Tuesday, June 17, 2008

தசாவதாரம் - கேஸ் போட பத்து ஆலோசனைகள்

ஏற்கனவே நிறைய பேருக்கு (என்னையும் சேர்த்து தான்) "DasavatharaReviewoPhobhia" என்ற நோய் பீடித்திருப்பதால், இது படத்தை பற்றிய விமர்சனம் இல்லை. எப்படி எல்லாம் கேஸ் போடுறதுன்னு முக்கி முனங்கி யோசிச்சிட்டு இருக்கும் சிலருக்கான உதவும் சிறு முயற்சி.


1) ஒரு வாயில்லா பிராணியை (ரவிக்குமாரை சொல்லலை... குரங்கை சொன்னேன்...) துன்புறுத்தி படம் எடுத்ததுக்கு ரெட் கிராசோ புளு கிராசோ, அவங்க கேஸ் போடலாம்.
2) தெலுங்கர்களை கிண்டல் செய்து படம் எடுத்ததுக்கு ஏதாவது ஆந்திராகாரு கேஸ் போடலாம்.
3) வாய்ப்பில்லா இயக்குனர்கள் சிலரை (சந்தானபாரதி, சுந்தர்ராஜன், வாசு etc) மட்டும் பயன்படுத்தி கொண்டதற்கு, வாய்ப்பு வழங்க படாத மனோபாலா, ராஜ்கபூர் போன்ற இயக்குனர்கள் வழக்கு போடலாம் (அட்லீஸ்ட் இயக்குனர்கள் சங்கத்தில்)
4) மொழி பெயர்ப்பாளர்களை மல்லிகா செராவத் கதாபாத்திரம் மூலமாக மோசமாக சித்தரித்தற்கு மொழிப்பெயர்ப்பாளர்கள் சங்கம் சார்பாக கேஸ் போடலாம்.
5) பெருமாள் சிலையை சரியாக கையாளதற்கு யாரை கேஸ் போட சொல்லலாம்? சரி... அதுக்கு தான் நிறைய பேரு இருக்காங்களே.
6) Beagles என்ற பெயருடைய எந்த நிறுவனமாவது (கிட்டத்தட்ட அந்த மாதிரி வந்தாலும்) தங்களை தவறாக காட்டியதற்கு வழக்கு தொடரலாம்.
7) கூட்டணி தர்மத்திற்கு ஏற்ப தங்களுக்கு கடைசி காட்சியில் மேடையில் இடம் வழங்காததற்கு கருணாநிதி சதியே காரணம் என்று ராமதாஸ் அறிக்கை விடலாம்.
8) தன்னிடம் ஆலோசிக்காமல் ஏதோ தன்னை விட பெரிதாக அவாளுக்கு தெரிந்தது போல் FBI, CIA, Bush, RAW போன்றவற்றை வைத்து படம் எடுத்ததற்காக சுப்ரமணிய சுவாமி வழக்கு தொடரலாம்.
9) இதுவரை OSCAR என்ற பெயரில் படம் எடுத்து வந்து இப்படத்தின் போது AASKAR என்று பெயரை மாற்றி, இதில் கூட தங்கள் தலைவருக்கு OSCAR கிடைக்காமல் போனதற்கு, கமல் ரசிகர்கள், ரவிசந்திரன் மீதும் அந்த ஜோசியக்காரன் மீதும் வழக்கு தொடரலாம்.
10) பத்து கதாபாத்திரத்தில் ஒரு கதாபாத்திரம் தான் பெண் என்றும், தங்களுக்கு குறைந்தபட்சம் மூன்று கேரக்டர்களாவது வழங்க பட்டிருக்கவேண்டும் என்று பெண்ணுரிமை சங்கங்கள் ஏதேனும் கோர்ட் செல்லலாம்.

இனி என்னுடைய ஒரு தலைப்பட்சமான இப்படம் குறித்த கருத்து:

இந்த படத்தை ஷங்கர் எடுத்து இருந்தால் இன்னும் சிறப்பா தரமா வந்து இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். ஷங்கர் கிட்ட சரக்கு தான் இல்ல. மத்தபடி இந்த ஒட்டு வேலை, packaging techniques எல்லாம் அவருக்கு அத்துப்படி. சரக்கு இல்லாத காரணத்தால்தான் சுனாமி வந்து ஒரு பாட்டுல டான்ஸ் ஆடுனா எப்படி இருக்குங்கற லெவலுல அவரு யோசிச்சிட்டு இருக்காரு.

அதேபோல் ஹிமேஷ்க்கு பதிலாக நம்ம தமிழ் இசை புயல் ரஹ்மான் இசையமைத்து இருந்தால் இன்னும் இன்டர்நேஷனல் லெவலுக்கு இருந்திருக்கும். முழுக்க முழுக்க தமிழர்களின் முயற்சி என்று இருந்திருக்கும். இப்படி ஹிந்திக்கு என்று ஹிமேஷும், தெலுங்குக்கு என்று தேவி ஸ்ரீயும் தேவைபட்டு இருக்க மாட்டார்கள்.

படத்தோட திருஸ்டி பொட்டு அந்த பாட்டி வேஷம்தான். கை பெருசா, சோர்வோ, தளர்ச்சியோ இல்லாமல், வேகமாக நடந்து கொண்டு.... எப்படி தான் இதை படம் எடுக்கும்போது கண்டு கொள்ளாமல் விட்டார்களோ?

13 comments:

இன்பா (எ) ச.சிவானந்தம் said...

