பெண்கள் விவரமானவர்களா? விவரமில்லாதவர்களா? ஜெயா டிவியில் “வல்லமை தாராயோ” படத்தின் பெண் இயக்குனரின் பேட்டியைக் கண்ட போது எழுந்த கேள்வி இது. அவரிடம் கேட்ட கேள்வி இதுதான். “இந்த படம் மௌன ராகம் போலுள்ளதே?”. இதற்கு மேடத்தின் பதில், “நான் மணிரத்னம் சாரின் ரசிகை. அவர் படங்கள் எல்லாம் எனக்கு பிடிக்கும். என்னோட முதல் படத்தையே அவர் படம் போல் உள்ளது என்று கூறுவது எனக்கு சந்தொஷத்தை கொடுக்கிறது”. அதாங்க கேக்குறேன். பெண்கள் விவரமானவர்களா? விவரமில்லாதவர்களா?
--------------------------------------------------------------------------------
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் “ஆச்சி தமிழ் பேச்சு எங்கள் உயிர் மூச்சு” நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரங்களாக ஒளிப்பரப்பான “தமிழா நீ பேசுவது தமிழா” என்ற சுற்று சுவாரஸ்யமாக இருந்தது. அதில் நிகழ்ச்சி தொகுப்பாளர் (பேரு ஜனனி… சூப்பரா இருக்காங்க… :-)) நாம் நடைமுறையில் பேசுவது போல் ஒரு சொற்றொடரை கூறுவார். அதாவது ஆங்கிலம், சமஸ்கிருதம் கலந்து. அதை போட்டியாளர் தமிழ் வார்த்தைகளால் கூற வேண்டும். நிஜமாகவே ரொம்ப கஷ்டங்க. மற்ற சுற்றுகளில் ஜொலித்தவர்கள் கூட (தமிழாசிரியர்களும்) இதில் திணறினார்கள். உதாரணத்திற்கு, பெட்ரோல், டிராக்டர், ரிலாக்ஸ் போன்ற வார்த்தைகளை நினைத்து பாருங்கள். நடுவர்கள் நெல்லை கண்ணன், சுப.வீரபாண்டியன் அருமையாக பேசினார்கள். நெல்லை கண்ணன் ஒரு நவீனகால இளைஞன் கூறியதாக இதை கூறினார், “தமிழுக்கு ஒரு கஷ்டம் என்றால் அதை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. We will fight for it”!!!. தமிழை அடிப்படையாக வைத்து அமைந்துள்ள இந்த நிகழ்ச்சிக்காக விஜய் டிவியை பாராட்டலாம், நிகழ்ச்சியின் முடிவில் ஆங்கிலத்தில் காட்டப்படும் எழுத்தையும் (டைட்டிலையும்) தமிழில் காட்டினால்.
--------------------------------------------------------------------------------
சரத்குமார் நடித்த “ஐயா” படத்தில் உள்ள ஒரு நகைச்சுவை காட்சி இது. வடிவேல் ஒரு தியேட்டரின் முதலாளி. தியேட்டரில் ரஜினியின் “அருணாசலம்” படத்தை திரையிட்டுயிருப்பார். படத்தை பார்க்க ஒரு குறவன் அவனுடைய குரங்குடன் நுழைய முயல, வடிவேலு அவனை விரட்டியடிப்பார். குறவன் வடிவேலுவை பழிவாங்க, குரங்கிடம், படத்தின் கடைசி ரீலை ஆபரேட்டர் ரூமிலிருந்து எடுத்து வர சொல்லுவார். குரங்கும் அதை எடுத்து ஓட, வடிவேலும் துரத்த, கடைசியில் வடிவேலு பிடிக்க முடியாமல் சோகமாக இருப்பார். ஆபரேட்டர் “இப்ப என்ன செய்ய?” என்று கேட்க, வடிவேலு யோசித்து விட்டு சொல்லுவார்.
“அடுத்த வாரம் தியேட்டருல என்ன படம்?”
“பாட்ஷா”
“அதுல யாரு ஹீரோ-வில்லன்?”
“ரஜினி-ரகுவரன்”
“இதுல யாரு ஹீரோ-வில்லன்?”
“ரஜினி-ரகுவரன்”
“அப்ப அத எடுத்து இதுல போட்டுரு”
அவரும் அப்படியே செய்ய, படம் எந்த இடையூரும் இல்லாமல் முடிய, மக்கள் சந்தோஷமாக வெளியே செல்லுவார்கள்.
இதற்கு மேல் ரஜினி படத்தை எப்படி கிண்டல் செய்ய முடியும்?
5 comments:
nalla kartpanai....
ஆஹா,
ஐயா படத்தின் காட்சியைப் பத்தி எழுதியிருக்கீங்களே இதைத்தான் சிண்டு முடியிற வேலைன்னு சொல்வாங்களோ!!!! :)
நல்ல நகைச்சுவை.
//இதைத்தான் சிண்டு முடியிற வேலைன்னு சொல்வாங்களோ!!!! :)
அப்படி எல்லாம் இல்லை, புதுகைத் தென்றல். :-)
:-))))))
வாங்க சின்னபையன்...
Post a Comment