Monday, June 30, 2008

சிரிக்க வைத்தவை : 30-06-2008

பெண்கள் விவரமானவர்களா? விவரமில்லாதவர்களா? ஜெயா டிவியில் “வல்லமை தாராயோ” படத்தின் பெண் இயக்குனரின் பேட்டியைக் கண்ட போது எழுந்த கேள்வி இது. அவரிடம் கேட்ட கேள்வி இதுதான். “இந்த படம் மௌன ராகம் போலுள்ளதே?”. இதற்கு மேடத்தின் பதில், “நான் மணிரத்னம் சாரின் ரசிகை. அவர் படங்கள் எல்லாம் எனக்கு பிடிக்கும். என்னோட முதல் படத்தையே அவர் படம் போல் உள்ளது என்று கூறுவது எனக்கு சந்தொஷத்தை கொடுக்கிறது”. அதாங்க கேக்குறேன். பெண்கள் விவரமானவர்களா? விவரமில்லாதவர்களா?


--------------------------------------------------------------------------------

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் “ஆச்சி தமிழ் பேச்சு எங்கள் உயிர் மூச்சு” நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரங்களாக ஒளிப்பரப்பான “தமிழா நீ பேசுவது தமிழா” என்ற சுற்று சுவாரஸ்யமாக இருந்தது. அதில் நிகழ்ச்சி தொகுப்பாளர் (பேரு ஜனனி… சூப்பரா இருக்காங்க… :-)) நாம் நடைமுறையில் பேசுவது போல் ஒரு சொற்றொடரை கூறுவார். அதாவது ஆங்கிலம், சமஸ்கிருதம் கலந்து. அதை போட்டியாளர் தமிழ் வார்த்தைகளால் கூற வேண்டும். நிஜமாகவே ரொம்ப கஷ்டங்க. மற்ற சுற்றுகளில் ஜொலித்தவர்கள் கூட (தமிழாசிரியர்களும்) இதில் திணறினார்கள். உதாரணத்திற்கு, பெட்ரோல், டிராக்டர், ரிலாக்ஸ் போன்ற வார்த்தைகளை நினைத்து பாருங்கள். நடுவர்கள் நெல்லை கண்ணன், சுப.வீரபாண்டியன் அருமையாக பேசினார்கள். நெல்லை கண்ணன் ஒரு நவீனகால இளைஞன் கூறியதாக இதை கூறினார், “தமிழுக்கு ஒரு கஷ்டம் என்றால் அதை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. We will fight for it”!!!. தமிழை அடிப்படையாக வைத்து அமைந்துள்ள இந்த நிகழ்ச்சிக்காக விஜய் டிவியை பாராட்டலாம், நிகழ்ச்சியின் முடிவில் ஆங்கிலத்தில் காட்டப்படும் எழுத்தையும் (டைட்டிலையும்) தமிழில் காட்டினால்.


--------------------------------------------------------------------------------

சரத்குமார் நடித்த “ஐயா” படத்தில் உள்ள ஒரு நகைச்சுவை காட்சி இது. வடிவேல் ஒரு தியேட்டரின் முதலாளி. தியேட்டரில் ரஜினியின் “அருணாசலம்” படத்தை திரையிட்டுயிருப்பார். படத்தை பார்க்க ஒரு குறவன் அவனுடைய குரங்குடன் நுழைய முயல, வடிவேலு அவனை விரட்டியடிப்பார். குறவன் வடிவேலுவை பழிவாங்க, குரங்கிடம், படத்தின் கடைசி ரீலை ஆபரேட்டர் ரூமிலிருந்து எடுத்து வர சொல்லுவார். குரங்கும் அதை எடுத்து ஓட, வடிவேலும் துரத்த, கடைசியில் வடிவேலு பிடிக்க முடியாமல் சோகமாக இருப்பார். ஆபரேட்டர் “இப்ப என்ன செய்ய?” என்று கேட்க, வடிவேலு யோசித்து விட்டு சொல்லுவார்.

“அடுத்த வாரம் தியேட்டருல என்ன படம்?”

“பாட்ஷா”

“அதுல யாரு ஹீரோ-வில்லன்?”

“ரஜினி-ரகுவரன்”

“இதுல யாரு ஹீரோ-வில்லன்?”

“ரஜினி-ரகுவரன்”

“அப்ப அத எடுத்து இதுல போட்டுரு”

அவரும் அப்படியே செய்ய, படம் எந்த இடையூரும் இல்லாமல் முடிய, மக்கள் சந்தோஷமாக வெளியே செல்லுவார்கள்.

இதற்கு மேல் ரஜினி படத்தை எப்படி கிண்டல் செய்ய முடியும்?

Friday, June 27, 2008

(ரொம்ப) பெரீரீரீய திருப்புமுனை :-)

நம்ம சர்வேசன் அண்ணன் அவுங்கவுங்க வாழ்க்கையில நடந்த திருப்புமுனைகளை பத்தி பதிவு போட சொல்லியிருந்தாரு. சரி, நாமளும் போட்டுடலாம்னு முடிவு பண்ணி யோசிச்சா, எந்த திருப்புமுனைய பத்தி போடுறதுன்னு ஒரே குழப்பம். ஏன்னா, நம்ம வாழ்க்கையில தான் ஏகப்பட்ட திருப்புமுனைய பார்த்தாச்சே? சரி, சமீபத்துல (1962லலாம் இல்லை!) , இன்னைக்கி காலையில நடந்த ஒரு நிகழ்ச்சிய சொல்றேன்... ரொம்பவே நெகிழ்ந்துடுவீங்க...

காலையில ஆபிஸ்க்கு வீட்ல இருந்து கிளம்பி பைக்குல வந்துட்டு இருக்கும்போதே மனசில சின்னதா ஒரு சஞ்சலம். என்னமோ இன்னைக்கி நடக்க போகுதுன்னு. சரி, பாத்துக்கிலாம்னு போயிட்டு இருக்கும்போது, நம்ம பக்கத்து வீட்டு பையன் ரோட்ல நடந்து போயிட்டு இருக்கான். அவன் கழுத்துல பாக்குறேன். எனக்கு ஒரே அதிர்ச்சி.


