எம் பி பி எஸ்..ல சொல்லி இருக்காங்களாக்கும்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நன்றிங்க... கயல்விழி முத்துலெட்சுமி.
நன்றி ச்சின்னப் பையன்.
//சந்திரமுகி வந்தபோது ஸ்பிலிட் பர்சனாலிட்டி தியரி கற்றுக் கொண்டோம். இப்போ chaos தியரியா ?
இந்த சினிமா காரவங்கதான் எம்புட்டு நல்லவங்களாக இருக்காங்க.//
அதற்கு முன்னரே மர்மதேசத்தில் அதை சொல்லிட்டாங்க சார் !!!
//அது மட்டுமா கோவி.கண்ணன், நம்ம ஆளுங்க விஸ்கி ஊத்தி ஆபரேசன் பண்றது, தோட்டாவால புற்றுநோயை குணப்படுத்துரனு பல மருத்துவ புரட்சிகளையும் பண்ணி இருக்காங்களே.//
தோட்டாவால புற்றுநோயை குணப்படுத்து டூ மச்.
ஆனா விஸ்கி ஊத்தி ஆபரேஷன் பண்ணலாம். Surgical Spirit, Whisky இரண்டிலும் alcohol percentage தான் வேறு
//இந்த மொத காட்சியில கனகா மட்டும் வேற மாதிரி ("அது மோர் இல்ல... கொமியம்னு") சொல்லி இருந்தா, அதுக்கு அப்புறம் ராமராஜன் அன் கோ அங்க இருந்திருப்பாங்களா? //
சூப்பரோ சூப்பர் :-)
கிளப்பிட்டீங்க..... அப்படியே " நான் வாழைப்பழம் வாங்கலைனா சொன்னேன். வாங்கிருந்தா நல்லா இருக்கும்னு தானே சொன்னேன் "!!!
:-))
//ஆனா விஸ்கி ஊத்தி ஆபரேஷன் பண்ணலாம்.
எனக்கு இது ஆச்சர்யமான செய்தி, டாக்டர்.
நன்றி வெட்டிப்பயல்.
//" நான் வாழைப்பழம் வாங்கலைனா சொன்னேன். வாங்கிருந்தா நல்லா இருக்கும்னு தானே சொன்னேன் "!!!
ஹா ஹா ஹா... சூப்பர் களப்பிரர்...
நன்றி குமரன் (kumaran)
//ஆனா பாருங்க, இந்த மோர் டயலாக்னால, சூட்ட தணிக்கலாம்னு வந்தவங்க, கடைசில பூக்குழியில (!) இறங்கி காலு பொசுங்குற அளவுக்கு போய்ட்டாங்க. இதுதான் chaos theory யோட அடிப்படையின்னு டைரக்டர் கங்கை அமரன் சொல்லாம சொல்லுறாரு.
//
கலக்கல் காமெடி. நல்லா சிரிச்சேன்.
:)
:)))
வாணாம்... சிரிப்பை அடக்க முடியலை... விட்டுங்க சரவணகுமரன்...
வாங்க.... நிஜமா நல்லவன், கைப்புள்ள, பைத்தியக்காரன்.
இது போல நிறைய எடுத்துக்காட்டுகளோடு ”Chaos theory - ஓர் எளிய அறிமுகம்” னு நீங்க ஏன் ஒரு புத்தகம் எழுதகூடாது?????
எப்படிங்க..... இப்படியெல்லாம்....
ஹைய்யோ ஹைய்யோ.....
தூள்:--)))))))))))))
நல்ல யோசனை... நன்றி மணிமொழியன்.
நன்றி துளசி அம்மா.
:))
நன்றி கப்பி பய...
இப்பத்தான் பதிவ பாத்திங்களா?
//இந்த மொத காட்சியில கனகா மட்டும் வேற மாதிரி ("அது மோர் இல்ல... கோமியம்"னு) சொல்லி இருந்தா, அதுக்கு அப்புறம் ராமராஜன் அன் கோ அங்க இருந்திருப்பாங்களா? //
ஹா ஹா ஹா ஹா செம காமெடிங்க ..
Chaos தியரி ன்னதும் எதோ பெரிய விஷயம் போல ..நமக்கெதுக்குன்னு வராம இருந்துட்டேன்....இன்னைக்கு தான் உங்க பதிவையே பார்த்தேன்
//Chaos தியரி ன்னதும் எதோ பெரிய விஷயம் போல ..நமக்கெதுக்குன்னு வராம இருந்துட்டேன்....இன்னைக்கு தான் உங்க பதிவையே பார்த்தேன்
ஓ... அப்படிங்களா, கிரி? பெரிய மேட்டர் எழுதுற அளவுக்கு நமக்கு... சாரி... எனக்கு அறிவு இல்லங்க... :-)
தாராளமா அந்த லிஸ்ட் ல என்னையும் சேர்த்துக்குங்க :-))))
//அவன நிறுத்த சொல்லு... நான் நிறுத்துறேன்...//
;-))
நன்றி யோசிப்பவரே...
அன்பின் சரவண குமரன்
கயாஸ் தியரின்னா என்னங்கறத ? அழகா படம் புடுச்சி இடுகையா இட்டுட்டீங்க - ராமராஜன் மோருக்குப் பதிலா ..... குடிச்சிருந்தா பின்னாலே இதெல்லாம் நடக்காதுல்ல....
நல்லாருக்கு - சிரிச்சேன்
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
Post a Comment