உலக மகாநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்திருக்கும் தசாவதாரம் படம் வெளிவராமல் தடுக்க முயன்ற பல்வேறு முயற்சிகள் தோற்றுப் போனது அனைவருக்கும் தெரிந்ததே. ஏதாவது ஒரு காரணம் காட்டி இப்படத்தின் மீது வழக்குப் போட துடித்துக் கொண்டிருக்கும் பதர்களுக்கு இந்த பத்து ஆலோசனைகள் பயனுள்ள வகையில் அமையும்.

Anonymous said...

//பத்து கதாபாத்திரத்தில் ஒரு கதாபாத்திரம் தான் பெண் என்றும், தங்களுக்கு குறைந்தபட்சம் மூன்று கேரக்டர்களாவது வழங்க பட்டிருக்கவேண்டும் என்று பெண்ணுரிமை சங்கங்கள் ஏதேனும் கோர்ட் செல்லலாம்//

SUPER :)

Anonymous said...

//மூன்று கேரக்டர்களாவது வழங்க பட்டிருக்கவேண்டும் என்று பெண்ணுரிமை சங்கங்கள் ஏதேனும் கோர்ட் செல்லலாம்//

அதான் மூன்று காரெக்டர்கள் இருக்கின்றனவே.
1) அசின்
2) மல்லிகா ஷெராவத்
3) கமலா பாட்டி

அப்புறம் ஏன் இந்த மனக்குறை.

வால்பையன் said...

//மொழி பெயர்ப்பாளர்களை மல்லிகா செராவத் கதாபாத்திரம் மூலமாக மோசமாக சித்தரித்தற்கு மொழிப்பெயர்ப்பாளர்கள் சங்கம் சார்பாக கேஸ் போடலாம்.//

டோண்டு சார் கவனிப்பாராக

வால்பையன்

சரவணகுமரன் said...

//அதான் மூன்று காரெக்டர்கள் இருக்கின்றனவே.

அனானி, மொத்த கதையில் மூன்று இல்லை. கமலின் தசாவதாரங்களில் மூன்று.

சரவணகுமரன் said...

சிவானந்தம், சேவியர், வால்பையன் அவர்களுக்கு,

பின்னுட்டத்திற்கு நன்றி...

மங்களூர் சிவா said...

//பத்து கதாபாத்திரத்தில் ஒரு கதாபாத்திரம் தான் பெண் என்றும், தங்களுக்கு குறைந்தபட்சம் மூன்று கேரக்டர்களாவது வழங்க பட்டிருக்கவேண்டும் என்று பெண்ணுரிமை சங்கங்கள் ஏதேனும் கோர்ட் செல்லலாம்//

SUPER
:)))))))))

கிரி said...

//இதுவரை OSCAR என்ற பெயரில் படம் எடுத்து வந்து இப்படத்தின் போது AASKAR என்று பெயரை மாற்றி, இதில் கூட தங்கள் தலைவருக்கு OSCAR கிடைக்காமல் போனதற்கு, கமல் ரசிகர்கள், ரவிசந்திரன் மீதும் அந்த ஜோசியக்காரன் மீதும் வழக்கு தொடரலாம்//

:-))))))))))

சரவணகுமரன் said...

நன்றி மங்களூர் சிவா, கிரி

ரவிஷா said...

தெலுங்கர்களை கிண்டல் செய்தது இருக்கட்டும்! தசாவதார தெலுங்கு version-இல் "பலராம கவுண்டர்" என்று மாற்றப்பட்டு தெலுங்கு பேசும் கவுண்டராக காண்பித்திருக்கிறார்களாம்! என் நண்பர் சொன்னார்! இதுக்கு என்ன சொல்ல வர்றீங்க?....

சரவணகுமரன் said...

//"பலராம கவுண்டர்" என்று மாற்றப்பட்டு தெலுங்கு பேசும் கவுண்டராக காண்பித்திருக்கிறார்களாம்

யாரோ நாடார் என்று சொன்னார்கள்.

எப்படியோ... அந்தந்த சாதி சங்கங்கள் வழக்கு தொடரலாம்.

Anonymous said...

//இதுவரை OSCAR என்ற பெயரில் படம் எடுத்து வந்து இப்படத்தின் போது AASKAR என்று பெயரை மாற்றி, இதில் கூட தங்கள் தலைவருக்கு OSCAR கிடைக்காமல் போனதற்கு, கமல் ரசிகர்கள், ரவிசந்திரன் மீதும் அந்த ஜோசியக்காரன் மீதும் வழக்கு தொடரலாம்//

பெயர் மாற்றத்துக்கு காரணம் ஜோசியம் அல்ல, ஒரிஜினல் ஆஸ்கர் விருதுக் குழு கொடுத்த அழுத்தம் எனப் பேச்சு?!!

சரவணகுமரன் said...

//பெயர் மாற்றத்துக்கு காரணம் ஜோசியம் அல்ல, ஒரிஜினல் ஆஸ்கர் விருதுக் குழு கொடுத்த அழுத்தம் எனப் பேச்சு?!!

உண்மைதான் போலிருக்கு... நானும் இதிலிருந்து தெரிந்து கொண்டேன்.
http://www.televisionpoint.com/news2008/newsfullstory.php?id=1211975894

ஆஸ்கார் அவார்டும் தரமாட்டேன்குறாங்க... பட நிறுவனம் பேருலயும் ஆஸ்கார் இருக்க கூடாதுங்கறாங்க... அப்படியானால் இதற்காக ரசிகர்கள் ஆஸ்கார் அகாடமி மேல கேஸ் போடலாம்.

ஆனா பாருங்க... இந்த பேருலயும் ஜோசியம் விளையாடி இருக்கு.