அவன் ஸ்கூல் ஐடி கார்டு மாட்டி இருக்கான். சரி, நம்ம பாக்கெட்டுல ஐடி இருக்கான்னு பார்த்தா, இல்ல. போச்சுடா, மறந்துடோம் போல'ன்னு வீட்டுக்கு திரும்ப வேண்டியதா போச்சு. அப்ப, வண்டியில திரும்பினேன் பாருங்க... அதுதான் இன்னைக்கி என் வாழ்க்கையில நடந்த பெரிய திருப்புமுனை. 360 டிகிரினா சும்மாவா? அதுக்கு அந்த பையன்தான் காரணம். அவனுக்கு இந்த பதிவு மூலம் என் நன்றிய தெரிவிச்சுக்கிறேன். அவன் எப்ப பெரியவனாகி இத வந்து படிக்க போறானோ?


நடப்பது எல்லாம் நன்மைக்கேன்னு சும்மாவா சொன்னாங்க? வீட்டுக்கு போனபெறவு தான் அது எவ்ளோ உண்மையின்னு எனக்கு தெரிஞ்சது. வீட்டுக்கு உள்ள நுழைஞ்சா, என் டூத்ப்ரேஷ் டிவி டேபிள் மேல இருக்கு. அப்பத்தான் நான் இன்னைக்கி பல் தேய்க்காம மறந்து ஆபிஸ் கிளம்புனது ஞாபகம் வருது. (ச்சி... அதான் சாப்டும்போது வாய் நமநமன்னு இருந்திச்சா?). ச்சே... நம்ம திருப்புமுனை நமக்கு எம்மாம் பெரிய விஷயத்த ஞாபக படுத்திருக்குன்னு நினைச்சிக்கிட்டே பல் தேய்ச்சேன்.


பின்ன என்னங்க? எப்ப பாரு, பதிவு போடுறத பத்தியே நினைச்சிகிட்டு இருந்தா இப்படி தான் ஆகும். சில பேரு கனவுல எல்லாம் பதிவு போடுறாங்களாம். காரணம் ஒன்னுதாங்க. பிளாக்கர், வோர்ட்ப்ரெஸ் கணக்குல இருந்து ஆபிஸ் இன்டர்நெட் வரை எல்லாம் ஓசி. ஒரு வேளை, கூகிள் "பணவீக்கம் அதிகமாயிடுச்சு... இனி அக்கௌன்ட் ஓசியா தரமுடியாது. ஒரு கணக்குக்கு ரெண்டு டாலர்தான்" சொன்னா இங்க ஒரு பயபுள்ள இருக்கமாட்டான். தமிழ்மணத்துல ஈ கும்மி அடிச்சி டான்ஸ் ஆடும். அப்புறம் எங்க, பதிவு எழுதி சமூகத்த புரட்டி போடுறது? :-)


சரி, திருப்புமுனைக்கு வருவோம். சர்வேசன் அண்ணன் "திருப்புமுனைல, வேற பக்கம் திரும்பியிருந்தா என்ன ஆகியிருக்கலாம்னும் சொல்லுங்க"ன்னு கேட்டு இருந்தாரு. என்ன ஆயிருக்கும்? ரோட்டுக்கு அந்த பக்கம் BSNL க்காரன் தோண்டியிருந்த குழிக்குள்ள விழுந்திருப்பேன். அப்பாடி! சுவாரஸ்யமா, உண்மைய சொல்லியாச்சு.


இதுப்போல நான் பல திருப்புமுனைகளை சந்திச்சிருக்கேன். உதாரணமா, ஊட்டி, கொடைக்கானல், திருப்பதி போறப்ப, ஒரே நாள்'லே பல டர்னிங் பாயிண்ட்'கள பார்த்துருக்கேன். அந்த மாதிரி, சமீபத்துல, கன்னியாகுமரி போனப்ப, விவேகானந்தர் பாறை போயி திரும்பி வருரத நம்ம நாட்டின் திருப்புமுனையா எடுத்துக்கிலாம்'ங்கறத கண் கூடா பார்த்தேன். ஆனா இங்கெல்லாம், திருப்புமுனையில அந்த பக்கம் திரும்பி இருந்தா என்ன ஆயிருக்கும்?'ங்கறத நினைச்சா ஒரே கலவரமா இருக்கு. :-)

Thursday, June 26, 2008

சிரிக்க வைத்தவை : 26-06-2008

இன்னைக்கி காலையில எந்திரிச்சி பேப்பர (டைம்ஸ் ஆப் இந்தியா) பார்த்தா (படிக்கிறது எல்லாம் இல்லங்க...) ஒரே தமாசு... மூணு மேட்டேரு...

---------------------------------------------------------------------------------

மொத மேட்டேரு என்னன்னா... எங்கேயோ ஜெய்பூர்'ல இருந்து மும்பை போற பிளைட்டுல பைலட்டுங்க தூங்கிடானுங்கலாம். அதனால பிளைட் போற எடத்த தாண்டி போயிடுச்சாம். ஏர்போர்ட்'ல என்னடா இன்னும் பிளைட் வரலைன்னு சிக்னல் கொடுத்த பார்த்தா, யாரும் ரெஸ்பான்ஸ் பண்ணலையாம். அதான் நம்ம ஆளுங்க ரெண்டு பேரும் தூங்கிட்டு இல்ல இருங்காங்க?. அப்புறம் ஏதோ, emergency சிக்னல் இருக்காம். அத கொடுத்த அப்புறம் நம்ம ஆளுங்க சத்தம் கேட்டு எழுந்திருக்காங்க. எந்திரிச்சு வண்டிய திருப்பி கொண்டு வந்து நிறுத்தி இருக்காங்க. வேல அதிகமாம். தூங்க டைம் இல்லையாம். அதான் வண்டிய கிளப்புனோன தூங்கிடாங்கலாம். நல்ல இருக்குயா உங்க லட்சணம்!!!
---------------------------------------------------------------------------------

ஒரிசா'ல ஒருத்தரு காட்டுல இருந்து ஒரு குட்டி கரடிய (சிம்புலாம் இல்ல!) எடுத்துட்டு வந்து வீட்ல வச்சு வளர்த்துயிருக்காரு. இது காட்டிலாகா அதிகாரிகளுக்கு தெரிஞ்சு, அவரு பிடிச்சி ஜெயில்'ல போட்டு, கரடியா ஜூ'ல விட்ருகாங்க. கரடி சோகத்துல எதுவும் சாப்பிட மாட்டேன்குதான். அவரு வீட்டுலயும் அவரு இல்லாம கஷ்டபடுராங்கலாம். ஒரு உணர்வு பூர்வமான சம்பவம். பட், அந்த போட்டோ'வ பார்த்தா சிரிப்பாதாங்க இருக்கு.


