இன்று தினத்தந்தியில வந்த செய்தி இது.
விவரம் அப்புறம் சொல்றேன். மேல படிங்க.
ஒரு விழாவுக்காக ஒரு விழா குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு உறுப்பினர்கள் பட்டியல் இதோ.
1. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.எஸ்.பழனிச்சாமி
2 . டைரக்டர் பாரதிராஜா
3. கனிமொழி எம்.பி
4. வக்கீல் நளினி சிதம்பரம்
5. தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன்
6. நல்லி குப்புசாமி
7. ஏவி.எம்.சரவணன்
8. பழனி ஜி.பெரியசாமி
9. மதிவதனன் ஐ.ஏ.எஸ்
10. ரவி ஐ.பி.எஸ்
11. வசந்தபவன் ரவி
12. கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி
அப்படி என்ன விழா தெரியுமா?
ஒலிம்பிக்சோ அல்லது ஏதோ வெளிநாட்டு தலைவர் கலந்து கொள்ளும் விழாவோ அல்ல....
வைரமுத்து மகன் திருமணத்துக்கு தான் இந்த ஏற்பாடு எல்லாம்...
கவிஞரே.... உங்களுக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியல? பல்கலைக்கழக துணைவேந்தர், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., வக்கீல், மத்திய மந்திரி எல்லாம் சேர்த்து குழு அமைக்குற அளவுக்கு அப்படி என்ன இந்த கல்யாணத்துல முக்கியத்துவம் இருக்கு?
சிலர் வெட்டியா இருக்கலாம். அதுக்காக இப்படியா?செய்தி இங்கே.
4 comments:
இந்த மாதிரி எல்லாரும் சேந்து ஜல்லியடிச்சுத்தான் அவரைப் பெரிய ஆள் ஆக்கிட்டாங்க.
இவரு தலை கால் புரியாம எழுதுறதெல்லாம், காவியம், இதிகாசாம்னு பேரை வச்சுக்கிட்டு நம்மள
வாதிக்கிறார்.
அப்போ இவ்ளோ பேரும் சும்மாதான் இருக்காங்களா!!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ச்சின்னப் பையன்,
முன்னுதாரணமாக இருக்க வேண்டிய முதல்வரே, ஒரு விழா, படம் விடாம போகும் போது, இவுங்க அதற்கான வேலைகளை தான் பாப்பாங்க.
வேலன்,
என்ன பண்றது? தலையெழுத்து.
Post a Comment