---------------------------------------------------------------------------------

இந்த நியூஸ்'ய பத்தி நான் எதுவும் சொல்ல தேவை இல்ல... பாத்து நீங்களே சிரிச்சுகொங்க... :-)


மழை வரவைக்க யாகமாம்...

Wednesday, June 25, 2008

தமிழ் சினிமாவும் போலீஸும்


தமிழ் சினிமாவில் போலீஸ் கதாபாத்திரங்களை எல்லா விதங்களிலும் பயன்படுத்தி உள்ளார்கள். ஹீரோவாக, வில்லனாக, காமெடியனாக, உப்புக்கு சப்பையாக என்று எதிலும் விட்டு வைக்க வில்லை. என் கணக்குப்படி இதில் அதிகப்படியாக காட்டியது கெட்டவர்களாகத்தான். உண்மையில் சமூகத்தில் அதிகப்படியான போலீசார் அப்படி இருப்பதால் அவ்வாறு காட்டுகிறார்களா? அல்லது அப்படி காட்டுவதால்தான் நாம் அப்படி நினைத்துக் கொண்டுயிருக்கோமா? தெரியவில்லை.

என் நினைவுக்கு தெரிந்து எம்ஜியார், சிவாஜி காலத்தில் இருந்து தான் போலீஸ் கதாபாத்திரங்களைத் திரைப்படங்களில் நான் கண்டு இருக்கிறேன். பாகவதர் காலத்துல போலீஸ் கதை வந்து இருக்கா? தெரிந்தவர்கள் சொல்லலாம். ஆனால் தமிழக போலீஸின் வரலாறு ரொம்ப நீளம். அதை இங்கே காணலாம். டைட்டிலே தப்பா இருக்கும். கண்டுக்காதீங்க... அவங்களுக்கு எவ்வளவோ வேலை இருக்கும்.

எம்ஜியார் நடித்த ரகசிய போலீஸ் மாதிரியான கதைகளை இன்னமும் போக்கிரி வரை எடுத்து கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த காலத்தில் போலீஸ் கதாநாயகன் அல்லாத கதைகளில், போலீஸ் கடைசி காட்சிகளில் தான் வரும். இது ரொம்ப நாள் தொடர்ந்து "கடைசி சீன் வந்தாச்சு... இன்னமும் போலீஸ் வரல?" என காமெடி டயலாக் பேசும் நிலை வரை வந்தது.


ஒரு நடிகனின் கலையுலக (!) பயணத்துக்கும் போலீஸ் கேரக்டர் ரொம்ப உதவும். எந்த ஒரு நடிகனுக்குமே போலீஸ் வேடம் ஒரு மைல் கல் போன்றது. போலீஸ் வேடம், மாஸ் ஹீரோயிசத்திற்கு கை கொடுக்க கூடியது. இதற்கு காரணமாக, மற்றவரை விட போலீசாருக்கு உள்ள அதிகாரத்தை கூறலாம். மற்ற வேடங்களில் ஒரு ஹீரோ போடும் சண்டையில் எழும் கேள்விகள், போலீஸாக போடும் சண்டையில் ரசிகனுக்கும் வராது.


போலீஸ் ஹீரோ கதாபாத்திரம் மேல் நடிகர்களுக்கும் அவர்களது ரசிகர்களுக்கும் உள்ள ஆர்வத்திற்கு மற்றுமொரு காரணம், இது தங்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லும் என்ற செண்டிமெண்ட் தான். பல நடிகர்களுக்கு இது நடந்திருக்கிறது. இது அந்த காலத்திலிருந்து இப்போது காக்க காக்க, சாமி, சத்யம்(?) வரை தொடர்கிறது. இதற்கான அவர்களது மெனகேடலும் அதிகமாகியுள்ளது.


போலீஸை கதாநாயகனாக காட்டும் கதைகளில் "போலீஸ் என்றால் அப்படி... போலீஸ் என்றால் இப்படி..." என்று டயலாக் விடும் திரையுலகினர், மற்ற படங்களில் கேவலமாகவும், கேலியாகவும் தான் சித்தரிக்கின்றனர். இது கடந்த பல ஆண்டுகளாக நடந்து வரும் ஒரு உண்மை. எந்த ஒரு சாதியையோ, அரசியல் கட்சியையோ குறிப்பிட்டு படம் எடுக்க தயங்கும் திரைப்படத்தினர், போலீஸை எப்படி காட்டுவதற்கும் தயங்குவதில்லை. அதேபோல், ஒரு டாக்டரை தப்பாக காட்டினால் டாக்டர்கள் கேஸ் போடுகிறார்கள். ஒரு வக்கீலை தப்பாக காட்டினால் வக்கீல்கள் கேஸ் போடுகிறார்கள். இதுவரை, போலீஸ் கேஸ் போட்டதாக நான் கேள்விப்பட்டதில்லை. அதேசமயம், நேபாளி படத்தில் போலீஸை ஜட்டியுடன் காட்டியதற்காக அந்த காட்சியை நீக்குமாறு அவர்கள் கேட்டுகொண்டது குறிப்பிடத்தக்கது.

சமீப காலமாக தான் மென்பொறியாளர்களை திரைப்படங்களில் கதாபாத்திரங்களாக காட்டுகிறார்கள். ஆனால் அதிலேயே, கொஞ்சம் கேலியாகவோ, தவறாகவோ இருந்தால் (உண்மையாகவே இருந்தாலும்) அதற்கு வலையுலகில் (வலையுலகில் தான் பொங்க முடியும்...) கிளம்பும் எதிர்ப்புகள் ஏராளம். இவர்கள் திரையில் போலீஸ் படும் பாட்டை நினைத்து பார்க்க வேண்டும். போலீஸ் போல் (கெட்டவர்களாக இல்லாமல்) கேலிக்குரியவர்களாக காட்டப்படும் மற்றுமொரு துறையினர், ஆசிரியர்கள்.

பெண் போலீஸ். இவர்களை உயர்வாக காட்டிய படங்கள் ரொம்ப குறைவு. அதில் வைஜெயந்தி IPS குறிப்பிடத்தக்கது. அதன் பின்பு அவ்வளவாக வரவில்லை. அஸ்வினி நாச்சப்பா நடித்த சில படங்கள் வந்தன. பிறகு, மும்தாஜ், வினிதா, விந்தியா, நமிதா போன்றவர்களை வைத்து போலீஸ் வேடத்தில் சில படங்கள் பூஜை போடப்பட்ட செய்திகள் வந்தன. இவர்களை வைத்து பூஜை மட்டுமே போடப்பட்டு படம் வெளிவராத மர்மம், பரங்கிமலை... ஸாரி... பழனி மலை முருகனுக்கே வெளிச்சம்.

போலீஸை தவறாகவோ, கேலியாகவோ காட்டக்கூடாது என்பதல்ல என் கருத்து. உண்மைக்கு மாறாக அல்லாமல், எல்லை தாண்டாமல் எடுக்கப்படும் காவல்துறை சார்ந்த காட்சியமைப்புகள், காவல்துறையினர் தங்களை சுய ஆய்வு செய்து கொள்ளவும், மக்கள் காவல்துறையினரின் உண்மை நிலையினை தெரிந்து கொள்ளவும் உதவ வேண்டும். விவேக் டிராபிக் போலீசிடம் கூறும் "As I am suffering from fever..." வசனமாகட்டும், வடிவேலு பிச்சைக்காரனுடன் நின்று லஞ்சம் கேட்கும் காட்சியாகட்டும், இவை அனைத்தும் மிகைபடுத்தபட்டு இருப்பினும், இது காவல்துறையினருக்கு தங்கள் திறமையினை வளர்த்துகொள்ளவும், தங்கள் உடல்நிலையை பணிக்கேற்றார் போல் வைத்து கொள்ளவும், நேர்மை, லஞ்சம் வாங்காமை போன்ற சமூக ஒழுக்கங்களோடு, நாட்டிற்க்கு சேவையாற்ற தூண்டுகோலாக அமைந்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

Tuesday, June 24, 2008

துண்டு சீட்டு

"டேய்! சேகர், கிளம்பிட்டியாட..." என்று கூவியவாறு சண்முகம் கையில் ஹிந்து பேப்பருடன் வீட்டினுள் நுழைந்தார். "சாப்டுட்டு இருக்கான்க" என்றவாறு நெற்றியில் வழிந்தோடும் வியர்வையை துடைத்தபடி ஹாலுக்கு வந்தாள் சண்முகத்தின் மனைவி.

ஒரு அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் வேலை பார்க்கும் சண்முகத்தின் மகன் சேகர் இன்று வீட்டில் இருந்து தொலைவில் உள்ள ஒரு பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் சேருகிறான். ஸ்கூல் பஸ்ஸில் தான் செல்கிறான் என்றாலும் சண்முகத்திற்கு மனதில் ஒரு பயம்.

"டேய்... வெளிய எங்கேயும் போகாம ஸ்கூல் முடிஞ்சதும் ஒழுங்க பஸ்ல ஏறி வீட்டுக்கு வா"

"சரிப்பா"

புது புத்தககங்கள் பிரௌன் கவர் போடப்பட்டு, ஸ்டிக்கருடன் சேகருடைய புது பேக்கில் அணிவகுத்திருந்தன. செக்சன் மட்டும் தான் நிரப்பவில்லை. ஸ்கூல் போனால்தான் எந்த செக்சன் என்று தெரியும்.

சேகர் பையை தூக்கி தோளில் போட அது நியூட்டனின் இரண்டாம் விதியை பலமாக நிருபித்தது. ஷூவை போட்டவன், வாசல் படியில் இருந்து "அம்மா... போயிட்டு வாரேன்" என்றான்.

தெருவில் காலை வைக்க இருந்தவனை அப்பாவின் குரல் தடுத்தது. "சேகர்... ஒரு நிமிஷம் இருடா". கையில் துண்டு பேப்பருடன் வந்தவர், "இந்தாடா... இத சட்ட பையில வச்சிக்க" என்றார்.

பேப்பரில் அப்பா பெயருடன் வீட்டு நம்பரும் அலுவலக நம்பரும் இருந்தது.

"எதுக்கு இது?"

"எங்கயாவது தெரியாம போயிட்டனா? அதுக்குதான்"

"எப்பா... நான் என்ன சின்ன பையனா?" என்று எரிச்சலுடன் பேப்பரை கசக்கி எறிந்தவாறு பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தான் சேகர்.

ம்பது வருடங்களுக்கு பிறகு ஒருநாள்...

டேபிளில் இருந்த போன் அலறியது.

"ஹலோ"

"சார், சேகர்ங்கிறது உங்க அப்பாவா?"

"ஆமாம்"

"உங்க அப்பா பீச்சுல மயங்கி கிடந்திருக்காரு. அந்த பக்கமா போனவங்க வந்து அட்மிட் பண்ணியிருக்காங்க" என்றாள் வீனஸ் ஆஸ்பிட்டல் ஊழியை.

ப்பா பெட்டில் படுத்திருக்க, சுற்றி சேகரின் மனைவியும் மருமகளும் உட்கார்ந்திருந்தார்கள்.

"என்னப்பா ஆச்சு?"

"சுகர் அதிகமாயிடுச்சு போல... சாயந்தரம் வாக்கிங் கிளம்பும் போதே லேசா தல சுத்தின மாதிரி இருந்திச்சு... நல்லவேளை... ஜாக்கிரதையா உன் நம்பரையும் வீட்டு நம்பரையும் ஒரு பேப்பருல எழுதி பையில வச்சு இருந்தேன்." என்ற சேகரின் கண்களில் நிம்மதி. மனம் அப்பாவை நினைத்துக்கொண்டது.

Monday, June 23, 2008

காதலில் ஒரு நாள்.

"ன்று எப்படியாவது நம்ம ஆள அசத்திடணும்" என்று நினைத்து கொண்டான் சுந்தர். சுந்தர் கோவையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியின் கணிப்பொறி பிரிவில் பணிப்புரிகிறான். குறுகிய இலக்காக சென்னையில் ஏதாவது ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தில் வேலையையும், அடுத்தக் கட்ட இலக்காக அமெரிக்கா டாலர் சம்பளத்தையும் கொண்டுயிருப்பவன். இவை கடந்த ஒரு வருடமாக இலக்காக மட்டுமே இருக்க காரணம், கோவையில் உள்ள அவன் காதலி, தரணி.

சுந்தருக்கும் தரணிக்கும் ஒரே ஊர், தாராபுரம். பஸ் பயணத்தில் சிநேகிதமாகி, பின்பு காதலரானார்கள். தரணி தற்போது பீளமேட்டில் உள்ள மருத்துவமனையின் நூலகத்தில் வேலை பார்த்து வருகிறாள்.

'ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்' என்று தன் அக்குளில் பாடி ஸ்பிரே அடித்து கொண்டான். சத்தமும், மணமும் மதிய தூக்கம் மூலம் தொப்பை வளர்த்து கொண்டிருக்கும் சுந்தரின் நண்பன் கதிரை எழுப்பியது.

"என்னடா கிளம்பிடியா? சண்டே சாந்தரம் ஆனா உனக்கு இது ஒரு பொழப்பு..."

"ம்ம்ம்ம்"

கதிர் எழுந்து உக்கார்ந்தான்.

"என்னமோ தெரியலடா, கதிர். ஒரு மாசமா நானும் தரணியும் சும்மா சும்மா சண்ட போட்டுக்கிறோம்." வருத்தத்துடன் ஆரம்பித்தவன் சிரித்து கொண்டு தொடர்ந்தான், "அதான் இன்னைக்கி சீக்கிரம் போய் சண்டை வராம பார்த்துக்கிட்டு பேசிட்டு வர போறேன்."

"நைட் நீ மட்டும் மெஸ் போயிட்டு வந்துரு.... நான் சாப்டுட்டு வந்துடுறேன்... பைடா..."

க்ஷ்மி காம்ப்ளெக்ஸ் முன்பு நின்று மணி பார்த்து கொண்டுயிருந்தான் சுந்தர். "வந்து பதினைந்து நிமிடங்கள் ஆச்சு... எங்க இவள காணும்?" என்று எரிச்சலுடன் திரும்பும் போது தூரத்தில் வரும் தரணியை கண்டான். முகத்தில் புன்னகையை கொண்டு வந்து கையை ஆட்டினான். அருகில் வந்த தரணி "எப்பப்பா வந்த?" என்று வினவினாள். "இப்பதான்" என்றான் சுந்தர்.

மனசாட்சி "கவனமா இரு சுந்தர்" என்று எச்சரிக்கைப்படுத்தியது.

"ரூம்ல ஒரே போர்... ஏதாச்சும் DVD வாங்கணும்" என்றாள்.

"ஹ்ம்ம்.... வாங்கலாமே. முதல்ல ஒரு காபி சாப்பிடுவோம்"

கௌரி சங்கரை நோக்கி நடந்தார்கள்.

"தசாவதாரம் பார்த்திடியா?" என்று ஆரம்பித்தாள்.

"ஒ... பார்த்தாச்சே... நீ?" (பார்த்திருக்க மாட்டாள். கூட்டிட்டு போக சொல்லுவாள்.)

"நேத்து பார்த்தேன்." (பார்த்திட்டியா!!!)

எங்கே? எப்ப? யாருடன்? என்று கேட்பதற்குள் ஹோட்டல் வந்தது.

காப்பியை ஊறிஞ்சுக்கொண்டேக் கேட்டாள்.

"பத்து கேரக்டர்ல எது உனக்கு பிடிச்சது?"

பலராம் என்று சொல்வதற்காக "ப..." என்பதற்குள், "பிளேட்சர் தானே?" என்றாள்.

"ஆமாம்" ட்விஸ்ட் அடித்து நாக்கு திரும்பியது.

"எனக்கும் தான்" என்று சிரித்தாள்.

சுந்தரும் கஷ்டப்பட்டு பதிலுக்கு சிரித்தான். தப்பிச்சடா மவனே என்றது அவன் மனம்.

ரு சிடி கடையில் சில புது பழைய படங்களின் பாடல் சிடிக்களை தரணி வாங்கினாள். வாங்கிக்கொண்டு வெளியே வரும்போது சுந்தர் கேட்டான்.
"என்ன படம் வாங்குன?"

சில ஹிந்தி படங்களின் பெயர்களை சொன்னாள்.

"அம்மணி, தமிழ் பாட்டு கேட்க மாட்டிங்களோ?"

"இல்ல... ஹிமேஷ் மியூசிக்... நல்லா இருக்கும்... அதான் வாங்கினேன்."

"ஹிந்தி கஜினி பாட்டு ரிலீஸ் ஆகிடிச்சா? ரஹ்மான் மியூசிக்"

"தெரியல்ல... எனக்கு ஹிமேஷ்தான் ரொம்ப பிடிக்கும். ஹிமேஷ் நேஷனல் லெவல் பேமஸ்"

"ரஹ்மான் இன்டர்நேஷனல் லெவல் பேமஸ்"

சிரித்தாள்.

"ஏ... எதுக்கு சிரிக்குற? நிஜமாத்தான்"

திரும்பவும் சிரித்தாள்.

"நான் என்ன பொய்யா சொல்றேன்? ஹாலிவுட் படத்துக்கெல்லாம் மியூசிக் பண்ணியிருக்கார்"

"அதுக்கு இப்ப என்ன பண்ண சொல்ற?"

"பின்ன நான் சொல்ல சொல்ல நீ சிரிக்குற? நான் என்ன லூசு மாதிரி தெரியுறனா?"

"ஆமாம்" என்று சொல்லி சத்தமாக சிரித்தாள் தரணி.

நடப்பதை நிறுத்தி சுற்றி பார்த்தான் சுந்தர். பக்கத்தில் நடந்தவர்கள் அவள் சிரிப்பதை பார்த்தவாறே சென்றார்கள்.

விட்டான் ஒரு அறை.

Sunday, June 22, 2008

சிறுகதை - என்ன பாப்பா வேணும் உனக்கு?

ஹாலில் இருந்த தொலைப்பேசி சத்தம் கேட்டு சமையலறையில் தேய்த்து கொண்டு இருந்த பாத்திரத்தைப் அப்படியே போட்டுவிட்டு வந்து போனை எடுத்தாள் கமலா.

“ஹலோ! நான் செந்தில் ஃபிரண்ட் ராஜேஷ் பேசுறேன்.”

“சொல்லுங்க”

“அவன் இருக்கானா?”

“அவரு இன்னும் ஆபிஸ்ல இருந்து வரலங்க”

“பவளம் இதழில் வந்த அவனொட முற்போக்கு கருத்துகள் நிறைந்த கட்டுரைக்காக அவன் ஆபிஸ்ல அவன பாராட்டி இருக்காங்க. அதான் வாழ்த்தலாம்னு கால் பண்ணினேன். அவன் வந்தா சொல்லிருங்க.”

“அப்படியா?” என்று மிதமாக விசாரித்தாள்.

“அப்புறம் நீங்க எப்படி இருக்கீங்க? உடம்ப பார்த்துக்கோங்க”

தான் கர்ப்பமான விஷயத்தை அவர் சொல்லியிருப்பார் போலும் என்று எண்ணிக்கொண்டு “சரிங்க” என்று சொல்லிவிட்டு போனை வைத்தவள், சமையலறையில் வேலையைத் தொடர்ந்தாள்.

சன் டிவியில் தேவயானி சென்று ராதிகா வரும் நேரத்தில் செந்தில் வந்தான். வீட்டில் நுழையும் போது அவனுடைய இரு சக்கர வண்டி அவன் பராமரிப்பை சொல்லும்விதமாக எழுப்பிய சத்தத்தில் அவர்களது முதல் குழந்தை ஐந்து வயது கீர்த்தி தூக்கத்திலிருந்து எழுந்தாள்.

ரவு உணவு முடிந்து செந்தில் படுக்கையறையில் கீர்த்தியுடன் விளையாடிக் கொண்டியிருந்தான். கணவன் இன்னமும் தன்னிடம் அலுவலக நிகழ்வை சொல்லாததை நினைத்துக் கொண்டு, கமலா காலை உணவிற்காக காய்களை வெட்டிக் கொண்டு இருந்தாள்.

“அப்பா, அம்மா fat மம்மி…”

“ஏம்மா?”

“அம்மா வயிரு பெருசாயிடுச்சு இல்ல… அதான்…”

“அம்மா வயித்துல பாப்பா இருக்கு” குழந்தைக்கும் விவரம் தெரிய வேண்டுமென்று கூறினான்.

கீர்த்தி கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.

“பாப்பாவா?”

“ம்ம்ம்… உனக்கு தம்பி பாப்பா வேணுமா? தங்கச்சி பாப்பா வேணுமா?”

சமையலறையில் வேலையை முடித்த கமலா கேட்டுக் கொண்டு இருந்தாள்.

குழந்தை யோசித்து “தங்கச்சி பாப்பா” என்றது.

“ஏன்? நீ இருக்குற இல்ல… தம்பி பாப்பா வேண்டாமா?” என்றான் அவசரமாக.

கமலா அறையில் நுழைந்தாள்.

விழித்த குழந்தையிடம் “எந்த பாப்பாவா இருந்தா என்ன? எல்லாம் ஒண்ணுதான்” என்றான் செந்தில்.

கமலா மனதிற்குள் சிரித்தாள்.

Thursday, June 19, 2008

கரகாட்டக்காரனில் Chaos தியரி!!!


தசாவதாரம் வந்தாலும் வந்தது... ஆளாளுக்கு chaos theory ங்கறாங்க, அவதார mappings சொல்றாங்க, விஞ்ஜானம், ஆன்மிகம் போட்டு புரோட்டா போடுறாங்க. படத்த எடுத்தவங்கள விட இவுங்க அதிகமா யோசிக்கிறாங்க.

அதான் நானும் யோசிக்கலாம்னு உக்கார்ந்து யோசிச்சதின் பயன் இந்த பதிவு...

கரகாட்டகாரன் படத்தை எடுத்துக்கிட்டிங்கன்னா இந்த படத்தின் ஆரம்ப காட்சிகளில் ஒன்றில், ராமராஜன் கனகா வீட்டிற்க்கு சென்று இருப்பார். கனகா அப்பா சண்முகசுந்தரம் இவங்களுக்கு மோர் கொடுக்க சொல்லுவார் ("எம்மா... இந்த தம்பிக்கு கொஞ்சம்..."). கனகாவும் கொடுப்பார். அப்ப ராமராஜன் கேட்பாரு "மோர் என்ன சூடா இருக்கு?"ன்னு. அதுக்கு கனகா "அஆன்... மாடு வெயிலுல நிக்குது... அதான்" ம்பாங்க (கிராமத்து குசும்பு!!!). அப்படியே, இவுங்க நக்கல் பேச்சு தொடர, மெல்ல லவ்ஸ் ஆகி, மேள தாளத்தில் டூயட் பாடி, வில்லன் சந்தானபாரதி (பாருங்க... இவரு இதுலயும் இருக்காரு!!!) இவங்களுக்கு இடைஞ்சலா வர, பின்னாடி போட்டி ஆட்டம் வரை போயி, கஷ்டப்பட்டு இறுதியில ஒன்னு சேருறாங்க.

இந்த மொத காட்சியில கனகா மட்டும் வேற மாதிரி ("அது மோர் இல்ல... கோமியம்"னு) சொல்லி இருந்தா, அதுக்கு அப்புறம் ராமராஜன் அன் கோ அங்க இருந்திருப்பாங்களா? அவரு பாட்டுக்கு ஊருக்கு தெறிச்சி ஓடி, அம்மா காந்திமதி பார்த்திருக்குற பொண்ண கல்யாணம் பண்ணி இருப்பாரு. கனகாவும், சந்திரசேகரு சொன்னபடி சந்தானபாரதியையே கல்யாணம் பண்ணி இருப்பாங்க.

ஆனா பாருங்க, இந்த மோர் டயலாக்னால, சூட்ட தணிக்கலாம்னு வந்தவங்க, கடைசில பூக்குழியில (!) இறங்கி காலு பொசுங்குற அளவுக்கு போய்ட்டாங்க. இதுதான் chaos theory யோட அடிப்படையின்னு டைரக்டர் கங்கை அமரன் சொல்லாம சொல்லுறாரு.


அப்புறம் இந்த வாழைப்பழ சீனை எடுத்துக்கிட்டீங்கனா...

என்னது நிறுத்தனுமா?

அவன நிறுத்த சொல்லு... நான் நிறுத்துறேன்...

Tuesday, June 17, 2008

இளையதளபதி ஜோக்குகள்


மின்னஞ்சலில் வந்தவை...



===================================================
ஒருத்தன் வாழ்க்கையே வெறுத்து தற்கொலை செய்யும் முடிவில் இருக்கான். அவன் நண்பன் அவனை குருவி படத்துக்கு கூட்டிட்டி போறான்.


படத்தை பார்த்திட்டு, அவன் நேரா விஜய் வீட்டுக்கு போய் சொல்றான்.


"கொய்யால!!! நீயெல்லாம் உயிரோட இருக்கும் போது நான் ஏண்டா சாகணும்?"
===================================================


முதல் நபர் : எங்க ஊர்ல கப்பல் ட்ராக்குல போகும், ட்ரயின் தண்ணில போகும்,


இரண்டாம் நபர் : கேக்குறவன் விஜய் ஃபேன் மாதிரி மாக்கானா இருந்தா, குருவி ஆஸ்கர் போகனும்னு சொல்லுவீங்களே !!!===================================================
பையன் அம்மாவிடம்....


பையன் : அம்மா ஒரு நல்ல செய்தியும் ஒரு கெட்ட செய்தியும் இருக்கு. எந்த செய்தி முதல சொல்ல?


அம்மா : கெட்ட செய்திய சொல்லு


பையன் : குருவி படம் ரிலீஸ் ஆகி இருக்கு


அம்மா : அப்ப நல்ல செய்தி?


பையன் :நம்ப ஊர்ல ரிலீஸ் ஆகல ===================================================


மைதானத்தில் விஜய் தோனியிடம்...


விஜய் :- சாரி தோனி.... எனக்கு இங்கிலீஷ் தெரியாது


தோனி :- சாரி... எனக்கு நீ யாருனே தெரியாது
===================================================


விஜய் பிரபுதேவாவிடம் :இந்த பாட்டு சூப்பரா இருக்கே... இத நம்ப படத்துல ரீமேக் பண்ணலாமா?


பிரபுதேவா : டேய்... நாசமா போனவனே அது தேசிய கீதம்டா!!! ===================================================



போற போக்குல சர்தாஜி ஜோக்கு மாதிரி விஜய் ஜோக்கும் வரும் போல...!!!

தசாவதாரம் - கேஸ் போட பத்து ஆலோசனைகள்

ஏற்கனவே நிறைய பேருக்கு (என்னையும் சேர்த்து தான்) "DasavatharaReviewoPhobhia" என்ற நோய் பீடித்திருப்பதால், இது படத்தை பற்றிய விமர்சனம் இல்லை. எப்படி எல்லாம் கேஸ் போடுறதுன்னு முக்கி முனங்கி யோசிச்சிட்டு இருக்கும் சிலருக்கான உதவும் சிறு முயற்சி.


1) ஒரு வாயில்லா பிராணியை (ரவிக்குமாரை சொல்லலை... குரங்கை சொன்னேன்...) துன்புறுத்தி படம் எடுத்ததுக்கு ரெட் கிராசோ புளு கிராசோ, அவங்க கேஸ் போடலாம்.
2) தெலுங்கர்களை கிண்டல் செய்து படம் எடுத்ததுக்கு ஏதாவது ஆந்திராகாரு கேஸ் போடலாம்.
3) வாய்ப்பில்லா இயக்குனர்கள் சிலரை (சந்தானபாரதி, சுந்தர்ராஜன், வாசு etc) மட்டும் பயன்படுத்தி கொண்டதற்கு, வாய்ப்பு வழங்க படாத மனோபாலா, ராஜ்கபூர் போன்ற இயக்குனர்கள் வழக்கு போடலாம் (அட்லீஸ்ட் இயக்குனர்கள் சங்கத்தில்)
4) மொழி பெயர்ப்பாளர்களை மல்லிகா செராவத் கதாபாத்திரம் மூலமாக மோசமாக சித்தரித்தற்கு மொழிப்பெயர்ப்பாளர்கள் சங்கம் சார்பாக கேஸ் போடலாம்.
5) பெருமாள் சிலையை சரியாக கையாளதற்கு யாரை கேஸ் போட சொல்லலாம்? சரி... அதுக்கு தான் நிறைய பேரு இருக்காங்களே.
6) Beagles என்ற பெயருடைய எந்த நிறுவனமாவது (கிட்டத்தட்ட அந்த மாதிரி வந்தாலும்) தங்களை தவறாக காட்டியதற்கு வழக்கு தொடரலாம்.
7) கூட்டணி தர்மத்திற்கு ஏற்ப தங்களுக்கு கடைசி காட்சியில் மேடையில் இடம் வழங்காததற்கு கருணாநிதி சதியே காரணம் என்று ராமதாஸ் அறிக்கை விடலாம்.
8) தன்னிடம் ஆலோசிக்காமல் ஏதோ தன்னை விட பெரிதாக அவாளுக்கு தெரிந்தது போல் FBI, CIA, Bush, RAW போன்றவற்றை வைத்து படம் எடுத்ததற்காக சுப்ரமணிய சுவாமி வழக்கு தொடரலாம்.
9) இதுவரை OSCAR என்ற பெயரில் படம் எடுத்து வந்து இப்படத்தின் போது AASKAR என்று பெயரை மாற்றி, இதில் கூட தங்கள் தலைவருக்கு OSCAR கிடைக்காமல் போனதற்கு, கமல் ரசிகர்கள், ரவிசந்திரன் மீதும் அந்த ஜோசியக்காரன் மீதும் வழக்கு தொடரலாம்.
10) பத்து கதாபாத்திரத்தில் ஒரு கதாபாத்திரம் தான் பெண் என்றும், தங்களுக்கு குறைந்தபட்சம் மூன்று கேரக்டர்களாவது வழங்க பட்டிருக்கவேண்டும் என்று பெண்ணுரிமை சங்கங்கள் ஏதேனும் கோர்ட் செல்லலாம்.

இனி என்னுடைய ஒரு தலைப்பட்சமான இப்படம் குறித்த கருத்து:

இந்த படத்தை ஷங்கர் எடுத்து இருந்தால் இன்னும் சிறப்பா தரமா வந்து இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். ஷங்கர் கிட்ட சரக்கு தான் இல்ல. மத்தபடி இந்த ஒட்டு வேலை, packaging techniques எல்லாம் அவருக்கு அத்துப்படி. சரக்கு இல்லாத காரணத்தால்தான் சுனாமி வந்து ஒரு பாட்டுல டான்ஸ் ஆடுனா எப்படி இருக்குங்கற லெவலுல அவரு யோசிச்சிட்டு இருக்காரு.

அதேபோல் ஹிமேஷ்க்கு பதிலாக நம்ம தமிழ் இசை புயல் ரஹ்மான் இசையமைத்து இருந்தால் இன்னும் இன்டர்நேஷனல் லெவலுக்கு இருந்திருக்கும். முழுக்க முழுக்க தமிழர்களின் முயற்சி என்று இருந்திருக்கும். இப்படி ஹிந்திக்கு என்று ஹிமேஷும், தெலுங்குக்கு என்று தேவி ஸ்ரீயும் தேவைபட்டு இருக்க மாட்டார்கள்.

படத்தோட திருஸ்டி பொட்டு அந்த பாட்டி வேஷம்தான். கை பெருசா, சோர்வோ, தளர்ச்சியோ இல்லாமல், வேகமாக நடந்து கொண்டு.... எப்படி தான் இதை படம் எடுக்கும்போது கண்டு கொள்ளாமல் விட்டார்களோ?

Friday, June 13, 2008

விழா குழுவா?

இன்று தினத்தந்தியில வந்த செய்தி இது.

விவரம் அப்புறம் சொல்றேன். மேல படிங்க.

ஒரு விழாவுக்காக ஒரு விழா குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு உறுப்பினர்கள் பட்டியல் இதோ.

1. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.எஸ்.பழனிச்சாமி

2 . டைரக்டர் பாரதிராஜா

3. கனிமொழி எம்.பி

4. வக்கீல் நளினி சிதம்பரம்

5. தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன்

6. நல்லி குப்புசாமி

7. ஏவி.எம்.சரவணன்

8. பழனி ஜி.பெரியசாமி

9. மதிவதனன் ஐ.ஏ.எஸ்

10. ரவி ஐ.பி.எஸ்

11. வசந்தபவன் ரவி

12. கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி

அப்படி என்ன விழா தெரியுமா?

ஒலிம்பிக்சோ அல்லது ஏதோ வெளிநாட்டு தலைவர் கலந்து கொள்ளும் விழாவோ அல்ல....

வைரமுத்து மகன் திருமணத்துக்கு தான் இந்த ஏற்பாடு எல்லாம்...

கவிஞரே.... உங்களுக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியல? பல்கலைக்கழக துணைவேந்தர், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., வக்கீல், மத்திய மந்திரி எல்லாம் சேர்த்து குழு அமைக்குற அளவுக்கு அப்படி என்ன இந்த கல்யாணத்துல முக்கியத்துவம் இருக்கு?

சிலர் வெட்டியா இருக்கலாம். அதுக்காக இப்படியா?

செய்தி இங்கே.

Wednesday, June 4, 2008

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 113

என்ன அதிர்ச்சியா இருக்கா? உண்மை தாங்க. பெட்ரோல லிட்டருக்கு ரூபாய் 113 கொடுத்து மக்கள் எந்த விதமான சங்கடமும் இல்லாம வாங்கிட்டு தான் இருக்காங்க. எங்கன்னு பாத்திங்கன்னா துருக்கில...


இன்னிக்கி நைட்ல இருந்து இந்தியாவுல பெட்ரோல் விலை அஞ்சு ரூபா கூடுது. அதனால துருக்கிய நெனசுக்கிட்டு வருத்த படமா இருங்க.


காலையில பெட்ரோல் போட போனபோது பெட்ரோல் இல்லன்னு மூணு பெட்ரோல் பங்க்ல சொன்ன போது ஒண்ணும் புரியல. இப்பதான் நியூஸ் தெரியுது. பிரதமர் நாட்டு மக்களுக்கு இது பத்தி இன்று இரவு உரையாற்ற போறாரு. அவரு பேசாமா காபி ஆத்த எங்காச்சும் போகலாம்.

பெட்ரோல் போட்டுட்டு வரும் போது ஷெல் தனியார் பெட்ரோல் பங்க்ல ரேட் செக் பண்ணலாம்னு போனேன். அங்க பார்த்தா விலை 68 ரூபாய். அதிலயும் வருத்தபடமா சில பேரு பெட்ரோல் போட்டுட்டு தான் இருக்காங்க. நல்ல பெட்ரோலாம்.

பெட்ரோல் யூஸ் பண்ணாமலேயே எரியிற மாதிரி ஒரு தகவல் சொல்லவா?. வெனிசுலான்னு ஒரு நாடு இருக்கு இல்ல. அந்த நாட்டுல பெட்ரோல் விலை எவ்ளோ தெரியுமா? இந்திய மதிப்புக்கு ரெண்டு ரூபா.

தகவலுக்கு நன்றி - ரெடிப்